இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் பாரம்பரியக் கலாசாரம் என்பது தென் இந்தியத் தமிழ்க் கலாசாரமேயாகும். இது ஒரு வகையில் இலங்கையில் வாழ்கின்ற இந்தியத் தமிழர்களின் தனித்துவமிக்க தமிழ் இனமாக அடையாளப்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கின்றது. இவர்கள் பேசுகின்ற மொழி, உறவுமுறைகள், தெய்வ வழிபாடுகள், திருமணம் போன்ற சடங்கு முறைகள் வடக்கு – கிழக்கில் வாழ்கின்ற பூர்வீகக்குடிகளான இலங்கை தமிழர்களில் இருந்து வேறுபட்டே இருக்கின்றன. அவ்வாறு இலங்கைத் தமிழர்களில் இருந்து வேறுபட்டு காணப்பட்டாலும் இந்தியத் […]
1 1981 இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது குடாநாட்டின் தென்மேற்குக் கரையோரமாக அமைந்திருக்கும் அராலியில் இருந்தேன். அது என்னுடைய தாயாருடைய ஊர். நூலகம் எரிந்தபோது கடலில் வீழ்ந்த தீச்சுவாலை காரணமாக அராலிக்கடல் தீப்பற்றி எரிவதாக சிறுவனான நான் நினைத்துக்கொண்டேன். அது என் முதற் பீதிகளில் ஒன்றாய் அமைந்தது. அதற்குப் பின்னால் அடுக்கடுக்காய் பல விடயங்கள் நடந்தேறின. நெருப்பு மூண்டு எரியத் தொடங்கியது. சேரன் தனது ‘இரண்டாவது சூரியோதம்’ கவிதைத் தொகுதியில், […]
அநேக பெயர்களுள்அவனது பெயரை மறந்துவிடுவோம் என அஞ்சுகிறேன்அவனை மறக்க நான் அஞ்சுகிறேன்மாரி மழையிலும், புயலிலும்எம் இதயக் காயங்கள் ஆறக்கூடும்என நான் அஞ்சுகிறேன்… – மஹவுட் தர்வீஷ் (பலஸ்தீனம்) – “இனப்படுகொலை என்பது பாரிய எண்ணிக்கையிலான கொலைகளை மட்டும் குறிப்பதல்ல; திட்டமிடப்பட்ட வகையில் சுவடிக்காப்பகங்கள், நூலகங்கள் மற்றும் கல்லறைகள் உட்பட ஒரு சமூகத்தின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அழிப்பதற்கான கட்டமைக்கப்பட்ட எந்தவொரு செயற்பாட்டுத் தொகுதியும் இனப்படுகொலைதான்.” – சேராபிம் […]
“ஊரான ஊரிழந்தோம் ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம்”(கவிதா நிகழ்வு – எங்கள் மண்ணும் இந்தநாட்களும் :1985) ஊர்களைச் சுவடிப்படுத்தல் என்பது ஊரை அதன் அனைத்து அம்சங்களோடும் அவதானித்தல், அடையாளம் காணல், அது தொடர்பான அனைத்து விடயங்களையும் சேகரித்தல், அவற்றை ஒழுங்கமைக்கப்பட்ட முறையிற் பதிவுசெய்தல் ஆகியவற்யோடு கூடிய ஒரு செயற்பாடாகும். அது ஊர்களை வரலாற்று நிலைப்படுத்தி, உள்ளூர் வரலாற்றுச் சட்டகத்திற்கு வலுச்சேர்க்கிறது. அத்துடன் ஊர்களை ஆற்றல்மிக்க முறையில் பராமரித்தல், நிர்வகித்தல், பயன்படுத்துதல், பாதுகாத்தல் முதலியவற்றுக்கான முதலீடாகவும் காணப்படுகிறது. எப்போது நாம் ஊரை இழந்தோம்? எப்போது ஊர் நினைவாகியது? அது எப்போது கழிவிரக்கமாயும், முடிவடையாத – […]
இப்போது உலகளாவிய அல்லது அகன்ற இந்துவாக்கப் பேரலையின் தந்திரோபாயங்களுள் ஈழத்துச் சைவமும் சிக்குண்டுள்ளது அல்லது சிக்கவைக்கப்பட்டுள்ளது. அது ஒருவகையில் ஈழச் சைவத்தின் தனியடையாளத்தை பெரும் இந்துப்போர்வை கொண்டு மூடி அதன் தனித்துவத்தை கரைக்கத்தொடங்கியுள்ளது என்பதை எங்களிற் பலர் கவனிக்கத் தவறியுள்ளோம். ஈழச் சைவ மரபுரிமைகளைப் பின் தள்ளி – அகன்ற இந்துவாதத்துள் அதனை அங்கவீனமடையச் செய்யும் இந்த மாற்றத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றல் அல்லது எந்தக் கேள்விகளுமற்று பொதுப்போக்குகளிற்கு பின்னால் ஓடும் […]
புலம்பெயர் மரபுரிமை என்பது தமது தாயகங்களை விட்டு, பிற தேசங்களில் வாழ்பவர்கள் காவிச் சென்றதும், நினைவு கூர்வதும், புலம்பெயர்ந்த நிலங்களில் உருவாக்கிக் கொண்டதும், பிற பண்பாடுகளிலிருந்து உள்வாங்கிக் கொண்டதுமான ஒரு கலப்பொட்டான மரபுரிமையை (hybrid heritage) எடுத்துக்காட்டுவது. இதிற் பெரும்பகுதியாக அவர்களோடு கூடவே புலம்பெயர்ந்த அவர்களது முன்னோர்கள் வழிவந்த பரம்பியப் பயில்வுகள் அவற்றின் முக்கியமான பகுதியாக இருக்கும். இன்னொருவகையில் அவர்கள் காவிச்சென்று அவர்களது தலைமுறைகள்தோறும் கடத்தப்பட்டு வந்த மரபுரிமை புலம்பெயர் […]
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்திருக்கின்ற நிலையில், பத்தாவது பாராளுமன்றத் தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் 8821 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அதில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் 396 வேட்பாளர்களும் வன்னித் தேர்தல் தொகுதியில் 423 வேட்பாளர்களும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். இலங்கை அரசியலானது பெரும்பாலும் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு துறையாகவே இருந்து வருகிறது. பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவமானது குறைந்தளவிலேயே உள்ளது. இந் நிலையில் இலங்கையின் 16 […]
சமூகச் செயற்பாடுகள் பல்வேறு வழிகளிலும் வடிவங்களிலும் இடம்பெறுகின்றன. பால்நிலை ரீதியில் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கான சமூகச் செயற்பாடுகள் அண்மைக் காலங்களில் அதிகம் இடம்பெறுவதனை அவதானிக்க முடிகிறது. இலங்கை மக்களிடையே 2010 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் உள்ளடங்கலான இணையவழி ஊடகங்களின் பாவனையானது அதிகரித்தது எனலாம். இணையவழி ஊடகங்கள் குயர் மக்களுடைய செயற்பாடுகளுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கின்றன. நாளாந்த வாழ்வில் ஏராளமான குயர் மக்கள் இணையவழி ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். அண்மைக்காலங்களில் […]
உலகில் தொலை தூரத்தில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேண, இணையவழி ஊடகங்கள் வழிகோலின. இணைய வழி ஊடகங்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இன்று அவை இன்றியமையாதவையாக மாறி வருகின்றன. முதலாளித்துவ ஆணாதிக்க உலகில் பெண்கள் மற்றும் குயர் மக்களுக்கெதிரான வன்முறைகள் புதிய ஊடகங்கள் மூலம் நவீன வடிவம் பெறுகின்றன. குறிப்பாகச் சமூக ஊடகங்கள் மூலமாக அதிக அளவில் இணைய ரீதியான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் இடம்பெறுகின்றமையை அவதானிக்க […]
இலங்கை, வேறுபட்ட மதங்களையும் தந்தையாதிக்கக் கருத்தியல்களையும் தன்னகத்தே கொண்டு கட்டமைக்கப்பட்ட பாரம்பரியமான பண்பாடுகளைப் பின்பற்றக்கூடிய பெரும்பாலான மக்களைக் கொண்ட ஒரு நாடு. இது பௌத்தர்கள் மற்றும் சைவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடாக இருக்கிறது. வடபுலத்தில் இருக்கக்கூடிய மக்கள் அதிகமாக சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். இங்கு தென்னிந்திய இந்துப் பண்பாட்டின் செல்வாக்குகளை அதிகம் காணலாம். “தன்பாலீர்ப்பு இயற்கைக்கு மாறானது. அது எங்களுடைய சமயத்துக்கும் கலாசாரத்திற்கும் எதிரானது. […]
வடபுல சமூகத்தளத்தில் தன்பாலீர்ப்பை விலக்கப்பட்ட(Taboo) ஒரு விடயமாகப் பார்க்கும் பெரும்பாலானவர்கள் திருநர்களை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிடுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் திருநர்களைப் பற்றிய தெளிவு பெரும்பாலானவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது எனலாம். இருந்தாலும் கூட எவ்வாறு, தந்தையாதிக்கச் சமூகங்களில் பெண் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்கிறாளோ அதே போல் திருநங்கைகளும் திருநம்பிகளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்கிறார்கள். குடும்பத்தால் புறக்கணிக்கப்படுவதாலேயே பெரும்பாலான திருநர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது. “அன்று என் தந்தை வார்த்தையாலும் பிரம்பாலும் என்னைத் […]
ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களால் போற்றப்பட்டு வழங்கும் கண்ணகி வழிபாட்டு மரபினை வலுப்படுத்தும் வகையில் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தினைப் படைத்தார். சிலப்பதிகாரத்தின் அடிப்படைக் கட்டமைப்பானது அக்காலத்தில் வழக்கிலிருந்த ஆசீவக மெய்யியலை பெரிதும் அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. சிலப்பதிகார காலத்திற்குப்பின் தமிழ்ச் சமுதாயம் பல்வகைச் சமய நுழைவுகளுக்கும் இடங்கொடுக்க வேண்டியதாயிற்று; சிலப்பதிகாரக் கால மெய்யியல் மரபுகளின் வீழ்ச்சியினையும் கடக்க வேண்டியதாயிற்று. இவ்வாறான பல்வேறுபட்ட சூழலிலும் ஈழத்தில் கண்ணகி வழிபாடென்பது மரபறாத் தொடர்ச்சியினையுடையதாக இன்றளவும் நடைமுறையில் […]
சிலப்பதிகார காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கண்ணகி வழிபாடானது தமிழுலகெங்கும் பரவி இருந்ததெனலாம். இதனை “ஒருமா முலை இழந்த திருமா உண்ணி” என்னும் நற்றிணைப் பாடலடிக் குறிப்பின் வழியும் உணரலாம். சிலப்பதிகாரத்தின் பல பகுதிகளில் இளங்கோவடிகள் கண்ணகி வழிபாடு பல்லாண்டுகளாக இருந்து வருகின்றமைக்கான சான்றுகளைக் குறிப்பாக வழங்கிச் சென்றுள்ளமையினைக் காணலாம். கண்ணகி வழிபாடானது உலகம் முழுமையும் பரவிய நிலையினை, அருஞ்சிறை நீங்கிய வாரிய மன்னரும்பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னருங்குடகக் கொங்கரு […]
பண்டைத் தமிழர் பல வகைப்பட்ட வழிபாட்டு மரபுகளை உடையவர்களாக விளங்கினர். இவ்வழிபாட்டு முறைகள் திணைசார்ந்த நிலையிலும் தொழில், சமூக வாழ்வியல் சார்ந்த நிலைகளிலும் அமைந்திருந்தன. அவ்வகையான வழிபாட்டு முறைமைகளிற் சில இன்று வழக்கருகிவிட்டன. சான்றுகளாக பல தேவன் வழிபாட்டினையும் வருணன் வழிபாட்டினையும் குறிப்பிடலாம். சங்க காலத்தில் பெருவழக்காக விளங்கிய இவ்வழிபாட்டு முறைகள் படிப்படியாகக் குறைந்து இன்று வழக்கற்றுப் போய்விட்டமை காணக்கூடியதாகின்றது. அவ்வாறில்லாமல் சங்ககாலம் தொட்டு இன்றளவும் தொடர்ந்து வரக்கூடிய வழிபாட்டு […]
இலங்கையில் விஜயனின் வருகைக்கு முன்பும், பௌத்த சமயத்தின் வருகைக்கு முன்பும், ஆசீவகச் சமயம் செல்வாக்குப் பெற்றிருந்தமைக்கான பல சான்றுகளை மகாவம்சம் முதலான பாளி மொழி நூல்களின் வழியாகவும், தமிழர் – சிங்களர் முதலானோரின் வாழ்வியல் தொன்மங்கள் வழியாகவும் அறியலாம். கி.பி.6 ஆம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்ட இலங்கை அரசர்களின் மரபுகளைக் கூறக்கூடிய மகாவம்சம் என்ற நூலில், ஆசீவகம் குறித்ததான பல செய்திகள் காணப்படுகின்றன. ‘விஜயன் இலங்கை வந்து முப்பத்து […]
கனவும் நிமித்தமும் கனவும் நிமித்தங்களும் நிகழவிருக்கும் நிகழ்வினை முன்னுரைக்கும் தன்மையுடையன. கனவிற்கும் நிமித்தங்களுக்குமான பலன்களைத் தமிழ்க்கணியன்கள் ஆய்ந்துரைப்பர். கி.பி. பத்தாம் நூற்றாண்டிலேயே கனவும் கனவின் தன்மையும் கனவிற் தோன்றும் காட்சிகளும் எவ்வகையில் பலிதமாகக்கூடியன. பகலிற் காணும் கனவு பலிக்காது என்ற நம்பிக்கை. கனவு காணும் காலம் : இதனை இரவின் முன் யாமத்தில் கண்ட கனவு, நடு யாமத்தில் கண்ட கனவு, பின் யாமத்திற் கண்ட கனவு என மூன்றாகப் […]
பழப்பயிர்களின் பல்வகைமை பனம்பழம் அரிய சொத்தாகும். வேறுபட்ட போகங்களில் பழங்களைத் தரும் பனை மரங்கள் எம் பிரதேசத்தில் பரந்து காணப்படுகின்றன. அவற்றின் கிழங்குகளின் தன்மையிலும், கள் மற்றும் கருப்பனி என்பனவற்றின் பிரிகை அளவுகளிலும் மாறுபாடு உண்டு. கற்பகத் தருவான பனைமரத்தின் பயன்பாடுகள் அநேகம். முக் கனிகளான மா, பலா, வாழை என்பனவற்றின் பயன்பாடும் எம் பிரதேசத்தில் கணிசமாக உண்டு. மா மரத்தில் ஒட்டுதல் மூலம் உருவாக்கப்படும் கன்றுகள் தாய் தாவரத்தின் […]
இந்தப் பகுதி உணவளிக்கும் விவசாயம், உற்பத்தி பற்றியும் சுற்றாடலின் பல்வகைமை பற்றியும் ஆராய்கிறது. உலகின் சகல பகுதியிலிருந்தும் உணவு உற்பத்தியாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருள்கள் இயற்கை எமக்குத் தந்த அருங்கொடையாகும். அறுசுவை கொண்ட இவ் உணவுகளே உலகத்தை நிலைபெறச் செய்கிறது. தாவரங்களானாலும் சரி, விலங்குகளானாலும் சரி, உணவின்றி இயங்கமுடியாது. இவ் உலகில் உணவுற்பத்தி இன்றியமையாத ஒன்றாகும். உணவு உற்பத்தியில் பிரதான காரணகர்த்தா சூரியனே. சூரிய ஒளி […]
நன்னீர் நிலைகளின் பல்வகைமையும் அபிவிருத்தியும் வளமுள்ள நிலங்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு ஆகிய பிரதேசங்கள் வெவ்வேறு வகையான அச்சுறுத்தல்களுக்கு உட்படுகின்றன. அவ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே அபிவிருத்தியும் நடந்தேறுகிறது. வடக்கு மற்றும் கிழக்கானது இலங்கையின் அபிவிருத்தியில் முக்கிய பங்குவகிக்கும் பிரதேசங்களாகும். மேடுபள்ளம் அதிகமுள்ள தரைத்தோற்றமாகையால் இப் பகுதியில் நடாத்தக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகள் ஒப்பீட்டளவில் இலகுவில் முன்னெடுக்கப்படக்கூடியவை. பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டமையால், இப் பாதைகளிலிருந்து எய்தக்கூடிய போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மேலும் […]
முதல் இரண்டு அத்தியாயங்களில் கடல், கரையோரங்கள், காடுகள் மற்றும் அங்குள்ள உயிரினங்கள், ஏனைய பல்வகைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன. இம் மூன்றாம் அத்தியாயம், தரையிலுள்ள முக்கியமான அம்சங்களை பல்வகைமையுடன் தொடர்புபடுத்தி ஆராயவுள்ளது. ஆகையால், இவ் அத்தியாயம் ‘நிலப்பயன்பாடும் நன்னீர் நிலைகளின் பல்வகைமையும்’ எனும் தலைப்பில் அமைகிறது. வட மாகாண நிலம், நன்னீர்நிலைகளின் பல்வகைமை வடக்கு கிழக்கு பிரதேசம் 8 மாவட்டங்களைக் கொண்டது. இலங்கையின் முதலாவது நிர்வாகக் கட்டமைப்பு வட மாகாணத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. […]
வடக்கு கிழக்கு காடுகளின் பொதுவான தன்மைகள் காடுகளிலுள்ள மண்ணானது மிகவும் வளமுள்ளது. ஆண்டாண்டு காலமாக சிதைவடையாமல் பேணப்படும் இம் மண், மண்ணின் சகல கூறுகளையும் கொண்டுள்ளது. அதிகமாக காணப்படும் பிரிகையாக்கும் பக்டீரியாக்கள் இப் பகுதியின் சமநிலையைப் பேணுவதில் பெரும்பங்காற்றுகிறது. வேருடன் இணைந்து ஒன்றிணைந்து வாழும் அநேக பக்டீரியாக்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. பிரிகையாக்கிகளான பங்கசுகளும் இங்கு உண்டு. வேருடன் இணைந்துவாழும் பக்டீரியாக்கள் மண்ணிலுள்ள பொஸ்பரஸை கரைத்து தாவரங்களுக்கு தேவையான போசணைகளை வழங்குவதில் […]
1884 இல் பிரித்தானிய ஆளுநர் சேர். ஆர்தர் கோர்டன் யாழ்ப்பாணக் கல்லூரியையும் அமெரிக்க மிசனரிகளின் பணியையும் பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணம் வருகை தந்தார். அமெரிக்க மிசனரிகள் யாழ்ப்பாணத்தில் ஆற்றும் மருத்துவப் பணிகளுக்காகவும் மருத்துவப் பீடத்தை மீள ஆரம்பிக்கவும் 1000 ரூபாவை ஆர்தர் கோர்டன் அமெரிக்க மிசனுக்கு வழங்கினார். உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து 1873 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குத் திரும்பிய கிறீன் நியூயோர்க்கில் கிறீன்கில் என்ற இடத்தில் உள்ள தனது குடும்ப இல்லத்தில் […]
அமெரிக்க இலங்கை மிசனரியினர் (ACM) 1879 ஆம் ஆண்டின் காலாண்டுக் கூட்டத்தொடர் ஒன்றில் மானிப்பாய் மருத்துவக் கல்லூரி தொடர்பில் சில தீர்மானங்களை மேற்கொண்டனர். அதிலே மருத்துவக் கல்லூரிக்கு ஒரு வகுப்பில் ஆகக் கூடுதலாக 15 மாணவர்களையே அனுமதிப்பதென்றும் ஒவ்வொரு மாணவரிடமும் மாதாந்தம் 3 ரூபாவை பள்ளிக் கட்டணமாக அறவிடுவதென்றும் தீர்மானித்தனர். இதற்கமைய ஒவ்வொரு மாணவரும் வகுப்பில் அனுமதிக்கப்படும் போது முற்பணமாக 25 ரூபாவை கட்டணமாகச் செலுத்துமாறு கேட்கப்பட்டனர். இந்நிபந்தனைகளுக்கு அமைவாக […]
யாழ்ப்பாணக் கல்லூரியும் புகழ்பெற்ற மாணவர்களும் அண்மையில் தனது 200 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய யாழ்ப்பாணக் கல்லூரியானது 1823 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைக் கல்விக்கழகம் (Batticotta Seminary) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. வட்டுக்கோட்டை கல்விக்கழகமானது அன்று ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களுக்கு இணையானதாக விளங்கியது. கிறித்துவ சமயத்துக்கு அதிகமான மாணவர்களை உள்ளீர்க்க முடியாத காரணத்தால் 1855 இல் இதன் கற்றல் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தன. வட்டுக்கோட்டை கல்விக்கழகம் இருந்த இடத்திலிருந்தே அதாவது “பற்றிக்கோட்டா […]
