கீழைக்கரை தொடர்பான எழுத்துச் சான்றுகளில் பௌத்த பாளி (பாலி – pāli) இலக்கியங்கள், சிங்கள இலக்கியங்கள், தமிழக இலக்கியங்கள், ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள், பிறநாட்டவரின் பயணக்குறிப்புகள், காலனித்துவ காலக் குறிப்புகள் என்பன அடங்கும். பாளிமொழி இலக்கியங்கள் புத்த சமயத்தின் பரவலோடு, பாளி மொழியில் பல இலக்கிய முயற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் “வம்சக்கதை” என்ற வகையறாவைச் சேர்ந்த நூல்கள் முக்கியமானவை ஆகும். குறிப்பிட்ட புத்த சமயப் பேசுபொருளொன்றை அல்லது பலவற்றை […]
குயர் சமூகத்தின் பன்மைத்துவத்தையும் சமூக ஏற்பையும் நோக்கிய ஏராளமான செயற்பாடுகள் மற்றும் குயர் நிகழ்வுகள் உலகளாவிய ரீதியில் நீண்டகாலமாக இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் சமூக, பொருளாதார, அரசியல் போன்ற பல்வேறு தளங்களிலும் குயர் மக்கள் தமக்கான வெளிகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதை நோக்கியே நகரசெய்கின்றன. குயர் மக்கள் தமது காதல் வாழ்க்கையிலும் மற்றவர்களைப் போலவே வாழ விரும்புகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் நிறையப் போராடவேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சமூக ஏற்பு நோக்கி இது […]
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் நகரின் தெற்கில் 16 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள சேருவில என்னுமிடத்தில் இக் கல்வெட்டு காணப்படுகிறது. சேறுவில்லு எனும் பெயரே சேருவில என திரிபடைந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்விடத்தைச் சுற்றி சேறு நிறைந்த பல வில்லுக் குளங்கள் இருந்ததாகவும், இதன் காரணமாக இப்பெயர் உருவானதாகவும் தெரிகிறது. பண்டைய காலத்தில் இது “சேறுநகரம்” எனப் பெயர் பெற்று விளங்கியது. சிங்கள மொழியில் இது “சேருநுவர ராஜதானிய” என […]
யாழ். போதனா மருத்துவமனையின் தாபகர் சேர். பேர்சிவல் ஒக்லண்ட் டைக் (Sir Percival Acland Dyke) சேர் பேர்சிவல் ஒக்லண்ட் டைக் யாழ்ப்பாணத்தின் முதலாவது அரசாங்க அதிபராகக் கடமையாற்றியவர். டைக் 01.10.1829 அன்று யாழ்ப்பாணத்தின் கலெக்டராகப் பதவியேற்றார். கோல்புறூக் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய கலெக்டர் பதவி அரசாங்க அதிபர் பதவி எனப் பெயர் மாற்றப்பட்டது. கலெக்டராகப் பதவி வகித்த டைக் 01.10.1833 அன்று யாழ்ப்பாணத்தின் முதலாவது அரசாங்க அதிபராகப் பதவியேற்றார். டைக் […]
“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு”. — திருக்குறள் (467) மு.கருணாநிதி விளக்கம்: நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்;இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு. புதிய தொழில் முயற்சிகளை தொடங்குவதென்பது அவ்வளவு இலகுவானதல்ல. அந்த வல்லமை எல்லோருக்கும் வாய்த்தும் விடாது. புதிய தொழில் என்பது தனியே வர்த்தகம் என்பதாக அர்த்தப்படாது. அது அறிவியல் பாதி, செய்கலை பாதி கலந்து செய்த நுட்பத்தினூடாகவே புதிய சிந்தனைகளும், அதன் […]
