2017இல் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்குகின்ற கலையார்வலர் குழுவொன்று தென்னிந்திய ‘பறை’ வாத்தியத்தை யாழ்ப்பாணத்திலும் இலங்கைத் தீவின் வேறு சில பிராந்தியங்களிலும் உள்ள ஆர்வலர்களுக்கு பயிற்றுவித்தது. இதற்காக தமிழகத்திலிருந்து ‘பறை’ வாசிக்கும் ஒரு குழுவினர் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். மேற்படி ‘பறை’ வாத்தியக் கருவி இலங்கையில் வாசிக்கப்படும் பறை மேள வடிவத்திலிருந்து மாறுபட்ட ஒன்று. இந்தக் கருவி இலங்கையில் மலையக மக்களிடம் பாவனையில் உள்ளது. அங்கு அது ‘தப்பு வாத்தியம்’ […]
சில குறிப்புக்கள் அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பிறந்து மருத்துவம் பயின்று அமெரிக்க மிஷனரியிற் சேர்ந்து இலங்கையின் வடபுல யாழ்ப்பாணத்தில் 26 வருடங்கள் தன்னலமற்ற சேவை செய்த அமெரிக்க மருத்துவரான சாமுவேல் பிஸ்க் கிறீன் (Dr. Samuel Fisk Green) அவர்கள் மறைந்து 138 வருடங்கள் நிறைவு பெற்றமை அண்மையில் (28.05.2022) நினைவு கூரப்பட்டது. தமிழ்மொழி வரலாற்றில் மானிப்பாய் முக்கியத்துவம் பெறும் இரு சந்தர்ப்பங்களைக் குறிப்பிடுவது இவ்விடத்தில் பொருத்தமானது. 1. மானிப்பாய் அகராதி […]
மரம், கல், உலோக வார்ப்பு வேலைகளை உள்ளடக்கிய பாரம்பரியத் தமிழ் செதுக்குப் பாரம்பரியம் பல நூற்றாண்டு கால வரலாற்றை உடையவொன்றாக இலங்கை உள்ளிட்ட தென்னிந்திய பண்பாட்டு வட்டகையின் பல்வேறுபட்ட பிராந்தியங்களிலும் வழங்கி வருகிறது. பொதுவாக விஸ்வகர்ம குலத்தினர் எனச் சிற்ப சாஸ்திர நூல்களால் இனங்காணப்படுகின்ற சமூகக் குழுவினர் இச் செதுக்குத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூரில் பஞ்சகம்மாளர் என அழைக்கப்படுகின்ற இவர்கள் வெவ்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த பல்வேறு பட்டறைகளை அல்லது […]
மொழிபெயர்ப்புக் கட்டுரை : கென்னத் டேவிட் யாழ்ப்பாணத்தில் பெண்களைப் பற்றிய பண்பாடு, சமூகம், பொருளாதாரம் என்பனவற்றின் நோக்கிலான ஒரு விபரிப்பு யாழ்ப்பாணத்துப் பெண்களின் சமூகநிலை அவர்களைப் பற்றிய பண்பாட்டு வெளிப்படுத்தல்கள் என்ற இரு பிரச்சினைகளே இக்கட்டுரையின் பிரதான விடயப் பொருளாகும். இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியின் தமிழ்ப் பெண்கள் வெவ்வேறு பருவங்களில் எதிர்கொள்ளும் வாழ்வு, அவற்றோடு தொடர்புடைய சடங்குகள் என்பன கட்டுரையின் முற்பகுதியில் விபரிக்கப்பட்டுள்ளன. இவ்வாழ்க்கை வட்டத்தூடே பயணிக்கும் பெண்கள் வெவ்வேறுபட்ட […]
கிழக்கிலங்கை களுவன்கேணி வேடர்களை மையப்படுத்திய பார்வை கரையோர வேடர்கள் எனப்படுவோர் கிழக்கிலங்கையின் தமிழ் பேசும் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் இலங்கை வேடர்களினதும், இலங்கைத் தமிழர்களினதும் வழித்தோன்றல்களாகக் காணப்படுகின்றனர். அதே சமயம் இன்றைய சூழலில் இவர்களில் தூய (கலப்பற்ற) வேடர்களைக் காண்பது அரிதாகவே உள்ளது. வலிந்து ஏற்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் மற்றும் புவியியல் மாறுதல்களின் விளைவாக ஏனைய சமூகங்களுடன் வாழ்வியல் முறைகள் மற்றும் மரபு ரீதியில் கலப்புற்றவர்களாக இவர்கள் […]
