



slide-1
slide-2
slide-3
Slide - 4
2. வட மாகாண ஆற்றுப்படுகைகள் வட மாகாணத்தின் ஆற்றுப்படுகைகளில் உள்ள நீர் வளங்களை ஒருங்கிணைந்த முறையில் திட்டமிட்டுப் பயன்படுத்துவதன் மூலம் விவசாய உற்பத்தியை உயர்த்தி உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் இந்த அத்தியாயத்தின் முக்கிய நோக்கமாகும். வட மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பு சுமார் 885,000 ஹெக்டேர்களாகும். இதில் 50% க்கும் அதிகமான பகுதி நிரந்தர (Perennial), ஆண்டுப் பயிர்கள் (Annual) மற்றும் பருவகாலப் பயிர்கள் (Seasonal Crops) […]
ஈழத்தில் தமிழர் வாழும் இடங்களில் கண்ணகி வழிபாடு நிலைத்திருப்பது போல சிங்கள மக்கள் வாழும் இடங்களிலும் கண்ணகி வழிபாடு பத்தினி வழிபாடாக நிலைபெற்று வருகின்றது. கயபாகு மன்னன் அனுராதபுரியை தலைநகராகக் கொண்டு கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆட்சிசெய்த போது, கண்ணகியின் காற்சிலம்பை யானை மேல் வைத்து ஊர்வலமாகச் சென்று பெருவிழாக் கொண்டாடினான். இவ்விழாவிற் கலந்துகொண்ட சிங்களக் குறுநில மன்னர்களும் தங்களது பிரதேசங்களிலே இவ்வழிபாட்டை நிலைநிறுத்தினர் என்பது வரலாற்றுக் குறிப்பாகும். […]
தொடக்கக் குறிப்புகள் துப்பாக்கிகள் ஓய்ந்தவுடன் போர்கள் முடிவதில்லை. அவை நினைவுகள், மௌனம், சடங்குகள், அதிகாரத்துவம், நிலப்பரப்பு, மொழி ஆகியவற்றின் வழியே நீடிக்கின்றன. சேதமடைந்த வீடுகள், காணாமல் போன ஆவணங்கள், மாற்றப்பட்ட கடற்கரைகள், தணிக்கை செய்யப்பட்ட நினைவுகூரல்கள் ஆகியவற்றில் அவை உயிர் வாழ்கின்றன. மக்கள் நினைவில் வைத்திருப்பவற்றிலும், அவர்கள் கூற மறுப்பவற்றிலும், அரசுகள் மறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துபவற்றிலும் அவை தொடர்கின்றன. போருக்குப் பிந்தைய சமூகங்களில், வரலாறு மீதான போராட்டம், நிலப்பரப்பிற்கான […]
முன்னர் மலையக மக்களின் கல்வி வளர்ச்சி குறித்து மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக, 1990களுக்குப் பின்னரான காலப்பகுதியில் மலையகக் கல்வி வளர்ச்சிக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களையும், அதன் விளைவாக உருவான சமூகத் தாக்கங்களையும் இக்கட்டுரை விரிவாக ஆராய்கின்றது. அத்துடன், மலையக மக்களின் மரபு ரீதியான தொழில்களிலும், அவர்களது தனித்துவமான பாரம்பரியப் பண்பாட்டுக் கோலங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் இக்கட்டுரை விரிவாக விளக்குகின்றது. தேசிய கல்வி முறைக்குள் உள்வாங்கப்பட்ட மலையகத் […]
வழிபாடுகள் ஒவ்வொரு சமூகக் குழுக்களுக்குமான அடையாளங்களாகவும், அவற்றின் பண்பாட்டின் மிக முக்கிய கூறுகளாகவும் காணப்படுகின்றன. இவ்வாறான வழிபாடுகள் காலம் காலமாக அச்சமூகத்தின் வாழ்வியலோடு நீண்டு நிலைபெற்று வாழுவனவாகவும் உள்ளன. இவற்றின் நீட்சி என்பது இலகுவானதல்ல; அது அச்சமூகம் கட்டமைத்துக் கொண்டுள்ள பொறிமுறையின் விளைவாகும். இவை வெறுமனே வழிபாடுகளாக மட்டும் அமையாமல், அவ்வழிபாடுகளை ஆற்றுகைகளோடு இணைத்து நிகழ்த்தும் முறையாகவும் பல்வேறு இனக்குழுக்களிடையே உள்ளன. அந்த வகையில், மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில் […]
ஒரு பூரண வரலாற்றுப் பண்பாட்டைக் கொண்ட மக்கள், அப்பண்பாட்டில் பல்வேறு வகையான வாழ்க்கை முறையினையும் வழக்காறுகளையும் தம்மகத்தே கொண்டிருப்பார்கள். இத்தகைய மக்கள் ஏதோ சில காரணங்களுக்காக தம் வாழ்விடத்தை விட்டு புலம்பெயர்ந்து செல்கின்ற போது, அவர்களது உணர்வோடும் உயிரோடும் அத்தகைய வாழ்க்கை வரலாறுகள் சென்று விடுவதும் வழக்கம். இவ்வாறுதான் மலையக மக்கள் 200 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து இந்நாட்டுக்கு கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட போது, அவர்களது விவசாயப் பண்பாட்டின் வழக்காறுகளையும் […]
இந்தியாவும் காலனித்துவமும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சேர, சோழ, பாண்டியர்களால் ஆளப்பட்ட இந்தியாவின் தென்னாடும், மொகலாயப் பேரரசுகளால் ஆளப்பட்ட வடநாடும் படிப்படியாக வலுவிழந்து போயின. 1498 ஆம் ஆண்டு வாஸ்கொடகாமா இந்தியாவின் மேற்குகரையில் உள்ள கோழிக்கோடு (Calicut) துறைமுகத்தை வந்தடைந்தார். இவரது வருகையோடு பரவிய போர்த்துக்கேயரின் ஆட்சி 1600 ஆம் ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வருகையோடு வீழ்ச்சியுற்றது. பட்டு, வாசனைத் திரவியங்களின் வாணிபத்திற்காக வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி படிப்படியாக […]
ஆங்கில மூலம்: மலவராயன் வி. விஜயபாலன் “விடுதலையே, உன் பெயரால் பறிக்கப்படும் சுதந்திரங்கள் தான் எத்தனையோ?” – டானியல் ஜோர்ஜ்1 குடியுரிமைகளைப் பாதுகாப்பதென்ற போர்வையில், ஓர் அரச நிர்வாகம் கொண்டிருக்கும் பாரியளவிலான அதிகாரங்கள், அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஓர் அரசு தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்வதற்கும் அதன் மூலமாக நாட்டில் சர்வாதிகாரமும், சமூகரீதியான சுதந்திரத்தின் சீரழிவும் ஏற்படக் காரணமாகி விடுகின்றன. இது, ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் நாடுகள் உட்பட, […]
செயல்பூர்வ அர்த்தத்தில் இராமநாதன் வம்சத்தின் ஒரு நூற்றாண்டு காலத் தலைமைத்துவத்தின் முடிவும், டொனமூர் அரசியல் யாப்பின் பிறப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாய் அமைந்தன. ஒரு நூற்றாண்டு கால இராமநாதன் வம்சத்தின் கொழும்புத் தமிழ்த் தலைமைத்துவத்தின் அரசியலுக்குப் பதிலாக, யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் அரசியல் 1920களின் இறுதியில் எழுச்சிபெறத் தொடங்கியது. ஆயினும், இது தமிழ்த் தேசிய அரசியல் இயக்கமல்ல. அது இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தால் கவரப்பட்ட காந்திய இயக்கச் […]
ஆக்கியோன்: பேராசிரியர் சி. பத்மநாதன் இலங்கைத் தமிழர் தேசவளமைகளும் சமூக வழமைகளும் என்னும் நூல் குமரன் புத்தக இல்லத்தினால் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 383 பக்கங்களுடைய இந்த நூலின் இரண்டாம் பதிப்பு 2017 ஆம் ஆண்டு வெளியாயிற்று. இதன் பிரதி ஒன்றின் விலை இலங்கை ரூபா 950 ஆகும். பெறுமதி மிக்க இந்நூல் இலங்கைத் தமிழர்களின் வழமைச் சட்டங்களையும் (Customary Laws), அம்மக்கள் சமூகத்தின் சமூக வரலாறு, பொருளாதாரம், […]
சோல்பரி அரசியலமைப்பு, நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியுடனேயே புசல்லாவை பிரதேசத்தையும் இணைத்து வைத்திருந்தது. பெருந்தோட்டப் பொறிமுறைக்காக புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்கள், கண்டியை பிரதானப்படுத்தியே நிலைகொள்கிறார்கள். கண்டிக்கு அண்மைய இடம், கண்டி மாவட்டத்திற்குட்பட்ட இடம், இந்திய வம்சாவளி தமிழர்களின் இருப்புக்குரிய இடம் ஆகிய பார்வைகளில் புசல்லாவை பிரதேசம் முக்கியத்துவம் பெறுகிறது. சர்வஜன வாக்குரிமையை டொனமூர் அரசியலமைப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து, சோல்பரி அரசியலமைப்பு புலம்பெயர்ந்து வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் அரசியலில் […]
