தொடக்கக் குறிப்புகள் இலங்கையின் கடந்த அரைநூற்றாண்டு கவனங்கொள்ளத் தவறிய முக்கியமான துறைகளில் ஒன்று சூழலியல். இன முரண்பாடும் பொருளாதாரச் சிக்கல்களும் சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் சமூகப் பொருளாதார அரசியலரங்குகளை ஆக்கிரமித்து நின்றன. இப்பின்புலத்தில் நமது இயற்கையும் வளங்களும் அபிவிருத்தியின் பெயரால் கொள்ளையடிக்கப்பட்டன. விவசாய மையப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டிருந்த நாடு சேவை மையப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தது. வளமான மண்ணும் கடலும் தந்திருக்கக் கூடிய பயன்களை வினைத்திறனுடனும் பேண்தகைமையுடனும் தக்கவைக்க […]
ஆங்கில மூலம் : G.B கீரவல்ல வித்தியோதயாப் பல்கலைக்கழக வளாகத்தின் பிக்கு மாணவர் விடுதியில் 1971 ஏப்ரல் 2 ஆம் திகதி ‘ஜனதா விமுக்தி பெரமுன’ என்னும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் ‘பொலிட் பீரோ’வின் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் 1971 ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி பி.ப 11.30 மணிக்கு நாட்டில் உள்ள எல்லா பொலிஸ் நிலையங்கள் மீதும் ஆயுதப் படைகளின் நிலைகள் மீதும் தாக்குதல் […]
கலாநிலையம் நூலகம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 1920 ஆம் ஆண்டு ஆசிரியராகச் சேர்ந்து 1958 வரை பணியாற்றியவர் கலைப்புலவர் க. நவரத்தினம். தன்னிடமிருந்த பெரும்பாலான நூல்களைக் கொண்டு ‘கலாநிலையம்’ என்ற பெயரில் ஒரு அறிவுத்தேடலுக்கான கழகமாக, ஒரு நூலக நிறுவனமாக உருவாக்கி, 1930 டிசம்பர் மாதம் 5ம் திகதி அதனைத் தொடக்கிவைத்தார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையின் மேற்கில் உள்ள பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த மனையொன்றில் ‘கலாநிலையம்’ இயங்கத் தொடங்கியது. […]
பழப்பயிர்களின் பல்வகைமை பனம்பழம் அரிய சொத்தாகும். வேறுபட்ட போகங்களில் பழங்களைத் தரும் பனை மரங்கள் எம் பிரதேசத்தில் பரந்து காணப்படுகின்றன. அவற்றின் கிழங்குகளின் தன்மையிலும், கள் மற்றும் கருப்பனி என்பனவற்றின் பிரிகை அளவுகளிலும் மாறுபாடு உண்டு. கற்பகத் தருவான பனைமரத்தின் பயன்பாடுகள் அநேகம். முக் கனிகளான மா, பலா, வாழை என்பனவற்றின் பயன்பாடும் எம் பிரதேசத்தில் கணிசமாக உண்டு. மா மரத்தில் ஒட்டுதல் மூலம் உருவாக்கப்படும் கன்றுகள் தாய் தாவரத்தின் […]
இந்தத் தொடரின் சென்ற இரண்டு கட்டுரைகளிலும் 1698 ஆம் ஆண்டில் கிறிஸ்டியானோ தூர்சி என்பவர் வரைந்த, யாழ்ப்பாணக் கட்டளையகத்தைக் காட்டும் நிலப்படத்தில் காணப்படும் பல்வேறு தகவல்களைப்பற்றியும் அவற்றின் வரலாற்றுத் தொடர்புகள் பற்றியும் ஆராய்ந்தோம். அடுத்த சில கட்டுரைகளில் 1719 ஆம் ஆண்டில் மார்ட்டினஸ் லெயுசிக்காம் (Martinus Leusecam) என்பவர் தொகுத்த யாழ்ப்பாணக் கட்டளையகம் தொடர்பான ஒரு தொகுப்பில் அடங்கிய நிலப்படங்கள் தரும் தகவல்கள் பற்றிப் பார்க்கலாம். நெதர்லாந்தின் தேசிய ஆவணக் […]
