Blogs - Ezhuna | எழுநா

கீழைக்கரைக்கான வேறு தொன்மச் சான்றுகள் I

20 நிமிட வாசிப்பு | 10933 பார்வைகள்

கீழைக்கரைக்கான வரலாற்றுச் சான்றுகளில், உள்ளூர்க் குடிகளிடையே நீடித்து வரும் தொன்மங்கள் முக்கியமானவை. சமகாலத்தில் எழுத்தாதாரங்களுக்கு மேலதிகமாக தொன்மங்கள், வாய்மொழிக்கதைகள், நாட்டார் பாடல்களை சரித்திர ஆதாரமாகக் கருதவேண்டிய தேவை வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பொறிப்புச் சான்றுகளோ எழுத்துச் சான்றுகளோ இல்லாத சமூகங்களுக்கிடையே நீடித்து வரும் கர்ண பரம்பரைக் கதைகளை நன்கு ஆராய்ந்து அவற்றுக்கான வரலாற்றுச்சான்றாக முன்வைக்கமுடியும் என்பதே நவீன வரலாற்றுவரைவியல். அந்தவகையில் கீழைக்கரைக்கான தொன்மச் சான்றுகளாக  ஊர்சார் வரலாறுகள், சமூகங்கள் சார் தொன்மங்கள், […]

மேலும் பார்க்க

பௌத்த – சமண மதங்களின் மீளெழுச்சிகள்

21 நிமிட வாசிப்பு | 8892 பார்வைகள்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில், காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், கருப்பின இளைஞர் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து தப்பியோடவிடாமல் தடுக்கும்பொருட்டு நிலத்தில் சரித்து வைத்துக் கழுத்தை முட்டிக்காலால் நசுக்கியவாறு இருந்ததால் கைதுசெய்யப்பட்ட கருப்பின இளைஞர் இறக்க நேரிட்டது. இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் வழமையானவை; அவற்றுக்கு எதிராக கருப்பின மக்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் அமைதி வழிப்போராட்டங்களை நடாத்தி வந்தவாறுள்ளனர். இந்தச் சம்பவம் தொலைபேசிப் பதிவாகிச் சமூக வலைத்தளங்களில் பரவலானதைத் தொடர்ந்து அமெரிக்காவெங்கும் […]

மேலும் பார்க்க

மலையகத் தமிழரும் அரசியல் நகர்வும்

9 நிமிட வாசிப்பு | 8749 பார்வைகள்

இலங்கை நாட்டில் சுமார் இருநூறு வருடங்களாக வசித்து வரும் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் தம்மை ‘இந்திய தமிழர்கள்’ என்று அழைத்துக் கொள்ள வேண்டுமா, அல்லது ‘மலையகத் தமிழர்கள்’ என்று இனம் காண வேண்டுமா என்ற விவாதம் நீண்ட காலமாகவே இம்மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த மக்கள் மத்தியில், இந்தியாவில் ஒருகாலும் இலங்கையில் ஒரு காலும் வைத்துக்கொண்டு, சில சொச்ச நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அடிக்கடி இந்தியாவுக்குச் சென்று, […]

மேலும் பார்க்க

எருமை வளர்ப்பு – ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை

23 நிமிட வாசிப்பு | 12103 பார்வைகள்

இந்த கட்டுரையில் எருமை வளர்ப்புத் தொடர்பான பல விடயங்களை ஆராயப் போகிறேன். இதற்கு இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியீடுகளையும் பயன்படுத்தியுள்ளேன். பசு மாடுகளைப் போல எருமை மாடுகளிலிருந்தும்  மனித தேவைகளுக்கு கணிசமான அளவில் பால் மற்றும் இறைச்சி பெறப்படுகிறது. இன்று உலகில் அதிக பால் உற்பத்தியாகும் நாடான இந்தியாவில் பசுப் பாலை விட எருமைப் பாலே அதிகம் பெறப்படுகிறது. இந்தியாவைத் தவிர பாக்கிஸ்தான், […]

மேலும் பார்க்க

வணிகம் ஆரம்பிக்க அவசியமான நான்கு தூண்கள்

10 நிமிட வாசிப்பு | 8710 பார்வைகள்

“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை”-திருக்குறள் (512)- மு.வரதராசனார் விளக்கம்: பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும். எமது பரம்பரைத் தமிழர்களின் வரலாற்றை பார்த்தோமென்றால் அவர்கள் கடலோடி மலையேறி (இப்போது விமானம் ஏறி) நாடுகள் கடந்து தமக்கும், தமது குடும்பத்திற்கும், அதனுடன் அவர்களது சமூகத்திற்கும் பணம் உழைக்க மிக்க சிரமப்பட்டு அவர்களது குறிக்கோள்களை […]

மேலும் பார்க்க

இலங்கையின் வடகடலில் இந்திய அத்துமீறல் : கடல் வள அழிவும் சமூகப் பொருளாதார பாதிப்புகளும் – பகுதி 3

