May 2022 - Page 2 of 3 - Ezhuna | எழுநா

May 2022 தொடர்கள்

தவக்காலச் சிந்தனைகள்: உடக்கு பாஸ்க்கும் பஸாமும் உயிர்த்த ஆண்டவர் நிகழ்வும்

10 நிமிட வாசிப்பு | 6162 பார்வைகள்

உடக்கு தமிழ் கிறிஸ்தவத்திற்கு ஒரு ஈழ மரபுண்டு. அது ரோமின் திருச்சபை ஆளுகைக்குட்பட்டதாயினும், தமிழ் கிறிஸ்தவத்தின் உலகளாவிய தன்மைகளைப் பகிர்ந்து கொண்டதாயினும், அதன் அமைவிடம் – சமூக பண்பாட்டு வரலாறு – அதன் வரலாற்று உருவாக்கத்தில் மேலாதிக்கஞ் செலுத்திய காரணிகள் – அதன் உள்ளூர் பண்பாட்டுக் களங்கள் மற்றும் அவற்றின் மோதல்கள் என்பனவற்றினால் அதன் சிறப்புப் பண்புகள் உருவாகின எனச் சுருக்கமாகக் கூறலாம். அதற்கு அதற்கான தனிமுகம் உண்டு. ஆனால், […]

மேலும் பார்க்க

கீரிமலை பாசுபத – கபாலிகச் சைவ மரபுகளின் மூத்த மையங்களில் ஒன்றா?

7 நிமிட வாசிப்பு | 9516 பார்வைகள்

கீரிமலை யாழ்ப்பாணத்தின் பழம்பெரும் ஊர்களில் ஒன்று. இலங்கைத் தீவில் காணப்படும் புராதனமான பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான நகுலேஸ்வரம் இங்குதான் காணப்படுகிறது. அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரதான பிதிரர்களுக்கான கடமைகளை ஆற்றும் நீர்பெருக்கும் இங்குதான் உள்ளது. கீரிமலை பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளின் புராணிக அடிப்படைகளை வரலாற்று அறிவியற் கண்டுக்கொண்டு திறக்க முற்படுகையில் நீண்ட நெடிய சைவ மரபுகளின் ஆதிவேர்களை கண்டுக்கொள்ள முடிகிறது. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் சிவராத்திரி இரவில் இருளிற் கசியும் […]

மேலும் பார்க்க

20 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் சாதி

10 நிமிட வாசிப்பு | 17303 பார்வைகள்

மொழிபெயர்ப்புக் கட்டுரை : க. அருமைநாயகம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சினை மிகத் தெளிவாக வெளிப்பட்டது. படித்த முற்போக்குச் சிந்தனையுடைய உயர்சாதி இந்துக்கள் சிலரும், தாழ்ந்த சாதியினர் எனப்படுவோரும் சாதிய நடைமுறைகளையும், அதன் தீங்கான  அம்சங்களையும் ஒழிக்க வேண்டும் என்று முயற்சித்ததைக் காண்கிறோம். ஒடுக்கப்பட்டோர் சமத்துவ உரிமைகளையும் சலுகைகளையும் கோரிநின்றனர். மரணச் சடங்கின் போது மேளமடித்தல், பாடசாலைகளில் தம் பிள்ளைகளிற்குச் சம ஆசனம், கோயில்களில் உள்மண்டபத்திற்குள் […]

மேலும் பார்க்க

வடக்கின் பண்பாட்டுச் சுற்றுலாவும் காலனிய கட்டட மரபுரிமையும்

7 நிமிட வாசிப்பு | 21684 பார்வைகள்

பண்பாட்டுச் சுற்றுலா (cultural tourism) என்பது  குறித்த ஒரு பிராந்தியத்தின் பண்பாட்டுச் சொத்துக்கள் மீது கவனத்தைக் குவித்துள்ள சுற்றுலா ஆகும். அது குறிப்பிட்ட பிராந்தியம் அல்லது குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் பௌதீகச் சொத்துக்கள், வழக்காறுகள், பயில்வுகள், நம்பிக்கைகள் என்பனவற்றின் மீது கவனத்தைக் கோருகின்ற பண்பாட்டு மேம்பாட்டு முறையாகும். அது பல்வேறுபட்ட உப களங்களைக் கொண்ட ஒரு பரந்த பரப்பாகும். இன்று இலங்கைச் சுற்றுலாத்துறையின் புதிய அல்லது மீள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு […]

மேலும் பார்க்க

19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் சாதி

10 நிமிட வாசிப்பு | 25584 பார்வைகள்

மொழிபெயர்ப்புக் கட்டுரை: க. அருமைநாயகம் யாழ்ப்பாண மக்களின் பொருளாதார சமூக, சமய வாழ்க்கையில் சாதிமுறை முக்கிய பங்கினைப் பெற்றிருந்தது. அங்கு சாதிப் பிரிவுகள் பலவாக இருந்தன. உயர் சாதியான வேளாளர் முக்கிய வகிபாகத்தை பெற்றிருந்தனர். கோவியர், பள்ளர், நளவர் என்பன அடிமைச் சாதிகள் எனவும், அம்பட்டர், வண்ணார், கொல்லர், தச்சர், பறையர் ஆகியன குடிமைச்சாதிகள் எனவும் கருதப்பட்டன. சாதிகள்  அகமணக் குழுக்களாகும். ஒரு சாதியினர் பிறசாதிகளுடன் சமபந்திபோசனம் வைத்துக்கொள்வதோ, விவாக […]