இன்று இலங்கையின் முதன்மைத் தேசிய மருத்துவமனையாக விளங்கும் கொழும்பு தேசிய மருத்துவமனையிலே வருடாந்தம் சிகிச்சை பெறும் நோயாளர்களது எண்ணிக்கையானது நாட்டிலுள்ள ஏனைய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரைவிட அதிகமாகும். ஆனால் இலங்கையில் ஐரோப்பிய மருத்துவம் அறிமுகமான 19 ஆம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியில் யாழ்ப்பாணம் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழக மருத்துவமனையிலே (யாழ். போதனா மருத்துவமனை) இலங்கையின் எந்த ஒரு மாகாண மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுவோரைவிட அதிகளவானோர் சிகிச்சை பெற்றனர். மருத்துவர் […]
1838.11.29 அன்று யாழ்ப்பாணத்தில் பிறந்த மருத்துவர் எட்வின் லோசன் கொச் ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணத்தில் பயின்று தனது 20 ஆவது வயதில் அரச புலமைப்பரிசிலைப் பெற்று கல்கத்தா மருத்துவக் கல்லூரிக்குச் சென்று மருத்துவப் பட்டம் பெற்றார். இவர் கொழும்பு மருத்துவபீடத்தின் ஆரம்ப விரிவுரையாளர்களில் ஒருவராகவும் இதன் 2 ஆவது அதிபராகவும் கடமையாற்றினார். 1870 இல் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு மருத்துவபீடத்தின் முதலாவது அணி மாணவர்களது 2 ஆவது விரிவுரையின் போது உரையாற்றிய மருத்துவர் […]
16ஆம் 17ஆம் நூற்றாண்டுகளின்போது, ‘கிறிஸ்தவ இராச்சியங்களாகத்’ திகழ்ந்த ஐரோப்பாவிலே மதச் சீர்திருத்தத்துக்கான சக்திகளுக்கும் மதச் சீர்திருத்தத்திற்கு எதிரான சக்திகளுக்கும் இடையிலான உள்நாட்டுக் கலவரங்கள் நடைபெற்றன. அதனூடாகவே அங்கு தேசியவாதம் தலைதூக்கி தேசிய அரசுகள் உருவாகின. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் கிறிஸ்தவ மதத் திணிப்புக்கு எதிராக எழுந்த சுதேச மதங்களின் எழுச்சிகளின் ஊடாகவே காலனித்துவ தேசியவாதம் உருவாகியது. ஐரோப்பிய – மைய காலனித்துவக் கொள்கைகளும் ஆக்கிரமிப்புகளும் கிறிஸ்தவ மதத்தின் போர்வையிலே […]
இலங்கையில் உருவான நவீன இனவாதப்போக்கின் ஊற்றுமூலத்தை, காலனித்துவம் உருவாக்கிய குறை அபிவிருத்தியிலும், பிரித்தானிய காலனித்துவ காலத்தில் ஏற்பட்ட மதச் சீர்திருத்த இயக்கங்களிலும், அது கடைப்பிடித்த பிரித்தாளும் ஆட்சி முறையிலும் தேடவேண்டும். அரசியல் கட்டமைப்பில் நிறுவன மாற்றங்கள் ஏற்பட்டு, இலங்கையில் அரசியல் சக்திகள் உருவாகி, அரசியல் சீர்திருத்த கோஷங்கள் எழுவதற்கு முன்னமே மதப் பீடங்களின் செயற்பாடும் மதச் சீர்த்திருத்த இயக்கமும் அவற்றிற்கு முன்னோடியாக இருந்தன. பிற்காலத்தில் அரசியல் கட்சிகள் அதன் இடத்தைப் […]
இலங்கையில் மாத்திரமல்லாது காலனித்துவ நாடுகள் பலவற்றிலும் அரும்புநிலை தேசியஎழுச்சி மதங்களின் மீளாக்க எழுச்சியுடன் இணைந்ததாகவே காணப்பட்டது. இவற்றிடையே பொதுவான சில இலட்சியங்கள் இருந்தன. மன்னர் ஆட்சி நிலவிய நிலவுடமைக் காலகட்டத்தில் மன்னர்களும் அரசுப் பிரதானிகளும் தளபதிகளும் சமூகத்தில் உயர்நிலையில் இருந்தனர். அவர்களுக்கு அடுத்த நிலையில் மதபோதகர்கள் இருந்தனர். தொழிற்சங்கமோ அரசியல் கட்சிகளோ அத்தகைய வேறு நிறுவன அமைப்புகளோ இல்லாத அன்றைய சமுதாய அமைப்பில் நாடுபூராகவும் பரந்து கிடந்த ஒரே நிறுவனமாக […]
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் இலங்கையில் நவீன சமூகம் உருவானது. அது பெருந்தோட்டத்தின் தோற்றத்தோடு ஆரம்பமானது. ஆனால் ஆரம்பத்தில் ஆளும் வெள்ளையர்களுக்கும் ஆளப்படும் இலங்கையர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக இருந்தது. அதற்குப் பலகாரணங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று மொழி, கலாசார இடைவெளி; இரண்டாவது அப்போது பிரித்தானியாவில் மேலோங்கியிருந்த ‘வெள்ளையரே உயர்ந்த இனம், அவர்களே ஆளப்பிறந்தவர்கள்’ என்ற இனவாதக் கருத்தின் தாக்கம்; மூன்றாவது கண்டிய மலைப்பகுதிகளில் வாழ்ந்த சிங்களவர்களை – அங்கு வெடித்த […]
இலங்கையில் உயரடுக்கின் உருவாக்கமானது பிரித்தானியக் காலனிய ஆட்சி காலத்தில் ஆங்கிலம் கற்ற உயர் வகுப்பினரின் தோற்றத்தோடு உருவானது என்ற தவறான கருத்து சிலரிடையே நிலவுகிறது. உண்மையில் முன்பே குறிப்பிட்டதைப் போல இந்தியாவைப் போலல்லாமல், இலங்கையில் காலனித்துவத்திற்கு முந்தைய ஆளும் வர்க்கத்தின் மேல்தட்டு அழிக்கப்பட்டு, இரண்டாம் நிலைப் பிரிவு தகவமைக்கப்பட்டு காலனித்துவக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது. காலனித்துவ ஆட்சியின் உருவாக்கத்தின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மற்றொரு குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால், இந்தியா […]
இலக்கியம் கடந்த காலத்தை சாம்பல் புழுதிகளிலிருந்து வெளியே எடுத்துவரும் வல்லமை உடையது. ஆகவேதான் அதிகார வர்க்கம், எழுதுபவர்களை எப்போதும் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஓர் இனத்தின் வரலாற்றை அழிக்க வேண்டுமென்றால், அவர்களை அடையாளப்படுத்தும் ஆவணங்களை அழிக்கவேண்டுமென, அன்றைய பேரரசுகளிலிருந்து இன்றைய நவீன அரசுகள் வரை முயல்கின்றன. காலனித்துவத்திலிருந்து விடுபட்ட இலங்கையில், தமிழர்கள் தாம் ஒடுக்கப்படுவதற்கு எதிராகச் செயற்படத் தொடங்கியதை சிங்கள அதிகார வர்க்கம் நன்கு விளங்கிக்கொண்டதால்தான், அரிய நூல்களையும், ஓலைச்சுவடிகளையும், […]
‘Tea Time With Terrorists’ என்கின்ற சுவாரசியமான தலைப்புடன் இருந்த ஈழம் பற்றிய நூலை அண்மையில் வாசித்தேன். 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ஒரு அமெரிக்கருக்கு ‘தீவிரவாதிகள்’ பற்றி அறியும் ஆவல் வருகின்றது. தீவிரவாதிகளை நேரடியாக அறிவதன் மூலம் ஏதேனும் ஒருவகையில் தீவிரவாதத்தை அறியவும், கட்டுப்படுத்தவும் முடியும் என அவர் நினைக்கின்றார். இத்தனைக்கும் அவர் இயந்திரவியலில் பணியாற்றிவர். ஒருவகையில் இன்றைய AI (Artificial Intelligence) பற்றி 25 […]
‘போர் உலா’ 1990 களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த மலரவன் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நூல். ஆங்கிலத்தில் இது ‘War Journey’ என மொழியாக்கம் செய்யப்பட்டு பெங்குவின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது. இது 1990 ஆம் ஆண்டு மாங்குளத்தில் இருந்த சிங்கள இராணுவ முகாமைத் தகர்ப்பதற்காய் மணலாற்றிலிருந்து செல்கின்ற போராளி அணியின் கதையைச் சொல்கின்றது. மலரவன் இயக்கத்தில் இருந்தபோது அப்போது முக்கிய ஒரு படைத்துறையாக வளர்ந்து கொண்டிருந்த பசீலன் 2000 […]
அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசுதல் பற்றி எட்வேர்ட் ஸயீட் ‘Representations of the Intellectual’ என்கின்ற நூலில், ஒரு அத்தியாயம் முழுவதும் விரிவாகப் பேசுகின்றார். விமர்சனங்களை வெளிப்படுத்தவும் அதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் தயங்கும் எந்தவொரு சமூகமும் தனக்கான வீழ்ச்சியை நோக்கியே செல்லும். தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து நகராதவிடத்து எந்த ஏற்றமும் எவருக்கும் ஏற்படப்போவதில்லை. ‘மாற்றம் என்பதே மாறாதது’ என்று வாளா சொல்லிக்கொண்டிருக்காது, எந்தத் திசையில் செல்லவேண்டுமென்பதைத் தீர்மானிக்கும் […]
1 1983 இல் சாவகச்சேரி சங்கத்தானையில், இலங்கை இராணுவத்தின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பியோடும் ஒருவர் இறுதியில் கனடாவை வந்து சேரும்வரை அலைந்துழலும் வாழ்க்கையை ‘The Sadness of Geography’ நூல் கூறுகின்றது. 80 களில், தனது பதின்மங்களில் யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி விடுதியில் கல்வி கற்கின்ற லோகதாசனின் சுயசரிதை நூல் இதுவாகும். அநேக ஈழத்தமிழரைப் போல, 81 இல் யாழ் நூலக எரிப்பும், 83 ஆடி இனக் கொலைகளும் […]
முன்னுரை 1990 களில் மேற்குலகச் சிந்தனைப் பரப்பில் அங்கீகரித்தலின் அரசியல் பற்றிய சிந்தனையின் மீள்வாசிப்பை அறிமுகப்படுத்துகின்ற செல்நெறியை ரெய்லர் (1992), ஹோனரத் (1992), (f) பிறசேர் (1995 – 1997) போன்றோர் முன்னெடுத்திருந்தனர். இவர்களின் கருத்தியல் கட்டமைப்பு ரீதியான பங்களிப்பு மறுக்கப்பட முடியாதது. பின் – காலனித்துவ அரசியல் வரலாற்று வெளியில் சிறு குழுமங்கள், இனங்கள் தாராளவாத சனநாயக பண்பாட்டு நாகரிக முறைமைக்குள் உள்ளீர்க்கப்பட்டு தமது தனித்துவ அடையாளங்களை இழந்து […]
யாழ்ப்பாணத்துக்கும் மலாயா – சிங்கப்பூருக்கும் இடையில் வளர்ந்துவந்த நெருங்கிய தொடர்புகள் 1930களில் இடம்பெற்ற இரு பெரும் நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டன. ஒன்று, 1933 இல் தொடங்கிய பெருமந்தம் (Great Depression); மற்றது 1939இல் தொடங்கிய இரண்டாவது உலகப் போர். மலாயாவுக்குப் புலம்பெயர்ந்த யாழ்ப்பாணத்தவரின் எண்ணிக்கை படிப்படியாகக் கூடி, 1930களில் உச்சத்தை அடைந்தது. புலம்பெயர்வு தொடர்ந்து வளர முடியாத வகையில் பெருமந்தமும் உலகப் போரும் தடைபோட்டன. தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தவர் சிலர் ஆங்கிலேய நிர்வாகிகளால் […]
என் பெற்றோருடைய மூன்றாவது பிள்ளையாக நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். அவர்களுடைய முதல் இரு பிள்ளைகளும் கோலாலம்பூர் நகரில் பிறந்தவர்கள். என் பெற்றோருடைய திருமணமே கோலாலம்பூரிலேதான் நடைபெற்றது. நான் பிறந்தபோது என் தாயாருடைய சகோதரர்கள் ஐவர் மலாயாவில் வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு மூத்தவராக இருந்தவர் மலாயாவில் வேலை செய்து ஓய்வு பெற்றுத் திரும்பிவந்திருந்தார். மலாயா நாட்டுடனான இத்தகைய தொடர்பு யாழ்ப்பாணத்தில் பரவலாகப் பல இடங்களில் இருந்தது. இருபதாம் நூற்றாண்டில், இலங்கை சுதந்திரம் அடையுமுன், […]
பொ.ஆ. 1937 இனை உலக நிலையைப் பெரும் அளவில் குலுக்கும் நிகழ்வு எதுவும் நடைபெற்ற ஆண்டாகக் கணிப்பதற்கு இல்லை. உலகம் காணாத மிகப்பரந்த வல்லரசாகிய பிரித்தானியப் பேரரசும், அதனுடன் இரு நூற்றாண்டுகளுக்கு மேலாகப் போட்டியிட்ட ஐரோப்பிய வல்லரசுகளாகிய பிரெஞ்சுப் பேரரசும், ஒல்லாந்துப் பேரரசும் ஒற்றுமையாக ஐரோப்பிய ஏகாதிபத்திய வலைக்குள் தாம் கைப்பற்றிய ஆசிய, ஆபிரிக்க, ஓசியானிய நிலங்களை அடக்கி வைத்திருந்தன. உலகில் ‘பிரித்தானியாவின் அமைதிநிலை’ (Pax Britannica) மலர்ந்திருப்பதாகத் தோன்றியது. […]
விக்டர் டி மங்க் (Victor de Munck) மற்றும் கிறிஸ்தோபர் மனோகரன் (Christopher Manoharan) ஆகிய ஆய்வாளர்கள் குடாலிக் கிராமத்தில் மேற்கொண்ட தங்களது களப்பணி மூலமான ஆய்வான “Accessing the Interiority of Others: Sufism in Sri Lanka“ இல், மேலும் பல விடயங்களை இலங்கையில் சூஃபித்துவம் சார்ந்து பகிர்ந்துகொள்கின்றனர். குடாலியில் உள்ள வயது வந்த ஆண்களில் கிட்டதட்ட முந்நூறு பேர் காதரி வரிசையுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். […]
இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்து வருபவர்கள். தங்களது மத அடையாளமான இஸ்லாமும், மொழி அடையாளமான தமிழும் இணைந்த ஒரு தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தை நிறுவி தங்களை ஒரு தனி இனமாக நிறுவிக் கொண்டவர்கள். இதனால் இலங்கை வரலாற்றில், அவர்கள் பின்பற்றி வரும் இஸ்லாம் பாரம்பரியத் தன்மைகளோடு இலங்கை – இந்திய மண்ணோடும், பிற பண்பாடுகளோடும் ஊடாட்டம் கொண்ட மதமாகவும் இருந்து வருகிறது. தனது மொழி அடையாளமான […]
ஆங்கில மூலம் : டெனிஸ் மெக்கில்ரே மட்டக்களப்பு பிரதேசத்தில் இனக்குழப்பங்கள் 20 ஆம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் கிழக்குக் கரையோரப் பகுதியில் இன உறவுகளைப் பாதித்த பல உள்ளூர் தமிழ் – சோனகக் கலவரங்கள் மற்றும் இடையூறுகள் ஆகியவற்றை பிரபலமான குறிப்புகள் விவரிக்கின்றன. உள்ளூர் தமிழ் – சோனக மோதல்களை நான் நேரடியாகக் காணவில்லை. என்றாலும், இதுபோன்ற மோதல்கள் பற்றிய வாய்வழிப் பதிவுகளை நான் சேகரித்தேன். இதற்கு உதாரணமான ஒரு […]
தமிழ்/சோனக பண்பாட்டு வேறுபாடுகள் குறித்து பல்வேறு கருத்துகள் அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. ஆனால் ஒவ்வொரு குழு உறுப்பினர்களிடமிருந்தும் கிடைத்த கருத்துகளில் சில அடிப்படைக் கருத்துகள் வெளிப்பட்டன. சோனகர்கள் மிகவும் ஆற்றலும், கடின உழைப்பும் கொண்டவர்கள் என்று தமிழர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கிறார்கள். அவர்களின் மேம்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் வளர்ந்து வரும் செல்வம் போன்றவை இந்த உண்மையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. உண்மையில், சோனகர்களின் பெருகிவரும் செழிப்பு பல தமிழ் உயர்சாதியினருக்கு கடுமையான கவலையை ஏற்படுத்துகிறது. […]
தமிழர் – சோனகர் நேரடி சமூகத் தொடர்புக்கான மீதமுள்ள வாய்ப்புகள் பெரும்பாலும் தொழில் மற்றும் பொருளாதாரம் ஆகிய தளங்களில் காணப்படுகின்றன. 1970 களில், ஈழப் போராட்டம் தீவிரமடைவதற்கு முன்பு, தமிழர்களும் சோனகர்களும் அண்டை நிலங்களில் நெல் பயிரிட்டனர். நீர்ப்பாசனக் குழுக்களிலும் ஒன்றாகப் பங்கேற்றனர். தமிழ் மற்றும் சோனக நில உரிமையாளர்கள் ஒருவர் அடுத்த சமூகத்தைச் சேர்ந்த குத்தகைதாரர்களையும், வயற் தொழிலாளர்களையும் தொழிலில் சேர்த்துக் கொள்கிறார்கள். 1980 களில் தொடங்கிய வன்முறையின் […]
தமிழில்: த. சிவதாசன் எனது வீட்டிலிருந்து யாழ்ப்பாண நகரம் நோக்கி நான் போகும்போதெல்லாம் அரசடி/ பலாலி வீதிகளின் சந்தியில் இருக்கும் SLITT வடக்குப் பல்கலைக்கழகத்தின் (SLIIT Northern Uni – NU) கட்டடத்தைக் கடந்து போவதுண்டு. சென்ற வருடம் (2023), இக்கட்டடத்திற்கான அத்திவாரம் இடப்பட்டதிலிருந்து, தூண்கள் நிறுவப்பட்டு, கண்ணாடி யன்னல்கள் பொருத்தப்படுவது என அதன் உருவாக்கத்தை மிகவும் ஆர்வமாக அவதானித்து வந்தவன். எதிர்காலக் கனவுகளைச் சுமந்துகொண்டு நம்பிக்கையோடு வந்து போகும் […]
தமிழில் : த. சிவதாசன் மூலம் : marumoli.com, January 22, 2025. 2021 இல் நான் திரு டேவிட் பீரிஸை முதன் முதலாகச் சந்தித்தேன். தொழில் விடயமாக வடக்கிற்கு வந்தபோது யாழ்ப்பாணத்திலுள்ள எனது வீட்டில் நாம் சந்தித்தோம். டேவிட் பீரிஸ் மோட்டர் கொம்பனி (David Pieris Motor Company – DPMC), போர்க்காலமுட்பட, பல தசாப்தங்களாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வருகிறது. வியாபார முயற்சிகளுக்கும் அப்பால் வடக்கில் தனது நிறுவனம் […]
தமிழில் : த. சிவதாசன் Source : Jekhan Aruliah, Jaffna’s 3AxisLabs’ journey into Artificial Intelligence, lankabusinessonline.com, Dec.03.2024 “உங்களைக் கொல்லாதுவிடுவது எதுவோ, அதுவே உங்களை மேலும் பலமாக்குகிறது”. செயற்கை விவேகம் இச்சுலோகத்தை எளிதாக உருவாக்கித் தந்திருக்க முடியும். உண்மையில் இச்சுலோகத்தை முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியது 19 ஆம் நூற்றாண்டில் ஜேர்மனியில் வாழ்ந்த தத்துவஞானி நீட்சே. விஞ்ஞானப் புனைவுகளில் மட்டுமே எந்திர மனிதர்கள் அசத்திக்கொண்டிருந்த அபத்தமான கற்பனைக் […]
தமிழில் : த. சிவதாசன் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி நிர்வாகத்தை நான் விமர்சிப்பதற்கு முன் அதற்கு எனது வாழ்த்தைத் தெரிவிக்க வேண்டும். எனது ‘ஜூன் 2018 லங்கா பிஸினெஸ் ஒன்லைன்’ கட்டுரையில் சுற்றுலா அபிவிருத்தி நிர்வாகத்தின் வரைபடத்தில் வடமாகாணம் வெறுமனே வறண்ட பிரதேசமாகவே காட்டப்படுகிறது எனவும், யாழ்ப்பாண விமான நிலையத்தைத் தவிர வேறெந்தச் சுற்றுலாத்தலங்களும் அங்கில்லை என்பது போலக் காட்டப்பட்டிருக்கிறது எனவும் விமர்சித்திருந்தேன். ஆனால் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்ட […]
