தொடர்கள்

உரையாடலுக்கு ஆதாரமான பிரதி – ஆங்கிலத்தில் : கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண சட்ட அறிஞர் ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்கள் ‘TOWARDS DEMOCRATIC GOVERNANCE IN SRI LANKA – A CONSTITUTIONAL MISCELLANY’ என்ற தலைப்பிலான கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். பத்துக் கட்டுரைகளின் தொகுப்பாக அமையும் இந்நூல் 2014 ஆம் ஆண்டு ‘INSTITUTE FOR CONSTITUTIONAL STUDIES’ என்னும் ஆய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலின் தலைப்பை பொருள் விளக்கம் செய்யும் […]

இலங்கையை வளம் கொழிக்கும் நாடாக மாற்றுவதற்கு, மலையகத் தமிழ் மக்களின் உழைப்பைச் சுரண்டியதில், கிழக்கிந்தியக் கம்பெனியினரே முதற் பங்கு வகித்தனர். கிழக்கிந்தியக் கம்பெனிகளின் ஆதிக்கமானது இலங்கையில் அவர்கள் தடம் பதிப்பதற்கு முன்னரே இந்திய நாட்டில் ஆரம்பித்துவிட்டது. உடல் உழைப்பை மாத்திரம் மூலதனமாகக் கொண்ட இந்திய விவசாயச் சமூகத்தில், 17 ஆம் நூற்றாண்டானது பழமையும் முதுமையுமாக செயற்பட முடியாமல் இருந்த காலமாகக் கணிக்கப்படுகின்றது. இக் காலத்தில் தமிழர்களை ஆட்சி செய்த வேற்று […]

கூட்டுறவின் தனித்துவ அடையாளம், அதன் அரசியல் மொழி தொடர்பான கருத்துரைகள் மிக அவசியமானவை. ஏனெனில், கூட்டுறவின் இன்றைய தேக்க நிலையைப் படம் பிடிக்கவும் அதன் தொடரும் நெருக்கடிகளை ஆராய்ந்து நாடி பிடிக்கவும் இவைகளைப் பற்றிய தெளிவு மிக அவசியம். கூட்டுறவின் ஆரம்ப நிலை, அதன் அடையாளம், சிறப்புத் தன்மைகள் மற்றும் இன்றைய செல்நெறி வழி நோக்கின், ஓர் அரசியற் கருவியாக கூட்டுறவு ஏன் வலுவிழந்தது? என்பதைத் தெளிவுறக் காணலாம்.   […]

அறிமுகம் நாட்டுப்புறவியலின் இயங்கு தளங்களில் ஒன்றாக மந்திரம் காணப்படுகின்றது. இறையியல், சமயவியல் பற்றிய கருத்தாக்கத்திற்கு சமமாகவும் சமாந்தரமாகவும் மந்திரம் முதன்மை பெறுகின்றது. ஆவியுலக நம்பிக்கை, முன்னோர் வழிபாடு போன்றன தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை மந்திரம், மனிதர்களிடம் – அந்நம்பிக்கைகளை உடைய இனக் குழுக்களிடம் செல்வாக்குற்றுள்ளது. ‘இயற்கையை, அதன் அதீத ஆற்றல்களைப் புரிந்து கொள்ள முடியாத ஆதிமனிதர்கள், அதன் மீதான திகைப்பு, பயம் என்பவற்றிலிருந்து விடுபட்டு அதனைக் கட்டுப்படுத்தவும் தனக்குத் […]

இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்தில் திஸ்ஸமகாராமை அமைந்துள்ளது. இவ்விடம் பண்டைய மாகம இராச்சியத்தின் முக்கிய நகரமாகும். இது பண்டைய காலத்தில் அக்குறு கொட என அழைக்கப்பட்டது. பண்டைய ருகுணு இராச்சியத்தின் முக்கிய பகுதியாக இந்நகரமும், இதனை அண்டிய பகுதியும் விளங்கியது. இந்த இராச்சியத்தின் எச்சங்களாக பல பெளத்த தூபிகளும், கல்வெட்டுகளும், கட்டிட இடிபாடுகளும், தொல்பொருள் சின்னங்களும் இங்கு அதிகளவில் காணப்படுகின்றன.  இங்குள்ள திஸ்ஸவாவி குளத்தின் கிழக்குப் பகுதியில் அக்குறு […]

ஒருவர் ஈழத்தில் இயக்கமொன்றில் இணைந்து போராடியதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம். முக்கியமாய் போர் உக்கிரமாய் நடைபெறும் பிரதேசங்களில் – போராட்டத்தில் இணைந்துகொள்ள – புறக்காரணிகள் இன்னும் அதிக நெருக்கடிகளைக் கொடுக்குமென்பதை நாமனைவரும் அறிவோம். எமது இயக்கங்களில் பலர் பெருந்தொகையாய்ச் சேர 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுச் சம்பவமும், 1981 இல் யாழ். நூலக எரிப்பும், 1983 இல் ஜூலைக் கலவரமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய காரணங்களாய் அமைந்தன. ஆனால் யாழ். […]

தமிழில் : ஓய்வுநிலைப் பேராயர் பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன்,முனைவர் சோ. பத்மநாதன் நான் நீடம் நிறுவனத்தில் 1992 இல் முதலீட்டு நிதி மேலாளராகியதையும், 1997 ஜனவரி மாதத்தில் சொந்தமாக கலியன் முதலீட்டு நிதியத்தைத் தொடக்கியதையும் பின்நோக்கி பார்க்கும்போது, அவை நேற்றுத்தான் நிகழ்ந்தன போன்றதொரு பரவசமே என்னுள் ஏற்படுகிறது. கலியன் முதலீட்டு நிதியத்தை ஆரம்பித்து, அடி அத்திவாரத்திலிருந்து அதைப் போராடி வளர்த்துச் சென்றேன். முதலீட்டு நிதியம் என்பது மூன்று முக்கிய பிரிவுகளைக் […]

கனவும் நிமித்தமும் கனவும் நிமித்தங்களும் நிகழவிருக்கும் நிகழ்வினை முன்னுரைக்கும் தன்மையுடையன. கனவிற்கும் நிமித்தங்களுக்குமான பலன்களைத் தமிழ்க்கணியன்கள் ஆய்ந்துரைப்பர். கி.பி. பத்தாம் நூற்றாண்டிலேயே கனவும் கனவின் தன்மையும் கனவிற் தோன்றும் காட்சிகளும் எவ்வகையில் பலிதமாகக்கூடியன. பகலிற் காணும் கனவு பலிக்காது என்ற நம்பிக்கை. கனவு காணும் காலம் : இதனை இரவின் முன் யாமத்தில் கண்ட கனவு, நடு யாமத்தில் கண்ட கனவு, பின் யாமத்திற் கண்ட கனவு என மூன்றாகப் […]

தொடக்கக் குறிப்புகள் இலங்கையின் வரலாற்றில் மிகப்பாரிய அபிவிருத்தித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது மகாவலி அபிவிருத்தித் திட்டடமாகும். இன்றுவரை இலங்கையின் முதன்மையான பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமாக இது விளங்குகிறது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் முதன்மையான இடம் இத்திட்டத்திற்கு உண்டு. ஆனால் இலங்கையின் வரலாற்றாளர்களின் பார்வையில் இது ஒரு அபிவிருத்தித் திட்டம் மட்டுமே. அதேவேளை அபிவிருத்தி தொடர்பான ஆய்வாளர்கள், பணியாளர்கள் ஆகியோரின் பார்வையில் இதுவொரு வெற்றிகரமான அபிவிருத்தித் திட்டமாகும். கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரையில் […]

ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன பிரித்தானிய ஏகாதிபத்தியம் இலங்கை தொடர்பாகவும், பொதுவாக அதன் காலனிய நாடுகள் தொடர்பாகவும் கடைப்பிடித்த கொள்கையில் இரு முரண்பட்ட போக்குகள் இருந்தன என றெஜி சிறிவர்த்தன குறிப்பிடுகிறார்.  பிறேஸ்கேர்டில் விவகாரத்தைப் பற்றிச் சரியான மதிப்பீட்டைச் செய்வதற்கு நாம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் இரு முகங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இருபதாம் நூற்றாண்டில் (காலனிகளின் ஆட்சியில்) பிரித்தானியாவின் இந்த இரு முகங்களும் வெளிப்பட்டுத் தெரிந்தன. ஒரு முகம் […]

தமிழில் : த. சிவதாசன் கோவிட் – 19 பெருந்தொற்றின் பேரழிவு கொண்டுவந்த பொதுமுடக்கம் சில காரியங்களுக்கும் காரணமாக அமைந்துவிட்டது. முதல் தடவையாக, மேற்கு மாகாணத்துக்கு வெளியில் தூங்கிக்கொண்டிருந்த நகரங்கள் விழித்தெழ ஆரம்பித்தன. கொழும்பில் பணிபுரிந்த பலர் சொந்த ஊர்களுக்குக் குடிபெயர்க்கப்பட்டு அங்கு தமது குடும்பங்களுடன் வீடுகளுக்குள் முடக்கப்படலாயினர். துர்ப்பாக்கியமாகச் சிலர் வேலைகளை இழக்கவேண்டி ஏற்பட்டதும் உண்மை தான். உடலுழைப்பு அவசியமான பணிகளைச் செய்தவர்கள் நகர் முடக்கம் காரணமாகவும், பொதுவான […]

