July 2022 - Ezhuna | எழுநா

July 2022 காணொலிகள்

ஊரில கிடைக்குற சருகுகளைக்கொண்டு சேதனப்பசளை செய்ய தொடங்கினேன்

3289 பார்வைகள்
July 21, 2022 | ezhuna

உள்ளூர் உற்பத்தி முயற்சிகளின் 2ஆவது காணொலித் தொடரில் சேதனப் பசளை உற்பத்தியாளர் ந.சிவபாலன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். சேதனப் பசளை உற்பத்தியை நான் ஐந்து வருடமாக செய்துகொண்டிருக்கின்றேன். அதோட சேர்த்து மண்புழு உரமும், காளான் உற்பத்தி செய்கிறேன். எங்களுக்கு வேம்பு, நாவல், இலுப்பை போன்ற கஞ்சல்கள் எல்லாம் தாராளமாக எடுக்கக்கூடியதாக இருக்குது. என்னட்ட மாடு இல்லை. ஆனால் மேய்ச்சல் மாட்டுச் சாணகம் தரவையில மேயுற இடங்களில இருந்து எடுத்து இதைச் […]

மேலும் பார்க்க

கோத்தாபயவுக்கு பின்னர்.. அடுத்தவர் யார்? எப்படி தெரிவாவார்?

3874 பார்வைகள்
July 16, 2022 | ezhuna

ஜனாதிபதியொருவர் தனது பதவிக் காலம் நிறைவடையும் முன்னர் பதவியிலிருந்து விலகினால் அதைத் தொடர்ந்து இடம்பெறும் அரசியலமைப்புச் செயன்முறை என்ன என்பது தொடர்பில் இந்தக் காணொலியில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் விளக்கியுள்ளார்.

மேலும் பார்க்க

உள்ளுர் உற்பத்திகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது

3406 பார்வைகள்
July 14, 2022 | ezhuna

உள்ளூரில் கிடைக்கும் மூலப் பொருட்களை பெறுமதி சேர்த்து உற்பத்தி செய்வது எங்களுடைய நோக்கம். இடம்பெயர்ந்து சொந்த இடங்களுக்குத் திரும்பிய பின்பு நாங்கள் விவசாயத்தைத் தான் மேற்கொண்டோம். விவசாயம் இலாபகரமாக இல்லாமையால், மலியுற நேரங்களில் கிடைக்கின்ற காய்கறிகளை காயவைத்து சந்தைப்படுத்த தொடங்கினோம். அதனூடாக எங்களுடைய உற்பத்தியை விரிவுபடுத்தினோம். சிறுதொழில் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி செய்வோரோடு தொடர்பின்மையும், சரியான திட்டமிடலின்மையும் பெரும் பிரச்சினையாக உள்ளது. எங்களுக்கும் இதே பிரச்சினை இருந்தது. ஆனாலும் நாங்கள் திரும்பத் […]

மேலும் பார்க்க

நியூயோர்க் மாவட்ட நீதிமன்ற வழக்கு இலங்கையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுமா?

2860 பார்வைகள்
July 7, 2022 | ezhuna

அமெரிக்காவின் ஹமில்டன் ரிசர்வ் வங்கியானது தாங்கள் முதலீடு செய்த 257.5 மில்லியன் டொலர் மற்றும் முதலீட்டுக்கான வட்டியை செலுத்துமாறு கோரி இலங்கை மீது நியூயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு இலங்கை மீது தொடரப்படுவதற்கான காரணம் மற்றும் இந்த வழக்கு இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் ஏற்படுத்தவுள்ள தாக்கம் தொடர்பில் இந்தக் காணொலியில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் விளக்கியுள்ளார்.

மேலும் பார்க்க
அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்