தானியங்கள் தாவரப்பொருட்களும் அவற்றை உண்டுவாழும் விலங்குகளுமே மனிதனுக்கு உணவாகின்றன. பொதுவாக விலங்குப் பொருட்களைவிட தாவரப்பொருட்களே அதிகம் உணவாகின்றன. தாவரப் பொருட்களில் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் பிரதான உணவாக நெல், குரக்கன், தினை, வரகு, சாமை போன்ற தானியங்களே அமைந்துள்ளன. இவற்றிலும் நெல்லில் இருந்து பெறப்படும் அரிசி, அரிசி மா என்பன பிரதான உணவு வகைகளில் முதன்மையாக இருக்கின்றன. இதிலும் பாரம்பரிய சிவப்பரிசி வகைகளும், மொட்டைக்கறுப்பன் வகை அரிசிகள், சம்பா வகை அரிசிகள் […]
யாழ். உயர்வர்க்கம் தமது நலன்களுக்காக தமிழ்த் தேசிய உணர்வினையும் அவ்வடையாளத்தினையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்துள்ளதை இலங்கை அரசியல் வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. டொனமூர் அரசியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் தமது நலனை முன்னிறுத்தியே செயற்பட்டனர். டொனமூர் அரசியல் திட்டம் தமிழ்மக்களுக்கு போதுமானதாக இல்லை என எதிர்த்தவர்களில் ஜீ.ஜீ.பொன்னம்பலம், சேர்.பொன்.இராமநாதன், அ.மகாதேவா போன்றவர்கள் முக்கியமானவர்கள். இதில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் தேர்தல் பகிஸ்கரிப்பை ஏற்றுக்கொண்டபோதும் எஸ்.என்.ஆனந்தன் என்பவர் தேர்தலில் போட்டியிடுவதால் […]
யாழ்ப்பாண நகரபிதாவுக்கு ஒரு குடியானவனின் மடல் ஓகஸ்ட் 2021 இல் எழுதப்பட்ட இக்கட்டுரை அக்காலப் பகுதியில் வெளியான மாநகர முதல்வரின் நாவலர் மண்டபம், ஆஸ்பத்திரி வீதி தொடர்பான கருத்துக்கள் மீதான உரையாடல் ஆகும் அன்புடையீர். தங்களுடைய அண்மைய பத்திரிகையாளர் சந்திப்பொன்றின் காட்சித் துண்டொன்றை டான் தொலைக்காட்சியில் பார்க்கக் கிடைத்தது. அது ஒருங்கே மகிழ்ச்சியையும், கவலையையும் தந்தது. மகிழ்ச்சியானது, ‘நாவலர் கலாசார மண்டபத்தை மத்திய அரசிடம் கையளிப்பது இல்லை’ என்ற தங்கள் […]
ஒரு ‘சமூகம்’ என்பது எதனைக் குறிக்கும்? ‘ஒரு சமூகம் என்பது அதன் அங்கத்தவர்களை அடையாளங்காட்டுவதும், அவர்களுக்கிடையிலான ஒற்றுமையை நிர்ணயிப்பதுமான பொதுவான நோக்கம், நம்பிக்கைகள், விருப்பங்கள், தேவைகள், அத்தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்கு அச்சமூகத்திற்குக் கிடைக்கப்பெறும் சாதனங்கள் என்பவற்றைக் கொண்டதாக இருக்கும். துரதிஷ்டவசமாக பெருந்தோட்ட மக்களிடையே மேற்படி அம்சங்கள் இன்றுவரையும் போதுமான அளவு வளர்ச்சியடையாத நிலையிலேயே காணப்படுகின்றன. கடந்த சுமார் நான்கு தசாப்த காலப்பகுதியில் இச்சமூகத்தில் பல மாற்றங்களும் அபிவிருத்திகளும் ஏற்பட்டு வந்துள்ளபோதும், […]
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடலும் மேலெழுந்திருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு – கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை என்ற கருத்தை தனது முதலாவது கொள்கை விளக்க உரையில் கூறியிருக்கின்றார். தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கவேண்டுமென்றால் அரசியல் ஸ்திரநிலையைக் கொண்டுவரவேண்டும். இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் அரசியல் ஸ்திர நிலையையும் உருவாக்க முடியாது. பிராந்திய வல்லரசான இந்தியா 13 ஆவது திருத்தத்தையே […]
