மருத்துவர் நேத்தன் உவோட்டுக்கு 4 பிள்ளைகள் மூவர் ஆண்கள், ஒருவர் பெண். இவர்கள் அனைவரும் 1834 – 1842 காலப்பகுதியில் வட்டுக்கோட்டையிலே பிறந்தார்கள். பெண்பிள்ளை ஒரு வயதாகும் போது இயற்கை எய்தியது. 1842 இல் பிறந்த இளையமகன் சாமுவேல் ரெட் உவோட் வாஷிங்டனில் உள்ள ஜோஜ்ரவுண் பல்கலைக்கழகத்தில் பயின்று 1868 இல் மருத்துவரானார்(Physician). 1865 ஆம் ஆண்டு ஏப்பிரல் 14 ஆம் திகதி அமெரிக்க வரலாற்றில் துயர்மிக்க ஒருநாள். அமெரிக்காவில் […]
ஆங்கில மூலம்: பேராசிரியர் சி. அரசரத்தினம் 1674 ஆம் ஆண்டு டச்சுக்காரர் யாழ்ப்பாண மாவட்டத்தின் நான்கு பிரிவுகளினதும் காணிகளின் உடைமையாளர்கள் பற்றிய பதிவினை மேற்கொண்டனர் என்பதை முன்னர் குறிப்பிட்டோம். இக்காணிப் பதிவு நடவடிக்கையின் பயனாக 12,000 குத்தகைக்காரர்களின் (Tenants) கணக்கை வேளாளத் தலைமைக்காரர்களால் காண்பிக்க முடியவில்லை. குத்தகைக்காரர்களின் பெயரில் தலைமைக்காரர் காணிகளைத் தமக்கு சொந்தமாக்கி பயனை அனுபவித்தனர் என்பது தெரியவந்தது. காணிப் பதிவு நடவடிக்கையினால் ஏற்பட்ட கசப்புணர்வைப் பயன்படுத்தி வேளாளத் […]
மானிங் அரசியல் அமைப்பில் இருந்த குறைபாடுகளை நீக்கி இலங்கைக்குப் பொருத்தமான ஓர் அரசியல் அமைப்பினை உருவாக்கும் பொருட்டு 1927ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த டொனமூர் குழுவினர் இரண்டு முக்கிய சிபார்சுகளை முன்வைத்தனர். 1. கல்வித் தகமை, வருமானம் என்பவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்ட வாக்குரிமையினை நீக்கி 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை. 2. சட்ட நிருபண சபையில் இருந்து வந்த இனவாரி பிரதிநிதித்துவத்தினை நீக்கி அதற்குப் பதிலாக பிரதேச […]
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய வம்சாவளித் தமிழரின் சனத்தொகையில் கணிசமான அளவுக்கு அதிகரிப்பு காணப்பட்டது. 1871 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 444 ஆக இருந்த இவர்களின் சனத்தொகை 1906 ஆம் ஆண்டு 4 லட்சத்து 36 ஆயிரத்து 622 ஆக அதிகரித்தது. பின்னர் 1936 ஆம் ஆண்டு 6 லட்சத்து 92 ஆயிரத்து 540 ஆக அதிகரித்தது. இவர்களில் சுமார் 88 சதவீதத்தினர் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக […]