September 2022 - Ezhuna | எழுநா

September 2022 தொடர்கள்

பாரம்பரிய விவசாயமும் சூழல் சமநிலையும்

15 நிமிட வாசிப்பு | 18018 பார்வைகள்

அறிமுகம் மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதன் கூட்டமாக அலைந்து திரிந்து வேட்டையாடி உண்ணுகின்ற வேடுவ நாகரிகத்தில் இருந்து நதிக்கரைகளை அண்டி நிரந்தரக் குடியேற்றங்களை அமைத்து, விவசாயம் செய்து வாழத் தொடங்கியதில் இருந்து மனித நாகரிகத்தில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் வேளாண்மை யுகமும் ஆரம்பமானது. இவ்வாறுதான், மனித நாகரிக வளர்ச்சி உலகம் முழுவதும் ஏற்பட்டது. இதனைச் சான்றாக வைத்துத் தான் நான் எனது முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன், […]

மேலும் பார்க்க

இலங்கையில் தமிழர் பற்றிய பிராமிக் கல்வெட்டுக்கள் – ஓர் அறிமுகம்

6 நிமிட வாசிப்பு | 71136 பார்வைகள்

இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழும் தமிழரும் இலங்கையில் கல்மேல் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இவற்றில் முதலாவதாக எழுதப்பட்டவை பிராமிக் கல்வெட்டுக்கள் என அழைக்கப்படுகின்றன. இவை பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5ஆம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை கல்வெட்டு ஆய்வாளர்கள் முற்காலப் பிராமி, பிற்கால பிராமி என இரு வகையாக பிரித்துள்ளனர்.   இலங்கை முழுவதிலும் சுமார் 2500 பிராமிக் கல்வெட்டுக்கள்  காணப்படுகின்றன. இவ்வளவு […]

மேலும் பார்க்க

இன்னொரு உலக ஒழுக்காறு: உலக நாடுகளின் இயக்கச் செல்நெறி

15 நிமிட வாசிப்பு | 12038 பார்வைகள்

நுழைபுலம் இதுவரை இருந்தவாறு தொடர இயலாத நெருக்கடியான கட்டம் இன்று ஏற்பட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் மக்களின் வாழ்வாதாரங்கள் தகர்க்கப்படும் வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றங்கள் பன்மடங்காக அதிகரித்தபடி உள்ளன. இத்தகைய பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படைக் காரணி ரஷ்ய – உக்ரேன் போர் என்பதாக ஊடகப் பரப்புரைகள் அமைந்துள்ளன. அமெரிக்காவும், ஐரோப்பாவும், நேட்டோ வாயிலாக ரஷ்யா மீது தாக்குதலை மேற்கொள்வதற்காக உக்ரேனைத் தளமாகப் பயன்படுத்தும் எத்தனங்களில் முனைந்திருந்த சூழலில் தற்காப்பு யுத்தம் […]

மேலும் பார்க்க

பிரித்தானியர் இலங்கையைக் கைப்பற்றுதல்

26 நிமிட வாசிப்பு | 60203 பார்வைகள்
September 23, 2022 | பி. ஏ. காதர்

12 ஆம் நூற்றாண்டில் இந்து  சமுத்திரத்தில் அதுவரை கடலாதிக்கம்  செலுத்திய சோழ சம்ராச்சியம் பலவீனப்பட்டபோது அவர்களது பிடியில் இருந்த கடல் வர்த்தகம் அரேபியர்களினதும் முஸ்லிம்களினதும் கைகளுக்கு மாறியது. ஐரோப்பிய நாடுகளின் கடல் வலிமை ஓங்கியபோது அவர்களது துப்பாக்கிப் பலத்தின் முன்னால்  ஆரியர்களின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. முதலில் போர்த்துகேயர் இலங்கைக்கு  வந்தது ஒரு தற்செயலான  விடயம்.  அவர்கள் கடலாதிக்கத்துக்காக அரேபியர்களோடும்,  இலங்கையிலும் இந்தியாவிலும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட – […]

மேலும் பார்க்க

பால்: உணவு முதல் வணிகம் வரை

13 நிமிட வாசிப்பு | 19370 பார்வைகள்

இலங்கையில் இறக்குமதியாகும் பால்மாவின் விலை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முதல்  380 /= ரூபாவாக  இருந்த 400 கிராம் பால்மா இன்று 1160/= வரை அதிகரித்துள்ளது. [ஏறக்குறைய மூன்று  மடங்கு அதிகரிப்பு]. இது சாதாரண மக்கள் நுகரமுடியாத அதிகரிப்பாகும். அத்துடன் வழமையாக கிராமத்தின் பெட்டிக் கடைகளிலும் இலகுவாகக் கிடைக்கக் கூடிய பால் மாவை நகரங்களின் பிரதான பல்பொருள் அங்காடிகளிலும் பெறமுடியாது மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். கடந்த பல   மாதங்களாகவே  […]