அறிமுகம் வட பிராந்தியத்தின் வருடாந்த மழைவீழ்ச்சி 1230 மி.மீ. ஆயினும்கூட, ஆண்டுக்கு ஆண்டு, இடத்திற்கு இடம் மற்றும் பருவத்திற்குப் பருவம் இது வேறுபடும் (படம் 7.1). இருப்பினும், வடகிழக்கு பருவக்காற்றின் தாக்கம் மற்றும் வங்காள விரிகுடாவில் பல்வேறு காற்றழுத்த தாழ்வுகள் உருவாகி வருவதால், மொத்த மழையில் 75 சதவீதம் (700மி.மீ.) வடகீழ் பருவக்காற்றின் போது பெறப்படுகிறது (Alahacoon & Edirisinghe, 2021b). மேலும், வடக்கு பிராந்தியத்தில் 60% மழை (550 […]

1920 கள் மற்றும் 1930 களில் இலங்கைச் சோனகர்கள் அகில இலங்கை முஸ்லிம் லீக் மற்றும் அகில இலங்கைச் சோனகர் சங்கம் என இரண்டு போட்டி அரசியல் வம்சமாகப் பிளவுபட்டனர். இவ்விரு அரசியற் சங்கங்களின் தலைமைகளான T.B. ஜாயா மற்றும் சேர் ராசிக் ஃபரீட் ஆகிய இருவருமே புதிய அரசியல் சீர்திருத்தச் சட்டசபையில், சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் ‘50 : 50’ அமைய வேண்டும் என்ற வீணான கோரிக்கையை முன்வைத்த இலங்கைத் […]

இலங்கையில் பௌத்த சமயத்தின் வரலாறு பற்றிய சமூகவியல் நோக்கிலான ஆய்வுகளை எழுதியவர்களில் முக்கியமான ஒருவரான கித்சிறி மலல்கொட அவர்களின் நூல் பற்றிய அறிமுகமாக இக்கட்டுரை அமைகிறது. கித்சிறி மலல்கொட 1960 களின் பிற்பகுதியில் ஒக்ஸ்போர்ட் பல்லைக்கழகத்தில் கலாநிதிப் பட்ட ஆய்வை மேற்கொண்டார். 1970 இல் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு பின்னர் திருத்தங்களுடன் 1976 இல் ‘யுனிவர்சிட்டி ஒவ் கலிபோர்னியா பிரஸ்’ வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்டது. ‘BUDDHISM IN SINHALESE SOCIETY  1750 […]

யாழ்ப்பாணத்தில் உருவாகிய தனித்துவமான சனசமூக நிலைய நூலக மரபு தத்தமது கிராமங்களின் சமூக மேம்பாடு, சமூகத்துக்கான பொது அறிவினை வழங்கல், சமூகத்தினரிடையே ஒற்றுமையைப் பேணல், சுயசிந்தனை கொண்ட அறிவுசார் சமூகமொன்றுக்கான அடித்தளத்தை வழங்கும் வகையில் வாசிப்புக் கலாசாரத்தை உருவாக்குதல் என்பன போன்ற காரணிகளை முன்வைத்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிகளில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உருவாகியதே சனசமூக நிலையச் சிந்தனையாகும்.  அக்காலகட்டத்தில், குறிப்பாக ஆங்கிலேயர் காலத்தில் பிரபுக்களுக்கும், அரச அதிகாரிகளுக்கும் மட்டுமே கிட்டியிருந்த […]

மொழியின் பிரதான அம்சமே பெயரிடுவதாகும். பெயர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் விரவிக்கிடக்கின்றன. ஒரு பொருள் அல்லது செயற்பாடு பெயரிடப்படுவதன் மூலமே தனித்துவப்படுத்தப்படுவதோடு, அர்த்தம் கொள்ளச் செய்யப்படுகின்றது. இப்பெயர்கள் தொடர்பான கற்கை Onomastics எனப்படுகின்றது. தமிழில் பெயராய்வு எனலாம். இது பெயர்களின் சொற்பிறப்பியல், வரலாறு, அவற்றின் பயன்பாடு, தனித்தன்மைகள் என்பவற்றை ஆய்வு செய்யும் துறையாகும். இது பலவகைப்படுகின்றது.  இடப்பெயராய்வு (Toponomastic) ஆட்பெயராய்வு (Anthrophonomastic) இலக்கியப்பெயராய்வு (Literary Onomastic) சமூகப் பெயராய்வு (Socio Onomastic) […]