நவீன காலத்தில் அச்சு முதலாளித்துவம் பெருக்கெடுத்த பெரும் பண்பாட்டுக் களங்களில் ஈழத்தமிழ் பண்பாடும் ஒன்றாகும். காலனியம் உருவாக்கிய சமூக, பண்பாட்டு தொழில்நுட்ப நிலவரங்களின் விளைவாக அது காணப்பட்டது. உலகின் முதலாவது அச்சிடப்பட்ட நூல் வெளிவந்து ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே (1465) தமிழின் முதலச்சுப் புத்தகம் ‘தம்பிரான் வணக்கம்’ (1554) இல் கேரளத்திலிருந்து வெளியாகியது. இவற்றைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான அச்சிடப்பட்ட நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், துண்டுப்பிரசுரங்கள் எனப் பல்வேறு வடிவங்களிற் தொடர்ச்சியாக, தீவின் […]
யாழ்ப்பாணப் பாரம்பரிய வீடுகளிற் காணக் கிடைக்கக்கூடிய கட்டுமான அலகுகளில் ஒன்று சங்கடப் படலை எனும் வாயிற் கட்டட அமைப்பாகும். பேராசிரியர் கா.சிவத்தம்பி யாழ்ப்பாணத்தில் வீடு என்பது வளவுடன் கூடிய வேலியால் (மதிலால்) எல்லையிடப்பட்ட முழு மனையமைப்பு பரப்பாகும் என்பார். அதாவது வீட்டுக்கட்டடம், கொட்டில், கிணற்றடி, முற்றம் முதலியவற்றை உள்ளடக்கிய கட்டுமானங்களும், அதனைச் சூழ்ந்த எல்லையிடப்பட்ட பரப்பே யாழ்ப்பாணத்தில் வீடென்பதன் பரந்த பொருள் கொள்ளலாகும். இந்த எல்லையானது பாரம்பரியமாகப் பனையோலை அல்லது […]
பெரும்பாலும் ஆசிரியர்களின் வீட்டுத் திண்ணைகள், முற்றம், பெருமரச்சாரல்கள் சார்ந்து மிகச் சுருக்கமான ஒரு இடத்தினுள் சுழன்றுகொண்டிருந்த ஈழத்துக் பள்ளிக் கல்விப்பாரம்பரியத்தை அதன் அனைத்து அர்த்தங்களிலும் வெடித்துப் பரவச் செய்ததில் காலனியத்திற்கு மிக முக்கியமான இடமுண்டு. கிறிஸ்தவ மிஷனரிகளும் – அதற்கு எதிரிடையாக எழுந்த சைவக்கல்வி இயக்கங்களும், ஊர்கள் தோறும் ஒன்றுக்கு மேற்பட்ட கல்விச்சாலைகளைத் திறந்துவிட்டன. அவை தமது பாடத்திட்டத்தில் மட்டுமின்றி தமது பாடசாலைக் கட்டடங்களிலும் தத்தமது மதப் பண்பாட்டுக் கருத்துநிலை […]
பால்நிலை அசமந்தம், ஆண்முதன்மை ஆகிய சமூக பண்பாட்டு நிலவரங்கள் பலவேளைகளில் சமூக இயக்கத்தில் பெண்களது செயற்பாடுகள், பங்களிப்புக்கள், தனித்துவங்களை அடையாளப்படுத்தாமல் விட்டுவிடுகிறது. இதனால், பெண்கள் உட்பட்ட சிறுபான்மைக் குழுக்களது தனியடையாளங்கள், வரலாற்று வகிபாகங்கள் என்பன சமூக பண்பாட்டு வரலாறுகளில் தொடர்ச்சியாக விடுபட்ட – எழுதப்படாத பக்கங்களாகவே உள்ளன. இந்த நிலைமையானது மரபுரிமைகள் பற்றிய எழுத்துக்களில் மேலோங்கியுள்ள மேட்டுக்குடிமைத் (elitism) தன்மையை ஒத்த இன்னொரு பிரச்சினைக்குரிய அம்சமாகும். அவ்வகையில் பால்நிலைப்பட்ட அசமந்தமானது […]
இது நெருக்கடிகள் மிகுந்த காலம்… “என்ன வளம் இல்லை எங்கள் தாய் நிலத்தில்“ என்று பாடிய காலம் மாறி உணவுக்கும் எரிபொருளுக்கும் நெருக்குண்டு தள்ளுண்டு நீண்ட வரிசைகளில் நாம் காத்திருக்கத் தொடங்கியிருக்கும் காலம்… எங்களிடம் நிலைத்திருந்த தன்னிறைவை நாமே தொலைத்து விட்டிருப்பதை உணரத் தொடங்கியிருக்கும் காலம்… உணவுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் உருவாகியிருக்கும் காலம். முன்னைய காலங்களிலே வட பிராந்தியத்திலே பெரும் பொருளாதாரத் தடை அமுலில் இருந்தபோதும் கூட அதை […]