ஈழத்துப் பதிப்பாசிரியர்களில் பதிப்பு நெறிமுறைகளை அவர்களின் பதிப்பு நூல்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஆராய்வதாக இத்தொடர் கட்டுரைகள் அமையவிருப்பதினை முன்னரே கூறியுள்ளோம். அவ்வகையில் ஈழத்துப் பதிப்பாசிரியர்களில் மிகவும் இன்றியமையாதவர் ஆறுமுக நாவலர் ஆவார். நாவலர் காலகட்ட சமுதாய நிலையினைக் குறித்தும் அவரது நன்னூல் பதிப்பு முறைகள் குறித்தும் காணலாம். ஆறுமுக நாவலர் 19 ஆம் நூற்றாண்டில் தமிழுக்குத்தொண்டு செய்த மிகப்பெரும் தமிழறிஞருள் தலையானவர் ஆறுமுக நாவலர். இலங்கையில், யாழ்ப்பாணம், நல்லூரில் வாழ்ந்த […]
அதிகாரப் பங்கீடு ஒரு நாட்டிற்குள் இனப்பிச்சினைக்கான தீர்வு என்பது இனங்களுக்கிடையே நியாயமான சுயநிர்ணயமுடைய அதிகாரப் பங்கீடே ஆகும். இவ்வதிகாரப் பங்கீடு ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தமது தனியான நலன்களை உச்ச வகையில் பேணுவதற்குரிய வாய்ப்புகளை கொடுப்பதாக இருத்தல் வேண்டும். அதாவது கூட்டும், சுயாட்சியும் என்ற தத்துவம் நடைமுறையில் இருத்தல் வேண்டும். ஒரு நாட்டில் வாழும் பல்வேறு தேசிய இனங்களும் தமது கூட்டான நலன்களைக் கூட்டாகவும், தனியான நலன்களைக் தனியாகவும் பேணுவதற்குரிய […]
‘சமத்துவச் சமூகம் காணப் போராடுவோர் பார்வையில் ஆறுமுக நாவலர்’ எனும் இந்தத் தொடரின் மூன்றாவது பகுதி இங்கே பேசுபொருளாகி உள்ளது. இன்றைய எமது இருப்புக்குத் தடம் அமைத்துத் தந்த ஒரு பேராளுமையான ஆறுமுக நாவலர் எத்தகைய வகிபாகத்தை இது தொடர்பில் வகித்துள்ளார் என்பதைக் கண்டறிவது முதன்மைக் கரிசனை உடையது. இன்றைய சாதனைக்கும் பின்னடைவுகளுக்கும் முழுமையாக அவரே மூல காரணியாக மாட்டார் என்பதை அறிவோம்; அவரால் தொடங்கப்பட்ட சமூக – பண்பாட்டுச் […]
பால்தேயஸ் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பின்பு, இலங்கைத் தமிழர்கள் இன்னும் முப்பது ஆண்டுகள் இன்னுமொரு தமிழ் வேதத் திருப்புதலுக்கு (மொழிபெயர்ப்பிற்கு) காத்திருக்க வேண்டியிருந்தது. பதினேழாம் நூற்றாண்டின் காலனிய யாழ்ப்பாணத்தில், கிறிஸ்தவத் திருமறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் தமிழ்மொழி வடிவம் பெற்றன. இந்த முயற்சிக்கு வழிவகுத்த இரண்டு நபர்களும் இந்தியாவுடன் தொடர்புடையவர்கள்; இருவரும் இந்தியாவில் பிறந்து பின்னர் யாழ்ப்பாணத்திற்குக் குடியேறியவர்கள். அவர்களில் ஒருவர் டச்சு – தமிழ்க் கலப்பின சமூகத்தினரான அட்ரியன் […]
11. அரச ஆட்சி இலங்கையின் பிராமிக் கல்வெட்டுகளில் காணப்படும் வேள், வேளு, வேலு முதலான பெயர்கள் நாட்டில் அதிகாரத்திலிருந்த ஒரு சமூகத் தலைவனையோ அல்லது சிற்றரசனையோ குறிப்பிடும் பெயர்களாகும். இது தமிழகத்திற்குச் சமமான காலத்திலேயே, தமிழகத்தைப் போன்று இலங்கைத் தமிழர்கள் மத்தியில் வேள் ஆட்சி தோன்றியதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. பேராசிரியர் பரணவிதான பதிப்பித்த ‘இலங்கையின் ஆரம்பகாலப் பிராமிக் கல்வெட்டுகள்’ என்ற நூலின்படி 21 கல்வெட்டுகளில் வேள் என்ற சொல் காணப்படுகிறது […]
இலங்கையில் 1931இல் வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு, நாட்டின் சட்டவாக்க சபைக்கு முதலாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அப்பொழுது அரசியல் கட்சிகள் இருக்கவில்லை. இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏ.ஈ. குணஸிங்ஹ தலைமையில் தொழில் கட்சி (Labour Party) என்ற பெயரால் ஒரு கட்சி நிறுவப்பட்டிருந்தது. வேறு கட்சிகள் 1935இன் பின்னர்தான் அமைக்கப்பட்டன. 1931இல் கட்சி அரசியல் (Party Politics) இருக்கவில்லை. ஓர் அரசியல் கட்சி என்பது குறிப்பிட்ட ஒரு […]
ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க ஜனாதிபதி முறை பற்றிய விமர்சனம் யுவான் லின்ஸ் (Juan Linz) என்னும் ஆய்வாளர் எழுதிய ‘The Perils of Presidentialism’ (ஜனாதிபதி முறையின் ஆபத்துகள்) என்னும் ஆய்வுக்கட்டுரையில், ஜனாதிபதி முறை தாராண்மை ஜனநாயக விழுமியங்களை அடியழித்து (Undermine), சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் என்ற கருத்தைக் கூறியுள்ளார். “பாராளுமன்ற முறையையும் ஜனாதிபதி முறையையும் ஒப்பீடு செய்து ஆராய்ந்து பார்த்தால், பாராளுமன்ற முறை ஜனநாயக […]
ஆங்கில மூலம்: ஜயதேவ உயன்கொட அதிகாரம் அதிகாரம் (Power) என்னும் கருத்தாக்கம் அரசியல் கோட்பாடுகள் பற்றிய ஆய்வில் முதன்மையான ஆய்வுப் பொருளாக அமைந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தோமஸ் ஹொப்ஸ் முதல் 19 ஆம் நூற்றாண்டினரான கார்ல் மார்க்ஸ், 20 ஆம் நூற்றாண்டின் அரசியல் சிந்தனையாளர்களான மக்ஸ் வெபர், றொபர்ட் டால் (Robert Dahl), ஹன்னா அரன்ட் (Hannah Arendt) வரை பலர் அதிகாரம் பற்றிய ஆழமான ஆய்வுகளைச் […]
முன்னுரை ஈழத்தின் வடமேற்குப் பகுதியில் உடப்பு எனும் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலும் மற்றும் அங்குள்ள பெண் தெய்வக் கோவில்களும் ஆகமம் சாராத மக்கள் வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தன. அவற்றை விரிவாக நோக்குவோம். உடப்பு கிராமத்தின் தனித்துவம் உடப்பு என்பது இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் சிலாபம் அருகில் அமைந்துள்ள ஒரு பாரம்பரியத் தமிழ்க் கிராமம். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் இந்துத் தமிழர்கள் ஆவர். இது ஒரு கடற்கரை […]
விக்டர் டி மங்க் (Victor de Munck) மற்றும் கிறிஸ்தோபர் மனோகரன் (Christopher Manoharan) ஆகிய ஆய்வாளர்கள் குடாலிக் கிராமத்தில் மேற்கொண்ட தங்களது களப்பணி மூலமான ஆய்வான “Accessing the Interiority of Others: Sufism in Sri Lanka“ இல், மேலும் பல விடயங்களை இலங்கையில் சூஃபித்துவம் சார்ந்து பகிர்ந்துகொள்கின்றனர். குடாலியில் உள்ள வயது வந்த ஆண்களில் கிட்டதட்ட முந்நூறு பேர் காதரி வரிசையுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். […]
1 சென்ற நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்திலேயே தோட்டத் தொழிலாளரின் ஊதியப் பிரச்சினை முதன்முதல் பரந்தளவிலான கவனத்துக்கு உள்ளாகியுள்ளது. அக்காலத்தில்தான் சேர்.பொன். அருணாசலம் தோட்டத் தொழிலாளருக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்; கருமுத்து தியாகராஜச் செட்டியார் தோட்டத் தொழிலாளரின் பிற்படுத்தப்பட்ட வாழ்க்கை நிலைமையை விரிவான சான்றுகளுடன் விவரித்து, அவர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டிய தேவையை வலுவாக எடுத்துரைத்தார். இதன் தொடர்ச்சியில், இந்திய அரசு தோட்டத் தொழிலாளர் வாழ்வை மேம்படுத்தும் […]
முன்னுரை 1990 களில் மேற்குலகச் சிந்தனைப் பரப்பில் அங்கீகரித்தலின் அரசியல் பற்றிய சிந்தனையின் மீள்வாசிப்பை அறிமுகப்படுத்துகின்ற செல்நெறியை ரெய்லர் (1992), ஹோனரத் (1992), (f) பிறசேர் (1995 – 1997) போன்றோர் முன்னெடுத்திருந்தனர். இவர்களின் கருத்தியல் கட்டமைப்பு ரீதியான பங்களிப்பு மறுக்கப்பட முடியாதது. பின் – காலனித்துவ அரசியல் வரலாற்று வெளியில் சிறு குழுமங்கள், இனங்கள் தாராளவாத சனநாயக பண்பாட்டு நாகரிக முறைமைக்குள் உள்ளீர்க்கப்பட்டு தமது தனித்துவ அடையாளங்களை இழந்து […]