தமிழில் : த. சிவதாசன் இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் ‘சுற்றுலாத் தளங்கள்’ என்ற வரைபடத்தின் படி, வடமாகாணத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு சுற்றுலாக் கவர்ச்சியாக யாழ். விமான நிலையம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இவ்வரைபடம் யாழ். விமான நிலையத்தையாவது காட்டுகிறதே என நாம் பூரிப்படைய வேண்டும். விமான நிலையத்தைத் தவிர வடமாகாணத்தின் அனைத்துப் பகுதிகளுமே வறண்ட பிரயோசனமற்ற பிரதேசங்களெனவே இப்படம் காட்டுகிறது. வடக்கில் […]
அம்பாறை மாவட்டத்தில், குறிப்பாக போரின் இன்னல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வறுமைநிலை தொடர்ந்தும் கவலைக்குரியதாக உள்ளது. விகிதாசார ரீதியாகப் பார்க்கும்போது, பல பகுதிகள் இன்னும் போர்க்கால நிலையிலிருந்து முன்னேற்றம் அடையவில்லை எனலாம். தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில், வாழ்வாதாரத்தின் மீதான தாக்கம் அதிகமாகியுள்ளது. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தப் பகுதிகள் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவை மாவட்டத்தின் ஏழ்மையான பகுதிகளாகவும் காணப்படுகின்றன. பல குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யப் போராடுகின்றன. தற்போதைய பொருளாதார […]
1 இலங்கையின் பொருளாதார மீட்சிப் பயணம் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புச் சீர்திருத்தங்களை நோக்கிச் செல்கிறது. அதே நேரத்தில், ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் தனியார்துறை முதலீட்டை அதிகரிக்க பெரிதும் கவனம் செலுத்தப்படுகிறது. பொருளாதாரப் பின்னடைவுக்குள்ளான அல்லது பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு வலையை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு, IMF திட்டம் மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளின் ஆதரவும் அங்கீகாரமும் உள்ளன. குறிப்பாக, கடன் மறுசீரமைப்பு […]
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் உடனடி விளைவாக வறுமை அதிகரித்து வருகின்றது. தற்போதைய கணக்கீட்டின்படி, 70 இலட்சம் பேர் வறுமையின் பிடியில் சிக்கி உள்ளனர். அதிகரித்த குழந்தை வறுமை ஒரு பெரும் சமூக, பொருளாதாரப் பிரச்சினையாக மாறி வருகிறது. பொருளாதார நெருக்கடியில் அரசின் பங்கு முக்கியமானதே; ஆனால் சமூக அமைப்புகளின் பங்கு அதனையும்விட முக்கியமானது. பல தசாப்தகால ஆயுத மோதலின் விளைவாக ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு மாறாத விளைவுகளை உண்டாகியுள்ளது. நிலைமை […]
ஆசியாவில் அரிசி உற்பத்தி ஆசியாவில் உள்ள அரசாங்கங்கள் அதிக அரிசியை உற்பத்தி செய்வதற்கும், உலகச் சந்தையின் உறுதியற்ற தன்மையிலிருந்து தங்கள் அரிசி உற்பத்தித் துறைகளை, அதன் வணிகக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் அரசியல் முயற்சிகள் செய்கின்றன. ஆசியாவில் அரிசியே ஆட்சி செய்கிறது எனலாம். அது தினசரிக் கலோரிகளில் 30 – 76 சதவீதத்தை மக்களுக்கு வழங்குகிறது. மேற்கு நாட்டின் எந்தவொரு உணவும் கிழக்கு நாட்டின் அரிசி உணவின் ஆதிக்கத்தை ஒத்திருக்க முடியாது. […]
கூட்டுறவின் குறிக்கோள் என்ன என்பது தொடர்பாக கூட்டுறவாளர்களிடையே பல கருத்துகள் உள்ளன. உண்மையில், கூட்டுறவின் நோக்கம் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சமூகத்தின் பொருளாதார, கலாசார மற்றும் சமூகத் தேவைகளை உணர்ந்து கொள்வதாகும். கூட்டுறவுகள் தங்கள் சமூகத்தின் மீது வலுவான அர்ப்பணிப்போடு சமூகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாகும். கூட்டுறவுகள், மக்கள் தங்கள் பொருளாதார எதிர்காலத்தைக் கட்டுப்படுத்த அனுமதிக்கின்றன. அவை பங்குதாரர்களுக்குச் சொந்தமானவை அல்ல என்பதால், கூட்டுறவுச் […]
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடலும் மேலெழுந்திருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு – கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை என்ற கருத்தை தனது முதலாவது கொள்கை விளக்க உரையில் கூறியிருக்கின்றார். தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கவேண்டுமென்றால் அரசியல் ஸ்திரநிலையைக் கொண்டுவரவேண்டும். இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் அரசியல் ஸ்திர நிலையையும் உருவாக்க முடியாது. பிராந்திய வல்லரசான இந்தியா 13 ஆவது திருத்தத்தையே […]
பொதுவசதிகள் துறையின் கீழ் உள்ளடங்கும் ஒரு பிரதான வசதிச் சேவையாக மின்சாரம் மற்றும் எரிபொருள் வழங்கல் என்பன இருந்து வருகின்றன. நாட்டின் அனைத்துப் பிரதான பொருளாதார உற்பத்தி மூலங்களையும் இயக்கும் சக்தி வளங்களாக மின்சாரம் மற்றும் எரிபொருள் வளங்கள் இருந்து வருகின்றன. நீர் மின்வலுவும் எரிபொருள் வலுவும் இணைந்து மின்சாரம் விநியோகிக்கப்படுவதுடன் மாற்றுச்சக்தி வளங்களான காற்றாலைகள் மற்றும் சூரியப்படல்கள் மூலமும் மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டு வருகிறது. மின்சார வளங்களில் நீர்வலு மூலமான […]
பொருளாதார வகைப்பாட்டின் கீழ் உள்ளடங்கும் துறைசார் பகுதிகளில் முக்கியமானதான பொதுவசதிகள் துறையானது மின்சாரம், சக்திவளம், எரிபொருள், தொலைத்தொடர்பு, வீடமைப்பு வசதிகள், குடிநீர் வழங்கல் ஆகிய முக்கிய செயற்பாடுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. இவை அனைத்தையும் உள்ளடக்கிய துறையாகவே பொதுவசதிகள் துறை காணப்படுகின்றது. இந்த வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணப்படும் வீடமைப்புத் துறையின் நிலையைப் பரிசீலிக்கும் போது, பிரதான பொதுவசதிகளில் முதன்மையானதாக வீட்டுவசதியே காணப்படுகிறது. அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உறைவிடம் […]
சகல துறைகளின் ஆக்க மூலங்களையும் இணைப்புச்செய்து செயற்பட வைப்பதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியினை தூண்டுகின்ற கட்டமைப்பாக வீதிகள் செயற்படுகின்றன. வீதிகளின் இணைப்பின் மூலம் உற்பத்தி வளங்கள் பரிமாற்றப்படுகின்றன. மனிதர்கள் இடமாற்றப்படுகின்றனர். விளைச்சல்கள் சந்தைகளை நோக்கி எடுத்து வரப்படுகின்றன. உற்பத்தியாளர்கள் நல்ல வருமானத்தைப் பெறுகின்றனர். நுகர்வாளர்கள் தரமும் மலிவுமான பொருள்களை நுகரக்கூடியதாக இருக்கிறது. கொண்டுவரப்படும் உள்ளீட்டுப் பொருட்கள் தொழிற்சாலைகளை இயங்கச் செய்கிறது. சுற்றுலாவின் கவர்ச்சிகரமான இடங்களைச்சென்று பார்வையிட்டு மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள […]
பொருளாதார அபிவிருத்தி துறையில் பங்கு கொள்ளும் துறைகளை நாம் பொருளாதார உட்கட்டமைப்புத் துறைகள், உற்பத்தி உட்கட்டமைப்புத் துறைகள், சமூக உட்கட்டமைப்புத் துறைகள் என மூன்று துறைகளாக பிரித்து வகையீடு செய்யலாம். உற்பத்தி உட்கட்டமைப்பு துறையினுள் விவசாயம், கால்நடை, கடற்றொழில், வனவளம், கைத்தொழில், சனத்தொகை போன்ற துறைகளும்; பொருளாதார உட்கட்டமைப்புத் துறையினுள் மின்சாரம், சக்தி வளம், நீர்வழங்கல், நீர்ப்பாசனம், போக்குவரத்து, தபால், தொலைத்தொடர்புகள், வங்கிகள் போன்ற துறைகளும்; சமூக உட்கட்டமைப்புத் துறையினுள் […]
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் மனிதவள அபிவிருத்தியில் கல்வியின் மீதான முதலீடும் அது சார்ந்து செய்யப்படும் அதீத வளப் பயன்பாடும் பற்றிய ஆய்வானது இவ்விரு மாகாணங்களின் அபிவிருத்தியில் அதீத அக்கறைக்குரியதாகும். வரலாற்றின் ஆரம்பம் முதல் கற்றல் செயன்முறை என்பது இவ்விரு மாகாணங்களின் பிரதான முதலீட்டு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. எல்லையோரத்திலிருந்த பல குடும்பங்களின் மெய்யான அபிவிருத்தியை வெளிக்கொண்டு வந்ததற்கு, கல்வியினால் அக் குடும்பங்களிலிருந்து மேற்கிளம்பிய ஒரு சில பிள்ளைகள் காரணமாகினர். அக் […]
200 வருடங்களுக்கு முன் தமிழகத்திலிருந்து மக்களைக் கூட்டம் கூட்டமாக அழைத்து வந்தபோது, அந்த மக்களை மனிதர்களாக நினைக்காமல் மிருகங்களை விட மோசமாக நடத்தியதன் காரணத்தினால், கடலிலும் காட்டிலும் மாண்டு போன சோகக் கதைகளில் ஆரம்பிக்கின்றது இந்த மக்கள் கூட்டத்தின் வரலாறு. ஆதிலட்சுமி என்ற கப்பலில் இங்கிருந்து தாயகம் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் கடலிலே மூழ்கி மரணித்தமை இதற்கான உதாரணமாகும். வெள்ளையர்களுக்கும் ஐரோப்பிய அரசாங்கத்திற்கும் ஏகாதிபத்திய கம்பெனிக்காரர்களுக்கும் இந்த மக்களின் உழைப்பு மாத்திரமே […]
கோ. நடேசய்யர் தமிழ்நாடு விழுப்புரத்தைப் பிறப்பிடமாக கொண்டு (அப்போதைய தென்னாற்காடு மாவட்டம்), வளவனூர் கோதண்டராமர் ஐய்யருக்கும் பகீரதம்மாளுக்கும் மகனாக 1887.01.14 இல் பிறந்தார். அரசுப் பள்ளியில் ஆங்கில மொழி கல்வி பயின்றார். வங்கப் பிரிவினை காரணமாகவும், தேசிய சிந்தனைகள் மற்றும் சுதேசிய சிந்தனைகள் காரணமாகவும் ஆங்கிலக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சென்னை – அரசுப் பயிற்சி நிறுவனத்தில் கைத்தொழில் பயிற்சி பெற்றார். சில காலம் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு, பின் […]
இலங்கையை வளம் கொழிக்கும் நாடாக மாற்றுவதற்கு, மலையகத் தமிழ் மக்களின் உழைப்பைச் சுரண்டியதில், கிழக்கிந்தியக் கம்பெனியினரே முதற் பங்கு வகித்தனர். கிழக்கிந்தியக் கம்பெனிகளின் ஆதிக்கமானது இலங்கையில் அவர்கள் தடம் பதிப்பதற்கு முன்னரே இந்திய நாட்டில் ஆரம்பித்துவிட்டது. உடல் உழைப்பை மாத்திரம் மூலதனமாகக் கொண்ட இந்திய விவசாயச் சமூகத்தில், 17 ஆம் நூற்றாண்டானது பழமையும் முதுமையுமாக செயற்பட முடியாமல் இருந்த காலமாகக் கணிக்கப்படுகின்றது. இக் காலத்தில் தமிழர்களை ஆட்சி செய்த வேற்று […]
தொழிலாளர்கள் தங்களின் ஊதியத்தைக் கொண்டு வாழ முடியாத நிலைமையில் போராட்டங்கள் ஆரம்பமாகும் என்று அனுபவங்கள் கூறுகின்றன. தொழிலாளர் எழுச்சி என்பது விவசாயிகளின் வளர்ச்சியையும் போராட்டங்களையும் பார்க்கிலும் வித்தியாசமானதாகும். தொழில் வழங்குநர்களான முதலாளி வர்க்கத்தினருக்கு எதிராக வளர்ச்சி அடைந்த ஒரு சமூகக் கட்டமைப்பாக தொழிலாளர் வர்க்கமும் அவர்களின் போராட்டங்களும் காணப்படுகின்றன. தொழிலாளர் வர்க்கமானது இலங்கையின் அரச காலத்தில் இருந்து வந்ததாக காணப்படுகின்றது. ஆனாலும் அன்றைய நிலைமை சாதிய ரீதியாகவே காணப்பட்டது. காலனித்துவ […]
கறவை மாடு வளர்ப்பு இலங்கையின் விவசாயப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான கூறாகும். இந்தத்துறை நாட்டு மக்களின் ஊட்டச்சத்துத் தேவையின் கணிசமான பகுதியை பாலின் மூலம் நிறைவு செய்வதோடு, ஆயிரக்கணக்கான பாற்பசுப் பண்ணையாளர்களுக்கு வேலைவாய்ப்பினையும் வழங்குகிறது. இதனால் கணிசமான வருமானத்தை உருவாக்கும் துறையாக இது விளங்குகிறது. எனினும் அண்மைக்காலத்தில் கறவை மாடு வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் இலங்கையின் ஏனைய துறைகளைப் போல் கடுமையான நிதி சார்ந்த நெருக்கடிகளைச் சந்திப்பதை அவதானிக்க முடிகிறது. […]
கறவை மாடு வளர்ப்பு சூழல் மாசடைதலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியமான தொழிலாக இருக்கிறது என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? உலக வெப்பமுறுதலை ஏற்படுத்தும் மிக முக்கியமான மெதேன் பச்சை வீட்டு வாயுவை வெளியேற்றும் முக்கிய காரணியாக கறவை மாடு வளர்ப்பு அமைகிறது. உலகின் பச்சை வீட்டு வாயு விளைவில் 14.5% கால்நடை வளர்ப்பின் பக்க விளைவுகளாலேயே நிகழ்கிறதாம் (FAO அறிக்கை). மேலும், பல்வேறுபட்ட சூழல் பாதிப்புகளையும் இந்தத் துறை […]
அண்மையில் இலங்கையின் அரச கால்நடை வைத்தியர் அலுவலகங்களில் பணியாற்ற 146 கால்நடை வைத்தியர்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. சில வருடங்களாக அரச கால்நடை வைத்தியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் மேற்படி ஆட்சேர்ப்பு இடம்பெற்றிருந்த போதும், இறுதியில் 27 கால்நடை வைத்தியர்களே அரச சேவைக்கு வந்திருந்தனர். பல கால்நடை வைத்தியர்கள் அரச பணியை விரும்பாமல் தனியார் சிகிச்சை நிலையங்களிலும், தனியார் நிறுவனங்களிலும், வெளிநாடுகளிலும் பணியாற்றுவதை விரும்புவதே இதற்குரிய முக்கிய காரணமாகும். மேற்குறித்த […]
சில வருடங்களுக்கு முன் இலங்கையின் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் அதிகளவில் பெய்த மழையினால் ஏற்பட்ட குளிருடன் கூடிய காலநிலையில் சிக்கி ஏராளமான கால்நடைகள் இறந்திருந்தன. இந்த நிலையை குளிர் அழுத்தம்/ அயர்ச்சி (Cold Stress) என்பார்கள். அன்றைய நாட்களில் சூழல் வெப்பநிலை 16 பாகை செல்சியஸ் வரை குறைந்திருந்தது. அந்த வருடம் வடக்கின் மேற்படி மாவட்டங்களில் வருடம் முழுவதும் பெரிதாக மழை கிடைத்திருக்கவில்லை என்பதனால் ஒரு வறட்சியான காலநிலையே […]
ஒரு கால்நடை வைத்தியராக இலங்கையின் கறவை மாடுகளின் நலன் தொடர்பாக அவதானித்தவை மற்றும் நடைமுறைகளை இந்தக் கட்டுரையில் ஆராயப் போகிறேன். உலகளாவிய ரீதியில் கறவை மாடுகள் மற்றும் ஏனைய விலங்குகளின் நலன் தொடர்பாக நவீன எண்ணக்கருக்களுடன் கூடிய சட்டங்கள் உள்ளதுடன் அந்தச் சட்டங்கள் மிக மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. இலங்கையில் 1907 இல் பிரித்தானியர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சட்டமான ‘Prevention of cruelty to animals ordinance’ (1907) நடைமுறையில் […]
அறிமுகம் காலனித்துவ ஆட்சியின் விளைவாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் இலங்கையில் பெருந்தோட்ட விவசாய முறையொன்று தோன்றி வளர்ந்தது என்பதும், இன்று வரையும் அது எமது பொருளாதாரத்தில் கேந்திர முக்கியத்துவம் வகித்து வருகின்றது என்பதும் யாவரும் அறிந்த ஒரு உண்மையாகும். இவ்விவசாய முறையின் பிரதான உற்பத்தி அலகாகவிருக்கும் தோட்டங்கள் முக்கியமானதொரு தாபன அமைப்பாக இன்று விளங்குகின்றன. பெருமளவு எண்ணிக்கையான தொழிலாளரைக் கொண்ட அமைப்பாக இருந்து வரும் அதேவேளையில் இவை தோட்டங்களில் […]
பெருந்தோட்டத்துறையில் வேதனப் பொறிமுறைகள் உலகில் செயற்பட்டுவரும் ஏறக்குறைய அனைத்து விவசாயக்கம்பனிகளுமே தமது ஊழியருக்கு நாளாந்த வேதனங்களைச் செலுத்தும் ஒரு முறையையே பின்பற்றிவருகின்றன. பெருந்தோட்ட விவசாயத்தில் ஈடுபட்டுவரும் பெருந்தோட்டக் கம்பனிகளும் இதற்கு விதிவிலக்கன்று. இந்தக்கம்பனிகள் எங்கெங்கு உருவாக்கப்பட்டனவோ அங்கெல்லாம் ஊழியருக்கு அவை நாளாந்த வேதனங்களையே செலுத்திவருவதோடு மலிவான ஊழியம் அவற்றின் ஒரு விசேட பண்பாக இருந்து வருகின்றது. அதாவது, தொழிலாளருக்குச் செலுத்தப்படும் வேதனங்கள் குறைந்தமட்டத்திலேயே பராமரிக்கப்பட்டதோடு, நெடுங்காலத்திற்கு அவை தேக்கநிலையிலும் வைக்கப்பட்டன. […]
கடந்த சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதிலும் அந்நியச் செலாவணியை உழைத்துக் கொடுப்பதிலும், 1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களின் மீதான தீர்வைகள் அகற்றப்படும்வரை அரசாங்க வரிவருவாயின் பெரும்பங்கினை உழைத்துக் கொடுப்பதிலும் பெருந்தோட்டங்கள் குறிப்பிடத்தக்களவு பங்களித்து வந்தன. இத்துறையினது பொருளாதாரப்பங்களிப்பில் அண்மைக்காலங்களில் சற்றுத்தளர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளபோதும் அது இன்னும் பொருளாதாரத்திற்குக் கணிசமான பங்கினை அளித்து வருகின்றது என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. இத்துறையில் தொழில்புரியும் தொழிலாளர்கள் நாட்டினது சனத்தொகையில் மிகமோசமான […]
