இலங்கையில் இந்து மதத்துக்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு உண்டு. பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி எழுந்த பாளி இலக்கியங்கள் கி. மு. 3ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரே இலங்கையில் இந்து மதமும், அந்த மதம் சார்ந்த ஆலயங்களும் இருந்ததாகக் கூறுகின்றன. அவற்றுள் கிழக்கிலங்கையில் இருந்த இற்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று சிவன் ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகின்றது. சமகால இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு – […]
பிரித்தானியர் இலங்கையின் மன்னராட்சி முறைமையினை ஒழித்து, ழுழு நாட்டையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்ததுடன், அவர்களின் ஏகபோக நலனுக்காக பல்வேறு மாற்றங்களை செய்திருந்தமையினை முன்னைய கட்டுரையில் அவதானித்திருந்தோம். அதன்தொடர்ச்சியினை இனி பார்க்கலாம். 1830 களின் முற்பகுதியில், பிரித்தானியர்கள் இலங்கையில் தங்கள் நிலையை உறுதிப்படுத்துவதை கிட்டத்தட்ட பூர்த்திசெய்துவிட்டனர். ஐரோப்பாவிலும் உலக அரங்கிலும் அவர்களுக்கு பெரிய சவால்கள் இருக்கவில்லை. எனவே தீவின் அரசியல் ஸ்திரத்தன்மையிலும் பொருளாதார இலாபத்தைப் பாதுகாப்பதிலும் அவர்கள் அதிக ஆர்வம் […]
ஆங்கிலத்தில் பேராசிரியர் B. E. S. J. பஸ்தியம்பிள்ளை இலவச பொது ஊழியம் சாதி வழமைகளை மீறக்கூடாது என்ற கடும்போக்கிற்கு உதாரணமாக திகழும் இன்னொரு பிணக்கு 1830 ஆம் ஆண்டில் எழுந்ததை சுட்டிக்காட்டலாம். மீன்பிடித்தொழில் செய்வோரில் ஒரு பிரிவினரான திமிலர் என்ற சமூகப்பிரிவினரிடம் மணியகாரர் என்னும் உயர்நிலை அதிகாரி ஒருவர் பொது வேலையை இலவச ஊழியமாக வழங்கும்படி கட்டளையிட்டார். யானைகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கான இறங்குதுறை அமைப்பதற்கு பனங்குற்றிகள் தேவைப்பட்டன, […]
உளுந்து, சிறுபயறு, பயறு, கடலை, காராமணி (கௌபி), துவரை, கொள்ளு, எள் என்பன பொதுவாக எமது பாரம்பரிய உணவுகளில் பாவிக்கப்படும் பருப்பு வகைகளாகும். இவற்றைவிட மொச்சை, பட்டாணி, பொட்டுக்கடலை போன்று வேறுவகை பருப்புவகைகளும் பாவனையில் இருந்துவருகின்றன. மேற்படி பருப்பு வகைகள் புரதச்சத்து நிறைந்தனவாகவும், பெரும்பாலும் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. காலை, இரவு உணவுகளாக, சிற்றுண்டி வகைகளில், மதிய உணவுடன் கறிகளாக அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. புரதச்சத்து அதிகம் கொண்டிருக்கின்றமையால் […]
வாய்விளங்கம் போய்விளங்கும் வாயுவையே போக்கும்புகல ரியவாய்விளங்கம் தனையே வகையாக்கேள்-நீவிளங்கஎண்பது வாதம் போம் ஏந்திழையீர்கேளீர்உண்பதற்கு நல்லதென்றே யோது இதன் பொருள்: வாய்விளங்கம் வாய்வைப்போக்கும். எண்பது வகையான வாதங்களையும் போக்கும். உண்பதற்கும் நல்லது. வாய்விளங்கத்தின் மிக முக்கியமான மருத்துவப்பயன் ஒன்றை இரசவர்க்கம் குறிப்பிடத்தவறிவிட்டது. நாடாப்புழு (tapeworm), கொக்கிப்புழு போன்ற குடற்புழுக்களுக்கு வாய்விளங்கம் சிறந்த மருந்தாகக் கூறப்படுகிறது. உலகப்பிரசித்திபெற்ற மருத்துவ ஆய்விதழான ‘தி லான்செற்’ (The Lancet) 1887 ஆம் ஆண்டிலேயே நாடாப்புழுவுக்கு வாய்விளங்கம் […]