21 நிமிட வாசிப்பு | 9087 பார்வைகள்

இந்தியக் கடல்கொள்ளையும், அதை மூடிமறைக்கச் சொல்லப்படும் காரணங்களும் ‘இந்திய மீன்பிடிப் படகுகள், நீரோட்டத்துடன் அவர்களின் வலைகள் அடித்து செல்லப்படுவதால்தான் எல்லை தாண்டுகின்றனர்; இலங்கையின் கடல்பகுதியில் மீன் பிடிப்பதற்கல்ல.’ என இந்திய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இந்திய நாசகார மீன்பிடிக்கு ஆதரவாகச் செயற்படும் சில புலம்பெயர் ‘இடதுசாரித்துவப் புரட்சி’ பேசும் சக்திகளும் இந்தியப் படகுகளின் அத்துமீறலை நியாயப்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் பிரசுரமாகும் ‘புதிய ஜனநாயகம்’ பங்குனி 2011 இதழில், எல்லை தாண்டிய கடற்கொள்ளை […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு உயிர்ப் பல்வகைமை : ஓர் அறிமுகம்

9 நிமிட வாசிப்பு | 8541 பார்வைகள்

கிழக்குக்கரையின் அம்பாறை தொடங்கி வடமேற்குக் கரையின் புத்தளம் வரை கடற்கரையோரங்களை உள்ளடக்கிய நிலம், நீர்நிலைகள், காடு என்பன உள்ளடங்கலாக ஐவகை நிலங்களை உள்ளடக்கியதே வடக்கு – கிழக்குபிரதேசமாகும். பாரம்பரிய வரலாறுகள், நிகழ்வுகள், இடப்பெயர்வுகள், விவசாய அபிவிருத்திகள் என்பனவற்றை உள்ளடக்கி இலங்கையின் அபிவிருத்தியில் பெரும்பங்காற்றிவருகின்றது இந்தப் பிராந்தியம். பூகோள அமைப்பின்படி, கடலோரங்களையும் ஐவகை நிலங்களையும் கொண்ட இப் பாரம்பரிய பிரதேசம் பலநூற்றாண்டுகாலமாக அழிவடையாமல் இருப்பது பெரும்பேறாகும். இயற்கை அனர்த்தங்கள், மனிதச் செயற்பாடுகள், […]

மேலும் பார்க்க

இலங்கையின் வடகடலில் இந்திய அத்துமீறல் : கடல் வள அழிவும் சமூகப் பொருளாதார பாதிப்புகளும் – பகுதி 2

30 நிமிட வாசிப்பு | 10062 பார்வைகள்

மீன்பிடித் திறன் அதிகரிப்பும் கடல்வள அழிவும் கடலில் உருவாகும் மீன்வளத்தின் அடிப்படையில் கிடைக்கவல்ல வருமானத்திற்கு மீறியதான மீன்பிடித் திறனை அதிகரிக்க, முதலீடு செய்வது பாதகமானதாகும். அதைக் கட்டுப்படுத்தி மீன் வளத்திற்கேற்ப முதலீடு செய்வதற்கு வகை செய்யாமல், மீன்பிடித்துறையில் தாராளமய முதலீட்டை ஒரு அரசு தனது கொள்கையாகக் கொண்டிருக்குமானால் அதனால் முதலில் பாதிப்படைவதும், அழிவுக்குள்ளாவதும் கடல்சார் வளங்களே. உற்பத்தி உபகரணங்களில் முதலீடு செய்யும்போது, அதை இலாபத்துடன் திருப்பிப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை […]

மேலும் பார்க்க

பயன்பல கொடுக்கும் பப்பாளி மரம்

11 நிமிட வாசிப்பு | 17485 பார்வைகள்

உலகில் அதிகளவில் பயிரிடப்படும் வெப்பமண்டலப் பயிர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது பப்பாளி ஆகும். வெப்பமண்டல அமெரிக்காவில் அதன் சரியான தோற்றம் தெரியவில்லை என்றாலும், அதன் தோற்றம் மற்றும் வளர்ப்பின் மையமாக மத்திய அமெரிக்கா அல்லது மெக்சிகோ இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. ஐரோப்பியரால் முதன்முதலில் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டொமினிக்கன் குடியரசு மற்றும் பனாமாவில் பப்பாளி கண்டறியப்பட்டது. மத்திய அமெரிக்காவிற்கு அப்பால் பப்பாளி பரவியதற்கு ஸ்பெயின் நாட்டவர்கள் தான் காரணம். […]

மேலும் பார்க்க

ஆரியர் கோட்பாடும் இலங்கையின் ‘சிங்கள பௌத்த’ அடையாள உருவாக்கமும்

25 நிமிட வாசிப்பு | 13468 பார்வைகள்

ஆங்கில மூலம் பேராசிரியர் ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன பேராசிரியர் ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன அவர்கள் ‘The People of the Lion: Sinhala Identity and Ideology In History and Historiography’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையொன்றை எழுதினார். இக் கட்டுரை யொனதன் ஸ்பென்சர் பதிப்பித்து Routledge பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘Sri Lanka History and Roots of Conflict (1990)’ கட்டுரைத் தொகுப்பு நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டுரையில் நவீன […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)