ஈழ நாட்டில் காணப்படும் கண்ணகி வழிபாட்டுத் தலங்களை இரு பிரிவுகளாக வகைமை செய்து கொள்ளலாம். தமிழர்கள் வழிபடும், தமிழரின் தாயகப் பகுதியில் காணப்படும் கண்ணகை அம்மன் கோயில்கள், சிங்கள மக்களால் வழிபடப்படும் பத்தினி தெய்வக் கோயில்கள் என்பனவாம் அவை. கண்ணகி வழிபாட்டின் தொன்மையினை இலக்கியங்களின் வழியும் அவ்வழிபாட்டுச் சடங்குகளின் வழியும் அறியலாம். கண்ணகி வழக்குரை, சிலம்பு கூறல், கோவலன் கதை என்பன கண்ணகி வரலாறு தொடர்பான பக்தி நிலையில் எழுந்த […]
ஆங்கில மூலம்: குமாரி ஜயவர்த்தன இலங்கையில் அந்நியர் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின் வரலாறு அந்நியர் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இலங்கையில் மேற்கிளம்பின. அந்நியக் கிளர்ச்சிகள் சில சந்தர்ப்பங்களில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிகளாகவும் அமைந்தன. பௌத்த பிக்குகள் இத்தகைய கிளர்ச்சிகளுக்கு தலைமை தாங்கியதையும், அக்கிளர்ச்சிகளில் பங்கு பற்றியதையும் காண முடிகிறது. இதன் பின்னணியில் பௌத்த பிக்குகள் பௌத்த சமயத்தைத் தூய்மைப்படுத்துவதிலும், பௌத்த மறுமலர்ச்சியிலும் தமது பங்களிப்பை […]
“சமூகத்திடமிருந்து ஒருவர் பண்பாட்டைக் கற்கும் போது தன் சுய படைப்புத் திறன் மூலம் அறியாமல், கடந்த காலத்தின் மரபுத் தொடர்ச்சியாக, முறைசார் – முறைசாராக் கல்விகள் மூலமாகவே அறிகிறார்” என்று பண்பாட்டின் தொடர்ச்சி பற்றி ராபர்ட் ஹெலூவி கூறுகின்றார். ஒரு சமூகத்தின் அல்லது குழுமத்தின் தனித்துவத்தை அடையாளங்களினூடாக இனங்காண்பதிலும், அவற்றின் பாரம்பரியங்களை அறிந்து கொள்வதிலும் பண்பாட்டம்சங்கள் பெறுமானமுடையவையாகக் காணப்படுகின்றன. பண்பாட்டம்சங்கள் சமூகத்தின் ஒவ்வோர் துணுக்குகளிலும் அல்லது அதைவிட நுணுக்கமாக சமூகத்தின் […]
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பிலுள்ள தென்மராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் நாவற்குழிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் தென்மராட்சியின் இன்னொரு கோவிற்பற்றான வரணி தொடர்பாகக் குறித்த நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பார்க்கலாம். வரணிக் கோவிற்பற்று வரணி, குடமியான், தாவளை-இயற்றாலை, மந்துவில், வரணி-இயற்றாலை ஆகிய ஐந்து துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதை நிலப்படத்தில் காணமுடிகிறது (படம்-1). எல்லைகள் லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி வரணிக் கோவிற்பற்றின் […]
தமிழ்ச் சூழலில் குயர் மக்களுடைய பிரதிநிதித்துவப்படுத்தலில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கிருக்கின்றது. சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுச் சூழலில் பால், பால்நிலை மற்றும் பாலியல்பு சார்ந்த மீள்வருவார்ப்புகளைக் (Stereotype) கட்டமைப்பதில் ஊடகங்கள் பெரும்பங்காற்றுகின்றன. குயர் மக்கள் பற்றிய மீள்வருவார்ப்புகள் பல்வேறு வடிவங்களில் கட்டமைக்கப்படுவதை அவதானிக்கலாம். மீள்வருவார்ப்புகள் எந்த வடிவங்களில் இருந்தாலும் அவை சமூகத்தில் பாதகமான விளைவுகளையே தோற்றுவிக்கும். பால், பால்நிலை அசமத்துவமானது பல்வேறு ஒடுக்குமுறைகளை ஏற்படுத்துகின்றது. பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான […]
இலங்கையின் முதலாவது மதமறுமலர்ச்சிக் காலகட்டத்தில் குறிப்பிட்டுக் கூறவேண்டிய அம்சம் ஒன்றுள்ளது. தமிழர்கள் மத்தியில் உருவாகி இருந்த மதமறுமலர்ச்சி இயக்கம், ஆறுமுக நாவலர் என்று அறியப்படும், கந்தப்பிள்ளை ஆறுமுகப்பிள்ளை என்ற ஆளுமைமிக்க, ஒருவரின் பெயரோடு பின்னிப்பிணைந்தது. அது ஒரு மக்கள் இயக்கமாக அன்றி, ஆறுமுக நாவலரினதும் அவரது சகாக்களினதும் செயற்பாடுகளின் தொகுப்பாகவே அமைந்தது. ஆனால் சைவ மதத்துக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம், தமிழுக்கும் வழங்கப்பட்டதால் மொழிசார்ந்த தேசியவாதம் இங்கு உருவானது. 1879 இல், […]
