August 2022 - Ezhuna | எழுநா

August 2022 தொடர்கள்

அரிசிசார் யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகள்

16 நிமிட வாசிப்பு | 25077 பார்வைகள்

சோறு, நெற்பொரி, அவல், கஞ்சிவகைகள் போன்று அரிசி மாவில் இருந்து பல்வேறு வகையான அரிசி சார்ந்த உணவுகள் நமது பாரம்பரியத்தில் காணப்படுகின்றன. அரிசிக்கூழ், களி, பாயசம் “அரிசிக்கூழ் பித்தத் தோடே யரியநீர்க் கோர்வை யாற்றும் தெரியுமிக் களிம்பு வாயு தீராத மந்த மின்னும் தரும்வயிற் றிரைவு மென்று சாற்றினார் பாய சந்தான் திரிபயித் தியமே பித்தஞ் செறிதாக மருவா வன்றே” – பக். 62, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி. அரிசிக்கூழ் […]

மேலும் பார்க்க

இலங்கையின் பாரம்பரிய விவசாய வரலாறு

15 நிமிட வாசிப்பு | 61867 பார்வைகள்

அறிமுகம் இலங்கையின் விவசாயப் பாரம்பரியம் ஆரியர் வருகைக்கு முன்னர் இருந்தே ஆரம்பிக்கிறது. இதற்குச் சான்றாக இலங்கையில் சுற்றுச்சூழல் தொல்லியல் துறையில் முன்னோடியான டாக்டர். ரத்னசிறி பிரேமதிலக மேற்கொண்ட சமீபத்திய ஆராய்ச்சி, நமது நீண்டகால நம்பிக்கைகளில் பலவற்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இவ்வளவு காலமும் நாம் நம்பிக்கொண்டிருப்பது மகா வம்சமும், தீபவம்சமும் சொல்லுகின்ற ஐந்நூறு ஆண்டுகால வரலாற்றை மட்டுமே. ஆனால் உண்மையில் இந்த நாட்டின் கற்கால மனிதர்கள், பழங்குடியின வேடர்களின் மூதாதையர்கள் தான் நமது […]

மேலும் பார்க்க

இலங்கையில் தேயிலைப் பயிர்ச்செய்கையும் இயற்கைச்சூழலின் மீது அதன் தாக்கங்களும்

11 நிமிட வாசிப்பு | 25493 பார்வைகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் இலங்கையில் வளர்ச்சியடைந்து வந்த பெருந்தோட்டத்துறையானது தொடர்ந்துவந்த காலப்பகுதியில் இலங்கையினது பொருளாதாரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துறையாக மாறியது. தேயிலை உற்பத்தியும், அதன் ஏற்றுமதியும் இதில் முதன்மை வகித்தது. சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நாட்டினது பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளும் சமூக-பொருளாதார முன்னேற்றமும் பெருந்தோட்டத்துறையினது வளர்ச்சியோடு நெருங்கிய தொடர்பு கொண்டனவாக இருந்தன. இத்துறையினது தோற்றமும் வளர்ச்சியும் பொருளாதாரத்தில் அடிப்படையான சில மாற்றங்களை ஏற்படுத்தியது. […]

மேலும் பார்க்க

காலனித்துவ ஆட்சியாளர் விட்டுச்சென்றவையும் (Colonial legacy) பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் ஏற்பட்ட சமூக – பொருளாதார மாற்றங்களும்

17 நிமிட வாசிப்பு | 48672 பார்வைகள்

வரலாற்று போக்குகளைப்  பற்றி பேசும்போது “அந்த காலம் போல இனிவருமா” என்று  பலர் சலித்துக்கொள்வது புதிய விடயம் அல்ல. சில நல்ல விடயங்கள் மறைந்து வருகின்றன என்பது உண்மைதான். அன்றிருந்த காடுகள், தெளிவான ஆற்றுநீர், தூயகாற்று போன்ற பலவற்றை இன்றைய தலைமுறை இழந்திருக்கிறது. சமூக  வாழ்க்கையில் கூட அன்பான குடும்ப உறவு, நாணயம், பெரியோரை மதித்தல் போன்ற நல்ல விழுமியங்கள் மறைந்து வருகின்றன. ஆயினும் கடந்த காலமே பொற்காலம் என்று […]

மேலும் பார்க்க

மருத்துவர் கிறீனின் யாழ்ப்பாண வருகை

10 நிமிட வாசிப்பு | 18824 பார்வைகள்

அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த 3 ஆவது தகுதிவாய்ந்த மருத்துவர் சாமுவேல் பிஸ்க் கிறீன். இவரது தந்தை: வில்லியம் கிறீன், தாயார்: யூலியா பிளிம்டன். பதினொரு பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் கிறீன் 8 ஆவது பிள்ளை. கிறீன் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தின் வூஸ்டா என்னுமிடத்திலுள்ள கிறீன் ஹில் என்னும் கிராமத்தில் 1822 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதி பிறந்தார். கிறீனுக்கு 11 வயது ஆகும் போது […]