பிரதேச அறிமுகம் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் ஒன்பது மாகாண பரப்புக்களில் அதிக நிலப்பரப்பைக் தன்னகத்தே கொண்டதும் சனத்தொகை செறிவின் அடிப்படையில் இலங்கையின் பிரதான இனங்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் ஆகிய மூவினத்தவரதும் குடியிருப்புக்களை கொண்டதோடு அதிக அளவிலான தமிழர்கள், முஸ்லீம்களின் தாயகப்பரப்பாகவும் காணப்படுகின்றது. பல்லின பன்மைச்சமூகங்கள் வாழும் பகுதியாகவுள்ளதனால் இப்பிரதேசத்தின் பண்பாட்டு மற்றும் சமூக நிலைமைகள் வேறு எந்த மாகாணங்களிலும் இல்லாத விசேட தன்மையுடைய பிராந்தியமாக இயங்கி […]
கால்நடை வளர்ப்பு கிராமியப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான கூறாகும். இலங்கையின் கால்நடை வளர்ப்பின் மிக முக்கியமான கூறுகளான மாடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பைப் பற்றிய தொடராக இது அமையப்போகிறது. கால்நடை வளர்ப்புப் பொருளாதாரத்தின் அடிப்படைகள், சவால்கள், தீர்வுகள் ஏனைய நாடுகளின் நிலைமைகளை ஒப்பீடு செய்தல் என இது அமையப்போகிறது. மக்களின் மிக முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் கோழி வளர்ப்பு இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் […]
அதிகார வெறியும் ஆடம்பர ஆர்ப்பாட்டங்களும் ஆர்ப்பரித்து இருந்த ஒரு காலகட்டத்தில் மாபெரும் மனிதக் கூட்டங்கள் மந்தைகள் என மண்ணில் வீசப்பட்டிருந்தன. 17 ஆம்,18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய ஆக்கிரமிப்பு வெறியர்கள் ஏகாதிபத்தியங்களாக எழுச்சி பெற்று உலகம் முழுவதையும் தம் காலடியில் போட்டு மிதித்து விடவேண்டும் என்று வேட்கை கொண்டிருந்தனர். பிரிட்டிஷ்காரன் என்ற மகா பாதகன் ஆப்பிரிக்கக் கண்டத்தை சின்னா பின்னப்படுத்திய பின்னர் ஆசியாவை நோக்கி படை திரட்டிக்கொண்டு […]
கட்டுக்கரையும் பெருங்கற்காலப் பண்பாடும் கட்டுக்கரையில் நுண்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாகப் பெருங்கற்காலப் பண்பாடு தோன்றியுள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட இரு அகழ்வாய்விலும் இப்பண்பாடு பற்றிய ஆதாரங்களே அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை வடஇலங்கை வரலாற்றுக்கு சிறப்பாக இலங்கைத் தமிழர் வரலாற்றிற்குப் புதுவெளிச்ச மூட்டுவதாக உள்ளன. பெருங்கற்காலப் பண்பாடு என்பது இறந்தவர்களுக்கான ஈமச் சின்னங்கள் பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டதால் தோன்றிய பெயராகும். ஆதிகால மக்கள் இறந்தவர்களுக்கு மறுபிறப்பு உண்டு என்ற நம்பிக்கையில் தமது […]
அறிமுகம் சிங்கைச் செகராஜசேகரன் என்ற பெயருடன் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னன் ஒருவன் தனது குடிமக்களுள் பெரும்பாலான தமிழ்மக்களின் நலன் கருதி வைத்தியம் மற்றும் சோதிடம் தொடர்பான நூல்களைத் தமிழ்மொழியில் ஆக்கும்படி இந்தியாவில் இருந்து தான் வரவழைத்த பண்டிதர்களைக் கேட்டுக் கொண்டான். இப்பொழுது எமக்குக் கிடைக்கும் செகராசசேகரமாலை என்னும் சோதிடநூலும் செகராசசேகரம் என்னும் வைத்தியநூலும் இம்மன்னன் காலத்தில் ஆக்கப்பெற்றனவே. கி. பி.15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் […]