May 2022 - Page 3 of 3 - Ezhuna | எழுநா

May 2022 தொடர்கள்

யாழ்ப்பாணமும் சாதிப்பழமை வாதமும் – பகுதி 3

10 நிமிட வாசிப்பு | 6123 பார்வைகள்

மொழிபெயர்ப்புக் கட்டுரை : பிறையன் பவ்வன்பேர்ஜர் தோட்டப் பொருளாதாரத்தில் ஆரம்பிக்கப்பட்ட அடக்குமுறையானது தொடர்ந்து சடங்கியல் இழிவுப்படுத்தல் மூலம் நகர்த்தப்பட்டது . இதன்மூலம்  அந்தஸ்துநிலை வேளாளர்களையும், தாழ்த்தப்பட்டோரையும் பிரிக்கும் எல்லைக்கோடுகள், வெளித்தலையீடுகளால் தாக்கப்படும் நிலையில் இருந்தன. இந்தவிடயம் விக்டோரியா காலத்தில் (19 ஆம் நூற்றாண்டில்) வேளாளருக்கு உணர்த்தப்பட்டது. தாராளவாதக்கொள்கை கொண்ட பிரித்தானிய அதிகாரிகள் ஒரு மனதோடு பழமைவாத சாதிக்கட்டுப்பாட்டு  அடிமைத்தனத்தில் இருந்து தமது காலனித்துவ குடிகளை விடுவிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்களால் […]

மேலும் பார்க்க

தமிழ் பௌத்த மரபுரிமையை உரிமை கோரல்

8 நிமிட வாசிப்பு | 9789 பார்வைகள்

தமிழர்கள் மதப்பன்மை அடையாளம் உடையோர். சைவ – வைணவ மதங்கள் உட்பட ஏராளமான தாய் தெய்வங்கள் – இயற்கைச் சக்திகள்  முதல் ஆசிவகம், சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், சித்தர் மரபுகள், சூபிசம் வள்ளலார் மரபு, உலகாயதம் போன்றவற்றையும் அனுட்டிப்பதுடன், கடவுள் மறுப்பு வரை அவர்கள் பல்வகை அடையாளம் கொண்டவர்கள். இவையே அவர்களது தனித்துவமும்  சிறப்படையாளமுமாகும். அவ்வகையில் இலங்கைத் தீவில் சிங்கள பௌத்தம் போல தமிழ் பௌத்தமும் ஒரு வரலாற்று […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் சாதி உறவுகளும் சாதி மோதல்களும் – பகுதி 2

10 நிமிட வாசிப்பு | 12337 பார்வைகள்

மொழிபெயர்ப்புக் கட்டுரை : பிறையன் பவ்வன்பேர்ஜர்          நில உடைமை, மூலதனச் சொத்துக்கள், வர்த்தகம், நிர்வாகப் பதவிகள், அரசியல் தலைமைத்துவப் பதவிகள் என்ற யாவற்றையும் ஒரே ஒரு மேலாதிக்கச்சாதி தனது தனியுரிமையாக்கிக் கொண்டு ஆதிக்கம் செய்வது தென்னாசியப் பிராந்தியத்தில் பரவலாகக் காணப்படும் விடயம் (Srinivas 1955, 1959,  Raheja 1988). இவ்வாறான ஒரு நிலைமைக்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்வது யாழ்ப்பாணம் ஆகும். யாழ் குடாநாட்டின் அரைவாசிக்கும் மேற்பட்ட சனத்தொகையை […]

மேலும் பார்க்க

புதிதாகச் சிந்தித்தல்: தமிழர்களும் நினைவுச் சின்னங்களும்

7 நிமிட வாசிப்பு | 5421 பார்வைகள்

எம் இதயங்களில்  அச்சொல் புனிதமாய் இருக்கட்டும் சாம்பலைப் போல காற்று அதனையும் அள்ளிச் செல்ல விட வேண்டாம் சுகப்படுத்த முடியாத காயமாக… –      மஹமூட் தர்வீஷ் (பலஸ்தீனக் கவிதைகள். (மொ+ர்) எம்.ஏ. நுஃமான், இ. முருகையன்)  பண்பாட்டு மரபுரிமையின் மிக முக்கியமான பகுதியாக நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன. நினைவுச் சின்னம் (monuments)    என்பது ‘உலகளாவிய ரீதியில் பெறுமதிமிக்கதும் வரலாறு, அழகியல், இனவியல் அல்லது மானுடவியல் ரீதியாக முதன்மை […]

மேலும் பார்க்க

இலங்கையின் வடபகுதியில் 1968 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆலயப்பிரவேச நெருக்கடி – பகுதி 1

9 நிமிட வாசிப்பு | 10543 பார்வைகள்

மொழிபெயர்ப்புக் கட்டுரை : பிறையன் பவ்வன்பேர்ஜர் 1968 ஆம் ஆண்டு பரிஸ் நகரில் மாணவர்கள் வீதிகளில் மறியல் செய்து பெரும் கிளர்ச்சி நடத்திய அதேஆண்டில் இலங்கையின் தமிழ் கலாசாரத்தின் மத்தியான யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்குள் இன்னொருவகையான சிவில் குழப்பம் நிகழ்ந்தது. இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சியின் பீக்கிங் பிரிவுடன் (Peking wing) தொடர்புடைய செயற்பாட்டாளரின் வழிநடத்தலில் நூற்றுக்கணக்கான தீண்டத்தகாதவர்கள் என்று மரபு வழியில் ஒதுக்கப்பட்ட பள்ளர், நளவர் சாதியினர் யாழ்ப்பாணத்தின் பழமைவாத நடைமுறைகளைக் […]

மேலும் பார்க்க

இலங்கையில் அகழ்வாய்வு ஒரு அறிவியல் ஒழுக்கமா?

8 நிமிட வாசிப்பு | 6019 பார்வைகள்

நேற்றோ இன்றோ அல்ல, ஐரோப்பிய காலனிய ஆட்சியின் கீழிருந்து விடுதலை பெற்ற காலத்திலிருந்தே தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் அகழ்வாய்வு என்பது திட்டவட்டமான ஓர் அரசியற் கருவியாக மாறியுள்ளது.  அத்துடன் இரத்த ஆறுகளைத் தேசங்கள்தோறும் திறந்துவிடும், கண்ணுக்குத் தெரியாத படைக்கலமும் ஆகும்.   தேசத்தை நிர்மாணஞ் செய்யும் அதிகாரப் பொறிமுறைக்கான பெருங்கதையாடல்களைக் கட்டமைப்பதற்கான அறிவியலாடை தரித்த தந்திரோபாயமாகவே அகழ்வாராய்ச்சி நடைமுறைகள் பெருமளவிற் பயன்படுத்தப்படுகின்றன.   இந்தப் பின்னணியில், பெரும்பாலும் இலங்கை போன்ற நாடுகளில் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்