June 2022 - Ezhuna | எழுநா

June 2022 தொடர்கள்

பெருந்தோட்ட நிர்வாக கட்டமைப்பு

10 நிமிட வாசிப்பு | 11063 பார்வைகள்

உலக வரலாற்றின் ஒரு கட்டத்தில் உலகில் சாம்ராஜ்யங்கள் அழித்தொழிக்கப்பட்டு ஜனநாயக அரசாங்கங்கள் உருவாகிய போதும் ஆண்டான் – அடிமைத் தன்மை முற்றிலும் ஒழிந்து போய் விடவில்லை. ஜனநாயகம் முதலாளித்துவத்திற்கு சோரம் போனதேயன்றி அடிமட்ட விளிம்புநிலை மக்களை அது பாதுகாக்க எத்தனிக்கவில்லை. மேற்கு நாடுகளின் அடிமை வியாபாரம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சட்டம் கொண்டுவரப்பட்டு இல்லாதொழிக்கப்பட்ட போதும், பிரித்தானியாவின் கைத்தொழில் புரட்சியின் போதும், ஏகாதிபத்தியங்களின் வளர்ச்சியின் போதும் விவசாய தொழிலாளர் […]

மேலும் பார்க்க

அடையாள மீட்பைத் தேடும் ஆதிக்குடிகளின் குரல்

10 நிமிட வாசிப்பு | 8645 பார்வைகள்

“நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ணக்கொடுத்தானே பூர்வக்குடி” இந்த பாடல் வரிகள் இன்றும் உலகெங்கும் ஓயாமல் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர்களின் வாழ்வில் ஒளியிழந்து பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டமை எத்துணை பேருக்குத் தெரியும். உலகரங்கிலும் நிலமையிதே. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. இயற்கையுடன் இணைந்து அதை தன்வயப்படுத்தி வாழ்ந்து வந்த எம்மை, மனித முன்னேறுகைகளின் படிப்படியான ஈடேற்றங்கள் அனைத்தும் கால வர்த்தமானங்களுக்கு அமைய ஓர் கை பார்த்துக் கொண்டே வந்துள்ளமைதான் […]

மேலும் பார்க்க

மருத்துவர் ஜோன் ஸ்கடர்

7 நிமிட வாசிப்பு | 3679 பார்வைகள்

இருநூறு வருடங்களுக்கு முன்னர் பண்டத்தரிப்பிலே மருத்துவர் ஸ்கடர் பணியாற்றிய மருந்தகம் (டிஸ்பென்சரி) பனைமரங்கள், நெல் வயல்கள் சூழ்ந்த பசுந்தரையில் அமைந்துள்ள தீவு போன்றே காட்சியளித்தது. நோயாளர்கள் வந்து செல்லும் சிகிச்சை நிலையமாக மட்டுமன்றி, அவர்கள் தங்கி இருந்து சிகிச்சை பெறும் மருத்துவமனையாகவும் ஸ்கடரது மருந்தகம் இயங்கியது.  ஸ்கடர் அதிகமானவர்களுக்குச் சிகிச்சையளிக்கவல்ல  பெரியதொரு மருத்துவமனையை நிறுவுவதற்கு விரும்பினார். திருமதி ஸ்கடர் தனது பிள்ளைகளுடன் அநாதரவான யாழ்ப்பாணத்துப் பிள்ளைகளுக்கும் (40 பிள்ளைகள்) தமது […]

மேலும் பார்க்க

வடமாகாணமும் மீனவர் குடித்தொகையும்

4 நிமிட வாசிப்பு | 15873 பார்வைகள்

2018 ஆண்டு கணிப்பீடுகளின் பிரகாரம் வடமாகாணத்தில் மொத்த மீனவர் குடித்தொகை 7,16 ,040 ஆகும். இது இலங்கையின் மொத்த மீனவர் தொகையில் (26.86%) சதவீதமாகும். மொத்த மீனவ குடும்பங்களின் எண்ணிக்கை 5,03,10 ஆகவும், நேரடியாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் தொகை 5,14,70 ஆகவும் காணப்படுகின்றது. பெரும்பாலும் பெண்கள் நேரடியாக மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதில்லை, மீன்பிடிசார்ந்த உப-தொழில்களான பதனிடல், சில்லறை வர்த்தகம் போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுகின்றனர். இத்துறையில் பதனிடல், வர்த்தகம், போக்குவரத்து மற்றும் […]

மேலும் பார்க்க

சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு

10 நிமிட வாசிப்பு | 11479 பார்வைகள்

1823 ஆம் ஆண்டுடன் இலங்கையில் மலையக மக்களின் வரலாறு ஆரம்பிக்கப்பட்டு சரியாக 200 வருடங்கள் பூர்த்தியாகின்றன. பிரித்தானிய காலனித்துவ காலத்தில் இலங்கையில் வர்த்தகரீதியாக கோப்பிப் பயிர்ச்செய்கையை உருவாக்கும் முயற்சியில் அப்போதைய ஆளுநர் எட்வர்ட் பார்ன்ஸ் (Edward Barns) என்பவருடன் இணைந்து இம்முயற்சியில் அக்கறை கொண்டிருந்த ஹென்றிபேர்ட் (Hendry Bird) ஆகியோர் கம்பளைக்கு அருகாமையில் சின்னப்பிட்டி (பின்னர் சின்ஹா பிட்டியானது) என்ற இடத்தில் 1823 ஆம் ஆண்டு 80 ஏக்கரில் கோப்பி […]