பலதரப்பட்ட மதங்களைப் பின்பற்றிய மக்களின் கலைரசனைக்குரிய பொருளாக இருப்பது புத்தர் சிலைகளாகும். இவை பௌத்த மதத்தின் வழிபாட்டுப் பொருளாக மட்டுமன்றி, சிற்பக் கலையின் முக்கிய கவின்கலைப் பொருளாகவும் காணப்படுகிறது. இலங்கையில் இச்சிலைகள் இருக்கும் நிலையிலும், நிற்கும் நிலையிலும், கிடக்கும் நிலையிலும் காணப்படுகின்றன. ஆந்திராவில் மகாயான பௌத்த மதம் அடைந்த வளர்ச்சியைத் தொடர்ந்து கி.பி. 1 ஆம் 2 ஆம் நூற்றாண்டுகளில் இச்சிற்பங்களை ஆக்கும் மரபு தோற்றம் பெற்றாலும் இலங்கையில் இதன் […]
ஆங்கிலம் மூலம் : குமாரி ஜெயவர்த்தன (சேர்.பொன். அருணாசலத்தின் குடும்பப் பின்னணியையும், அவரது மாமன் சேர். முத்துக்குமார சுவாமி, அவரது தமையன் சேர்.பொன். இராமநாதன் என்போர் பற்றியும், இலங்கையின் சிவில் சேவை உத்தியோகத்தராகவும் பின்னர் தமிழர்களின் அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய சேர்.பொன் அருணாசலம் பற்றியும் விமர்சன நோக்கில் எழுதப்பட்ட இக்கட்டுரையை இத்தொடரின் முதலாவது கட்டுரையாக தருகின்றோம். குமாரி ஜெயவர்த்தன அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூல் ‘அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை […]
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும், மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய மோதல்களின் மூல காரணியாக நிலப் பற்றாக்குறை காணப்படுகிறது. நிலத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கும் போது, கால்நடை விவசாயிகளுக்கும் பயிர்ச் செய்கையாளர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் […]
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும், மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய மோதல்களின் மூல காரணியாக நிலப் பற்றாக்குறை காணப்படுகிறது. நிலத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கும் போது, கால்நடை விவசாயிகளுக்கும் பயிர்ச் செய்கையாளர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் […]
மலையகத்தின் கூத்துக் கலைகள் பொன்னர் – சங்கர் மலையகத் தமிழர்களிடையே மட்டுமே நிகழ்த்தப்படும் ‘பொன்னர் – சங்கர்’ கூத்தின் மையக் கருவாக, குண்ணுடையான், தாமரை நாச்சி ஆகியோரின் மரணமும், அவரது குழந்தைகளான பொன்னர், சங்கர், தங்காள் ஆகியோரின் சோகமும் துயரமும் அமைந்துள்ளன. இக்கூத்து, நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட தோட்டங்களிலும், குறிப்பாக நோர்வூட், போற்றி, சீனக்கொல்லை, வீரட் தோட்டங்கள், மஸ்கெலிய, காட்மோர், அரசித் தோட்டம், புளூம்பில்ட், […]
அறிமுகம் இலங்கை மலையகத் தமிழர்கள் என்பவர்கள் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையான சுமார் 125 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில், தென்னிந்தியக் கிராமங்களில் இருந்து பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, தென் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் மேல் மாகாணம் ஆகிய பகுதிகளில் குடியேற்றப்பட்ட தொழிலாளர்களின் ஆறு முதல் எட்டு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களாவர். 18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியர் […]