இந்தத் தொடரின் சென்ற இரண்டு கட்டுரைகளில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். இனி யாழ்ப்பாணக் கட்டளையகத்தின் பல்வேறு பிரிவுகளை விவரமாகக் காட்டும் நிலப்படங்கள் தரும் தகவல்கள் குறித்துப் பார்க்கலாம்.  லெயுசிக்காமின் தொகுப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்துக்கு அடுத்ததாக யாழ்ப்பாணப் பட்டினத்தின் நான்கு பிரிவுகளையும் அதற்கு அயலிலுள்ள தீவுகளையும் ஒருங்கே காட்டும் நிலப்படம் உள்ளது (படம்-1). ஒல்லாந்தின் […]

இலங்கைத் தீவின் அரசியலை அதன் கொலனித்துவக் காலத்திலிருந்து, சிங்களப் பெருந்தேசியவாதத்தின் எழுச்சி, இன முரண்பாடு, தமிழர்களின் விடுதலைப் போராட்டம், போர்கள், சமாதான முயற்சிகள், போருக்குப் பின்னான நிலைமைகள், சமகாலம் என பெரும் பரப்பினை இந்நூல் பேசுகின்றது. இலங்கைத்தீவின் இன முரண்பாடுடன் தொடர்புடைய உள்நாட்டுத்தரப்புகள், பிராந்திய சக்திகள், தமிழ் டயஸ்போறா, நோர்வே உட்பட்ட சர்வதேச சக்திகள் என அனைத்துத் தரப்பினரைப் பற்றியதும் நோக்கியதுமான விமர்சனங்களும் கணிசமாக உள்ளன.  நூலாசிரியர்: ஒய்வின்ட் புக்லறூட் […]

இலங்கை முஸ்லிம்களின் மற்றொரு உப மரபினமாக போஹ்ராக்கள் விளங்குகின்றனர். ‘போஹ்ரா’ (Bohras) என்ற சொல்லின் பொருள் ‘வர்த்தகர்’ என ஒரு ஆய்வுத்தகவல் குறிப்பிடுகிறது. அவர்களது சமூக வாழ்வியலுக்கும் இந்தச் சொல்லுக்குமான தொடர்பு உண்மையில் ஆழமானது. இந்த அர்த்தத்தில் பார்த்தால் ‘போஹ்ரா’ என்பது ஒரு காரணப்பெயராகவே இந்த சமூகத்தினருக்கு சூட்டப்பட்டிருப்பதை அவர்களது உலக வர்த்தகச் செயல்பாடுகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. உலகின் பல பாகங்களிலும் சிறப்பான முறையில் வர்த்தகம் மேற்கொள்கின்ற ஒரு சமூகப்பிரிவினராகவே […]

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல்”-திருக்குறள் (664)- மு. வரதராசனார் விளக்கம் : இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம். சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம். ஈழத்தில் நாமும் எங்களின் மூதாதையர்களும் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். இந்த வறண்ட பூமியையும் குறைந்த இயற்கை வளங்களையும் கொண்டு மிகச் சந்தோசமாக வாழ்ந்த நாட்கள் எனது நினைவில் உண்டு. எமது வாழ்க்கையானது ஒவ்வொரு […]

மத நாயகம் இயக்கி வந்த மனித சமூக வரலாற்றில் ஜனநாயகத்தினுடைய இயங்காற்றல் வேகம் கொள்ளத் தொடங்கிய பத்தொன்பதாம் நூற்றாண்டை இப்போது அலச வேண்டியவர்களாக இருக்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைக்கூறில் (1789) ஏற்பட்டிருந்த பிரான்சியப் புரட்சி நிலப்பிரபுத்துவ முடியாட்சியைத் தகர்த்ததைத் தொடர்ந்து முதலாளித்துவ ஜனநாயக வாழ்முறை விரிவாக்கம் பெற்று வளர்ந்தது. அரை நுற்றாண்டுப் போராட்டங்கள் ஊடாகவே முதலாளித்துவ ஜனநாயக அரசு முறைமை நிலைபேறான உறுதியினைப் பிரான்சிலும் எட்ட இயலுமாயிற்று. அவ்வாறு எட்டிய […]

