1818 இல் கிளர்ச்சி வெடிக்கும் வரை தமக்கு சரியான தகவல் கிடைக்காததற்கும், கிளர்ச்சி வெடித்தபின்னர் அதனை நசுக்குவதற்கும் தாம் மிகுந்த சிரமப்பட்டதற்கும் இரு காரணங்களை பிரித்தானியர் இனம்கண்டனர். ஒன்று கண்டியை சிறப்பாக கண்காணித்து நிர்வகிப்பதற்கு மலைப்பாங்கான கண்டி பிரதேசத்தினை பாதைகளால் இணைக்கவேண்டும். மற்றையது தமக்கு விசுவாசமான உள்ளூர்த் தலைவர்களை உருவாக்கி தமது நிர்வாகத்தில் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பதாகும். 1818 இல் கிளர்ச்சியை அடக்குவதற்கு தமது படைகளை அனுப்பியதன் மூலம் கண்டி இராச்சியத்தில் […]
இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு நாட்டின் பூர்வீகக் குடிகளுக்கும் அவரவர்களுக்கான பல சிறப்புரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா ஏன் நமது அண்மைய நாடான இந்தியாவிலும் கூட மிகத்தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் எமது நாடான இலங்கையில் பூர்வகுடிகளான வேடர் என்போர் அரும்பொருட்காட்சியகத்தில் இருக்கும் காட்சிப்பொருட்களாகவும், அழிந்து வரும் உயிரினம் ஒன்றை பாதுகாக்க வேண்டிய பச்சாதாபச் சிந்தனையுடனும் தான் பார்க்கப்படுகின்றனர். இன்னமும் வேடுவர் என்பவர்களுக்கான அடையாளமானது இலையும் குழையும், அம்பு […]
கீழைக்கரை தொடர்பான வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்கு மூன்று வகையான ஆதாரங்களை நாம் பயன்படுத்தலாம். முதலாவது பொறிப்புச் சான்றுகள், இரண்டாவது எழுத்துச் சான்றுகள், மூன்றாவது வாய்மொழி மற்றும் தொன்ம மரபுரைகள். பொறிப்புச் சான்றுகள் (Epigraphic evidences) என்பதன் மூலம் நாம் கருதுவது, கல்லிலும் செப்பு, பொன், ஐம்பொன் முதலிய உலோகங்களிலும் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, சாசனச் சான்றாதாரங்களை எழுத்துச் சான்றுகளில் பாலி இலக்கியங்கள், சிங்கள இலக்கியங்கள், வடமொழி இலக்கியங்கள், தமிழக இலக்கியங்கள், ஈழத்தமிழ் இலக்கியங்கள், […]
[இலங்கையின் பாலுற்பத்தி தொடர்பான இந்த கட்டுரைத் தொடர் தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதாரப் பின்னடைவுக்கு முந்தைய விடயங்களையே அதாவது சாதாரண நிலையில் உள்ள விடயங்களையே ஆராய்கிறது. அண்மைய பொருளாதார நெருக்கடி பாலுற்பத்திக் கட்டமைப்பை எந்த வகையில் பாதிக்கின்றது என்பதை இந்தத் தொடரின் பிறிதொரு கட்டுரையில் தனியாக ஆராய்வோம். இங்கு தரப்படும் புள்ளி விபரங்கள் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முந்தியவை] இலங்கையில் 1977 ஆண்டில் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட முன்னர் […]
கடந்த சில பத்தாண்டுகள், மரபுரிமைகளை இனங்காணல், அது தொடர்பான கருத்தாடல்கள், செயற்பாடுகளில் பல முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்துள்ளதை எடுத்துக்காட்டியுள்ளன. குறிப்பாக அனைத்து வகைப்பட்ட போர்கள், இனவழிப்புக்கள், சர்வாதிகாரம், காலனியங்கள் முதலியவற்றைப் பிரதிபலிக்கும் வெளிப்பாடுகளை மரபுரிமையின் பகுதியாகக் கொள்ளும் போக்கு முக்கியமானதாகும். இவற்றை இன்று ‘வன்செயல் மரபுரிமை’ (violence heritage) என்ற பெயரால் இப்புதிய பார்வைகள் சுட்டுகின்றன. இவை இருண்ட, எதிர்மறையான, வலிமிகுந்த, அதிருப்தி நிறைந்த, கடினமான நிலைமைகளது வாழும் சாட்சியங்களாகப் […]