மேலும் பார்க்க

இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றமும் வளர்ச்சியும்

18 நிமிட வாசிப்பு | 16575 பார்வைகள்

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும்,   1948 முதல்  இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்கும் இத்தொடர் கட்டுரை இரு […]

மேலும் பார்க்க

தேயிலையின் பசுமையும், சோர்வின் விளிம்பிலே நின்று உழைக்கும் தோட்டத்தொழிலாளரும்

19 நிமிட வாசிப்பு | 19656 பார்வைகள்

இலங்கையின் மலைநாட்டில் அடியெடுத்து வைக்கும் எவருக்குமே அப்பிரதேசத்தின் இயற்கை வனப்பினைக்கண்டு அதில் தமது உள்ளத்தைப் பறிகொடுக்காதிருக்க முடியாது. பச்சைக்கம்பளம் விரித்ததுபோன்று மலைச்சரிவுகளிலே பரந்துவிரிந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்களும், அங்குத் தேயிலைச் செடிகளிலே செழித்து வளர்ந்திருக்கும் பசுந்தளிர்களும், மலைமுகடுகளிலிருந்து பாய்ந்துவரும் அழகிய நீரோடைகளும், முகில்களால் அரவணைக்கப்பட்ட மலைச்சிகரங்களும் பார்ப்போருக்குப் பரவசமூட்டும் காட்சிகளாகும், இயற்கையின் இந்த எழில்கொஞ்சும் காட்சிகளிலிருந்து எமது பார்வையைச் சற்றுத்திருப்பி அங்கு தேயிலைச் செடிகளுக்கிடையே மழை, வெயில், பனி, காற்று […]

மேலும் பார்க்க

ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை – ஓர் அறிமுகம்

10 நிமிட வாசிப்பு | 10062 பார்வைகள்

“மனிதன் கதைசொல்லி விலங்கு”. அன்றாடம் என்பது மனிதனுக்குக் கதைகள் இல்லாமல் நகர்வதில்லை. சோறுண்ண அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அன்னையர் நிலாச்சோறு ஊட்டும் போது ஆரம்பிக்கும் கதையிலிருந்து, இறுதிமூச்சு பிரியும் வரை, மனிதவாழ்வு கதைகளின் பெருக்கு மீது தான் அலை பாய்ந்தபடி செல்கிறது. சாதாரணமாகப் பேசுவதையே, ‘கதைத்தல்’ என்று புழங்கும் ஈழத்தமிழர் மத்தியிலோ கதைகளுக்கு என்றுமே குறைவிருந்ததில்லை. இப்போதெல்லாம் அரசியல் செயற்பாடு, அடையாள முன்னிறுத்துகை, கருத்தியல் செயற்பாடு என்றெல்லாம்  கதை வேறொரு பரிணாமம் […]

மேலும் பார்க்க

பூர்வகுடிகள் தம் வாழ்வியல் அசைவுகளில் இயற்கையின் வகிபங்கு – பகுதி 2

10 நிமிட வாசிப்பு | 11024 பார்வைகள்

காரை இலை – (தாவரவகைப்பாடு: Canthium parviflorum) பொதுத்தன்மை காரை இலை என்பது, பூர்வகுடிகளின் உணவுத்தாவரங்களின் பழந்தாவரங்களில் ஒன்றாகும். இது காரைச்செடி என்றும் அழைக்கப்படும் இதன் காய்கள் காரைக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு முட்செடியாகும். இதில் சாதாரண காரை, சோத்துக்காரை (சோற்றுக்காரை) எனும் வகைகள் உண்டு. இது ஒரு பூக்கும் தாவர இனமாகும். இதன் காய்கள் பிஞ்சுப் பருவத்தில் பச்சை நிறத்தில் காணப்படும். பிறகு முதிர்ந்து மஞ்சள் நிறமாகி […]

மேலும் பார்க்க

பூர்வகுடிகள் தம் வாழ்வியல் அசைவுகளில் இயற்கையின் வகிபங்கு – பகுதி 1

10 நிமிட வாசிப்பு | 14131 பார்வைகள்

இயற்கையுடன் இணைந்து அன்றும், இன்றும், என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற பழங்குடிகளின் பண்பாட்டு அசைவுகளில் உணவுமுறைகள் பிரதான இடத்தினை வகிக்கின்றன. அவ்வகையில் இன்றும் இலங்கைத் தீவின் கிழக்குக்கரையில் வசிக்கின்ற பூர்வகுடிகளிடம் காணப்படுகின்ற உணவுமுறைகள், அவற்றில் காணப்படுகின்ற மருத்துவக் குணங்கள், வழிபாட்டுப் பயன்பாடுகள் போன்ற நடைமுறை விளக்கி விபரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். யாவரும் இயற்கையின் பிரதி பலன்களினை ஏதோ ஒரு வகையில் அனுபவித்துக் கொண்டு வருகின்றமை அறிந்த விடயம். ஆனால் பூர்வகுடிகளோ […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்