October 2022 - Page 2 of 2 - Ezhuna | எழுநா

October 2022 தொடர்கள்

தமிழர் தொடர்பாக பலரும் அறிந்திருந்த 5 பிராமிக் கல்வெட்டுக்கள்

10 நிமிட வாசிப்பு | 17784 பார்வைகள்

“தமெத”எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ள ஐந்து கல்வெட்டுக்களும் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம், வடமாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் பெரிய புளியங்குளம், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் குடுவில், மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சேருவில ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுக்கள் பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் பொறிக்கப்பட்டவையாகும்.  தமிழர் எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ள இவ் ஐந்து கல்வெட்டுக்கள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. […]

மேலும் பார்க்க

இரசவர்க்கம் – மூலிகை மருந்துகள்

12 நிமிட வாசிப்பு | 14950 பார்வைகள்

கருஞ்சீரகம் கருஞ்சீரகத்தாற் கரப்பனும்புண்ணும்வரும்சீராய்ப் பீனிசமும் மாறுமே – அருந்தினால்காய்ச்சல்தலைவலியும் கண்வலியும்போமுலகில்வாய்ச்ச மருந்தெனவே வை இதன் பொருள்: கருஞ்சீரகத்தால் கரப்பனும் புண்ணும் மாறும். பீனிசமும் மாறும். காய்ச்சல், தலைவலி, கண்வலி என்பவற்றையும் கருஞ்சீரகம் துரிதமாகத் தீர்த்துவைக்கும். உலகத்தில் நமக்கு அருமையாகக் கிடைத்த மருந்து இது என்று அறிந்து கொள்வாயாக. மேலதிகவிபரம்: அரபு நாட்டவர்களால் அருமருந்தாக எண்ணப்படுவது கருஞ்சீரகம். சாவு ஒன்றைத்தவிர மீதி எல்லா நோய்களையும் தீர்த்துவைக்கும் ஆற்றல் கருஞ்சீரகத்துக்கு உண்டு என […]

மேலும் பார்க்க

இலங்கையின் முதலாவது மருத்துவக் கல்லூரி

10 நிமிட வாசிப்பு | 16484 பார்வைகள்

மருத்துவர் கிறீன் 1847 இல் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முதலாவது சத்திர சிகிச்சையால் பண்டிதர் முத்துத்தம்பி உயிர்பெற்றமை அன்றைய காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற சுதேச மருத்துவராக விளங்கிய இளையதம்பியின் மைந்தன் வைத்திலிங்கத்துக்கு ஆங்கில மருத்துவத்தையும் சத்திரசிகிச்சை முறையையும் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. வட்டுக்கோட்டையில் மருத்துவப் பணியை ஆரம்பித்த மருத்துவர் கிறீன், அமெரிக்க மிஷனரிகளது வேண்டுகோளை ஏற்று மானிப்பாய்க்குச் சென்று அங்கு தனது மருத்துவப் பணியைத் தொடர்ந்தார். யாழ்ப்பாணத்திலே மருத்துவ […]

மேலும் பார்க்க

தமிழ் காங்கிரஸ் X தமிழரசுக் கட்சி

26 நிமிட வாசிப்பு | 17940 பார்வைகள்

1950கள் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் முக்கியத்துவம் மிக்க ஆண்டுகளாகும். 1948 இல் தமிழ் காங்கிரசிலிருந்து எஸ். ஜே. வி. செல்வநாயகம் பிரிந்து சென்று தமிழரசுக் கட்சியை ஆரம்பித்திருந்தாலும் 1950 களில் இருந்தே அவருடைய பிரசாரத்தினை தீவிரமாக முன்னெடுத்தார். இதேபோன்று 1951இல் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை உருவாக்கினார். இவ்வாறு இரு இனங்களின் இரு கட்சிகளுக்கிடையே பிளவு ஏற்பட்டதனால் தமிழ் காங்கிரஸ் […]

மேலும் பார்க்க

இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள் – பகுதி 4

7 நிமிட வாசிப்பு | 24700 பார்வைகள்

பெருங்கற்காலப் பண்பாடும் தற்காலத் தமிழர் பண்பாடும் தமிழ் சிங்கள மக்களின் பண்பாட்டு வேறுபாடுகள் மொழிகளின் வேறுபாட்டால் தோன்றியதெனக் கூறும் அறிஞர்களில் சிலர்  இனத்தால் அவர்களின் மூதாதையினர் இயக்கர், நாகர்களின் வழித்தோன்றல்கள் எனக் கூறுகின்றனர். ஆயினும் அம்மக்களின் பண்பாட்டுடன் சிங்கள மக்களுக்குள்ள தொடர்புகளும், நினைவுகளும் பௌத்த மதத்தின் வருகையோடு தோன்றிய புதிய பண்பாட்டால் மறைக்கப்பட்டது அல்லது மறக்கப்பட்டன என்றே கூறலாம். ஆனால் இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அப்பண்பாட்டு அம்சங்கள் சிறப்பாகப் பெருங்கற்காலப் […]

மேலும் பார்க்க

தொழிலாளர்கள் மீதான சட்டத்தின் பாய்ச்சல்; எதிர்விளைவுகளும் மாற்றங்களும்

8 நிமிட வாசிப்பு | 9503 பார்வைகள்

கோ. நடேசய்யரின் அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மக்களைச் சென்று அடைவதற்கு முன்னரேயே நகர்ப்புற மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காக மிக உரத்துக் குரல் கொடுத்தவர் சேர். பொன். அருணாசலம் (1853 – 1924) என்றால் அது மிகையாகாது. இவரது கருத்துக்கள் மிக ஆணித்தரமாகவும்  உச்சந்தலையில் சம்மட்டி கொண்டு  ஓங்கி அடிப்பது போலவும் காணப்பட்டன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணம் அவர் கொண்டிருந்த புரட்சிகரமான கருத்துக்கள், பிரித்தானிய பாராளுமன்ற […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகளில் சிறுதானியங்கள்

11 நிமிட வாசிப்பு | 19552 பார்வைகள்

வரகு, கம்பு, சோளம், சாமை, குரக்கன், தினை போன்ற சிறுதானியங்கள் பாரம்பரிய உணவுப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. சிறுதானியங்கள் பெரும்பாலும் வறட்சியிலும் விளையக்கூடிய பயிர்களாகும். ஏனைய தானியங்களுடன் ஒப்பிடும்போது சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம். B வகை உயிர்ச்சத்துகளையும், பொஸ்பரஸ், இரும்புச்சத்து, கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம், நாகச்சத்து போன்ற கனிமங்களையும் கொண்டுள்ளன. இதன் மூலம் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாகவும், நார்ச்சத்து விற்றமின்கள், கனிமங்கள் போன்றவற்றையும் கொண்டிருப்பதால் சிக்கல் தன்மையுள்ள மாப்பொருளாகவும் (Complex […]

மேலும் பார்க்க

புதுத்தொழில்முனைவோர் மனத்தன்மை (Entrepreneur Mindset)

7 நிமிட வாசிப்பு | 23127 பார்வைகள்

 “வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற” — திருக்குறள் (661) மு.வரததாசனார் விளக்கம்: ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய  மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை. திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்