தோட்டக் கம்பெனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே 1998 ஆம் ஆண்டில் தொழிலாளரின் நாளாந்த வேதனம் தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட கூட்டுஒப்பந்தத்தின் கீழ், தொடர்ந்துவந்த காலப்பகுதியில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் ஊடாக நாளாந்த வேதனம் உயர்த்தப்பட்டுவந்தது. 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைச்சாத்தான ஒப்பந்தத்தின்படி, நாளாந்தவேதனம் ரூபா 515.0 ஆகவும், தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைகளின் பின்னர் ரூபா 620.00 ஆகவும் உயர்த்தப்பட்டது. மேலே கூறியவாறு, நாளாந்த வேதனம் உயர்த்தப்பட்டபோது […]
இலங்கையின் வர்த்தகக்கொள்கைகளும் உறுகுவேசுற்று உடன்படிக்கைகளும் இறுப்புகள் GATT இல் கைச்சாத்திட்டுள்ள நாடுகளுள் இலங்கையும் ஒன்றாகும். எனவே, அது வர்த்தக இறுப்புகள் தொடர்பான உலகவர்த்தக தாபனத்தின் விதிகளைப் பின்பற்றவேண்டியது அவசியமாகும். உறுகுவேசுற்று விவசாய உடன்படிக்கையின் கீழ் விவசாயப்பண்டங்களின் மீதான இறுப்புகளின் உச்சவரம்பை இலங்கை 50.0 வீதமாக நிர்ணயித்துள்ளது. ஆனால், இன்று நடைமுறையிலிருக்கும் இறுப்புகள் இதிலும் பார்க்க குறைவானவையேயாகும். எனவே, மேற்படி உச்சவரம்பு எதிர்காலத்தில் இறுப்புகளை உயர்த்துவதற்கான ஒரு உச்சவரம்பேயாகும். உலக வர்த்தகத்தாபனத்தின் […]
“நீங்கள் வேண்டுவது மனிதருக்குள்ள உரிமைதான், மிருகங்களைப்போல் நடத்தப்பெறாமல் மனிதர்களைப்போல் தலைநிமிர்ந்து நடக்க உங்களுக்கு உரிமை வேண்டும். அந்த உரிமையில்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? நீங்கள் இன்றே யோசியுங்கள். இப்புஸ்தகத்தில் சொல்லப்பட்ட எல்லாவற்றையும் கவனித்து வாசியுங்கள். வாசிக்கத் தெரிந்தவர்கள் வாசிக்கத் தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். எல்லோரும் ஒன்றுகூடுங்கள். ஒற்றுமைப்படுங்கள். சங்கங்கூட்டுங்கள். அவ்விதம் நீங்கள் ஒற்றுமைப்பட்டுவிட்டதாகக் கண்டாலும் கேட்டாலும் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள். பாரதமாதா சந்தோஷப்படுவாள். சுதந்திர வீரர்கள் கூத்தாடுவார்கள். உங்களை அடிமைகளாக வைத்து […]
தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்குப் பெருந்தோட்டக் கட்டமைப்பு, அரசியற்கொள்கை, தொழிலாளர் சட்ட ஏற்பாடுகள், ஊதியமுறை முதலானவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வந்துள்ள கோ. நடேசய்யர், அம்மேம்பாட்டுக்குத் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வையும் சமூக சீர்திருத்தத்தையும் ஏற்படுத்துதலும் இன்றியமையாதன என்பதைத் தன் கள அனுபவங்களூடே கண்டறிந்து, அவற்றை நிறைவு செய்யும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். அதனொரு வெளிப்பாடாகவே ‘இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்’ என்ற சிறுநூல் அமைந்துள்ளது. ‘தொழிலாளர்கட்கு இன்னல் புரிகின்ற முதலாளி ஆட்சி […]
“ஏழைத்தொழிலாளி தோட்டக்காட்டில் திக்கற்றவனாய்த் தவிக்கிறான். அவனுக்கு இப்போது கிடைக்கும் தினச்சம்பளம் சுமார் 40 அல்லது 45 சதம் தான். அதிலும் மாதம் 30 நாளும் அவனுக்கு வேலை கிடைப்பதரிது. சில தோட்டங்களில், அதிலும் ரப்பர் தோட்டங்களில் சில மாதங்களில் 17 நாட்கள்கூட வேலையிருப்பதரிதாகிறது. சராசரி 20 நாள் ஒரு தொழிலாளி உழைக்கிறானென்று வைத்துக்கொண்டால், அவனுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 9 கிடைக்கிறது. இப்போது நாம் கவனிக்க வேண்டியது, இச்சம்பளம் ஒரு […]
இலங்கைப் பெருந்தோட்டங்களில் தொடக்ககாலத்தில் குடியேறிய தொழிலாளர்களின் வாழ்க்கைநிலைமையை முழுமையாக அறிந்துகொள்வதற்குப் போதுமான ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை. காலனிய அறிக்கைகள், காலனிய அதிகாரிகளின் பதிவுகள் முதலானவற்றில் இடம்பெறுகின்ற தகவல்களையும் வாய்மொழி வழக்காறுகளில் ஆவணம் பெற்றுள்ள செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு அக்கால வாழ்க்கை நிலைமையை ஓரளவு அறிந்துகொள்ள முடிகிறது. அத்தகவல்கள் விவரிக்கின்ற தோட்டத் தொழிலாளரின் வாழ்வு, மிகவும் துயர் நிறைந்ததாகும். “ ‘அருவருப்புத்தரும் அநீதி’, ‘கொடுமை’, ‘நீக்ரோ அடிமைகளைவிடக் கேவலம்’ ” (மேற்கோள்: குமாரி […]
தமிழ்ச் சமூகம் நெடுங்காலத்திற்கு முன்பே வணிகத்தில் நன்கு வளர்ச்சியடைந்திருந்துள்ளது. தொல்லியற் சான்றுகளும் இலக்கியத் தரவுகளும் ஐயத்திற்கிடமற்ற வகையில் அதனை நிரூபிக்கின்றன. பொ.ஆ. முற்பட்ட காலத்திலேயே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழரின் வணிக வலையமைப்பு பரந்து விரிந்திருந்துள்ளது. தனிமனித நிலையிலும் பலரின் கூட்டிணைவுடன் குழும நிலையிலும் வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாங்குளத்து பிராமிக் கல்வெட்டில் இடம்பெறும் ‘வெள்ளறை நிகமத்தோர்’ என்ற குறிப்பு, பொ.ஆ.மு. 02 ஆம் நூற்றாண்டில் குழுவாக வணிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை வெளிப்படுத்தி […]
சென்ற கட்டுரையில் வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றுத் தொடர்பாக லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படம் தரும் தகவல்களையும், அவை சார்ந்த வரலாற்றுக் குறிப்புகளையும் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் சங்கானைக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படம் காட்டும் தகவல்களை ஆராயலாம். சங்கானைக் கோவிற்பற்றில் சங்கானை, சுழிபுரம், தொல்புரம், மூளாய் ஆகிய நான்கு துணைப் பிரிவுகள் அடங்குகின்றன. நிலப்படம் இந்நான்கு பிரிவுகளையும் எல்லை குறித்துக் காட்டுகிறது (படம்-1). இக்கோவிற்பற்று, தற்காலத்தில் சங்கானைப் பிரதேச செயலாளர் பிரிவின் […]
சென்ற கட்டுரையில் மானிப்பாய்க் கோவிற்பற்றைப் பற்றி லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படம் தரும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றுத் தொடர்பாக அந்நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பற்றி ஆராயலாம். நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பு வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றில் வட்டுக்கோட்டை மேற்கு, வட்டுக்கோட்டை கிழக்கு, அராலி ஆகிய மூன்று துணைப்பிரிவுகள் இருப்பதாகக் காட்டுகிறது. ஆனால், நிலப்படத்தில் இரண்டு துணைப்பிரிவுகளை மட்டுமே குறித்துள்ளனர். வட்டுக்கோட்டை கிழக்குப் பிரிவை […]
சென்ற கட்டுரையில் உடுவில் கோவிற்பற்றுத் தொடர்பாக லெயுசிக்காமின் நிலப்படம் காட்டும் விடயங்களைப் பற்றிப் பார்த்தோம். இனி மானிப்பாய்க் கோவிற்பற்றுத் தொடர்பான தகவல்களை ஆராயலாம். இக்கோவிற்பற்றில் மானிப்பாய், சுதுமலை, ஆனைக்கோட்டை, நவாலி, சண்டிலிப்பாய் ஆகிய ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளன (படம்-1). ஒல்லாந்தர்கால மானிப்பாய்க் கோவிற்பற்று முழுவதும் இன்றைய வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் பகுதியாக அமைந்துள்ளது. எல்லைகள் மானிப்பாய்க் கோவிற்பற்றின் தெற்கெல்லையில் கடலேரியும்; கிழக்கு எல்லையில் வண்ணார்பண்ணை, நல்லூர், உடுவில் […]
கோப்பாய்க் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலிருந்து அறியக்கூடிய தகவல்களைப் பற்றிச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் உடுவில் கோவிற்பற்றுத் தொடர்பான விடயங்களை ஆராயலாம். இக்கோவிற்பற்றில் தாவடி, இணுவில், உடுவில், சங்குவேலி, சுன்னாகம் ஆகிய ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளன. (படம்-1) ஒல்லாந்தர்கால உடுவிற் கோவிற்பற்று முழுவதும் இன்றைய வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் பகுதியாக அமைந்துள்ளது. எல்லைகள் உடுவில் நிலத்தால் சூழப்பட்ட ஒரு கோவிற்பற்று. இதற்குக் கடலேரி அல்லது கடல் […]
சென்ற கட்டுரையில் நல்லூர்க் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படம் தரும் தகவல்களைப் பார்த்தோம். இனி வலிகாமப் பிரிவின் இன்னொரு கோவிற்பற்றான கோப்பாயைப் பற்றி ஆராயலாம். இக் கோவிற்பற்றில் கோப்பாய், இருபாலை, உரும்பிராய், ஊரெழு, நீர்வேலி ஆகிய ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளதாக நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பில் தகவல் இருந்தாலும், நிலப்படம் இருபாலையைத் தனியான பிரிவாக எல்லை குறித்துக் காட்டவில்லை (படம்-1). கோப்பாய், இருபாலை ஆகிய இரண்டு துணைப் பிரிவுகளையும் கோப்பாய்த் துணைப் […]
தொடக்கக் குறிப்புகள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் 2024 டிசம்பரில் 613.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாயகத்திற்கு அனுப்பியுள்ளனர். இது புதிய சாதனையாகும். இதற்கு முந்தைய பதிவு செய்யப்பட்ட அதிகபட்சமான தொகை 572.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது ஒரு மாதத்தில் இலங்கைக்கு தொழிலாளர்களினால் அனுப்பப்பட்ட அதிகபட்ச பணமாகும். அதேபோல் கடந்தாண்டு, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளார்கள். இது 2023ஆம் ஆண்டை விட 11% […]
தொடக்கக் குறிப்புகள் இலங்கையின் பொருளாதாரத்தில் ஆடைத்தொழிற்றுறையின் பங்களிப்பு முக்கியமானது. குறிப்பாக அந்நியச் செலாவணி நெருக்கடியை இலங்கை எதிர்நோக்கியிருக்கும் இக்காலப்பகுதியில் இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பிரதான தொழிற்றுறையாக ஆடைத்தொழிற்றுறை இருக்கின்றது. அதேவேளை கணிசமான இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கிய துறையாகவும் இது திகழ்கிறது. இத்துறையின் பொருளாதாரப் பரிமாணம் குறித்த அக்கறையும் கவனமும் மிகப் பெரியது. ஏற்றுமதிகள் குறைந்தாலோ, உற்பத்திகள் குறைந்தாலோ அக்கறை கொள்கிற அரசும், ஊடகங்களும் அங்கு பணிபுரிகின்ற ஊழியர்களின் நலன்கள் […]
தொடக்கக் குறிப்புகள் இலங்கை போன்ற நாடுகளில், குறிப்பாகப் போருக்குப் பிந்தைய சமூகங்களில் சில அவசியமான அசைவியக்கங்கள் கவனம் பெறாமல் போய்விடுவதுண்டு. அதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. போர் ஏற்படுத்திய இழப்புகளும் அழிவும், அது விட்டுச் சென்ற விடயங்களும் உடனடியாகக் கவனத்தை வேண்டுவனவாய் உள்ளன. ஆனால் போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஈழத்தமிழ்ச் சமூகம் இதுவரைக் கவனங் குவிக்காதுவிட்ட விடயங்களிலும் கவனம் குவித்தாக வேண்டும். அவ்வாறு கவனத்தை வேண்டுவோர் […]
தொடக்கக் குறிப்புகள் சிறிது காலத்திற்கு முன்னர் உயிரியற்துறைப் பேராசிரியர் ஒருவரோடு உரையாடிக் கொண்டிருந்த போது இலங்கை ஏன் மிகப்பிரபலமான சுற்றுலா நாடாக இருக்கிறது என்ற வினாவை அவர் எழுப்பினார். இயற்கையின் எழில், தேசியப் பூங்காங்கள், யானைகள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்தும் நிரம்பிய பூமியது என்று பதிலளித்தேன். அவர் ஒரு கேள்வியை எழுப்பினார்: “நீங்கள் அருகில் உள்ள பல்பொருள் அங்காடிக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு […]
தொடக்கக் குறிப்புகள் 2021 மே மாதம் இலங்கையின் கடற்பரப்பில் ஒரு கப்பல் தீப்பிடித்து எரியும் காட்சியைத் தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களும் ஒளிபரப்பிய போது நாம் எல்லோரும் திகிலுடன் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். குறித்த கப்பலில் இருந்தவர்கள் உயிராபத்தின்றி மீட்கப்பட்டார்கள் என்ற செய்தி ஆறுதலைத் தந்தாலும் கப்பல் ஏன் தீப்பிடித்து எரிகிறது, அக்கப்பல் எவ்வகையான பொருட்களைத் தாங்கியிருந்தது போன்ற வினாக்களுக்கான பதில் உடனடியாக எமக்குக் கிடைக்கவில்லை. இலங்கைத் துறைமுகத்தை தனது பயண […]
வடமாகாண கடற்பிரதேசம் வடமேற்கு மாகாண கடல் எல்லையிலிருந்து கிழக்கு மாகாண எல்லை வரை பரந்துள்ளது. இலங்கையின் எந்த மாகாணத்துக்கும் இல்லாத வகையில் பலதரப்பட்ட தொழில்களைச் செய்வதற்கான வளங்களை கொண்டது வடமாகாணத்தின் கடற்பிரதேசம். பின்வருவன இன்றுள்ள வடமாகாணக் கடலில் வருவாய் தரக்கூடிய தொழிலாக இருப்பவை: ஆழ்கடல் மீன்பிடி கரையோர மீன்பிடி ஆழ்கடல் மீன்பிடி போர் முடிவுற்ற காலத்தின் பின்பு ஆழ்கடல் மீன்பிடியை அபிவிருத்தி செய்ய அரசினால் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. தனியார்களின் மூலதனத்தை பயன்படுத்தி செய்யப்பட்டது வெறும் திருத்தல் வேலைகள் மட்டுமே. நவீன […]
1992 இல் வெளிவந்த தேவர்மகன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் இப்படி ஒரு வசனம் பேசுவார். ” 2000 வருஷமா, வேல் கம்பையும் அரிவாளயும் தூக்கிட்டு திரிந்த பய. சுபாஷ் சந்திர போஸ் சுதந்திரத்திற்கு ஆள் வேணும் என்று கேட்டப்ப, ஓடிப்போய் முதல் வரிசையில் நின்றவன் முக்காவாசி பேரு நம்ம பய தான். “ அதே போலத்தான், கருவாட்டு கத்தியோடும், கலவாய் கம்பியோடும், மண்டாவோடும் நின்று பழக்கப்பட்டவர்கள் 1976 ஆம் ஆண்டு […]
இந்தியக் கடல்கொள்ளையும், அதை மூடிமறைக்கச் சொல்லப்படும் காரணங்களும் ‘இந்திய மீன்பிடிப் படகுகள், நீரோட்டத்துடன் அவர்களின் வலைகள் அடித்து செல்லப்படுவதால்தான் எல்லை தாண்டுகின்றனர்; இலங்கையின் கடல்பகுதியில் மீன் பிடிப்பதற்கல்ல.’ என இந்திய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இந்திய நாசகார மீன்பிடிக்கு ஆதரவாகச் செயற்படும் சில புலம்பெயர் ‘இடதுசாரித்துவப் புரட்சி’ பேசும் சக்திகளும் இந்தியப் படகுகளின் அத்துமீறலை நியாயப்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் பிரசுரமாகும் ‘புதிய ஜனநாயகம்’ பங்குனி 2011 இதழில், எல்லை தாண்டிய கடற்கொள்ளை […]
மீன்பிடித் திறன் அதிகரிப்பும் கடல்வள அழிவும் கடலில் உருவாகும் மீன்வளத்தின் அடிப்படையில் கிடைக்கவல்ல வருமானத்திற்கு மீறியதான மீன்பிடித் திறனை அதிகரிக்க, முதலீடு செய்வது பாதகமானதாகும். அதைக் கட்டுப்படுத்தி மீன் வளத்திற்கேற்ப முதலீடு செய்வதற்கு வகை செய்யாமல், மீன்பிடித்துறையில் தாராளமய முதலீட்டை ஒரு அரசு தனது கொள்கையாகக் கொண்டிருக்குமானால் அதனால் முதலில் பாதிப்படைவதும், அழிவுக்குள்ளாவதும் கடல்சார் வளங்களே. உற்பத்தி உபகரணங்களில் முதலீடு செய்யும்போது, அதை இலாபத்துடன் திருப்பிப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை […]
ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் முதல் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் (1994-1999) விடுதலைப் புலிகள் அமைப்புடன் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அந்த சமாதானப் பேச்சுக்களுக்கு மறைமுகமாக உதவிய நோர்வே மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு-கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கும் உடன்பட்டிருந்தன. அந்தப்பேச்சு வார்த்தைகள் முற்று முழுதாக முடிவடையாமல் இருந்தாலும், இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றி விடுதலைப் புலிகளுக்கும் சந்திரிகா அரசுக்கும் இடையில் பல […]
அறிமுகம் இலங்கையின் இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களில் துறைசார் நிபுணர்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துக்களைக் கேளாமலும் நன்கு திட்டமிடப்படாமலும் 2019 ஆம் ஆண்டு எதேச்சதிகாரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நாடு தழுவிய கட்டாய சேதன விவசாயமும் அசேதன விவசாய உள்ளீடுகளுக்கான தடையுமே மிகப் பிரதானமாகப் பார்க்கப்படுகின்றன. இலங்கை கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சூழல்நேய விவசாயத் திட்டங்களினூடு தற்சார்பு உணவு உற்பத்தி செய்த நாடாக இருந்தும் பின்னர் திறந்த […]