இலங்கையிலுள்ள பசு மாடுகளும் எருமை மாடுகளும் அதிகளவு உள்ளூர் வகையை சேர்ந்தவை. அவற்றின் சாராசரி உற்பத்தி ஒரு லீட்டருக்கும் குறைவாகும். இந்த மாடுகளைக் கொண்டு எதிர்பார்த்த பாலுற்பத்தியை பெற்று தன்னிறைவு காண முடியாது. [இலங்கையைப் பொறுத்த வரையில் வருடாந்தம் 1250 மில்லியன் லீட்டர் பால் தேவைப்படுகின்ற போதும் உள்ளூரில் 500 மில்லியன் லீட்டர் அளவிலேயே பால் உற்பத்தி செய்யப் படுகிறது. மிகுதி 750 மில்லியன் லீட்டர் பால் வெளிநாடுகளில் இருந்தே […]
இந்திய வம்சாவழி பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க ரீதியாகவும், வர்த்தகரீதியாகவும் ஸ்தாபனப்படுவதற்கு முன்னரே அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கொழும்பிலும், சர்வதேச ரீதியாகவும் பலமாக குரல் எழுப்பப்பட்டது என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. இலங்கையில் மாத்திரம் அன்றி பல்வேறு உலக நாடுகளிலும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து சென்று வாழ்ந்த இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் பற்றி பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்தன. அவற்றுள் அடிமைத்தனத்துக்கு எதிரான சங்கம் (anti slavery society), பிரித்தானியாவில் இயங்கிய […]
அறிமுகம் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் (ஆய்வுகளில் போதாமை இருக்கிற போதிலும்) ஆய்வுகளின் அளவுக்கு அவர்களின் இனத்துவ மரபு, சமூகவியல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. பொதுவாக இலங்கை முஸ்லிம்கள் குறித்து முஸ்லிம் வரலாற்றாய்வாளர்களாலும், அறிஞர்களாலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சார்பியத்தன்மையும், மதப் புனித நோக்குகளையும் கடக்க முடியாத அகச் சிக்கலுடன் இருப்பவை. இந்த ஆய்வுகளை நோக்கும் போது முஸ்லிம்கள் குறித்து ஓரளவு அறிவியல் தன்மையுடன் கூடிய ஆய்வுகள் இங்கு நிகழவில்லை […]
மரபுரிமை பற்றிய பாரம்பரிய உரையாடல்கள் மரபுரிமைகளை இயற்கை மரபுரிமை, பண்பாட்டு மரபுரிமை என்று பாகம்பிரித்துக் கொள்ளும். ஆனால் அண்மைய பத்தாண்டுகளில் மரபுரிமை பற்றிய கற்கைப்புலம் பெருவிரிவு கண்டுள்ளதுடன் உள்ளடக்க ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அது மேலும் செழுமை பெற்றுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப பெருவெடிப்பு மரபுரிமைப் புலத்தின் சாத்திய எல்லைகளை அகலித்துவிட்டுள்ளது. அவ்வகையில் உருவான புதிய சாத்தியமும், பாகமுமாக எண்மிய மரபுரிமை (digital heritage) அமைகிறது. எண்மிய மரபுரிமை என்பது […]
பெண்களது கடந்தகால – நிகழ்கால சாதனைகளைக் கொண்டாடும் சர்வதேச மகளிர்தினம் (International Women’s Day) முதன்முதலாக 1911 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி கொண்டாடப்பட்டது. ஒரு நூற்றாண்டு காலமுடிவில் 2011 ஆம் ஆண்டு அது நினைவுகூரப்பட்டதோடு, ஒவ்வொரு வருடமும் அதேதினத்தில் பூகோளரீதியாகத் தொடர்ந்து அது கொண்டாடப்பட்டும் வருகிறது. அவ்வாறு கொண்டாடப்படும்போது ஏதாவதொரு முக்கிய விடயத்தைக் கருப்பொருளாக வைத்தே அத்தினம் கொண்டாடப்படும். அண்மைக்காலங்களில் பெண்களது சமூக – […]