அரசாங்கத்தினதும் துரைமார்களதும் தொழிலாளர் விரோத நடத்தைகள், சட்டங்கள், கொள்கைகள் தொடர்பிலான சேர். பொன். அருணாசலத்தின் கண்டன நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து எரிச்சலையும் சங்கடத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்தன. அதன் காரணமாக பல அரச உயர் அதிகாரிகள் சேர். பொன். அருணாசலம் அரசின் சுமுகமான நிர்வாக நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுகின்றார் என்று காலனித்துவ செயலாளருக்கு புகார் கடிதங்கள் வாயிலாக அறிவித்தனர். குறிப்பாக அப்போது சட்டமா அதிபராக கடமையாற்றிய அன்டன் […]
ஆங்கில மூலம்: – அலெய்ன் ஜி. கக்நொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன் பிரஞ்சும் ஆங்கிலமும் இக்கட்டுரைத்தொடரின் முதலாவது தொடரில் பன்மைத்துவத்தின் மத்தியில் ஒற்றுமையை பேணுவதில் கனடா தேசம் வெற்றி கண்டுள்ளது என மதிப்பிடப்படுகின்றது. இந்த வெற்றியின் பின்னணியில் கனடா மாதிரியின் (Canadian model) சில தனித்துவமான பண்புக்கூறுகள் அமைந்துள்ளன. 1. அது சமஷ்டியாக இணைந்துள்ள ஒரு சமூகம். 2. ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளித்தல், அரசியல் யாப்புவாதம் […]
ஆங்கிலத்தில் பேராசிரியர் B. E. S. J. பஸ்தியம்பிள்ளை ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்க காலம் பிரடரிக் நோர்த் (1798 – 1805) முதலாவது ஆங்கிலேய ஆளுநராக இருந்தார். இவர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சாதிய ஒழுங்கமைப்பு நிர்வாகத்தின் அடிப்படையாக இருந்தது. இதனை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளும் நடைமுறை பின்பற்றப்பட்டது. வடஇலங்கையில் சாதித் தலைமைக்காரர் முறையை (Caste headman system) நடைமுறைப்படுத்திய பிரித்தானியர், கரையார் போன்ற சாதியினரின் தலைமைக்காரர்களாக அவ்வச் சாதிகளைச் சேர்ந்தவர்களே கடமையாற்ற […]
இலங்கையில் வாழும் இந்திய தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் இன்றும் பெருந்தோட்டப் பிரதேசங்களிலேயே தொழில்செய்தும் வாழ்ந்தும் வருகின்றனர். அவர்கள் “தோட்டத் தமிழர்”, “பெருந்தோட்டத் தமிழர்”, “மலையகத் தமிழர்”, “உயர்நிலப்பிரதேசத் தமிழர்” போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். “உயர்நிலப்பிரதேசத் தமிழர்” (Uda Palatha Tamils) என்ற பெயர் மலையகத் தமிழரை வடக்கு – கிழக்கைச் சேர்ந்த இலங்கைத் தமிழரிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்கு சிங்கள மக்களால் கையாளப்படுகின்ற ஒரு பெயரும், “மலையகத் தமிழர்” என்ற பெயர் […]
“நான் திருநங்கையாக இருப்பது இயற்கையானது” என்கிறார் கவிதா. இந்த சமூகத்தில் கவிதாவைப் போல பலர் தமது பால்நிலை குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். குயர் மக்கள் என்போர் யார்? அவர்களை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா? இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா? இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்? என்றவாறாக ஏராளமான வினாக்கள் […]