தமிழில் : த. சிவதாசன் சேதனப் பாவனையை நோக்கிய இலங்கையின் பயணம் வடக்கிலுள்ளவர்களுக்கு ஆச்சரியத்தைத் தர முடியாது. போர்க்கால பொருளாதாரத் தடைகளும், கட்டுப்பாடுகளும் வடக்கு மக்களை, இறக்குமதியில் தங்கியிராது இயற்கையில் மட்டுமே நம்பியிருக்க எப்போதே பழக்கப்படுத்தி விட்டன. சில பொருட்கள் முற்றாகவே தடை செய்யப்பட்டிருந்தன. சில, கட்டுப்பாடுகளுடன் விநியோகிக்கப்பட்டன. பெண்களின் சுகாதாரப் பொருட்கள், பற்றரி, பெற்றோல், சீமந்து, அசேதனப் பசளை, களைகொல்லி உட்படப் பல பொருட்கள் வடக்கில் காணாப் பொருட்களாகிவிட்டன. […]
‘போருக்குப் பின் சிங்கள பௌத்தர்களின் உணர்வு நிலை’ (History After the War Historical Consciousness in the Collective Sinhala Buddhist Psyche in Post war Sri Lanka) என்ற தலைப்பிலான நூலை கலாநிதி. நிர்மால் ரஞ்சித் தேவசிறி வெளியிட்டார். இந் நூலை அவர் எழுத முன்னர், ‘போருக்குப் பின் வரலாறு : நல்லிணக்கத்திற்கு எதிரான சவால்’ எனும் கட்டுரையை ground views (groundviews.org) இணைய சஞ்சிகையில் […]
இந்தப் பகுதி உணவளிக்கும் விவசாயம், உற்பத்தி பற்றியும் சுற்றாடலின் பல்வகைமை பற்றியும் ஆராய்கிறது. உலகின் சகல பகுதியிலிருந்தும் உணவு உற்பத்தியாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருள்கள் இயற்கை எமக்குத் தந்த அருங்கொடையாகும். அறுசுவை கொண்ட இவ் உணவுகளே உலகத்தை நிலைபெறச் செய்கிறது. தாவரங்களானாலும் சரி, விலங்குகளானாலும் சரி, உணவின்றி இயங்கமுடியாது. இவ் உலகில் உணவுற்பத்தி இன்றியமையாத ஒன்றாகும். உணவு உற்பத்தியில் பிரதான காரணகர்த்தா சூரியனே. சூரிய ஒளி […]
இலங்கையும் தெற்காசியாவும் ஒருங்கிணைத்த பண்பாட்டு மண்டலமாகப் பெருங் கற்காலத்திற்கு முன்பிருந்தே விளங்கிவரும் நிலப்பரப்பாகும். இந்நிலப்பரப்பு மொழியாலும் நாகரிகத்தாலும் சமயங்களாலும் மெய்யியற் சிந்தனைகளாலும் ஒன்றனுக்கொன்று தொடர்பும் இணைப்பும் ஒத்தத்தன்மையும் கொண்டனவாக அமைகின்றன. மொழிநிலையில் தொல்காப்பியத்திற்கு முற்பட்டும் பிற்பட்டும் அதன் விதிகளுக்கு உட்பட்டனவாகவே ஈழமும் தமிழகமும் அமைகின்றன. சிங்கள மொழியின் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் தமிழின் பங்களிப்பு என்பது மிகப்பெரியது. அதனையொத்த தன்மையினையே சமயப்பண்பாட்டு நிலையிலும் காணவியலும். மெய்யியல் கோட்பாடுகளின் தோற்றமும் பரவலும் […]
தமிழில் : த. சிவதாசன் சீலன் என்ற பெயரால் அறியப்பட்ட திரு.எஸ். தவசீலன் வட மாகாணத்தின் வடக்கிலுள்ள வேலணைக்கு அடுத்துள்ள ஊர்காவற்றுறையில் பிறந்தவர். இலங்கைத் தபாற் திணைகளத்தில் தபால் விநியோகம் செய்யும் உத்தியோகத்தராகக் கடமையாற்றிய இவரது தந்தையார் இவருக்கு நான்கு வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டார். தந்தையாரின் மரணத்திற்குப் பின்னர் இந்த இளம் குடும்பம் புதுக்குடியிருப்பிலிருந்த தாயாரின் பெற்றோருடன் சென்று வாழ நேரிட்டது. தந்தையாரின் ஓய்வூதியத்திலும், தாயாரின் சிற்றூழியங்கள் மூலம் பெறப்பட்ட […]