தமிழ் சமூகத்தில் சிவில் சமூக அமைப்புக்களைக் கட்டமைப்பதன் தேவை தொடர்பில் சமூக பொருளாதார ஆய்வாளரும், ஆலோசகருமான செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை. இயல்பாகவே சிவில் சமூகம் என்பது மக்கள் சார்ந்த நலன்களுக்காக தான் பேசுகின்றது. குடிசார் சமூகங்கள் ஏதோ ஒரு வகையில் அரசியல் கட்சி மயப்படுத்தப்பட்டுப்போகும்போது அவை சிவில் சமூகம் என்ற அந்தஸ்திலிருந்து வெளியே போகின்றன. ஒரு மனிதன் பொது சேவை உத்தியோகத்தராக சேர்ந்து அரசாங்க உத்தியோகத்தராக போனால் அவனது அரசியல் உரிமை பறிக்கப்பட்டது என்று அர்த்தம்அல்ல. நிறைய அரசாங்க உத்தியோகத்தர்கள் தங்களை சமூகத்தின் செயற்பாடுகளில் இருந்து புறமொதுக்கிக் கொண்டு செல்கின்றார்கள், அந்நியப்படுத்துகின்றார்கள். இது மிக அபத்தமானது சமூகத்திற்காக, சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவதற்காக, சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை காண்பதற்காக, சமூகத்தின் மேல் சந்தையும் அரசும் மேற்கொள்கின்ற சகல விதமான திணிப்புகள், பலவந்தங்கள், சுரண்டல்கள், ஆக்கிரமிப்புக்கள், அதிகார கையாளுதல்களிலுள்ள தவறுகள் இவற்றையெல்லாம் சவாலுக்குட்படுத்துவதற்கான அந்தத் துணிவை சமூகத்திற்கு கொடுக்க வேண்டும் என்றால் சமூகத்திலுள்ள படித்தவர்கள் தான் முன்வர வேண்டும்.