மேலும் பார்க்க

கீழைக்கரையும் அதன் புவிச்சரிதவியலும் I

10 நிமிட வாசிப்பு | 17069 பார்வைகள்

கடந்த தொடரில், கீழைக்கரை என்ற நமது ஆய்வுப்பரப்பை சமூக, பொருளாதார, வரலாற்றுக் காரணிகளின் அடிப்படையில் வரையறுத்துக்கொண்டோம். இந்துமாக்கடலின் ஓரமாக, மூதூர் கொட்டியாற்றுக்குடாவில் தொடங்கி சுமார் 250 கி.மீ கிழக்கே நகரும் கீழைக்கரை, கூமுனையில் குமுக்கனாற்றில் முடிவடைகின்றது. அதன் வடக்கில் இலங்கையின் நீளமான ஆறான மகாவலி கங்கையும், தெற்கே குமுக்கனாறும் எல்லைகளாக நீடிக்கின்றன. மொனராகல் மாவட்டத்தின் `சியம்|பலாண்டுவைக்கு அருகே சிங்களத்தில் |கோவிந்தஃகெல (Gōvinda hela) என்றும் ஆங்கிலத்தில் வெ`ச்|ட்மினி`ச்|டர் அ|பே (Westminister […]

மேலும் பார்க்க

இலங்கையில் தேயிலையின் தந்தை ‘ஜேம்ஸ் டெய்லர்’

10 நிமிட வாசிப்பு | 14690 பார்வைகள்

இலங்கையில் தேயிலைத் தொழில்துறை அதன் நூற்றி ஐம்பது வருடகால வரலாற்றைப் பதிவு செய்து கொண்ட போது (1867 – 2017),   தேயிலைத்  தொழிலின் தந்தையெனப் போற்றப்படும் ஜேம்ஸ் டெய்லரும் கௌரவிக்கப்பட்டு நினைவு கூரப்பட்டார். ஜேம்ஸ் டெய்லர் இந்த நாட்டுக்கு தேயிலை பொருளாதாரத்தை வளர்த்து, கட்டியெழுப்பியிருக்காவிட்டால், இலங்கை  ஒரு செல்வம் கொழிக்கும் நாடாகத் திகழ்ந்திருக்க முடியாது. இந்த ஆய்வுக் கட்டுரைத் தொடரை நான் எழுத ஆரம்பித்ததன் நோக்கம் கோப்பி வரலாற்று […]

மேலும் பார்க்க

கடலோர வேட்டுவ சமூகங்களுள் காணப்படும் குடிவழமைகள்

10 நிமிட வாசிப்பு | 21528 பார்வைகள்

ஒவ்வொரு சமூகக்குழுக்களும் தமக்கு  வாலாயமான பண்பாட்டு நகர்வுகளுள் பல முன்னெடுப்புக்களை, கால வர்த்தமானங்களுக்கு அமைவாக ஈடேற்றிக் கொண்டுள்ளமையே வரலாறாகின்றது. அவ்வாறான நிலைப்பாடானது இயல்பான முறையிலும், வலிந்து புகுத்தப்பட்ட வடிவிலும்  குறித்தவொரு சமூகத்தில் தாக்கம் செலுத்தியே வந்துள்ளது. இதற்கு தீவின் ஆதிப்பிரஜைகளான வேடரும் விதிவிலக்கல்லர். இலங்கை வரலாறானது காலத்துக்குக் காலம் இடம் பெற்ற, வரத்து இனங்களின் குடியேற்றத்துடனேயே பார்க்கப்படுகின்றமையை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டிய பாரிய தேவையுண்டு. உதாரணமாக இலங்கையின் முதல் மன்னனாக […]

மேலும் பார்க்க

இரசவர்க்கம் – திரிபலை

6 நிமிட வாசிப்பு | 11648 பார்வைகள்

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மூன்று மூலிகைகளையும் கூட்டாக ‘திரிபலை’ என்று ஆயுள்வேத மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். இம் மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே விசேடகுணங்கள் உண்டு.   திரிபலை சூரணம் கடுக்காய்த்தூள், தான்றிக்காய்த்தூள், நெல்லிக்காய்த்தூள் மூன்றையும் சம அளவில் கலந்து தயாரிக்கப்படும் திரிபலை சூரணம் (Triphala churna) ஆயுள்வேத மருத்துவர்களின் கைகண்டமருந்தாகும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க இம்மருந்து பயன்படுத்தப்படுகின்றது. திரிபலைச் சூரணத்தைத் தொடர்ந்து எடுத்துவந்தால் இரத்தத்தில் உள்ள கொலெஸ்றோலைக் குறைக்கமுடியும். திரிபலை […]

மேலும் பார்க்க

சிங்கோனா: திடீர் எழுகையும் வீழ்கையும்

10 நிமிட வாசிப்பு | 15366 பார்வைகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தம் வரை இலங்கையின் பொருளாதாரத்தில் சக்கரவர்த்தி என கோலோச்சிய கோப்பி பல தனவந்தர்களையும் வங்கிகளையும் கூட வங்குரோத்து ஆக்கிவிட்டு அகாலத்தில் மாண்டு போனது. அதன் புதைகுழியிலிருந்து பீனிக்ஸ் பறவை என தேயிலை என்ற கரும்பச்சை நிறச்செடி புறப்பட்டு வந்தது என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் 1860 களிலேயே கோப்பிப் பயிர்ச்செய்கையை ஹெமீளியா வெஸ்டாரிக்ஸ் (Hemilia Vestaricx) என்ற நோய் தொற்றிக் கொண்டபோது இந்நோய் எதிர்காலத்தில் கோப்பியை […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்