இந்தியா உட்பட பலநாடுகளில் தடைசெய்யப்பட்ட கடலட்டை வளர்ப்பு மற்றும் ஏற்றுமதியானது, இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி தமிழர் தேசத்தின் வடக்கு – கிழக்கு கடற்பரப்புக்கள் மீது கடந்த சில ஆண்டுகளாக பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது. மக்களிடம் இருந்த பொருண்மியத் (Economy) தேவைகளைக் குறிவைத்து இங்குள்ள கடல் வளத்தை அழிக்க வேண்டுமென்ற பின்புலத்தோடு கொண்டுவரப்பட்டதாகவே பல சமூக ஆர்வலர்கள் மற்றும் கடல்வள ஆராய்ச்சியாளர்களது கருத்தாக உள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட […]
‘நீதிக்காக நீண்ட காத்திருப்பு’ ஆவணப்படம் இலங்கையில் மூன்று தசாப்த யுத்தத்தின் போதும், அதன் பின்னும் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் கதைகளை ஆராய்கிறது. அவர்களது உறவுகளது வலிமிகுந்த போராட்டங்களும் கண்ணீரும் கோபமும் ஏக்கமும் இதன் மூலம் உலகிற்கு எடுத்துரைக்கப்படுகின்றன. நடந்த அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலை இது வலியுறுத்துகின்றது, பொறுப்புக்கூற மறுக்கும் அதிகாரசக்திகளின் இயல்பாகிவிட்ட அலட்சியத்தை கேள்விக்குட்படுத்துகிறது. இந்த ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் அமரர் அ. சேகுவேராவால் (இசைப்பிரியன்) அவர்களது மறைவால் காலதாமதமாக வெளிவந்தாலும் […]
வடக்கு மாகாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தண்ணீர் (குடிநீர்) பேராபத்து பற்றிய எழுநாவின் விழிப்புணர்வு விவரணப்படம்! இது தண்ணீர் பற்றிய உலகளாவிய அரசியல் மற்றும் உலகமயமாதலின் விளைவுகள் பற்றிப்பேசும் அதேவேளை, வடக்கு மாகாணத்தின் நீர் மூலங்கள், நீர் ஆதாரங்கள் குறித்தும் கவனம் செலுத்துகின்றது. குறிப்பாக சுண்ணக்கற்கள் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீர்வளம் பற்றியே இந்த விவரணப்படம் அதிகம் கரிசனை கொள்கிறது. அருகி வரும் நிலத்தடி நீர் வளம், நன்னீரின் அத்தியாவசியம், […]
சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம் 1992இல் ஆரம்பிக்கப்பட்டது. மூலிகைத் தாவரங்கள் தொடர்பில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் வளங்களை சரிவர பயன்படுத்த முடியாதுள்ளது. காரைநகரிலுள்ள கடுக்காய் பற்றி அந்தப் பிரதேச மக்கள் பலருக்கு தெரிந்திருக்கவில்லை. தற்போது நாங்கள் அது தொடர்பில் விழிப்பூட்டி அங்கிருந்து மருந்துக்கு தேவையான கடுக்காயைப் பெற்றுவருகின்றோம். நிதிப் பிரச்சினையால் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிரமமாகவுள்ளது. மூலிகை மருந்து உற்பத்திகளை அதிகரிப்பதன் ஊடாக பலருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் […]
மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் அல்லது அரச ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்புக்கு எதிரான செயற்பாடுகளில் உத்வேகத்தோடு மக்களை இணைத்துக்கொண்டு போராடுவதில் பல சவால்கள் உள்ளன. ஆண்களின் மேலாதிக்க அரசியல், பொருளாதார சிந்தனை சரியான, முழுமையான சிவில் சமூக செயற்பாட்டிற்கு பொருத்தமானதாக இல்லை. மட்டக்களப்பில் இருக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடம் இரு கருத்தியல்கள் உள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு ஏன் பிணை அவசியம், பிணை தொடர்பில் மக்கள் மத்தியிலுள்ள இரட்டை நிலைப்பாடுகள், எவ்வாறான சந்தர்ப்பங்களில் பிணை மறுக்கப்படலாம், இலங்கையில் குற்றவியல் வழக்குகளிலுள்ள பலவீனங்கள் போன்ற பல விடயங்களை சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்கள் இந்தக் காணொலியில் விளக்கியுள்ளார்.