மேலும் பார்க்க

இரசவர்க்கம் – மருந்தாகும் மசாலாப் பொருள்கள் – பகுதி 2

10 நிமிட வாசிப்பு | 12259 பார்வைகள்

பெருங்காயம் அட்டகுன்மம் தானும் அணுகாது ஆகமதில் ஒட்டியவாய்வுத் திரட்சி ஓடுமே-முட்டவே வருங்காயம் புட்டியாம் மாரிழையீர் கேளீர் பெருங்காயம் என்று குணம் பேசு இதன் பொருள்: எட்டுவகையான குன்மங்களும் சேராது. வாய்வுப் பிரச்சனைகளை ஓட்டிவிடும். உடலுக்கு வலுவைக்கொடுக்கும். பெண்ணே பெருங்காயத்தின் குணம் இதுவாகும். மேலதிக விபரம்: பெருங்காயம் என்பது பெருஞ்சீரகக்குடும்பத்துக்குரிய ஒரு தாவரத்தின் வேர்க்கிழங்கிலிருந்தும் தண்டில் இருந்தும் பெறப்படும் ஒரு பிசின் ஆகும். ஈரான் தேசத்துக்குரியது இந்தத்தாவரம். இந்த மூலிகைப் பொருளைக் […]

மேலும் பார்க்க

கீழைக்கரையும் அதன் புவிச்சரிதவியலும் II

19 நிமிட வாசிப்பு | 20592 பார்வைகள்

கீழைக்கரையில் 21 கரச்சைக் களப்புகள் காணப்படுகின்றன (உரு. 01 & 02). உள்நாட்டு ஆறுகள் பெருகிப் பாய்வதால், இவற்றின் பெரும்பாலான நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வண்டல் மண் படிந்து விட்டது. ஒப்பீட்டளவில் பெரிய கரைச்சைகளான மட்டக்களப்பு வாவி, பெரியகளப்பு, வாழைச்சேனைக் களப்பு என்பன இவ்வண்டல் மண் படிவால் இன்று பெருமளவு அகலம் குறைந்திருக்கின்றன. இலங்கைத்தீவின் கரையோரம், மட்டக்களப்பு வாவிக்குத் தெற்கே பிறைத்துண்ட வடிவில் அமைந்திருப்பதால், களப்புகளின் அளவை அதிகரிக்கும் கடுங்காற்று, பருவப்பெயர்ச்சிக் […]

மேலும் பார்க்க

ஈழத் தமிழரும் கறுப்புச் சுற்றுலாவும்

6 நிமிட வாசிப்பு | 13481 பார்வைகள்

அண்மைக் காலத்தில் அதிகம் கவனிப்புப் பெற்ற ஒரு சுற்றுலா முறையாகச் கறுப்புச் சுற்றுலா (Black tourism) காணப்படுகிறது. குறிப்பாக 1990களில் இது முக்கியமான புலமை உரையாடலாக உருவாகியது. சிலவேளைகளில் இருள் சுற்றுலா (Dark tourism) அல்லது துயரச் சுற்றுலா (Grief tourism) எனும் பெயர்களாலும் அழைக்கப்படும். இது ஒரு மக்கள் குழுமத்தின் அல்லது தேசத்தின் துயரடர்ந்த நிகழ்ச்சிகளான இறப்பு, கொலை, அழிவு முதலியன நடைபெற்ற இடங்களை அவற்றின் சான்றாதாரங்களை உள்ளடக்கிய […]

மேலும் பார்க்க

கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் – பகுதி 1

10 நிமிட வாசிப்பு | 17420 பார்வைகள்

ஆங்கில மூலம்: – அலெய்ன் ஜி. கக்நொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன் பன்மைத்துவத்தின் மத்தியில் ஒற்றுமையைப் பேணுதல் என்ற விடயம் கனடாவின் வரலாற்றின் ஆரம்பம் தொட்டு இன்று வரை அந்தத் தேசத்தினரது கவனத்தை ஈர்க்கும் ஒரு விடயமாக இருந்து வந்ததை ஆய்வு நூல்கள் எடுத்துக்காட்டுகின்றன. உதாரணமாகச் சில முக்கியமான நூல்கள் 1970 களின் பின்னர் பிரசுரிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். சர்வதேச தராதரங்களின் படியான மதிப்பீட்டில் கனடா தேசம் பன்மைத்துவத்தின் மத்தியில் ஒற்றுமையை […]

மேலும் பார்க்க

மலையகத்திலே ஒரு பல்கலைக்கழகமும் சமூக – பொருளாதார மேம்பாடும்

12 நிமிட வாசிப்பு | 10114 பார்வைகள்

சலனங்கள் இல்லாத நீர் ஒருபோதும் கடலையடையமாட்டாது. அதுபோன்றே, காலத்தின் தேவைகளுக்கேற்ப மாற்றங்களை அடைந்து கொள்ளமுடியாத ஒரு சமூகமும் வளர்ச்சியை அடையமாட்டாது. ஒரு சமூகம் வளர்ச்சியடைய வேண்டுமாயின், காலத்திற்குக் காலம் அதில் வளர்ச்சிக்குத் தேவையான மாற்றங்கள் ஏற்படுவது இன்றியமையாததாகும். அப்படியெனின், சமூகத்தில் இவ்வித மாற்றங்களை ஏற்படுத்துவது யார் என்ற கேள்வி எழுகின்றது. ஒரு சமூகத்திலிருந்து உருவாகும் தொலைநோக்குள்ள அரசியற் தலைவர்கள், ஆற்றல்மிகு அறிவியலாளர்கள், சிறந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், திறமைமிக்க வியாபார முகாமையாளர்கள், […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்