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடலும் மேலெழுந்திருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு – கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை என்ற கருத்தை தனது முதலாவது கொள்கை விளக்க உரையில் கூறியிருக்கின்றார். தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கவேண்டுமென்றால் அரசியல் ஸ்திரநிலையைக் கொண்டுவரவேண்டும். இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் அரசியல் ஸ்திர நிலையையும் உருவாக்க முடியாது. பிராந்திய வல்லரசான இந்தியா 13 ஆவது திருத்தத்தையே […]

வாழ்வாதாரத் தொழில் முனைவுகளில் பெரிதும் விரும்பப்படுவதும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டக் கூடியதுமான தொழிற்துறையாக கைத்தொழிற்துறை இருந்து வருகிறது. வளர்ச்சியடைய விரும்பும் எந்தப் பொருளாதாரமும் கைத்தொழிற்துறையின் மீது வளர்ச்சியை ஏற்படுத்தினால் தான் அது நிலைபேறுடைய பொருளாதார வளர்ச்சியாக அமையும். இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் கொள்கையிலும், முன்னுரிமைப்படுத்தப்பட்ட அபிவிருத்திக்கான 7 பிரதான பகுதிகளில், நான்கு துறைகள் கைத்தொழிற் துறை சார்ந்தே காணப்படுகின்றன. பின்வருவன அந்த 07 பிரதான பகுதிகள் : உணவுப் பாதுகாப்பு […]

கடந்த கட்டுரையில் கறவை மாடு வளர்ப்பின் போது தோன்றும் இனப்பெருக்கம் சார்ந்த பல பிரச்சனைகளை ஆராய்ந்திருந்தேன். இந்தக் கட்டுரையும் அதன் நீட்சியே. எனினும் தீர்வுகளை மையப்படுத்திய கட்டுரையாக அமைகிறது. கறவை மாடுகள் சினை பிடிக்காமைக்கும் ஏனைய இனப்பெருக்கம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கும் வெப்ப அயர்ச்சி (Heat stress) மிக முக்கியமான ஒரு காரணியாகும். அண்மைக் காலங்களில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் முன்பு இருந்ததை விட அதிக வெப்பநிலை நிலவுகிறது. உலக […]

கட்டுக்கரையைத் தொடர்ந்து வடஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு முக்கிய பெருங்கற்கால பண்பாட்டு மையமாக நாகபடுவான் என்ற இடம் காணப்படுகின்றது. இவ்விடம் பூநகரிப் பிராந்தியத்தில் முழங்காவிலுக்கு அண்மையில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் இலங்கையில் நாக வழிபாட்டு மரபு தோன்றி வளர்ந்த வரலாறு பற்றிய எதிர்கால ஆய்வுகளுக்குப் புதிய செய்திகளைக் கூறுவதாக இருக்கின்றன. எமது அறிவுக்கு எட்டியவரை இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சில வகையான சான்றுகள் தென்னாசியாவின் […]

இலங்கையில் வெளிக்காரணிகளின் தாக்கங்கள் அந்நியர் ஆட்சியும் வெளிநாடுகளின் செல்வாக்கும் இலங்கைக்கு புதிய விடயங்கள்  அல்ல. இலங்கை சிலசமயங்களில்  தென்னிந்திய மன்னர்களின் படையெடுப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இத்தகைய நிலப்பிரபுத்துவத்தால் யுத்தங்கள்   இனவாத ரீதியில் திரித்து விளக்கப்படுகின்றன. அது மாத்திரமல்ல 1411 இல் ஒருதடவை சீனக் கடற்படையின் தாக்குதலுக்கும் இலங்கை உள்ளானது.  அப்போது நீராவிக் கப்பல் இன்னும் புழக்கத்துக்குக்கு வராத சமயத்தில் ஒப்பரும் மிக்காரும் இல்லாதபடி பெரிய கடற்படையை மிங் வம்ச (Ming) […]

அனுராதபுரத்தை ஒரு அரசன் ஆளும் போது அவனுக்கு அடுத்து அரசராகத் தகுதி உடைய அரசரின் நெருங்கிய உறவினன் ஒருவன் ‘உபராசன்’ என்ற பெயரில் மகாவலி கங்கைக்கு கிழக்காக இருந்த உரோகணப் பகுதியை ஆள்வது வழக்கமாக இருந்தது. உரோகணத்தின் முதன்மையான நகரங்களாக சம்மாந்துறைப்பற்று தெற்கு தீகவாவியும், அம்பாந்தோட்டையின் மாகம்பற்று மாகாமமும் (இன்றைய கிரிந்த) திகழ்ந்தன. இவற்றில் ஒன்றையே அனுராதபுரத்தின் உபராசன் தன் ஆட்சித்தானமாகக் கொண்டிருந்திருக்கிறான். சில சந்தர்ப்பங்களில் அனுரையின் மேலாதிக்கத்தை நீங்கி உரோகண […]