உணவு உற்பத்தியை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பில் கிளிநொச்சி இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் மேலதிக பணிப்பாளரான கலாநிதி எஸ்.ஜே அரசகேசரி உணவு நெருக்கடிக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் உணவு உற்பத்தியின் எல்லையை நாங்கள் இப்போது அடைந்திருக்கின்றோம் என்பதுதான் உண்மை. உள்ளூரில் உள்ள உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணம் அறுவடைக்குப் பிந்திய இழப்பு அதிகரித்துள்ளது. அதைவிட உள்ளூர் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொழுது உள்ளூரில் உணவு உற்பத்தி […]
மீநிலங்கோ அவர்கள் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். ‘அபிவிருத்தி, சக்தி மற்றும் பேண்தகைமை’ முதுகலை திட்டத்தை வழிநடத்துகிறார். மானுடப் புவியியல் புலமையுடன் சமூக விஞ்ஞான ஆய்வுத் துறைகளிலும் நிபுணத்துவம் உடையவர். இலக்கியம், விமர்சனம் ஆகிய துறைகளிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வருபவர். இந்நூல் இலங்கையை மையப்படுத்தி, பசுமை என்ற எண்ணக்கரு, இலங்கையில் சூழலியல், சுதந்திர இலங்கையின் குடியேற்றத் திட்டங்கள், மகாவலி அபிவிருத்தித் திட்டம், இலங்கையில் நீர்மின்சாரம், நீலப்புரட்சி, மேல்கொத்மலைத் திட்டம், […]
‘வடக்குப் பிராந்தியக் காலநிலையியல்’ நூலானது, நாகமுத்து பிரதீபராஜா (யாழ் பல்கலைக்கழக புவியியற்துறைப் பேராசிரியர்) அவர்களால் காலத்தின் தேவையறிந்து நீண்டகால ஆய்வின் பயனாக எழுதப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் காலநிலை அனர்த்தங்கள் முனைப்புப் பெற்று வருகின்றன. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் நிலச்சரிவினால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பின்னணியில் காலநிலை, அதில் ஏற்படும் மாற்றம் பற்றிய அறிவு, தெளிவு, புரிதல் புவியியலாளர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் அவசியமாகும். இதன் அடிப்படையிலேயே நூலாசிரியர் […]
இளங்கோ யாழ்ப்பாணத்தில் அம்பனையில் பிறந்து தனது பதினாறாவது வயதில் புலம்பெயர்ந்தவர்; தற்போது கனடாவில் வசிக்கிறார். இதுவரை கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இது அவரது பத்தாவது புத்தகம். ‘ஈழ யுத்தத்தில் அநியாயமாகப் பலியான அனைவரிற்குமாக’ படையல் செய்யப்பட்டுள்ள இந்நூல் 112 பக்கங்களில் எழுநாவால் அழகான, கைக்கடக்கமான வடிவமைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இளங்கோவின், யுத்தத்தால் சிதைவடைந்த வீட்டின் எஞ்சிய பகுதியும், அதனைச் சுற்றிப் படரும் கொடிகளும் பூக்களும் […]
‘உத்தியாக்கள்’ என்பது ‘முன்னோர்கள்’ எனப் பொருள்படும். அதாவது வேடர்கள் தமது முன்னோர்களை அவர்களது மொழியில் ‘உத்தியாக்கள்’ என அழைப்பது வழக்கம். பேராசிரியர் மௌனகுரு அவர்கள் தனது அணிந்துரையில், திராவிட மொழியில் ‘உத்தி’ என்பது ‘மேலே’ என்பதைக் குறிக்கும் என்கிறார். அப்படியானால் மேலே சென்றவர்களை, அதாவது முன்னோர்களைக் குறிக்கும் என்கிறார். இந்நூலானது அணிந்துரை தொடக்கம் பதினொரு அத்தியாயங்களுடன் பின்னணைப்புகள் ஈறாக 176 பக்கங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது. வேடர் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் […]
ஓராயம் அமைப்பின் ஏற்பாட்டில், எழுநா வெளியீடாகிய திரு. இ. மயூரநாதன் அவர்களின் ‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு 1621–1948’ நூலின் வெளியீட்டு நிகழ்வு கனடாவில் உள்ள ஸ்காபரோ…
‘தளம்’ அமைப்பின் ‘களம்’ செயற்றிட்டத்தின் ஐந்தாவது விமர்சனக் கலந்துரையாடலாக, எழுநா வெளியீடான திரு. அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்களின் ‘வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’…
எழுநாவின் வெளியீடாகிய, இளங்கோவின் 'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' மற்றும் க. பத்திநாதனின் 'உத்தியாக்கள்' நூல்களின் அறிமுக நிகழ்வு பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் 28.04.2026 (செவ்வாய்க்கிழமை)…
எழுநாவின் வெளியீடாகிய, பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவர்களின் 'வடக்குப் பிராந்திய காலநிலையியல்' நூல் அறிமுக நிகழ்வு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் அறிவோர் ஒன்று கூடலில் 2026.04.22 (புதன்கிழமை) அன்று…
எழுநா, ஈழமும் ஈழம் சார்ந்த ஆய்வும் இடைவெட்டும் பரப்பை 'ஈழக்கற்கைகள்' (Eelam Studies) என்று வரையறுத்துக் கொண்டு, ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, சமூகவியல், மானிடவியல், மொழியியல், அரசியல், பொருளாதாரம், சூழலியல், அபிவிருத்தி, சட்டம் போன்ற தளங்களில் ஆய்வுகளை உருவாக்குவதையும் பரவலாக்குவதையும் முதன்மைப் பணியாகக் கொண்டு இயங்குகின்ற இலாப நோக்கற்ற அமைப்பாகும்.