கொழும்பிலுள்ள பிரபலமான ‘சைவ உணவகங்கள்’ (???) என அழைக்கப்படும் மரக்கறி உணவுச்சாலையில் நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிருக்கையில் ஈழத்தமிழர்களின் உணவுப் பாணியிற் சமைக்கப்பட்ட அல்லது பாரம்பரிய ஈழத்தமிழ் உணவுகளை இலங்கையில் எங்கு சாப்பிடலாம் என்ற ஒரு உரையாடல் எழுந்தது. அப்படியொரு இடம் இலங்கையின் தலைநகரத்திலோ – தமிழ் மக்களின் பூர்வீகமாக வாழ்ந்து வருமிடங்களிலோ இல்லை என்பது துரதிர்ஷ்டவசமான ஒரு உண்மை. சில வேளைகளில் அவ்வகைப்பட்ட அதிகாரபூர்வமான உள்ளூர் உணவுச்சாலை என சில […]
தமிழர்களின் உணவுப்பழக்கவழக்கங்கள் எனும்போது அவர்கள் வாழும் இடத்துக்கு ஏற்பவும், காலநிலை மாற்றங்களுக்கு ஏற்பவுமே அவர்களது உணவுப்பழக்கங்கள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் காணப்படுள்ளன. இடத்துக்கிடம் சிறுசிறு வேறுபாடுகளைக் கொண்டாலும் உணவுப்பழக்கவழக்கத்தின் அடிப்படைகள் ஒன்றாகவே இருந்துள்ளன. பாரம்பரிய உணவுப்பழக்க வழக்கங்கள் ஆனது பின்வருவனவற்றில் கூடுதலான கவனத்தை செலுத்தியிருக்கின்றன. 01. இயற்கைசார்ந்த உணவுகளாக இருத்தல் – இயற்கையோடு இணைந்த பசளைகள், பூச்சி கொல்லிகள், மாற்று பயிர்கள் போன்றவற்றுடன் காலநிலைகளுக்கு ஏற்ப பயிர்வகைகள், உணவுவகைகள் காணப்படல். பெரும்பொழுதுகளான […]
இலங்கை தொடர்பாக அண்மைக் காலங்களில் வெளிவந்த வரலாற்று ஆய்வுகள், அரச வரலாற்றுப்பாட நூல்கள், தொல்லியற் கண்டுபிடிப்புக்கள் என்பன இலங்கையின் பூர்வீகமக்கள், பண்பாடு என்பவற்றின் தொடக்க காலத்தை விஜயன் வருகைக்கு முந்திய நாகரிகத்தில் இருந்து ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும் என்பதைக் கோடிட்டுக்காட்டுவதாக உள்ளன. பிரித்தானிய ஆட்சியிலிருந்து இலங்கையின் பூர்வீக வரலாறு தீபவம்சம், மகாவம்சம் முதலான பாளி இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுவந்துள்ளன. அவ்விலக்கியங்கள் கி.மு.6ஆம் நூற்றாண்டளவில் வடஇந்தியாவில் இருந்து விஜயன் தலைமையில் […]
கடந்த காலங்களில் ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர, நீண்ட காலமாக பல்வேறு கலாசார பின்புலம்கொண்ட, மக்கள் அமைதியாக சகவாழ்வு நடத்தும் ஒரு முன்மாதிரியான நாடாக இலங்கை இருந்து வந்திருக்கிறது. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான உறவுகள் ஒரு சில பக்கச்சார்பான வரலாற்றாசிரியர்கள் சித்திரிப்பதைப்போல எப்போதும் அல்லது தொடர்ச்சியாக பகை முரண்பாடானதாக இருக்கவில்லை. பண்டைக் காலங்களில் அவ்வப்போது இடம்பெற்ற தென்னிந்தியப் படையெடுப்புகளை உள்நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்மீது தொடுத்த யுத்தங்களாக சில […]
கொழும்பிலும் மற்றும் நகர்ப்புறங்களிலும் இருந்ததை விட பன்மடங்கு விசாலமான தொழிலாளர் படையணி பெருந்தோட்டங்களிலேயே காணப்பட்டது. நகர்ப்புற தொழிலாளர் மத்தியில் குறைந்தபட்ச கல்வியறிவேனும் காணப்பட்டது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சிறிதுகூட கல்வி அறிவு இருக்கவில்லை. 1893 ஆம் ஆண்டு முதல் 1923 ஆம் ஆண்டு வரை சுமார் எட்டு பெரிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் (1893 அச்சுத் தொழிலாளர், 1896 சலவைத் தொழிலாளர், 1906 கருத்தை ஓட்டுபவர்கள், 1912 புகையிரத தொழிலாளர்கள், […]