அறிமுகம் இலங்கையின் விவசாயம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட ஒரு மிக முக்கியாமான பொருளாதாரத்துறை. அந்நிய சக்திகள் இலங்கையில் காலூன்றுவதற்கு முன்னர், மன்னர் ஆட்சிக்காலத்தில் மன்னர்களின் (இன்றைய காலத்தில் அரசியல்) தலையீடு இலங்கை முழுவதும் உணவுப் புரட்சியை ஏற்படுத்தும் அளவுக்கு விவசாயத்துறையை வளர்த்தது. ஆனால் அந்நியர் ஆட்சிக்குப் பின்னர் இலங்கை ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசாக மாறியது முதல் இலங்கையில் காலம் காலமாக நிகழ்ந்துவரும் அரசியல் தலையீடு நாட்டின் […]
அறிமுகம் இலங்கை போன்ற இயற்கை வளங்களையும், பொருத்தப்பாடான காலநிலையையும் செழிப்பாகக் கொண்ட ஒரு வளர்ந்துவரும் சிறிய தீவு நாட்டுக்கு விவசாயம் சமூக-பொருளாதாரத்தின் நிலைத்திருப்புக்கும், வேலைவாய்ப்பு, உணவு மற்றும் போசாக்கை வழங்குகிற ஒரு “முழுமையான” வகிபாகத்தையும் கொண்ட துறையாகும். மேலும் விவசாயத்துறை தேசத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முதுகெலும்பாகவும் மற்றும் நாட்டின் இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்து பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி வருவாய் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்ற […]
அறிமுகம் விவசாயம் என்பது வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான வருமானம் ஈட்டும் தொழிலாகும் . இது வேலை, வருமானம் மற்றும் உணவு ஆகியவற்றின் முதன்மை ஆதாரமாகவும் மனிதனின் அடிப்படைத் தேவைகளை உலகம் முழுவதும் பூர்த்தி செய்கின்ற இயற்கையின் கொடையாகவும் திகழ்கின்றது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) படி, விவசாய மக்கள்தொகையின் பங்கு மொத்த மக்கள்தொகையில் 67% ஆகும். இது மொத்த உணவு உற்பத்தியில் 39.4% மற்றும் அனைத்து […]
அறிமுகம் இலங்கை தனக்கென்று தனித்துவமான இயற்கையோடு இணைந்த விவசாயத்தை மேற்கொள்கின்ற ஒரு விவசாய நாடு. பல்லாயிரம் ஆண்டுகளாகவே எமது மூதாதையர்கள் எந்தக் காலநிலையில் என்னென்ன பயிர்கள் செழித்து வளரும், எந்த எந்தப் பயிர்களுக்கு என்ன சூழல் நிபந்தனைகள் தேவை போன்ற விடயங்களைக் கற்றதோடு, இந்த நாட்டிலே இயற்கையாகக் காணப்பட்ட தமது உணவுக்குத் தேவையான தானிய மற்றும் பழப் பயிர்களை இயற்கைநேயப் பண்ணை முறைகளை பயன்படுத்தி உற்பத்தி செய்து உண்டு மகிழ்ந்தனர். […]
இற்றைக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதாவது இடைக்கற்காலக் காலந்தொடக்கம் இலங்கையில் வேடர் சமூகம் வாழ்ந்து வருகின்றது என்பதனை, இலங்கை மானிடவியல் மற்றும் வரலாற்று ஆய்வுகள் தமது வரையறைக்கு எட்டியவரை எடுத்துக்காட்டி நிற்கின்றன. இலங்கையில் கிழக்குப்பக்கமாக திருகோணமலை தொடங்கி மட்டக்களப்பு, அம்பாறை என மிக நீண்டதான கரையோரத்துடன் அண்டியதாகக் கடலோர வேடர் குடிப்பரம்பலை இன்றும் வாழும் சாட்சிகளாகக் காணமுடிகின்றது. கிழக்கிலங்கையின் இனக்கலப்பில் இன்றும் வேடப்பூர்வகுடிகளின் அடையாளங்கள் சடங்கார்ந்த நடவடிக்கைகள் ஊடாக வெளிக்கிளம்பியபடியே […]
வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தே, குழுக்களாக மனிதர்கள் கூடி வாழத் தொடங்கிய காலத்தில் இருந்தே, மனித இனக்குழு ஒன்றின் சகல முன்னெடுப்புக்களிலும் பெண்களின் பங்களிப்பே முக்கியமானதாக இருந்திருக்கிறது. தத்தமது கூட்டத்தை வழிநடத்துபவளாக பெண்ணே இருந்திருக்கிறாள். உடல் வலுவிலும், உணவுத்தேடலுக்கான உழைப்பிலும், ஆணுக்குச் சமமாகவும் சில தருணங்களில் ஆணை விஞ்சியே பெண்ணின் செயற்பாடுகள் இருந்துள்ளன. “வருவிருந்து அயரும் விருப்பினள்” (புறம்.326:12) எனும் புறநானூற்றுப் பாடல் வேட்டைச் சமூகத்தில் உணவுப்பங்கீடு செய்வதில் அவளுக்கிருந்த நிர்வாகத்திறனின் தொடர்ச்சியைப் புலப்படுத்துவதாகக் காணப்படுகிறது. […]
மனித இனத்தின் தோற்றத்தில் இருந்தே மொழியின் தோற்றத்தினையும் கருத்திற்கொள்ள முடியும். மனிதத் திரள்களின் தொடர்பாடல் ஊடகமாக மொழியானது ஆரம்பத்தில் இருந்து பயன்பட்டு வருகிறது. இது தொடக்கத்தில் சைகை, ஊமத்தில் இருந்து பின்னர் ஒலிவடிவம், எழுத்து வடிவம், பேச்சு வழக்கு, இலக்கண வழக்கு என்னும் படி நிலைகளை மனித வரலாற்றுப் போக்கின் அடிப்படையில் கண்டு கொண்டது. இவ்வாறான மொழியினை “ஒரு வகுப்பார் அல்லது நாட்டார் தம் கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்துதற்கு ஒரு […]
இற்றைக்கு 28000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதாவது இடைக்கற்கால காலத்தில் இருந்தே இலங்கையில் வேடர் சமூகம் வாழ்ந்து வருகின்றது என்பதனை, இலங்கை மானிடவியல் மற்றும் வரலாற்று ஆய்வுகள் தமது வரையறைக்கு எட்டியவரை எடுத்துக்காட்டி நிற்கின்றன. இயக்கர், நாகர் என்னும் வரலாற்றுக்கு முந்தைய குடிகளை தமது மூதாதையர்களாக சிங்கள மற்றும் தமிழ் மக்கள் அடையாளப்படுத்தும் முயற்சியில் இருக்கும் சூழ்நிலையில் அந்த குடிகளின் காலத்துக்கு எத்தனையோ ஆயிரமாண்டு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த குடிகளாகவும் […]
இன்றைய நவீன காலனித்துவ உலகம் மனிதனை இயற்கையிலிருந்து பிரித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மனித குலத்தின் பாரம்பரியங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கலாசார நடவடிக்கைகள் அனைத்தும் சீர்குலைந்துள்ளன. இதைத் தாமதமாகவேனும் உணர்ந்துகொண்டே மனிதச் சிந்தனையானது தன் இயல்பான வாழ்க்கை முறையை நோக்கி நகர முற்பட்டுள்ளது. பல இடங்களில் வியாபாரமாகவும், சில இடங்களில் திறமான கருத்தாடலாகவும் இது காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தான் நவீன உலகில் மானுடவியல் ஆய்வுகளும் ஆய்வாளர்களும் […]
இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் காலநிலை தொடர்பான ஆய்வுகளுக்காக துல்லியமான காலநிலைத் தரவுகளைப் பெறுவது பிரதான பிரச்சினையாக இருக்கின்றது. 1985 இற்கு முன்னர் இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் வானிலை மூலக்கூறுகளை அவதானித்து அளவிடும் பல வானிலை மற்றும் மழை அளவீட்டு நிலையங்கள் இருந்தன. ஆனால் முப்பது வருட உள்நாட்டு மோதல் காரணமாக அவற்றில் பல இன்று செயற்படவில்லை. 13 மழைவீழ்ச்சி நிலையங்கள் மட்டுமே வட பிராந்தியத்தின் 1992 முதல் 2022 வரையிலான […]
அறிமுகம் உலகின் 70% இயற்கைப் பேரழிவுகள் அரசியல், பொருளாதார, சமூக காரணிகளுடன் வானிலை மற்றும் காலநிலையுடனும் ஓரளவு அல்லது முற்றிலும் தொடர்புடையவை என்று உலக வானிலை அமைப்பு குறிப்பிடுகின்றது. இலங்கையின் பொருளாதாரம் இயற்கை அனர்த்தங்கள், குறிப்பாக காலநிலை மாற்றம் காரணமாக பல சவால்களை எதிர்கொள்கிறது. இலங்கையின் விவசாயம் வெப்பநிலை, மழைவீழ்ச்சி, மண்ணின் ஈரப்பதன் வேறுபாடுகள், வானிலை நிகழ்வுகளின் தீவிரம் மற்றும் அதிர்வெண் அதிகரிப்பு ஆகியவற்றின் மாறுபாடுகளால் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகிறது. […]
அறிமுகம் அனர்த்தம் என்பது இயற்கை மற்றும் மானிடவியற் காரணிகளினால் தூண்டப்படுகின்றது. அது உலகின் ஒட்டுமொத்த உயிர்ச்சூழலுக்கும், குறிப்பாக மனித சமூகத்திற்கு உடல், உள, சொத்துகள் மற்றும் சுற்றுச் சூழலியல் ரீதியாக இடர்பாடுகளினை ஏற்படுத்துகின்ற அனைத்து நிகழ்வுகளினையும் குறித்து நிற்கின்றது (Amri et al., 2023). மேற்குறிப்பிட்ட இயற்கை அனர்த்தங்களில் இடி – மின்னலும் ஒன்றாகும். அதாவது இயற்கை மற்றும் மானிடக் காரணிகளினால் தூண்டப்படுகின்ற காலநிலை மற்றும் நீர் சார்ந்த அனர்த்தங்களில் […]
அறிமுகம் இன்றைய மனித சமூகம் எதிர்கொள்ளுகின்ற மிக முக்கியமான இயற்கை அனர்த்தங்களுள் வறட்சியும் ஒன்றாகும். பூகோள ரீதியிலான காலநிலை மாற்றம் உலகளாவிய ரீதியில் வறட்சி அனர்த்தங்களின் நிகழ்வு எண்ணிக்கையையும் பாதிக்கும் தன்மையையும் அதிகரித்து வருகின்றது (Dananjaya et al., 2022). 2019 ஆம் ஆண்டின் ஐ.பி.சி.சி. யின் அறிக்கை, உலகளாவிய ரீதியில் ஆண்டுக்கு சராசரியாக 42 நாடுகள் வறட்சியினால் பாதிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றது (Abeysinghe & Rajapaksha, 2020). அத்தோடு எல் […]
அபிவிருத்திக் காரணங்கள் வடக்கு மாகாணத்தில் யுத்தத்தின் பின்னர் குறிப்பாக 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பூரணப்படுத்தப்பட்ட பல்வேறு வகையிலான வீதி சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களான ‘கார்பெட்’ தெருக்களின் நிர்மாணம், உள்ளூர் வீதி அமைப்புகள், புகையிரத வீதி நிர்மாணம் போன்ற நடவடிக்கைகளின் காரணமாக வடிகால் பாங்குகள் குழப்பமடைந்து பல பிரதேசங்களில் வெள்ள அனர்த்த நிலைமைகள் உருவாக்கப்பட்டு இருப்பதைக் காண முடிகின்றது. யாழ்ப்பாணக் குடா நாட்டினுடைய புகையிரதப் பாதைகள் மழைநீரைக் கடத்தும் அல்லது […]
பண்டுதொட்டு தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் இருந்து வருகின்றன. இத்தொடர்புகளே தமிழகத்தில் இருந்து மக்கள் புலப்பெயர்ச்சி, அரசியல் படையெடுப்பு, வர்த்தகம், பண்பாடு என்பன இலங்கையில் ஏற்படக் காரணமாகியது. இதில், வட இலங்கையின் அமைவிடம் இலங்கையின் ஏனைய பிராந்தியங்களைவிடத் தமிழகத்திற்கு மிக அண்மையில் அமைந்திருப்பதால் தமிழகத்தின் செல்வாக்கை முதலில் உள்வாங்கிக் கொள்ளும் படிக்கல்லாக இது திகழ்ந்தது. இச்செல்வாக்கு சங்ககாலத்தில் மிகச்சிறப்பாக இருந்ததை கட்டுரை ஆசிரியர் பூநகரி வட்டாரத்தில் கண்டுபிடித்த முதுமக்கள் […]
இலங்கையின் பண்பாட்டு வரலாற்றைத் தென்னிந்தியாவின் தென்பகுதியுடன் குறிப்பாகத் தமிழகத்துடன் தொடர்புபடுத்தி ஆராயும் போக்கு அண்மைக் காலங்களில் வளர்ச்சியடைந்து காணப்படுகிறது. இதற்குத் தமிழகத்தில் தோன்றி வளர்ந்த பண்பாட்டலைகள் சமகாலத்தில் இலங்கையிலும் செல்வாக்குச் செலுத்தியதே காரணமாகும். இதை இலங்கையின் தொடக்ககாலப் பிராமிக் கல்வெட்டுகளிலும் காணமுடிகிறது. இலங்கையில் இதுவரை இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை கி.மு 3 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால எழுத்து, மொழி, […]
இலங்கையிலும், தமிழகத்திலும் கிடைத்த நாணயங்களில் ‘ஸ்ரீலங்கவீர’, ‘உரக’ என்ற பெயர்பொறித்த பொன், செப்பு நாணயங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவற்றை முதலாம் இராஜராஜ சோழன் இலங்கையில் அடைந்த வெற்றிக்காக இலங்கையிலேயே வெளியிட்டான் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு கூறுவதற்குப் பல காரணங்கள் காட்டப்படுகின்றன. இந்நாணயங்களில் பெரும்பாலானவை இலங்கையில், குறிப்பாக வடஇலங்கையிலும் தமிழ்நாட்டில் சோழமண்டத்திலுமே கிடைத்துள்ளன. பாண்டிய நாட்டையும், சேர நாட்டையும் வெற்றி கொண்டதற்காக செப்பு நாணயங்களை வெளியிட்ட இராஜராஜ சோழன் இலங்கை வெற்றிக்காக […]
தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று மரபு கொண்ட ஒரு நாடு என்ற சிறப்பு இலங்கைக்கு உண்டு. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் பரவியபோது கூடவே அம் மத வரலாற்றைப் பேணும் மரபும் அறிமுகமாகியது. இவ்வரலாற்று மரபை அடிப்படையாகக் கொண்டு தீபவம்ஸ (கி.பி 4 ஆம் நூற்றாண்டு), (மகாவம்ஸ கி.பி 6 ஆம் நூற்றாண்டு), சூளவம்ஸ முதலான பாளி நூல்கள் எழுந்தன. இவை பௌத்த விகாரைகளில் வைத்து எழுதப்பட்டதினால் அம் […]
அறிமுகம் இலங்கைத் தமிழரின் பாரம்பரியத் தாயகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பிரதேசத்தின் ஆதிக்குடிகள், அவர்களின் மொழி, பண்பாடு என்பன பொறுத்து வரலாற்று ஆசிரியர்களிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. இற்றைக்கு அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் இங்கு தொன்மையான தமிழர் நாகரிகமும், சுதந்திர தமிழரசும் ஆதியில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உறுதியான தொல்லியல் ஆதாரங்கள் அற்ற நிலையில் இலக்கியச் சான்றுகளை மட்டும் வைத்து இக்கருத்து கூறப்பட்டதினால் பிற்கால […]
மலையக தமிழ் மக்களின் இந்த வரலாற்றுத் தொடர் இந்த அத்தியாயத்துடன் ஒரு முடிவுக்கு வருகிறது. எனினும் அவர்களது வரலாறு அதன் பின்னரும் இந்த அத்தியாயத்திலிருந்து இன்று வரை தொடரத்தான் செய்கிறது. அது புதுமைப்பித்தன் எழுதிய ‘துன்பக்கேணி’ என்ற கதையைப் போல ஒரு துன்பியல் வரலாறு. நான் இந்த வரலாற்று தொடரை எழுத முற்பட்டபோது இதற்கு என்ன தலைப்பை இடலாம் என்று பெரிதும் சிந்தித்தேன். சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து 74 […]
மலையக தமிழ் மக்கள் ‘நாடற்றவர்கள்’ என்ற நிலையை மாற்ற எத்தனையோ போராட்டங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகள், சாத்வீக சத்தியா கிரகங்கள் என்பவற்றையெல்லாம் மேற்கொண்டு அரசாங்கத்துக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்தனர். அடுத்தடுத்து பதவி வகித்த இனவாத அரசாங்கங்கள் தங்களது நிலைப்பாட்டில் இருந்து ஒரு அங்குலம் கூட இறங்கிவர தயாராக இருக்கவில்லை. நாட்டின் வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் தங்களது தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வாக வடக்கு கிழக்கு பிரதேசத்தை ஒரு சுயாட்சியுடன் கூடிய […]
இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து படிப்படியாக உரிமைகளை இழந்த மலையக தமிழ் மக்கள், 1977 ஆம் ஆண்டை தொடர்ந்து வந்த தசாப்தத்திலேயே தமது சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளை பறித்த அதே ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்து தமது உரிமைகளை படிப்படியாகப் பெற ஆரம்பித்தனர். ஆனால் அரசியல் வரலாறு அவர்களுக்கு எதிராக மீண்டும் ஒரு முறை திசை திரும்பியது. தேசிய இனப் பிரச்சினையை மையமாகக் கொண்ட உள்நாட்டு யுத்தம், வடக்கு […]
இலங்கையை இறுதியாக ஆட்சி செய்த அந்நியரான பிரித்தானியரிடமிருந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது, மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை பொறுத்தவரையில் அம் மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. முதலில் இந்திய வம்சாவழி மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டது. பின்னர், சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழர்களதும் தமிழ் பேசும் முஸ்லிம்களதும் மொழி உரிமை பறிக்கப்பட்டது. மேலும், பல […]
1978 ஆம் ஆண்டு, இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு, சுமார் 30 வருடங்களின் பின்னர், ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவிடமிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமானுக்கு ஒரு அழைப்பு வந்தது. தொண்டமான், ஜனாதிபதி மாளிகையில் ஜெயவர்த்தனவை சந்தித்தார். அச் சந்திப்பை அடுத்து தொண்டமான் அவர்களுக்கு அமைச்சரவையில் அமைச்சர் பதவி ஒன்று வழங்கப்பட்டது. கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் என்ற பதவியைப் பெற்றுக்கொண்ட தொண்டமான், நீண்ட காலமாக தமது மக்களுக்கு […]
இன்று உருவாகியுள்ள புதிய உலக ஒழுங்கில் இந்தியா, சீனா, இலங்கை என்பன இணைந்து இயங்குவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது எனும் குரல் ஏற்கனவே வெளிவந்துள்ளது. இத்தகைய புதிய செல்நெறி துலக்கமாகத் தெரிகிறதா எனும் கேள்வி பலரிடமும் தோன்ற இடமுள்ளது. ஏற்கனவே நிலவி வந்த ஒற்றை மையமான ஐக்கிய அமெரிக்க மேலாதிக்கம் தளம்பல் நிலையை அடைந்து, பழைய நியமங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கும் மாறுநிலைக் காலம் என்பதைக் கடந்து, உறுதியான புதிய உலக ஒழுங்கு […]
பெரும் நம்பிக்கையுடன் வரவேற்கப்பட்ட புதிய அரசாங்கம் இயங்கத் தொடங்கி நான்கு மாதங்கள் கடந்துள்ளன. இந்த இடைவெளியில், முந்தைய ‘புதிய அரசாங்கம்’ ஒவ்வொன்றினதும் அரங்கேற்றங்களின் பின்னரும், இன்றும் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் கவனிப்புக்குரியன. இன்றைய கணிப்பில் அறுபது வீதத்துக்கு மேற்பட்டவர்கள் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் வலுவான நம்பிக்கையுடன் மேலும் விருத்தியை எதிர்பார்ப்பதாகவும் கருத்துரைத்துள்ளனர். பழையதன் மீது வெறுப்புற்று ஏற்படுத்தப்படும் புதிய அரசாங்கங்கள் மீது, இதே கால இடைவெளியில், முன்னர் இந்தளவிலான நம்பிக்கை […]