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தே, குழுக்களாக மனிதர்கள் கூடி வாழத் தொடங்கிய காலத்தில் இருந்தே, மனித இனக்குழு ஒன்றின் சகல முன்னெடுப்புக்களிலும் பெண்களின் பங்களிப்பே முக்கியமானதாக இருந்திருக்கிறது. தத்தமது கூட்டத்தை வழிநடத்துபவளாக பெண்ணே இருந்திருக்கிறாள். உடல் வலுவிலும், உணவுத்தேடலுக்கான உழைப்பிலும், ஆணுக்குச் சமமாகவும் சில தருணங்களில் ஆணை விஞ்சியே பெண்ணின் செயற்பாடுகள் இருந்துள்ளன. “வருவிருந்து அயரும் விருப்பினள்” (புறம்.326:12) எனும் புறநானூற்றுப் பாடல் வேட்டைச் சமூகத்தில் உணவுப்பங்கீடு செய்வதில் அவளுக்கிருந்த நிர்வாகத்திறனின் தொடர்ச்சியைப் புலப்படுத்துவதாகக் காணப்படுகிறது. […]

திரட்டுகள்

பௌத்த சிற்பங்கள் இலங்கையில் உன்னதமான வேலைப்பாடுகளான பௌத்த சிற்பங்கள் பெருந்தொகையிலே காணப்படுகின்றன. ஆதியில் தர்மச்சக்கரம், புத்தர்பாதம், போதிமரம் என்பனவே வழிபாட்டுச் சின்னங்களாக விளங்கின. ஆயினும் கிரேக்கரின் செல்வாக்கினால் உருவ வழிபாடு இந்திய சமயங்களிடையில் வழமையாகிவிட்டது. இலங்கையில் இரண்டாம் நூற்றாண்டளவில் புத்தர் படிமங்களை வழிபடுவது வழமையாகிவிட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள புத்தர் படிமங்கள் கிபி. 300-500 வரையான காலப்பகுதிக்குரியனவாகத் தெரிகின்றன. கந்தரோடை, சுண்ணாகம், வல்லிபுரம், நவக்கீரி ஆகியவிடங்களிற் புத்தர் படிமங்கள் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துப் பௌத்த சமயந் […]

இவ் ஆண்டுடன், மலையக மக்கள் இலங்கையில் காலடி வைத்து கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் மலையத்தின் கட்சிகள் அல்லது தொழிற்சங்கங்கள் ஏதாவதொன்றுக்கு நூறு வருட வரலாறாவது இருக்குமா என்றால் நிச்சயமாக இல்லை என்றே பதில் கிடைக்கும். இதனை அரசியல் ரீதியான நோக்கோடு ஆராய்வது அவசியமாகிறது.  19 ஆம் நூற்றாண்டில், இந்தியாவில் சுதந்திரதாகம் பேரெழுச்சி பெற்று காந்தியடிகளின் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் வெள்ளையர்களின் அதிகாரத்தை உலுக்கிக்கொண்டிருந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், […]

ஆங்கிலம் மூலம் : குமாரி ஜெயவர்த்தன (சேர்.பொன். அருணாசலத்தின் குடும்பப் பின்னணியையும், அவரது மாமன் சேர். முத்துக்குமார சுவாமி, அவரது தமையன் சேர்.பொன். இராமநாதன் என்போர் பற்றியும், இலங்கையின் சிவில் சேவை உத்தியோகத்தராகவும் பின்னர் தமிழர்களின் அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய சேர்.பொன் அருணாசலம் பற்றியும் விமர்சன நோக்கில் எழுதப்பட்ட இக்கட்டுரையை இத்தொடரின் முதலாவது கட்டுரையாக தருகின்றோம். குமாரி ஜெயவர்த்தன அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூல் ‘அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை […]

பதிவுகள்

விடுதலைக்கான கருவி கல்வி சமுதாயத் தலைவர்களாக இருப்பவர்களின் கல்விநிலை தாழ்ந்திருக்குமாயின் நாட்டினுடைய முன்னேற்றத்தை எதிர்பார்ப்பது எங்ஙனம்? இந்திய நாட்டின் புரட்சிக்குக் காரணமாக இருந்தவர் பலர் எவ்வாறு ஆங்கில நாட்டில் கல்வி கற்றிருந்தனரோ அவ்வாறே இந்தோனேசியாவின் விடுதலைக்குக் காரணமாக இருந்த தலைவர்கள் பலர் டச்சு நாட்டில் கல்வி கற்றிருந்தனர். எனவேதான், கல்வி விடுதலைக்கான கருவி என்பது தனிநாயகம் அடிகளார் சிந்தனையாகும். ரஷ்யா : செய்தித்தாள்களே பொதுமக்களின் கல்விக்கழகம், அங்கு அனைவரும் செய்தித் […]