2021 ஆம் ஆண்டு கணிப்பின்படி வடபகுதியில் மீன்பிடியில் ஈடுபடுத்தப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 14,674 ஆகும். இது இலங்கையின் மொத்தப்படகுகளின் எண்ணிக்கையில் சுமார் 50 சதவீதமாகும். இப்பிரதேசத்தில் OFRP எனப்படும் வெளி இணைப்பு இயந்திரம் பூட்டப்பட்ட கண்ணாடி நாரிழையிலான படகுகளே கூடுதலாக மீன்பிடியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆழ்கடலில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற பலநாட்கலங்களின் எண்ணிக்கை (IMUL) மிக குறைவாகவே உள்ளன, ஆக 150 பலநாட்கலப் படகுகளே பயன்படுத்தப்பட்டு வருவதாக தரவுகள் காட்டுகின்றபோதிலும், அந்தப்படகுகள் […]
மருத்துவர் ஜோன் ஸ்கடரை அடுத்து அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த 2 ஆவது தகுதிவாய்ந்த மருத்துவர் நேத்தன் உவோட் ஆவர். இவர் அமெரிக்காவில் நியூ ஹம்ப்சயரில் உள்ள பிளைமோத் என்னுமிடத்தில் 1804 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி பிறந்தார். பௌடுன் மருத்துவக் கல்லூரியில் (Bowdoin Medical College) பயின்று மருத்துவப் பட்டம் பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். வெளிநாடு சென்று மருத்துவ மிசனில் பணியாற்ற விரும்பி […]
1890 ஆம் ஆண்டுகளிலிருந்தே மாக்ஸ்சிசச் சிந்தனைகள் இலங்கைக்கு அறிமுகமாயின. இக் காலப்பகுதியில் தொழிற்சங்க இயக்கங்களும் தொழிற்சங்கப் போராட்டங்களும் முனைப்புப் பெற்றதைத் தொடர்ந்து இலங்கைத் தொழிலாளர்கள் தங்களுக்கிடையிலான இனம், மதம், மொழி, சாதி, பிரதேசம் என்பவற்றைக் கடந்து வர்க்கங்களாக அணிதிரண்டனர். உதாரணமாக 1893 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை அச்சுத் தொழிலாளர் சங்கத்தைக் குறிப்பிட முடியும். இதில் சிங்களவர், தமிழர், பறங்கியர்கள் சங்க உறுப்பினர்களாகவும் தலைமைப்பீடத்தின் உறுப்பினர்களாகவும் இருந்தனர். இது போன்றே […]
பனை ஒரு காலத்திலே எங்கள் வாழ்வியலுடன் ஒன்றித்துப் போயிருந்தது. இலங்கை தேசம் பல்லினப் பனை மரங்களின் இருப்பிடமாக, வாழிடமாகத் திகழ்ந்திருந்ததன் சான்றுகளாக காலனித்துவ கால நூல்களே இன்று எம் மத்தியில் எஞ்சியிருக்கின்றன. பல பனை மர இனங்கள் இன்று அழிந்து போய்விட்டன. சில பேராதனைப் பூங்காவில் மாத்திரமே காணப்படுகின்றன. நாம் இன்றும் சாதாரணமாகக் காணும் பனை மரங்கள் ஓரிரு இனங்கள் மாத்திரமே. கடதாசியும் அச்சிடலும் அறிமுகமாக முன்னர், ஓலைச் சுவடிகளே […]
ஒரு வரலாறு என்பது எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்பதை சென்ற தொடரில் பார்த்த நாம், அதன் வழியே கீழைக்கரை வரலாற்றை எழுதத் தொடங்குவோம் என்று கூறியவாறு, போன இதழில் விடைபெற்றிருந்தோம். ஆனால் வரலாறுக்குள் நுழைவதற்கு முன்னர், நம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட “கீழைக்கரை” என்ற சொல்லை மிகச்சரியாக வரையறுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்தத் தொடரில் கீழைக்கரையை வரலாற்றுப் பார்வையில் ஆராயப்போகும் நாம், அப்போது தான் ஆய்வுப்பரப்புக்குள் திருத்தமாக நின்றபடி […]