புலப்பெயர்வடைந்த ஈழத் தமிழர்களின் இதயப்பகுதி எனக் கருதப்படும் கனடாவில் எம்மவர்க்குப் பேரதிர்ச்சி தரும் நிகழ்வொன்று நடந்தேறி வருகிறது. தமது புதிய தாயகமான கனடாவில் மிகக் கடின உழைப்பைச் செலுத்தி உளச் சோர்வுக்கு ஆட்பட நேர்ந்தாலும், அதற்கு ஈடாக வள வாழ்வு கிட்டுவதில் உழைக்கும் ஈழத்தமிழ் மக்களுக்குத் திருப்தி உள்ளது. அதைவிடவும் தமது சுயநிர்ணய உரிமையைக் கனடா அனுமதிப்பதில் அவர்கள் திருப்தி கொள்கின்றனர். ஜனநாயகப் பண்பை விரும்பும் அத்தகைய உழைக்கும் ஈழத் […]
நாற்பது வருடங்களாகத் தான் சூழல் பாதுகாப்பு எனும் விவகாரம் மிக அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. அரைநூற்றாண்டுக்கு முன்னர் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை நவ காலனித்துவப் பிரயோகத்துடன், விடுதலை பெற்ற தேசங்களில் தொடர்ந்து மேற்கொண்டு, எமது வளங்களைத் கபளீகரம் செய்வதனை முறியடிக்கும் வகையில் சுயசார்புப் பொருளாதாரம் முன்னெடுக்கப்படலாயிற்று. உலக மூலதன மேலாதிக்கம் வலுப்பெற்ற எண்பதாம் ஆண்டுகளில், நவ காலனித்துவத் தேசங்களால் திறந்த பொருளாதார முறைமை ஊடாகக் கார்ப்பிரேட் ஏகாதிபத்தியம் எமது பிராந்தியக் அபகரிப்புகளை […]
உலக அரங்கில் சமூக மாற்றச் செல்நெறி வர்க்கப் போராட்டங்கள் வாயிலாக மட்டும் நடந்தேறி வரவில்லை; வர்க்கப் பிளவுறாத காரணத்தால் புராதனப் பொதுவுடமைப் பண்புகளைத் தம்மகத்தே கொண்டு இயங்கி வந்த ஆசிய உற்பத்தி முறைமைக்கு உரிய எமது வாழ்வியலில் இன்னொரு வகையிலான சமூக அமைப்பு மாற்றப் போக்கு இடம்பெற்று வந்துள்ளது என்பதனைக் குறித்து இந்தத் தொடரில் பேசி வருகிறோம். முழுச் சமூக சக்திகள் மேலாதிக்கம் பெற்றதன் வாயிலாக ஏனைய முழுச் சமூக […]
பெண்கள் எமது சமூகத்தின் அடிக்கல்லாகவும் தூண்களாகவும் இருந்ததைப் பற்றிப் பேசுவது அவசியமாகும். இது, இன்றைய இளம்பெண்கள், ஆண்களை மட்டுமின்றி பெண்களையும் வாழ்க்கையின் முன்மாதிரிகளாகக் கொண்டு, தொழில்முனைவோராக முன்னேற உதவுமென நான் நம்புகிறேன். உலகுதழுவிய நிலையில் பெண்களின் பங்களிப்புகளையும் அவர்களது மனப்பான்மைகளையும் பற்றி ஆராயமுன்னர், பெண்களின் பங்களிப்பால் எனது சொந்தவாழ்வில், எனது ஆரம்பத் தொழில்முனைவு வாழ்க்கையில் எவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்தன எனக் கூறுவது முக்கியமாகும். எனது தாத்தா களுத்துறையில் வியாபாரம் செய்து […]
“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை” திருக்குறள் (512) மு. வரதராசனார் விளக்கம்: பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும். நான் எதிர்பாராத விதமாக எனது முகநூல் உள்பெட்டியில் நண்பர் ஒருவர், 63 வருடங்களுக்கு முந்தைய சில ஆவணங்களை தனது தாத்தாவின் பழைய ஆவணக் கோப்புகளிலிருந்து எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார். அந்த ஆவணமானது எனது […]
“பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து”திருக்குறள் – 738 மு. வரதராசனார் விளக்கம்: நோயில்லாதிருத்தல், செல்வம், விளைபொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர். நான் கடந்த மாதம் இலங்கைக்குச் சென்று இரண்டு வாரங்கள் எனது வயதான தாயருடன் ஒன்றாக இருந்துவிட்டு வந்தேன். அவருக்கு தொண்ணூற்று நான்கு வயது. எமது தந்தையார் 42 வருடங்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக மறைந்துவிட்டார். தந்தையார் […]
“இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வது அஃதொப்ப தில்”திருக்குறள் (621) மு. கருணாநிதி விளக்கம் : சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான். எனது உயர் படிப்பை ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்துவிட்டு, முப்பது வருடங்களுக்கு முன் (1994 ஆம் ஆண்டு) ஐக்கிய அமெரிக்காவில் எனது தொழில் வாழ்க்கையை தொடங்கினேன். இந்த முப்பது வருடங்களில் மூன்று உலகளாவிய நிறுவனங்களிலும் இரண்டு ஆரம்பத் தொழில்நுட்ப நிறுவனங்களில் […]
“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்” -திருக்குறள் (120)- விளக்கம் : பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும். உலகளவில் தொடக்க நிறுவனங்களை (Startup Companies) அதிகமாக உருவாக்கும் இடமான சிலிக்கன் வலியில் தொடங்கப்படும் நிறுவனங்களில் பத்தில் ஒன்பது தோல்வியடைவது உண்மையாகும். அதற்குப் பல காரணங்களை ஆராய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அதில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று; […]
உப்போடு புளியோடு முப்பத்து இரண்டு திருமணமாகி அடுத்த நாள் மணமகன் சந்தைக்குச் சென்று சமையலுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் வீட்டுக்கு வாங்கி வருவார். இதனை உப்போடு புளியோடு முப்பத்திரெண்டும் வாங்கி வருதல் என்பார்கள். உப்பு, புளி, ஏலம், கறுவா, வாசனைத்திரவியங்கள், மீன், இறைச்சி, மாசி, கருவாடு, மரக்கறிகள், அரிசி, பருப்பு, சீனி, தேயிலை, வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு உள்ளிட்ட அத்தனை பொருட்களும் இதில் அடங்கியிருக்கும். இது மணமகனின் கௌரவத்தை வெளிப்படுத்துவதாக […]
திருமண அழைப்பு ஆரம்பகாலங்களில் திருமண அழைப்பானது வாய்வழியாகவே சொல்லப்பட்டு வந்தது. இதனை விசேளம் சொல்லுதல் என்று அழைப்பர். நெருங்கிய சொந்தக்காரர்களுக்கு வட்டா வைத்து அழைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. குடும்பத்தினர்களுக்கு மணமகன், மணமகள் நேரடியாக அழைப்பு விடுப்பதும் உண்டு. வட்டா வைத்து அழைத்தல் வெண்கல வட்டா ஒன்றில் ஏழு வெற்றிலை, ஏழு பாக்கு வைத்து வட்டாவின் காலில் கட்டப்பட்ட வெள்ளைத்துணியால் அதை மூடிக்கொண்டு எடுத்துச் செல்வார்கள். பள்ளி மரைக்காயர்மார், லெப்பை, முஅத்தின், […]
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் பண்பாடு பற்றிக் குறிப்பிடுகையில், “பண்பாடு என்பது உண்மையில் மானிடவியல், சமூகவியல் நிலைப்பட்ட ஒரு வாழ்வியற் களம். அன்றாட வாழ்க்கை உறவுமுறைகள், விவாகம், பிள்ளை வளர்ப்பு, மரணம், உணவுவகை, ஆடை – ஆபரணங்கள், வைபோகம், சடங்கு இவற்றினூடாகத் தோன்றுகின்ற ஒரு மனநிலை” என்பார். கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டு அடிப்படைகளை இரண்டாகப் பகுக்கலாம். எடுத்துக்காட்டாக: உண்ணும்போது, நகம் வெட்டும்போது, உறங்கும்போது பின்பற்றும் நடைமுறைகள் போன்று அனைத்து வாழ்வியலம்சங்களுக்குமான […]
பெயராய்வின் (Onomastics) பிரதானமானதொரு கிளையாக இடப்பெயராய்வு (Toponymy) காணப்படுகின்றது. இது சமூகங்களுக்கிடையேயான வரலாறு, பண்பாடு மற்றும் மொழியியல் தொடர்புகளைப் புரிந்துகொள்ளப் பயன்படும் நுணுக்கமான ஒரு கருவியாகக் காணப்படுகின்றது. இலங்கையில், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் பரஸ்பரமான சகவாழ்வு, வர்த்தகம் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றனர். இக்கட்டுரை கிழக்கிலங்கையின் பண்பாட்டுப் பாரம்பரிய அசைவுகளின் இன்னுமொரு பக்கமாகும். வரலாற்றுப் பின்னணி இலங்கை முஸ்லிம்கள், பல்வேறு மூலங்களுடன் இலங்கை வரலாற்றில் இணைகின்றனர். […]
மொழியின் பிரதான அம்சமே பெயரிடுவதாகும். பெயர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் விரவிக்கிடக்கின்றன. ஒரு பொருள் அல்லது செயற்பாடு பெயரிடப்படுவதன் மூலமே தனித்துவப்படுத்தப்படுவதோடு, அர்த்தம் கொள்ளச் செய்யப்படுகின்றது. இப்பெயர்கள் தொடர்பான கற்கை Onomastics எனப்படுகின்றது. தமிழில் பெயராய்வு எனலாம். இது பெயர்களின் சொற்பிறப்பியல், வரலாறு, அவற்றின் பயன்பாடு, தனித்தன்மைகள் என்பவற்றை ஆய்வு செய்யும் துறையாகும். இது பலவகைப்படுகின்றது. இடப்பெயராய்வு (Toponomastic) ஆட்பெயராய்வு (Anthrophonomastic) இலக்கியப்பெயராய்வு (Literary Onomastic) சமூகப் பெயராய்வு (Socio Onomastic) […]
ஆங்கில மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட சிவில் சமூகம் (Civil Society) என்னும் அரசியல் விஞ்ஞானக் கலைச்சொல் இன்று சாதாரண மக்கள் மத்தியிலும் அறிமுகமாகியுள்ள சொல்லாக உள்ளது. ஆனால் இச்சொல் பற்றிய கோட்பாட்டு விளக்கங்களை உள்ளடக்கிய கட்டுரைகள் தமிழில் போதியளவு இல்லை. ‘சிவில் சமூகம்’, ‘சிவில் சமூக அமைப்புகள்’, ‘ஜனநாயக சமூகத்தில் சிவில் சமூக அமைப்புகளின் வகிபாகம்’ என்பனவற்றை விளக்கும் முறையில் ‘சிவில் சமூகம்’ (Civil Society) என்னும் தலைப்பில் […]
ஆங்கில மூலம்: நவரட்ண பண்டார மூன்றாவது தலைமுறை மூன்றாவது தலைமுறை அரசியல் வர்க்கம் 1977இல் ஜே.ஆர். ஜயவர்த்தன நிறைவேற்று ஜனாதிபதியாக ஆட்சியில் அமர்ந்த காலத்தில் இருந்து உருவானது. இந்த வர்க்கம் உருவான காலத்தில் புதியதொரு தேர்தல்முறை (New Electoral System) நடைமுறைக்கு வந்தது. அத்தோடு அதிகாரங்கள் குறைக்கப்பட்ட பலவீனமான பாராளுமன்றம் உருவானது. நீதித்துறையும் பலவீனமுடையதாக ஆக்கப்பட்டது. ஜே.ஆர். ஜயவர்த்தன ஆட்சிக்காலத்தில் புதிய பொருளாதாரக் கொள்கையும் (A New Economic Policy) […]
ஆங்கில மூலம்: அசங்க வெலிக்கல கோத்தபாயராஜபக்ச 2019இல் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும் ஜனாதிபதிமுறையைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது ஆட்சிக் காலத்தில் 20ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இத்திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி இலங்கையை முன்னெடுத்துச் செல்வதற்கான பிரதான நகர்வாக அமைந்தது. இத்திருத்தம் கொண்டுவரப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை ஜனாதிபதி முறைக்கு (Presidentialism) ஆதரவாக முன்வைக்கப்பட்ட வாதங்களை மறுத்து பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டன. அசங்க வெலிக்கல (Asanga Welikala) என்னும் […]
ஆங்கில மூலம்: நவரட்ண பண்டார அரசியல் பேராசிரியர் நவரட்ண பண்டார 2014ஆம் ஆண்டில் The New Class in Sri Lanka (இலங்கையில் ஒரு புதிய வர்க்கம்) என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “அரசியல்வாதிகள் இன்று ஒரு புதிய வர்க்கமாக எழுச்சி பெற்றுள்ளார்கள். இந்தப் புதிய வர்க்கம் நான்கு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலமாக பலமான ஒரு சமூக வர்க்கமாக உருவாக்கம் பெற்று இலங்கைச் […]
ஆங்கில மூலம்: ஜயம்பதி விக்கிரமரட்ண உலகின் பெரும்பாலான நாடுகள் பன்மைப் பண்பாடுகளை உடைய சமூகங்களாக (Multi-cultural Societies) விளங்குகின்றன. ஒரு தேசிய இனம், ஒரு மொழி, ஒற்றைப் பண்பாடு என அழைக்கக் கூடிய நாடுகள் உலகில் வெகு அரிதாகவே காணப்படுகின்றன. பன்மைப் பண்பாடுகளைக் கொண்ட சமூகங்களில் பெரும்பான்மையானவை ஆழமான பிளவுகளையுடைய சமூகங்கள் (Deeply Divided Societies) என அரசியல் விஞ்ஞானிகள் சிலர் குறிப்பிடுவர். ஆழமான பிளவுகளையுடைய சமூகங்களின் சிறுபான்மைத் தேசிய […]
பனை ஒரு காலத்திலே எங்கள் வாழ்வியலுடன் ஒன்றித்துப் போயிருந்தது. இலங்கை தேசம் பல்லினப் பனை மரங்களின் இருப்பிடமாக, வாழிடமாகத் திகழ்ந்திருந்ததன் சான்றுகளாக காலனித்துவ கால நூல்களே இன்று எம் மத்தியில் எஞ்சியிருக்கின்றன. பல பனை மர இனங்கள் இன்று அழிந்து போய்விட்டன. சில பேராதனைப் பூங்காவில் மாத்திரமே காணப்படுகின்றன. நாம் இன்றும் சாதாரணமாகக் காணும் பனை மரங்கள் ஓரிரு இனங்கள் மாத்திரமே. கடதாசியும் அச்சிடலும் அறிமுகமாக முன்னர், ஓலைச் சுவடிகளே […]
இது நெருக்கடிகள் மிகுந்த காலம்… “என்ன வளம் இல்லை எங்கள் தாய் நிலத்தில்“ என்று பாடிய காலம் மாறி உணவுக்கும் எரிபொருளுக்கும் நெருக்குண்டு தள்ளுண்டு நீண்ட வரிசைகளில் நாம் காத்திருக்கத் தொடங்கியிருக்கும் காலம்… எங்களிடம் நிலைத்திருந்த தன்னிறைவை நாமே தொலைத்து விட்டிருப்பதை உணரத் தொடங்கியிருக்கும் காலம்… உணவுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் உருவாகியிருக்கும் காலம். முன்னைய காலங்களிலே வட பிராந்தியத்திலே பெரும் பொருளாதாரத் தடை அமுலில் இருந்தபோதும் கூட அதை […]
வட பிராந்தியத்தின் சுதேச மரங்களின் பயன்கள் பற்றி அறிதல் என்பது தனியே அச்சுப்பிரதிகளிலிருந்தும் இணையத்திலிருந்தும் நாம் அறிந்துக்கொள்வதோடு மட்டுப்படுத்தப்படாது. ஏனெனில் ஏனைய பிராந்தியங்களோடு ஒப்பிடுகையில், வட பிராந்தியத்து மரங்கள், அவற்றின் பயன்கள் சார்ந்து வெளிவந்த அச்சுப்பிரதிகளும் தகவல்களும் மிகவும் வரையறுக்கப்பட்டவை. அவற்றிலும் நாம் இன்று அணுகக் கூடியதாக இருப்பவை மிகமிகக் குறைவானவையேயாகும். மூன்று தசாப்தங்கள் நீடித்த யுத்தம், எம்மிடமிருந்து பறித்துச் சென்ற செல்வங்களுள் அவையும் சில. மரங்களுக்கும், மக்களுக்கிடையிலான பந்தமெனப்படுவது […]
சுதேச மரங்கள் மனித வாழ்வியலோடு ஒன்றிப்போனவை. மனித நாகரிகத்தின் சாட்சியாக நிற்பவை என்றெல்லாம் நாம் பார்த்தோம். அவை எதற்கெல்லாம் பயன்படுகின்றன என நாம் சிந்தித்துப் பார்த்திருப்போமா? நாம் அறிந்த பயன்களுக்கப்பால் நாம் அறியாத பயன்களையும் இம்மரங்கள் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் என்ற நிலையில் இருந்து பார்க்கும் போது மரங்களை எப்படியெல்லாம் எமது தேவைகளுக்கு நாம் பயன்படுத்தலாம் என்ற சிந்தனை தான் எமக்குள் எழும். ஆயினும் அவற்றையும் தாண்டி இம்மரங்கள் ஆற்றும் தொழிற்பாடுகள் […]
இலங்கையிலேயே அதிகளவு இயற்கைக்காடுகளைக் கொண்ட பிராந்தியங்களுள் வடமாகாணமும் ஒன்று. வடமாகாணத்திலே வன்னிப்பிராந்தியத்தின் கணிசமான நிலப்பரப்பு இயற்கையான காடுகளைக் கொண்டிருக்கிறது. பல தசாப்தங்கள் நிலைத்து ஓய்ந்து போன யுத்தத்தைக் கூட சளைக்காமல் எதிர்கொண்டு நிமிர்ந்து நின்ற வானுயர்ந்த சோலைகள் இன்று என்றுமில்லாதவாறு பெரும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கின்றன. பெருகி வரும் சனத்தொகையும் காணிகளுக்கான தேவையும் மீள்குடியேற்றமும் அபிவிருத்தியும் இலகுவாய் வருமானம் பெறும் நோக்கங்களும் எனப் பலதும் பத்துமாய் மனித மையக் காரணிகள் […]
தமிழரசுக் கட்சியின் இந்த சமூக சமத்துவமின்மைக்குக் காரணம் அந்தக்கட்சி ஏற்கனவே குறிப்பிட்ட ‘சைவமும் தமிழும்’ என்ற கருத்துநிலையின் அரசியல் வடிவமாக இருந்ததோடு, அந்தக் கருத்துநிலையைப் பேணிப்பாதுகாக்கின்ற ஒரு அமைப்பாகவும் தொழிற்பட்டது. இந்த சாதி மேலாண்மை சிங்கள அரசின் தமிழ் இன, தமிழ் மொழி ஒடுக்குமுறை காரணமாக மூடிமறைக்கப்பட்டு தமிழ் இனம், தமிழ் மொழி எனும் அடையாளத்துக்குள் தமிழர்களை ஒன்று திரட்ட வாய்ப்பாகவும் அமைந்தது. இந்த வாய்ப்பினை மேலும் பலப்படுத்திக் கொள்ளவும் […]
மகாத்மா காந்தி பிரித்தானிய அரசுக்கு எதிரான தனது அகிம்சைப் போராட்டத்தை தனியே தனது இனத்தினை மட்டும் வைத்துக் கொண்டு நடாத்தியவரல்ல. பிரித்தானிய அரசுக்கு எதிரான அத்தனை சக்திகளையும் இனம், மதம், பிரதேசம் பார்க்காமல் ஒன்றுசேர்த்து ஒரு மக்கள் போராட்டமாகவே முன்னெடுத்தார். தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக 29 பேர் வாக்களித்திருந்தனர். அவர்களில் 10 பேர் மாத்திரமே தமிழர்களாவர். ஏனையவர்களில் 3 பேர் முஸ்லிம்களும் 16 பேர் சிங்களவர்களுமாவர். இங்கு தமிழ், […]
1950கள் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் முக்கியத்துவம் மிக்க ஆண்டுகளாகும். 1948 இல் தமிழ் காங்கிரசிலிருந்து எஸ். ஜே. வி. செல்வநாயகம் பிரிந்து சென்று தமிழரசுக் கட்சியை ஆரம்பித்திருந்தாலும் 1950 களில் இருந்தே அவருடைய பிரசாரத்தினை தீவிரமாக முன்னெடுத்தார். இதேபோன்று 1951இல் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை உருவாக்கினார். இவ்வாறு இரு இனங்களின் இரு கட்சிகளுக்கிடையே பிளவு ஏற்பட்டதனால் தமிழ் காங்கிரஸ் […]