மேலும் பார்க்க

உள்ளூரை இரண்டும் கெட்டதாக்கல்: அபிவிருத்தித் திட்டங்களும் மரபுரிமையும்

7 நிமிட வாசிப்பு | 3380 பார்வைகள்

‘ஒரே நாடு ஒரே தேசம்’ என்ற சொற்றொடரைக் கேட்டால் எம்மிற் பலர் வெகுண்டு எழுந்துவிடுகிறோம். அதனை ஒரு ஜனநாயக விரோத அறைகூவலாகவும் பன்மைத் தன்மைகள் பண்பாட்டு வேறுபாடுகளை மறுதலிக்கும், அதேநேரம் அதனை ஒற்றைப்படையாக்கஞ் செய்யும் மேலாதிக்கச் செயற்பாடாகவும் கருதி பெருங்குரல் எடுத்து அதனை எதிர்க்கும் குரல்களை பதிவிடுகிறோம். “அந்நியன்  கரங்கள் எம் குரல்வளை நெரிப்பினும், பாடுவோம் உயர்த்திய குரல்களில்”  என்று எண்பதுகளில் தமிழ்ப் பகுதிகளில் ஒலித்தடங்கிய இளைஞர் குரல்கள் இக்கட்டுரையை […]

மேலும் பார்க்க

வன்னி : இயற்கை மரபுரிமைகளும் பண்பாட்டு நிலவுருக்களும் சூழற் சுற்றுலாவும்

8 நிமிட வாசிப்பு | 8242 பார்வைகள்

வன்னிப் பெருநிலம் என்பது இலங்கைத் தீவின் வடபுலத்தில் இயற்கை மரபுரிமைகளைச் செறிவாகக் கொண்டதொரு பிராந்தியமாகும். நீர் – நிலஞ்சார்ந்த மிகப் பரந்த இயற்கை அமைவுகளையும் அதுசார்ந்த பிற உயிரியற் சூழலையும் பண்பாட்டு நிலவுருக்களையும் உடைய வன்னி, இலங்கையின் இனத்துவ அரசியலின் ஆயுத மோதல் முடித்து வைக்கப்பட்ட பின்னருங்கூட மிகப் பெரிய அரசியற் சூதாட்ட களமாகக் காணப்படுகிறது. அந்தக் களத்தைக் கருத்து ரீதியாகவும் – பௌதிக ரீதியாகவும் கைப்பற்றுவதற்காக அண்மைக் காலத்தில் […]

மேலும் பார்க்க

பொருளாதார மாற்றங்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் – பகுதி 4

10 நிமிட வாசிப்பு | 8437 பார்வைகள்

மொழிபெயர்ப்புக் கட்டுரை : பிறையன் பவ்வன்பேர்ஜர்   இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வேளாளர்கள், தாழ்த்தப்பட்ட தமிழரை சாதி அந்தஸ்தில் குறைந்தவர்கள் என்ற  நிலையில் இருந்து உயரவிடாது தடுத்தமைக்கு இரு காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம் மலிவான கூலி தடையின்றித் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற தேவை. இரண்டாவது வேளாளரின் சாதி அந்தஸ்து தர அடுக்கில் தமது குடும்பத்தின் நிலையைத் தாழ்ந்து போகாது பாதுகாத்தல் (வேளாளர் சாதிக்குள் நூற்றுக்கணக்கான உபசாதிகள் உள்ளன). […]

மேலும் பார்க்க

தொலைய விடுதல் நியாயமா?

10 நிமிட வாசிப்பு | 7007 பார்வைகள்

வட பிராந்தியத்தின் சுதேச மரங்களின் பயன்கள் பற்றி அறிதல் என்பது தனியே அச்சுப்பிரதிகளிலிருந்தும் இணையத்திலிருந்தும் நாம் அறிந்துக்கொள்வதோடு மட்டுப்படுத்தப்படாது. ஏனெனில் ஏனைய பிராந்தியங்களோடு ஒப்பிடுகையில், வட பிராந்தியத்து மரங்கள், அவற்றின் பயன்கள் சார்ந்து வெளிவந்த அச்சுப்பிரதிகளும் தகவல்களும் மிகவும் வரையறுக்கப்பட்டவை. அவற்றிலும் நாம் இன்று அணுகக் கூடியதாக இருப்பவை மிகமிகக் குறைவானவையேயாகும். மூன்று தசாப்தங்கள்  நீடித்த யுத்தம், எம்மிடமிருந்து பறித்துச் சென்ற செல்வங்களுள் அவையும் சில. மரங்களுக்கும், மக்களுக்கிடையிலான பந்தமெனப்படுவது […]

மேலும் பார்க்க

சிவ வேடதாரி

8 நிமிட வாசிப்பு | 4680 பார்வைகள்

சைவக் கோயில்களில் பூவரசம் இலை அமர்ந்த விபூதி, சந்தனம், குங்குமத்தின் இன்றைய நிலை!  “சிவ சின்னங்கள் யாவை?” என நாவலர் அவரது சைவ வினாவிடையின் அங்கமாகிய விபூதியியலிலே கேட்டு, சிறுவர்களுக்கு சிவ சின்னங்களில் முதன்மையான ‘விபூதி’  பற்றிப் போதித்தார். அவரது போதனை முறையை அடியொற்றி சைவ சமயப் பாடப் புத்தகங்களும் இடைவிடாது அதேகேள்வியையும் விடையையும் திரும்பத் திரும்பக் கேட்டுப் பதிலும் சொல்கின்றன. சிவ சின்னத்தில் முதன்மையான விபூதி ‘புனிதமான சாம்பல்’ […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்