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘தமிழ்த்தூது வண. தனிநாயகம் அடிகளாரின் நான்காவது நினைவுப் பேருரை’ நிகழ்வில் பேராசிரியர். முனைவர். கு. சின்னப்பன் அவர்களால் இக் கட்டுரை வாசிக்கப்பட்டது. சுருக்கம் உரைநடை, நாவல், சிறுகதை, அகராதி, நகைச்சுவை இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஒப்பீட்டு இலக்கியம் என்று பல முதற்பணிகளைத் தமிழுக்குச் செய்தவர்கள் கிறித்தவத் தமிழ்த் தொண்டர்கள். இவர்களில் இருபதாம் நூற்றாண்டில் ஈழம் தந்த தமிழறிஞர் தனிநாயகம் அடிகள் (1913-1980), […]

பலஸ்தீனமும் முள்ளிவாய்க்காலும் தமிழினப் படுகொலையின் 15 ஆவது ஆண்டில், நாங்கள் யாவரும் சாட்சிகளாய் பார்த்திருக்க பலஸ்தீனப் படுகொலை அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இஸ்ராயேல் – பலஸ்தீனப் போரை வெறும் இஸ்ராயேல் – பலஸ்தீனப் போராக மட்டுமே அவதானிக்க முடியாதென்பதை எல்லோருமே அறிந்திருக்கின்றோம். எனது ஆய்வு நோக்கம் கருதி இப் போரை, மத்திய கிழக்கில் பேரரசுக் கட்டமைப்புக்காக, புவிசார் அரசியல் தளத்தில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற பலப் பரீட்சைக்கான போராகவே நான் பார்க்க விரும்புகின்றேன். […]

காஞ்சிரமோடை என்னும் இப்பகுதியை  நான் அறியக் காரணமாகவிருந்தது எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று நடத்திய காந்தியத்தின் ‘நாவலர் பண்ணைத் தன்னார்வத் திட்டம்’ ஆகும். நாவலர் பண்ணையில் மலையகத்திலிருந்து 77 இனக்கலவரத்தில் அகதிகளாக வந்திருந்த மக்களைக் காந்தியம் அமைப்பு குடியேற்றியிருந்தது. நாவலர் பண்ணைக்கும், மருதோடைக்குமிடையில் அமைந்திருக்கும் காஞ்சிரமோடை என்னும் பகுதி அப்போது காடாகவிருந்தது. மருதோடை வரை மட்டுமே பஸ் செல்லும். அங்கிருந்து பண்ணைக்கு மூன்று மைல்கள் வரையில் நடக்க […]

தமிழிசையின் செல்நெறி, சுகமான ஒரு பயணம் அல்ல. மக்களின் வாழ்வியலுக்குள் இலக்கியச் செழுமைக்குள் புதைந்திருந்த தமிழிசையின் தனித்துவமான அடையாளங்கள், காலவெளியில் கண்டுவந்த மாற்றங்களும் படிமலர்ச்சியும், பண்பாட்டு அரசியல் மேலாண்மைகளுக்குள் எதிர் கொண்ட சவால்கள், தன்னைத் தகவமைத்துக் கொள்ள எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் என்பன தமிழர் வாழ்வியல் வரலாறாகும்; தமிழ்ப் பண்பாட்டின் வரலாறுமாகும். இந்த வகையில் தமிழிசையின் மீட்டுருவாக்கதில் உயிர் விசைகளாக விளங்கிய முன்னோடிகளின் உருவாக்கம், பங்களிப்பு பற்றிய தெளிவான புரிதல் இன்றியமையாதது. […]

இலங்கை முன்னொருபோதும் காணாத கடந்த வருடத்தைய படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரும் அவர்களுக்கு நெருக்கமான  மத்திய வங்கியின் இரு முன்னாள் ஆளுநர்கள் உட்பட ஐந்து உயர்மட்ட அதிகாரிகளுமே பொறுப்பு என்று உயர்நீதிமன்றம்  அண்மையில் வழங்கிய தீர்ப்பு, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நாட்டின் அதியுயர் நீதிமன்றம் வழங்கிய மூன்றாவது தீர்ப்பாகும். ஜனாதிபதியாக இருந்தபோது […]