சோல்பரி அரசியல் அமைப்புக்கேற்ப நாடாளுமன்ற நடைமுறையினை ஏற்படுத்துவதற்காக 1947 ஆம் ஆண்டு டி. எஸ். சேனநாயக்கா முதலாளித்துவ அடிப்படைவாதக் கருத்துக்களையும் இனவாதக் கருத்துக்களையும் கொண்ட ‘தேசிய காங்கிரஸ்’, ‘சிங்கள மகாசபை’, ‘முஸ்லிம் லீக்’ ஆகிய மூன்று கட்சிகளை தமது தலைமையில் ஒன்றிணைத்து ‘ஐக்கிய தேசியக் கட்சி’ என்ற புதிய கட்சியினை ஆரம்பித்தார். இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 1947 ஆம் ஆண்டே இடம்பெற்றது. நாடாளுமன்றத்தக்கான 100 ஆசனங்களில் டி. எஸ். […]
யாழ். உயர்வர்க்கம் தமது நலன்களுக்காக தமிழ்த் தேசிய உணர்வினையும் அவ்வடையாளத்தினையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்துள்ளதை இலங்கை அரசியல் வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. டொனமூர் அரசியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் தமது நலனை முன்னிறுத்தியே செயற்பட்டனர். டொனமூர் அரசியல் திட்டம் தமிழ்மக்களுக்கு போதுமானதாக இல்லை என எதிர்த்தவர்களில் ஜீ.ஜீ.பொன்னம்பலம், சேர்.பொன்.இராமநாதன், அ.மகாதேவா போன்றவர்கள் முக்கியமானவர்கள். இதில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் தேர்தல் பகிஸ்கரிப்பை ஏற்றுக்கொண்டபோதும் எஸ்.என்.ஆனந்தன் என்பவர் தேர்தலில் போட்டியிடுவதால் […]
அறிமுகம் எந்த உயிரியின் பரிணாமத்திலும் வளர்ச்சியிலும் இளமைப் பருவம் முக்கியமானதாகும். மனிதரில் இளைஞர்களை வாலிபர், இளைஞர் – இளந்தாரி என்று சுட்டுதல் வழக்கம். போர், காதல், உழைப்பு என எல்லாத்தளங்களிலும் இளமை தவிர்க்க முடியாத பிரதானமான அம்சமாகத் திகழ்கிறது. வாழ்வில் துடுக்குத்தனமும் அளவற்ற செயற்பாடுகளும் உடைய அப்பருவம் ஒவ்வொரு மனிதராலும் மறக்க முடியாத ஒன்றாகும். போரிலும் வீரத்திலும் ஆற்றலிலும் இளந்தாரிப் பருவம் தவிர்க்க முடியாத பருவமாகின்றது. மண், பொன், காதல் […]
அறிமுகம் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த ஆதிகாலத்தில் இருந்து விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மனிதர்களின் முக்கிய தொழில்களாக இருந்து வருகின்றன. குறிப்பாகத் தமிழகச் சூழலில் உருவான திணைக்குடிகள் இதற்குச் சான்றாகின்றன. வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம்; அதுவே விவசாயத்தின் பூர்வீகம் என்று கூறப்பட்டாலும் முல்லை நிலமும் குறிஞ்சியும் கூட குறித்த காலகட்டத்தின் பின் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டன. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் தவிர்க்க முடியாத தொழில்சார் இணங்கு முறையை உடையன […]
அறிமுகம் மக்களின் வாழ்வியல் புலத்தைத் தீர்மானிக்கும் ஆற்றல் நிலத்துக்கே உண்டு. நிலமே பண்பாட்டை, பொருளாதாரத்தை, அரசியலை, கலையை, தத்துவத்தை, சமயத்தை என எல்லாவற்றையும் ஆதியிலிருந்து தீர்மானித்து வந்திருக்கிறது. திணைமரபு எனும் தமிழ் அடையாளம் நிலத்தின் அடையாளமே. நிலத்தோடு ஒட்டிய வாழ்வு பேரியற்கையோடு இயைந்து வாழ்தலாக அமைந்துள்ளது. நிலத்தின் வழியமைந்த தொழில், தொழிலின் தாற்பரியம், இயற்கையை எதிர்கொள்ளல் என்பன இயற்கை அதீதத்தை உணரச் செய்தன. தமக்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூரச் செய்தன. […]
அறிமுகம் மனிதர் பேரியற்கை மீது கொண்டிருந்த வியப்பு, அச்சம் மற்றும் மரணம், பிறப்புப் பற்றிய சூக்குமமறியா மனோநிலைகள், துயரம் தந்த வாழ்வு போன்றன இயற்கைக்கதீதமான ஒன்றைப் பற்றிச் சிந்திக்கவும், அதை நம்பவும் வழிபடவும் செய்தது. அச்சந்தர்ப்பத்தில் குறித்த துயரத்தில் இருந்து விடுபடல் நிகழும் போது அதனை மேலும் மேலும் வழிபடச் செய்தது. அரூப இயற்கையை – வெறுவெளியை அல்லது நிலம், நீர், காற்று, தீ என்பவற்றை வழிபடுதல் பூரண பிடிப்பைத் […]
அறிமுகம் மனிதர் சமூக விலங்காக அடையாளப்படுத்தப்படுகின்றனர். இயற்கையுடனிணைந்த வாழ்வில் தன் தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டேயிருப்பது மனிதரியல்பாகும். இயற்கையை வெல்ல முடியாத தருணங்களில் எல்லாம் மனிதர் ‘இயல்பிறந்த’ ஆற்றலாக அதனைக் கருதி அச்சத்துடன் வழிபட, விசுவசிக்க, இறைஞ்சி நிற்கத் தலைப்பட்டனர். தான் நினைத்தது சித்திக்கச் சித்திக்க, மேலும் விசுவசிக்கவும் இறைஞ்சவும் நம்பிக்கை கொள்ளவும், தன் பகுத்தறிவைப் புறந்தள்ளி, அளவற்ற பக்தி கொள்ளவும் தலைப்பட்டனர். அது வயது, […]
இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையின் பங்கு 1970 ஆம் ஆண்டின் மார்ச் 24 ஆம் திகதி உருவாக்கப்பட்ட 17 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டப்படி 1970 ஆம் ஆண்டு ஜுன் மாதம் உருவாக்கப்பட்ட ‘இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையின்’ முக்கிய குறிக்கோளும் பொறுப்பும் இலங்கையில் தேசிய நூலகமொன்றை உருவாக்குவதும் அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதுமாகும். மேலும் அதன் மற்றொரு முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது, இலங்கையின் நூலகசேவையை நவீனமயப்படுத்தும் வகையில் […]
ஒரு நாட்டின் பண்பட்ட சமுதாயத்தினை உருவாக்குவதற்குக் கல்வி நிறுவனங்கள் எந்த அளவுக்கு உதவுகின்றனவோ, அதே போன்ற பங்களிப்பினையே நூலகங்களும் ஆற்றி வருகின்றன. சிறு வயது முதல் மாணவர்களுக்கு அறிவுத் துறையில் ஆர்வத்தையும் அறிவையும் ஊட்ட அக்கறை எடுக்கும் ஓர் ஆசிரியனைப் போலவே நூலகமும் தான் சார்ந்த சமூகத்தினுள்ளே சேவையாற்ற வேண்டியுள்ளது. ஆசிரியருக்கு எதைப் போதிப்பது என்றதொரு வரையறை உண்டு. ஆனால் நூலகங்களின் வழங்கல் எல்லையற்றது. சுதந்திரமானதும் விரிவானதுமான தேடலுக்கு ஒருவரை […]
இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களில் நூலகவியல் துறையின் வளர்ச்சிப் போக்கில் முக்கியமானதொரு காலகட்டமாக எழுபதுகளின் நடுப்பகுதி கருதப்படுகின்றது. அக்காலகட்டம் வரையில் தமிழ்ப் பிரதேசங்களில் உள்ளூராட்சி சேவையில் நூலக சேவகர்களாகச் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு கல்வித்தரம் அக்கறையுடன் எதிர்பார்க்கப்படவில்லை. பெருமளவில் கிராமசபை, நகரசபை சிற்றூழியர்களாக இருந்தவர்கள் பதவி உயர்வு கண்டு அவர்களது நிரந்தரப் பணிக்கு மேலதிகமாக தத்தமது கிராம நூலகங்களை பராமரிக்கும் நூலக சேவகர்களாக நியமனம் பெற்றார்கள். கிராமசபை நிர்வாக ஊழியர்கள் சுயவிருப்பின் அடிப்படையில் நூலகத்தையும் […]
பரமேஸ்வராக் கல்லூரியில் சேர் பொன். இராமநாதன் அவர்களின் நூலகத்தில் இருந்த அரிய நூல்களையும் யாழ்ப்பாணக் கல்லூரி நூலகம் கொண்டிருந்த 30,000 வரையிலான நூல்களையும் மேலும் பருவ இதழ்கள், அரச ஆவணங்கள், சிறு பிரசுரங்கள் போன்றவற்றையும் கொண்டு யாழ் வளாகம் தன் நூலகச் சேர்க்கைகளைக் கட்டியெழுப்பத் தொடங்கியது. நூலகச் சேர்க்கையையும் தளபாட வசதியையும் படிப்படியாக வளர்த்துச் சென்று பின்னாளில் பிரதம நூலகராகப் பதவியேற்ற சி. முருகவேள் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து […]
இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் 1974 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆறாம் நாள் திருநெல்வேலியில் அப்போதைய பிரதம மந்திரியாக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. அதற்கு முன்னரே 1974 இல் ஜூலை 10 ஆம் திகதி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் இயங்கத் தலைப்பட்டுவிட்டதை அதன் முதலாம் ஆண்டுக்கான நிர்வாக அறிக்கையின் கால எல்லைக் குறிப்பு தெரிவிக்கின்றது (இலங்கைப் பல்கலைக்கழகம் – யாழ்ப்பாண வளாகம் ஆண்டறிக்கை 1974.07.10 […]
அறிமுகம் இத்தொடரின் முந்தைய அத்தியாயத்தில், சமூக அமைப்பின் மேற்கட்டுமானம் மற்றும் கீழ்க்கட்டுமானம் பற்றிய சிறிய அறிமுகம் வழங்கப்பட்டிருந்தது. அதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள, கூத்தும் கூத்தின் கருத்தியலும், அவை நிலைத்திருப்பதற்கான காரணங்களும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இக்கட்டுரை அவற்றை விவரமாக வழங்குகிறது. முதலில், இரண்டு விடயங்களைக் குறிப்பிடப்பட வேண்டும்: ஒன்று கருத்தியல், இன்னொன்று அக்கருத்தியலை உருவாக்கும் சமூக அமைப்பு. கருத்தியல் என்பது சிந்தனை—அகம் சார்ந்தது. சமூக அமைப்பு என்பது பௌதிகம்—புறம் சார்ந்தது. இந்தப் […]
அறிமுகம் ஈழத்து தமிழ்க் கூத்து ஒன்றல்ல; அது பல வகையின. 1967களில் ஆரம்பித்த தமிழ்க் கூத்து ஆய்வுகள் கடந்த 50 ஆண்டு காலமாக பல தகவல்களையும் சில முடிவுகளையும் நமக்குத் தந்துள்ளன. அந்த ஆய்வு முடிவுகளின்படி கூத்தின் பல்வேறு பிரிவுகளை முதலில் சுருக்கமாகப் பார்ப்போம். ஈழத்துத் தமிழ்க் கூத்தின் வகைகள் யாழ்ப்பாணத்தில் வடமோடி, தென்மோடி எனவும்; மன்னாரில் தென்பாங்கு, வடபாங்கு, வாசாப்பு எனவும்; முல்லைத்தீவில் வடமோடிக்கூத்து, தென்மோடிக்கூத்துக் கலந்த முல்லை […]
பண்டைத் தமிழகமும் தமிழினமும் தமிழர் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே, ஒரு இனக்குழுவாக வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. அண்மைக் காலத்தில் இது பற்றி நிறைய ஆய்வுகளும் வந்துவிட்டன. ஒரு இனக்குழுவாக இருக்க வேண்டுமானால், அவ் இனக்குழு பின்வரும் பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும்: தமிழரின் பொது வாழ்விடமாக வடவேங்கடம் தொடக்கம் தென்குமரி வரையான நிலப்பரப்பு இருந்துள்ளது. அவர்களின் பொது முன்னோர்களாக பாரி, காரி, ஆய், ஓரி, நன்னன், அதியமான், குமணன் போன்றோர் கூறப்படுகின்றனர். […]
மனித மூளையும் அறிவு வளர்ச்சியும் பிரபஞ்சத்திற்கும் மனித இருப்புக்குமான தொடர்புகளை, இவற்றின் உற்பத்திகள், மூலங்கள் அல்லது தொடக்கப்புள்ளிகளை, விலங்கு உலகில் வாழ்ந்த காலத்திலேயே மனித சமூகம் தேடத் தொடங்கி விட்டது. இந்தத் தேடலே விலங்கு உலகிலிருந்து இந்த மனிதக் கூட்டத்தைப் பிரித்து, மனித உலகிற்குக் கொண்டுவந்தது. அதற்கு அடிப்படையாக இருந்தது, விலங்கு மூளையிலிருந்து மாறுபட்டிருந்த மனித மூளையாகும். இந்த மூளை எவ்வாறு வளர்ந்தது? மனிதர், புற உலகின்மீது தமது உழைப்பினால் […]
ஈழத்து மரபு வழி ஆற்றுகைக் கலைகளுக்கு ஒரு வரலாறும் வளர்ச்சியும் உண்டு. தென்மோடி – வடமோடி சிந்துநடைக் கூத்துகள், வாசாப்பு, இசை நாடகம், பள்ளு, குறவஞ்சி, வசந்தன், மகுடி, கரகம், காவடி என அது பன்முகப்பட்டது. இவற்றில் சில அழிந்து விட்டன. சில கால ஓட்டத்தோடு நின்று போராடி நிலைக்கின்றன; சில மாறுகின்றன. காலந்தோறும் ஏற்பட்டு வந்த பண்பாட்டுக் கலப்புகளும் அதனை உருவாக்கிய அரசியல், பொருளாதார, சமூகக் காரணிகளும் இம் […]
கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது இரண்டாவது பயணத்தின் போது, 1493 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி, தாம் புதிதாகக் கண்டறிந்த கரீபியன் தீவு ஒன்றுக்கு சாண்டா மரியா டி குவாடெலூப் என்று பெயரிட்டார். கப்பல்கள் கரையை நெருங்கியபோது, அத்தீவில் வாழ்ந்த பூர்வீகக் குடிகள் படகுகளில் நன்னீர் மற்றும் உணவை விற்பதற்காகக் கொண்டு வந்தனர். அவ்வாறு கொண்டுவரப்பட்டவற்றுள் கொலம்பஸை மிகவும் கவர்ந்த ஒன்று அன்னாசிப்பழமாகும். கொலம்பஸ் அமெரிக்காவுக்கு வருவதற்குப் […]
பொதுவாக நிலத்தின் மேல் கொடியாகவும் நிலத்தின் கீழ் கிழங்காகவும் காணப்படும் தாவரங்களுக்கு ‘வள்ளி’ என்று பெயரிட்டனர் எமது முன்னோர்கள். கொடியைக் குறிக்கும் ‘வல்லி’ என்னும் வடமொழிப்பெயர் தமிழில் இருந்தே பெறப்பட்டிருத்தல் கூடும். வள்ளிக்கிழங்கு சங்க காலத்தில் நன்கு அறியப்பட்ட ஓர் உணவாக இருந்தது. நெல்லரிசிச்சோறு போதுமான அளவு கிடைக்கப்பெறாத சங்ககாலத்துக் குறிஞ்சி நிலமக்கள் தமக்குத் தேவையான கார்போஹைட்ரேட் (carbohydrate) எனப்படும் ஊட்டச்சத்தை மாச்சத்து நிறைந்த வள்ளிக்கிழங்கில் இருந்தே பெற்றுக்கொண்டனர். பிற்காலத்தில் […]
அனலழலை நீக்கும் அதிபித்தம் போக்கும்கனலனலே வென்பசியைக் காட்டும்-புனலாகுமிக்கவைய முண்டாக்கு மென்கொடியே யெப்போதும்சர்க்கரைப் பறங்கிக்காய் தான்– பதார்த்தகுண சிந்தாமணி- பொருள் : சர்க்கரைப் பறங்கிக்காய் எனப்படும் பூசணிக்காய் உடல் சூட்டைக் குறைக்கும். கூடிய பித்தத்தைப் போக்கும். பசியைக் கூட்டும். பெருமளவில் நீரைக் கொண்டிருக்கும். கபத்தைத் தோற்றுவிக்கும். ‘பறங்கிப்பூசணி’ என்னும் பெயரைக் கேட்டதுமே இந்தப்பூசணி பறங்கியர் என அழைக்கப்பட்ட போர்த்துக்கேயர் அல்லது ஒல்லாந்தரால் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு காய்கறியாக இருத்தல் வேண்டும் என்பதை […]
*இலங்கையில் வத்தகப்பழம் என்றும் இந்தியாவில் தர்ப்பூசணி என்றும் பரவலாக அறியப்படும் இப்பழம் கோடைகாலத்தில் அருந்துவதற்கு மிகவும் சிறந்த ஒரு பழம் என்பதைப் பலரும் அனுபவபூர்வமாக அறிந்துவைத்துள்ளார்கள். இக்கட்டுரையில் வெளிநாட்டில் வாழும் தமிழர் பலரும் அறிந்துவைத்திருக்கும் தர்ப்பூசணி என்னும் பெயரையே பெரிதும் பயன்படுத்தியுள்ளேன். “வத்தகப் பழம் குளிர்ச்சி மன்னிடும் பைத்தியம்போம்சத்திபோம் பித்தம் தீரும் தவறிலாக் கொடி ஈதல்லால்ஒத்த கக்கரியும் வெம்மை ஒழித்துச் சீதளம் உண்டாக்கும்”-பதார்த்தசூடாமணி- “ஒரு தர்ப்பூசணியைச் சாப்பிட்டுப்பார்த்தால் தேவதைகள் என்ன […]
உலகில் அதிகளவில் பயிரிடப்படும் வெப்பமண்டலப் பயிர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது பப்பாளி ஆகும். வெப்பமண்டல அமெரிக்காவில் அதன் சரியான தோற்றம் தெரியவில்லை என்றாலும், அதன் தோற்றம் மற்றும் வளர்ப்பின் மையமாக மத்திய அமெரிக்கா அல்லது மெக்சிகோ இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. ஐரோப்பியரால் முதன்முதலில் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டொமினிக்கன் குடியரசு மற்றும் பனாமாவில் பப்பாளி கண்டறியப்பட்டது. மத்திய அமெரிக்காவிற்கு அப்பால் பப்பாளி பரவியதற்கு ஸ்பெயின் நாட்டவர்கள் தான் காரணம். […]
இந்த நூல் இந்தியா மற்றும் இலங்கையில் தமிழ் தேசியவாதத்தின் பரிணாம வளர்ச்சியை பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் இறுதிப் பகுதியில் இருந்து சமகாலம் வரை விரிவாக ஒப்பிடுகிறது. தமிழ்த் தேசிய இனத்திற்கும் இலங்கை – இந்திய மைய அரசுகளுக்கும் இடையே நிலவிய முரண்பாட்டுச் சூழலில் இரண்டு நாடுகளிலும் தமிழர்கள் தன்னாட்சி உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைத்த வரலாறு உள்ளது. ஆனால், இந்தியா மற்றும் இலங்கையில் மேலாதிக்க அரசுகளின் தேசிய இனங்களுடனான உறவு சார்ந்து […]
உலகளாவிய ரீதியில் உள்நாட்டுப் போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புப் போர்களில் நிலம், நில உரிமை என்பன மோசமாகப் பாதிக்கப்படும் அம்சங்களில் ஒன்று. இதற்கு ஆகப்பெரிய உதாரணங்களாக இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்கள், சிறிலங்கா அரசினால் ஆக்கிரமிக்கப்ட்ட தமிழர் பிரதேசங்கள் விளங்குகின்றன. பலஸ்தீனம் யூதர்களுக்காக வாக்களிக்கப்பட்ட பூமி என்ற நம்பிக்கையை, தமது நில அபகரிப்புக்கான நியாயப்பாடாக இஸ்ரேல் எடுத்துக்கொண்டது. அதேபோல் இலங்கைத் தீவு முழுவதும் பவுத்தத்தைக் காப்பதற்காகச் சிங்களவர்களுக்கு புத்தரால் அருளப்பட்டது என்பது […]
பௌத்த சிங்கள பேரினவாத அரச இயந்திரத்தின் தமிழர் மீதான திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை நேரடிச் சாட்சியங்களுடனும், நேர்த்தியான தரவுகளுடனும் ஆவணப்படுத்தி, பதிவு செய்த நூலாக ‘தமிழினப் படுகொலைகள்: 1956 – 2008’ ஆவணம் 2010 ஆம் ஆண்டு வெளிவந்தது. வடக்கு – கிழக்கு மனித உரிமைகள் மையம் (North East Secretariat On Human Rights – NESOHR) இந்நூலினை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் ‘மனித உரிமைகள் மற்றும் சுற்றுச் […]