கசக்கிப் பிழிந்து, அடக்கி ஆண்டு, வன்முறையின் பிடியில் வைத்திருந்து, தொழிலாளரிடமிருந்து உழைப்பை உச்ச அளவில் பெற்றுக் கொள்கின்ற பாங்கு பெருந்தோட்ட வரலாற்றின் முழுப்பக்கங்களிலும் ஒரு கறைபடிந்த காரணியாக இருந்தது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இதற்கென பல்வேறு வழிமுறைகளை துரைமார்கள் தேர்ந்தெடுத்து கடைப்பிடித்துள்ளனர் என்பதற்கு பலமான ஆதாரங்கள் உள்ளன. அதிகம் படிக்காத முரட்டு சுபாவமும் சண்டித்தனமும் மிக்கவர்களை துரையாகத் தேர்ந்தெடுத்தல், (எனது கண்டிச் சீமையிலே என்ற நூலில் “உலகெங்கும் இருந்து […]
வவுனியா நகரின் வடகிழக்கில் 13 கி.மீ தொலைவில் உள்ள பெரிய புளியங்குளம் எனும் இடத்தில் உள்ள குளத்தின் அருகில் ஒரு உயரமான கற்பாறைத் தொகுதி காணப்படுகிறது. சுமார் 100 அடி உயரமான ஒரு நீண்ட பாறையின் மீது மூன்று பெரிய கற்பாறைகளும், ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய கற்பாறைகளும் தூக்கி வைத்தாற்போல் இயற்கையாகவே அமைந்துள்ளன. குடும்பத் தலைவன் விசாகன் பற்றிய இரண்டாவது கல்வெட்டு பெரிய புளியங்குளத்தில் காணப்படும் இரண்டாவது கல்வெட்டில் “தமெத […]
மருத்துவர் ஐரா கௌல்ட் 1850 இல் யாழ்ப்பாணம் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தின் மருத்துவமனை (FINS Hospital – தற்போதைய போதனா மருத்துவமனை) ஆரம்பிக்கப்பட்டபோது மருத்துவமனையின் முதலாவது டிஸ்பென்சராகவும் முதலாவது வதிவிட சத்திரசிகிச்சை மருத்துவராகவும் கடமையைப் பொறுப்பேற்றார். (Ira Gould, Alias Antho Simon of Pandaiteripo, First Dispenser and Resident Surgeon of the Jaffna Friend-in-Need Society’s Hospital). மருத்துவர் ஐரா கௌல்ட் 1858 வரை […]
அறிமுகம் இந்த உலகில் வாழ்கின்ற மனித இனம் தனக்கென்று ஒரு தனித்துவமான நாகரீகத்தையும், சமூக அடையாளங்களையும் மற்றும் நீண்ட வரலாற்றுப் பின்னணியையும் கொண்டது. இதில் மூத்த இனமாக தமிழினம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இதனால்தான் நாமக்கல் கவிஞர், தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு’ என்று தமிழரை அடையாளப்படுத்தினார். மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதனை விட எப்படி வாழக் கூடாது என்ற வாழ்வியலையும் மற்றும் அனுபவ அறிவியலையும் […]
ஆங்கில மூலம்: – அலெய்ன் ஜி. கக்நொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன் கனடாவின் சமஷ்டியின் வரலாறு ‘பிரிந்து வேறாதல்’ ‘ஒன்றாக இணைதல்’ என்ற இருவேறு செயல்முறைகளும் சமாந்தரமாகச் செயற்பட்டதொன்றாகவே இருந்துள்ளது. சமஷ்டிச் சட்டம், 1867 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தில் பின்வரும் மூன்று விடயங்கள் கூறப்பட்டுள்ளன. பெரிய பிரித்தானியாவின் முடிக்குரிய டொமினியன் நாடாக கனடா விளங்குகிறது. கனடா மாகாணம், நோவாஸ்கொட்டியா மாகாணம், நியுபிறன்ஸ்விக் மாகாணம் என்பன கனடா சமஷ்டியில் இணைவதை […]