ஆங்கில மூலம் : வி. நவரத்தினம் சட்டசபையில் தமிழ்ப் பிரதிநிதிகள் ஆற்றிய உரைகள் அவர்களது சந்தர்ப்பவாத மனப்பாங்கை பறைசாற்றுவன. அவர்கள் யாவரும் சிங்களவர்களை நம்ப வேண்டும். புதிய அரசியல் யாப்பைச் செயற்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கூறினர். சு. நடேசப்பிள்ளை பேசும்போது “நாம் எமது பக்கக் கருத்தை நீதிபதி ஒருவர் முன்னிலையில் எடுத்துரைத்தோம். அவர் அதனை நிராகரித்துவிட்டார். இனி நாம் செய்வதற்கு எதுவும் இல்லை” (பிரித்தானிய காலனிய […]

வரி விலக்கு தொடர்பான தகவல்களை பொது மக்களுக்கு வழங்குதல்   மேலும், முதலீட்டு சபை மற்றும் தந்திரோபாய அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக வரி விதிவிலக்கினைப் பெறும் நிறுவனங்கள், வரி விலக்களிப்பட்ட (tax exemption) மொத்த தொகை, மற்றும் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வரி சலுகை வழங்கப்பட்ட நிறுவனங்களின் விபரங்கள் அனைத்தினையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இணையத்தளத்தில் இற்றைப்படுத்த (update) வேண்டும் என இவ்வறிக்கை குறிப்பிடுகின்றது. இதன் மூலம் வரி […]

காணொலிகள்

உணவு உற்பத்தியை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பில் கிளிநொச்சி இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் மேலதிக பணிப்பாளரான கலாநிதி எஸ்.ஜே அரசகேசரி உணவு நெருக்கடிக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் உணவு உற்பத்தியின் எல்லையை நாங்கள் இப்போது அடைந்திருக்கின்றோம் என்பதுதான் உண்மை. உள்ளூரில் உள்ள உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணம் அறுவடைக்குப் பிந்திய இழப்பு அதிகரித்துள்ளது. அதைவிட உள்ளூர் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொழுது உள்ளூரில் உணவு உற்பத்தி […]

சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம் 1992இல் ஆரம்பிக்கப்பட்டது. மூலிகைத் தாவரங்கள் தொடர்பில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் வளங்களை சரிவர பயன்படுத்த முடியாதுள்ளது. காரைநகரிலுள்ள கடுக்காய் பற்றி அந்தப் பிரதேச மக்கள் பலருக்கு தெரிந்திருக்கவில்லை. தற்போது நாங்கள் அது தொடர்பில் விழிப்பூட்டி அங்கிருந்து மருந்துக்கு தேவையான கடுக்காயைப் பெற்றுவருகின்றோம். நிதிப் பிரச்சினையால் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிரமமாகவுள்ளது. மூலிகை மருந்து உற்பத்திகளை அதிகரிப்பதன் ஊடாக பலருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் […]

குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு ஏன் பிணை அவசியம், பிணை தொடர்பில் மக்கள் மத்தியிலுள்ள இரட்டை நிலைப்பாடுகள், எவ்வாறான சந்தர்ப்பங்களில் பிணை மறுக்கப்படலாம், இலங்கையில் குற்றவியல் வழக்குகளிலுள்ள பலவீனங்கள் போன்ற பல விடயங்களை சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்கள் இந்தக் காணொலியில் விளக்கியுள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் அல்லது அரச ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்புக்கு எதிரான செயற்பாடுகளில் உத்வேகத்தோடு மக்களை இணைத்துக்கொண்டு போராடுவதில் பல சவால்கள் உள்ளன. ஆண்களின் மேலாதிக்க அரசியல், பொருளாதார சிந்தனை சரியான, முழுமையான சிவில் சமூக செயற்பாட்டிற்கு பொருத்தமானதாக இல்லை. மட்டக்களப்பில் இருக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடம் இரு கருத்தியல்கள் உள்ளன.

வெளியீடுகள்

எழுநா பற்றி

2012 இல் உருவாக்கப்பட்ட எழுநா, இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் சார்ந்து, சமூக - பொருளாதார - அரசியல் - பண்பாடு - அபிவிருத்தி ஆகிய தளங்களில் கருத்துருவாக்கம் - நூலுருவாக்கம் - பரவலாக்கம் - சார்ந்த உரையாடல்களுடன் தன்னை புதுப்பித்து கொண்டு செயற்படுகின்றது.