‘வேட்கை கொள்வது அரசியல்’ (நோர்வேஜிய மொழியில் : Politikk er å ville) எனும் தலைப்பிலான நூல் எரிக் சூல்ஹைம் எழுதி 2013 ஆம் ஆண்டு வெளிவந்தது. அவர் தனது அரசியல் அனுபவங்களை முழுமையாக இந்நூலில் விபரிக்கின்றார். ஒரு வகையில் அவருடைய அரசியற் செயற்பாடுகள் குறித்த ஒரு சுயசரிதை நூல் இது. நோர்வே அரசியலில் ஈடுபட்ட நீண்ட கால அரசியற் செயற்பாட்டு அனுபவம் கொண்டவர் எரிக் சூல்ஹைம். 1970 களின் […]
‘திக்குகள் எட்டும்’ தொடரின் கடந்த பாகம் நோர்வேஜியப் பேராசிரியர் ஒய்வின்ட் புக்லறூட் எழுதி 2019 இல் வெளிவந்த ‘இலங்கையின் போரும் சமாதானமும் – நோர்வேயின் சமாதானத் தோல்வியின் விளைவுகள்’ நூலின் முதல் இரண்டு அத்தியாயங்களின் அறிமுகமாக அமைந்தது. அது, இலங்கைத் தீவின் புவியியல் அமைவிலிருந்து அதன் மொழி, இன, கலாசார, சமூக, பொருளாதாரக் கூறுகளை வரலாற்று ரீதியாகவும் தகவல், தரவுகள் ரீதியாகவும் முன்வைக்கின்றன. சிங்களத் தேசியவாதத்தின் தோற்றத்திலிருந்து அதன் போக்கு, […]
2021 ஆம் ஆண்டு கணிப்பின்படி வடபகுதியில் மீன்பிடியில் ஈடுபடுத்தப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 14,674 ஆகும். இது இலங்கையின் மொத்தப்படகுகளின் எண்ணிக்கையில் சுமார் 50 சதவீதமாகும். இப்பிரதேசத்தில் OFRP எனப்படும் வெளி இணைப்பு இயந்திரம் பூட்டப்பட்ட கண்ணாடி நாரிழையிலான படகுகளே கூடுதலாக மீன்பிடியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆழ்கடலில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற பலநாட்கலங்களின் எண்ணிக்கை (IMUL) மிக குறைவாகவே உள்ளன, ஆக 150 பலநாட்கலப் படகுகளே பயன்படுத்தப்பட்டு வருவதாக தரவுகள் காட்டுகின்றபோதிலும், அந்தப்படகுகள் […]
2018 ஆண்டு கணிப்பீடுகளின் பிரகாரம் வடமாகாணத்தில் மொத்த மீனவர் குடித்தொகை 7,16 ,040 ஆகும். இது இலங்கையின் மொத்த மீனவர் தொகையில் (26.86%) சதவீதமாகும். மொத்த மீனவ குடும்பங்களின் எண்ணிக்கை 5,03,10 ஆகவும், நேரடியாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் தொகை 5,14,70 ஆகவும் காணப்படுகின்றது. பெரும்பாலும் பெண்கள் நேரடியாக மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதில்லை, மீன்பிடிசார்ந்த உப-தொழில்களான பதனிடல், சில்லறை வர்த்தகம் போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுகின்றனர். இத்துறையில் பதனிடல், வர்த்தகம், போக்குவரத்து மற்றும் […]
வடமாகாணம் அதன் அமைவிடம், அதன் அமைப்புக் காரணமாக இயற்கையாகவே கடல்வளம் நிறைந்த ஒரு பகுதியாகவே விளங்குகின்றது. இப்பிரதேசத்தில் கரையோரங்களில் வாழுகின்ற மக்களின் பிரதான பொருளாதார நடவடிக்கைகளில் இக்கடல் வளத்துறையானது நீண்டகாலமாக பிரதான இடத்தினை வகித்துவருகின்றது. வடபகுதி ஐந்து நிர்வாக மாவட்டங்களை கொண்டிருக்கிறது. இவற்றுள் வவுனியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களும் (மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைதீவு) கடலோர எல்லைகளை கொண்டிருப்பதினால், அங்கு வாழ்கின்ற மக்கள் ஜீவனோபாயத் தொழிலாக மீன்பிடித் […]
பருத்தித்துறை சந்தைச் சதுக்கத்தின் நடுவில் ஒரு பெரிய புளிய மரம் இருந்தது. அதன் கீழ் 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், படுவெய்யிலில், யாழ்ப்பாணக் காலநிலைக்குப் பொருத்தமில்லாத உடைகள் அணிந்து ஓர் அந்நிய நாட்டு வெள்ளைப் பாதிரியார் தமிழர்களுக்குக் கிறிஸ்தவ மதத்தைப் போதிக்க, சலிப்பூட்டும் பிரசங்கங்களைச் செய்துகொண்டிருக்கிறார். அவர் யாருமல்லர், இந்தக் கட்டுரையின் முக்கிய நாயகர், ஒல்லாந்தரான பிலிப்பஸ் பல்டேயஸ் (Philippus Baldaeus). பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரில் படித்த எனக்கு இப்படி ஒரு […]
உணவில் யாழ்ப்பாணத்து பழங்கள் எமது நாட்டு தட்பவெப்பநிலைக்கு பழவகைகள் இன்றியமையாததாக இருக்கின்றன. குறிப்பாக பல்வேறு பருவ காலநிலைகளைக் கொண்ட எமது நாட்டில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காலநிலைக்கும், காலநிலை மாறுபாட்டால் ஏற்படக்கூடிய உபாதைகளுக்கும் ஏற்ப பழவகைகள் பருவ காலங்களில் இயற்கையாகவும் விவசாயத்தின் மூலமாகவும் கிடைக்கின்றன. கூடுதலாக வெப்பகாலங்களில் பழங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. மாம்பழம், பலாப்பழம், விளாம்பழம், அன்னமுன்னாப்பழம், சீதாப்பபழம், ஈச்சம்பழம், வத்தகப்பழம், வெள்ளரிப்பழம், இலந்தைப்பழம், வில்வம்பழம், நாவற்பழம், பனம்பழம், நாரைத்தோடை, கொய்யாப்பழம், […]
பொதுவாக முழுமையான சுவை எனப்படுவது, நாக்கினால் உணரப்படும் சுவை, மூக்கினால் உணர்ந்து கொள்ளும் மணம், கண்ணினால் காணும் வடிவம் என்பவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாடாகும். இவ்வாறான சுவைகளுக்கு, பொதுவாக தாவரப்பொருட்களில் உள்ள தாவர இரசாயனங்களே (Phytochemicals) காரணமாகின்றன. ஏறத்தாழ 25000 தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் நன்மைதரக்கூடிய இரசாயனங்களும் உள்ளன. நச்சுப்பொருட்களும் உள்ளன. இவற்றின் அடிப்படையில் உடலுக்கு நன்மை தரக்கூடிய, நோய்களில் இருந்து பாதுகாக்கக்கூடிய தாவர இரசாயனங்களை அதிகமாகக் கொண்டிருக்கக் கூடியனவும், விரும்பக்கூடிய […]
இறைச்சி வகைகளுடன் ஒப்பிடும்போது பொதுவாகக் கடல் உணவுகளே சிறந்த ஆரோக்கியமிக்க உணவு வகைகளாகக் கருதப்படுகின்றன. கடல் உணவுகளானது இதய நோய்கள், வாதநோய்கள், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, அதியுடற் பருமன் போன்றவற்றின் தாக்கங்களைக் குறைக்கின்றன. இதற்கு காரணம் கடல் உணவுகளில், நிரம்பிய கொழுப்புக்கள் (Saturated fat) குறைவு. அதேவேளை இதயத்துக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒமேகா 3 (Omega 3) கொழுப்பமிலங்கள் உட்பட, நிரம்பாத கொழுப்புக்களையும் (Unsaturated fatty acids) கொண்டவை. […]
பன்றி “ஊர்ப்பன்றி நிணநெய் யுண்ணி லுறுந்திரி தோசம் புண்ணேதீர்க்கருங் கரப்பன் வெட்டை தினவொடு மற்று முண்டாம்ஈர்த்ததிடும் வரட்சி மூல மிளைப்பும்போ மதுர மாகும்கார்க்காட்டுப் பன்றி தன்னின் கடுநிணங் கரப்பன் வாயு” – பக்.86, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி ஊர்ப்பன்றி இறைச்சி மற்றும் அதன் கொழுப்பு என்பனவறைத் தொடர்ந்து உண்டுவந்தால், திரிதோசங்களும் தோசமடையும். இதனால் பலவிதமான தொற்றா நோய்களும் ஏற்படும். எளிதில் தீர்க்கமுடியாத புண்ணுடன் கூடிய கரப்பன் என்னும் தோல் நோயானது, […]
அசைவ உணவுகள் எனும்போது மிருகங்கள், பறவைகள் அவற்றின் முட்டைகள், கடல் உயிரினங்கள் போன்றன உள்ளடங்குகின்றன. சைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது பல நன்மை, தீமைகள் இருப்பினும் உணவில் உள்ள சத்துக்களின் செறிவு அசைவ உணவில் அதிகம் கிடைப்பது மறுக்கமுடியாத ஒன்றாகும். சைவ உணவுப்பழக்கம், அசைவ உணவுப்பழக்கம் என்பது அவரவர் நம்பிக்கைகளுக்குள்ளும் விருப்புக்களுக்குள்ளும் அடங்கிவிடுகின்றன. மனித சமூகத்திடம் அசைவ உணவுகளை உண்பது காலம் காலமாக இருந்துவருகின்ற ஓர் உணவுப் பழக்கமாகும். இறைச்சி வகைகள் […]
நிலவியல் பண்டைய யாழ்ப்பாணம் நாகநாடு (மணிமேகலை), நாகதீவு (வல்லிபுரப் பொற்சாசனம்), நாகதீப (மகாவம்சம்), நாகதீபோய் (தொலமி) ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. பண்டைய யாழ்ப்பாணத்தில் நாகர்கள் வாழ்ந்தமையால் இப்பெயர்கள் யாவும் ‘நாக’ என ஆரம்பிக்கின்றன. அன்றைய நாகநாடு யாழ்ப்பாணக் குடாநாடு, அதற்கு மேற்கேயுள்ள சிறுதீவுகள், வடக்கிலுள்ள இலங்கையின் தாய் நிலத்தின் மூன்றில் ஒரு பகுதி ஆகிய நிலங்களைக் கொண்டிருந்தது. மகாவில்லாச்சியின் (மதவாச்சி) மேற்குக் கரையிலிருந்த அரிப்பிலிருந்து மகாவில்லாச்சியூடாக நாகபொக்கணைவரையும் ஒரு […]
அறிமுகம் இலங்கையில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் யாழ்ப்பாண அரசு தோன்றுவதற்கு முற்பட்டகால யாழ்ப்பாண வரலாற்றிற்கான சரித்திரச் சான்றுகள் மிக அருகியே காணப்படுகின்றன. புராணக் கதைகள், ஐதீகங்கள், ஆதாரமற்ற பழங்கதைகள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் ‘யாழ்ப்பாண வைபவமாலை’யின் ஆரம்பப் பகுதிகள் வரலாற்று ஆய்வாளர்களுக்கு பண்டையகால யாழ்ப்பாணம் தொடர்பான மிகவும் குறைவான செய்திகளையே தருகின்றன. வையா பாடல், கைலாய மாலை ஆகிய ஏடுகளும் யாழ்ப்பாணத்தின் தொடக்க காலத்தைப் பற்றிப் போதுமான […]
குருநாகல் நகரில் இருந்து தம்புள்ளைக்குச் செல்லும் வீதியில் இப்பாகமுவ சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியில் இருந்து வடக்குப் பக்கமாக புல்னாவைக்குச் செல்லும் வீதியில் சுமார் 10 கி.மீ சென்றதும் பாதையின் இடது பக்கம் அதாவது மேற்குப் பக்கத்தில் ஒரு பெரிய மலைத்தொடரைக் காணலாம். இதுவே தொழுகந்த எனும் மலையாகும். இம்மலையின் கிழக்குப்பக்க அடிவாரத்தில் ஹிபவுவ எனும் காட்டுப்பகுதி அமைந்துள்ளது. மலைப்பறைகள் நிறைந்த இக்காட்டுப்பகுதி நாகலேன என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஓர் இயற்கையான […]
ஆண்டியாகல எனும் பெயரில் இலங்கையில் பல இடங்கள் அமைந்துள்ளன. குருநாகல் நகரின் மேற்குப் பக்கத்திலும், தம்புள்ளை நகரத்தின் வடமேற்குப் பக்கத்திலும், பியகம நகரின் வடக்குப் பக்கத்திலும், அனுராதபுரத்தின் வடமேற்குப் பக்கத்திலும் இப்பெயரில் ஊர்கள் காணப்படுகின்றன. இவற்றில் இங்கே குறிப்பிட்டுள்ள ஆண்டியாகல என்னுமிடம் அனுராதபுரம் நகரில் இருந்து வடமேற்கு நோக்கி அரிப்புக்குச் செல்லும் வீதியில் 30 ஆவது கி.மீ கல்லில் இருந்து வடக்குப் பக்கத்தில் 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஆண்டியாகல […]
குருநாகலில் இருந்து கிழக்கு நோக்கி ரம்பொடகல என்னுமிடத்திற்குச் செல்லும் வீதியில் சுமார் 15 கி.மீ. தூரம் சென்றதும் காணப்படும் சிறிய வீதியினூடாக மேலும் 2 கி.மீ தூரம் பயணம் செய்தால் ரிதிகம என்னுமிடத்தை அடையலாம். இங்கு செல்வதற்கு இன்னுமோர் வழியும் உண்டு. குருநாகல் – கண்டி வீதியில் 19 கி.மீ தூரத்தில் உள்ள மாவத்தகம சந்தியின் வடக்கில் 14 கி.மீ தூரம் சென்றும் ரிதிகமவை அடையலாம். இங்குள்ள சிறிய மலைப்பாறையின் […]
ஹபரண சந்தியிலிருந்து வடமேற்கு நோக்கி மரதன் கடவல ஊடாக அனுராதபுரத்திற்குச் செல்லும் வீதியில், 11 கி.மீ. தூரத்தில், பாதையின் வலது பக்கத்தில் ரிட்டிகல மலை அமைந்துள்ளது. வடஇலங்கைப் பகுதியில் அமைந்துள்ள மிக உயரமான மலை எனக் கருதப்படும் ரிட்டிகல மலை தரை மட்டத்தில் இருந்து 600 மீற்றர் உயரமுடையதாகும். இம் மலை வடக்கு தெற்காக 6.5 கி.மீ நீளமும், கிழக்கு மேற்காக 4 கி.மீ அகலமும் கொண்ட நீண்ட, பெரிய […]
அனுராதபுரத்தின் வடக்கில், மல்வத்து ஓயாவின் மேற்குப் புறத்தில் தந்திரிமலை எனும் பண்டைய கிராமம் அமைந்துள்ளது. அனுராதபுரத்திலிருந்து வடமேற்கு நோக்கி அரிப்புக்குச் செல்லும் வீதியில் 18 கி.மீ தூரத்தில் உள்ள ஒயாமடு சந்தியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வீதியில் மேலும் 14 கி.மீ தூரம் சென்றால் தந்திரிமலையை அடையலாம். இங்கு மலைப்பாறைகள் நிறைந்த சிறிய காட்டுப் பகுதியில் பழமை வாய்ந்த போதிமரமும், கட்டடங்களும், குடைவரை சிலைகளும், இயற்கையான கற்குகைகளும் காணப்படுகின்றன. இப்பகுதி […]
கிழக்கு உரோகணத்துக்கு திருத்தமான எல்லை வகுத்து, அதில் சைவத்தமிழ் சமூகமொன்றை உருவாக்குவதற்கான அத்திவாரத்தை இலங்கை மீதான சோழப்படையெடுப்பு ஏற்படுத்தித் தந்தது என்பதை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அந்த அத்திவாரத்தின் மீது வலுவான அமைப்பொன்று அடுத்த நூறாண்டு காலத்துக்குள் உறுதியாக எழுவதற்கான வாய்ப்பை வரலாறு அமைத்துத் தந்தது. 1110 ஆம் ஆண்டு வரை இலங்கையை ஒருகுடையின் கீழ் ஆண்ட விசயவாகுவின் பிற்காலத்தில், இலங்கையிலிருந்த வணிககணங்களும் வேளக்காரப்படைகளும் அவனுக்கு ஆதரவான மனநிலையில் இருந்தன […]
10 ஆம் நூற்றாண்டில் இராசநாட்டில் இருந்த அனுராதபுரச் சிங்கள அரசு இலங்கை சோழ அரசின் ஆட்சியின் கீழ் வந்துவிடுகின்றது. அக்கால ஆசியாவின் ஆதிக்க சக்திகளாக விளங்கிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய வணிக கணங்களும் அனுராதபுர அரச வம்சத்தினரிடையே காணப்பட்ட ஆட்சிப் போட்டியும் சோழர் இலங்கையுள் நுழைவதற்கு சாதகமாக விளங்கின. மெல்ல மெல்ல இவ்வாதிக்கமானது முழு இராச நாட்டிலும், அக்கால இலங்கைத் தலைநகர் அனுராதபுரத்திலும் கிளர்ச்சிகள், அரசியல் கலவரங்களின் வழியே அதிகாரத்தைக் […]
ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டுகளில் கீழைக்கரையின் அரசியல் நிலவரம் தொடர்பாக தெளிவான தகவல்களெதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் கீழைக்கரையின் நடுப்பகுதியில் வேகம்பற்று வடக்கு (உகணை) இராசக்கல் மலையும் தென் எல்லையில் பாணமைப்பற்று (இலகுகலை) மங்கல மகா விகாரமும் தொடர்ச்சியாக புத்த மையங்களாக இயங்கிக்கொண்டிருந்தன என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன. முன்பு இலட்சக்கல் என்று அழைக்கப்பட்ட இலகுகலை (லஃகு|கல, lahugala) பொத்துவில்லுக்கு மேற்கே 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிங்களக் கிராமம் ஆகும். […]
அனுராதபுரத்தை ஆறாம் அக்கபோதி மன்னன் ஆண்டு வந்த காலத்தில் (722 – 734) சுவையான ஒரு சம்பவம் இடம்பெற்றது. அவன் தன் மகள் சங்காதேவி என்பவளை அக்கபோதி என்ற பெயர் கொண்ட இன்னொரு இளவரசனுக்கு மணமுடித்து வைத்திருந்தான். ஏனோ அவர்கள் இருவருக்கும் அவ்வளவாக ஒத்துப்போகவில்லை. கணவன் – மனைவிச் சண்டையில் ஒருநாள் அவன் அவளை கடுமையாக அடித்துவிட சங்காதேவி தன் தந்தையிடம் சென்று முறையிட்டிருக்கிறாள். தந்தை அக்கபோதி, அவளை கொஞ்சக் […]
மகாசேனனுக்குப் பின்னர் (276 – 301) அவன் மகன் மேகவண்ணன் அனுரை அரியணையில் அமர்ந்தான் (301 – 328). அவன் காலத்தில் கலிங்க நாட்டுப் பிராமணப் பெண்ணொருத்தி புத்தரின் திருப்பற்சின்னத்தை அனுரைக்குக் கொணர்ந்ததாகவும் அது மேகவண்ணன் தேவானாம்பிரிய திசையனால் அமைக்கப்பட்ட “தருமச்சக்கரம்” எனும் கட்டடத்தில் வைக்கப்பட்டதாகவும், அன்று முதல் அது “தலதா மாளிகை” என்று அழைக்கப்பட்டதாகவும் மகாவம்சம் சொல்கின்றது (மவ. 37:90-95). ஆனால் இராசாவழி நூல் சொல்வதன்படி, அந்தப் பெண்ணின் […]
ஆங்கில மூலம் : நீல் டி வோட்டா (Neil DeVotta) Source : Sri Lanka’s Agony, Journal of Democracy, Vol.33, No.3, July 2022, pp. 92-99. சர்வாதிகாரம் படைத்த ஓர் குழுவில் இருந்துகொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்திருப்பவர்கள் இந்தத் தீவை வறுமையிலும் பட்டினியிலும் தள்ளியிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் தவறான ஆட்சிமுறைக்குப் பின்னணியாக ஆழத்தில் அமைந்திருப்பது நீண்டகாலப் பிரச்சினையான பெரும்பான்மையினரின் தடையற்ற ஆட்சிதான். – Journal of […]
ஆங்கில மூலம் : நீல் டி வோட்டா (Neil DeVotta) Source – Sri Lanka : The Return to Ethnocracy, Journal of Democracy, Vol. 32, No. 1, January 2021, pp. 96–110. இனத்துவ ஆட்சியை ஒன்றுதிரட்டுதல் இனத்துவ ஆட்சி என்பது தாரளமற்றதுதான். உள்ளாழத்தில் அது பன்முகத்தன்மை என்பதை நீக்கிவிடுகிறது. ஆனால் இனத்துவ ஆட்சி கொடுங்கோன்மையாக இருக்கவேண்டும் என்பதில்லை (An ethnocracy is illiberal because at […]
ஆங்கில மூலம் : நீல் டி வோட்டா (Neil DeVotta) Source – Sri Lanka : The Return to Ethnocracy, Journal of Democracy, Vol. 32, No. 1, January 2021, pp. 96–110. இனம்சார் மதவாதப் பெருமெடுப்பும் இன முரண்பாடும் தலையெடுக்கும் நாட்களில் மக்களாட்சி அடிவாங்குகிறது. இலங்கையில் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பெரும்பான்மையினரால் முறையாகக் கையாளப்படாத நிலையில், 26 ஆண்டுகள், குருதி வழிந்த […]