தன்பாலீர்ப்பு என்பது வடபுல சமூகத்தளத்தில் பெரும்பாலானவர்களால் விலக்கப்பட்ட (Taboo) ஒரு விடயமாகப் பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக தன்பாலீர்ப்பாளர்கள் இந்த சமூகத்திற்குள் தம்மை வெளிப்படுத்த முடியாதவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். பல போராட்டங்களுக்கு மத்தியில் தம்மை வெளிப்படுத்தும் தன்பாலீர்ப்பினரை இந்தச் சமூகம் பார்க்கும் பார்வை மதிப்பிற்குரியதுதானா? தன்பாலீர்ப்பு (Homosexual) என்பது ஒருவர் தன்பாலினத்தை சேர்ந்த ஒருவர் மேல் காதல் கொள்ளுதல் எனலாம். இதில் பெண் தன்பாலீர்ப்பாளர்கள் (Lesbian) மற்றும் ஆண் தன்பாலீர்ப்பாளர்கள் (Gay) […]
பயணங்களின்போது நூல்களை வாசிப்பதற்காகக் கொண்டு செல்லும் வழமை இன்றைய திறன்பேசி (Smartphone) யுகத்தில் அருகிவிட்டாலும் முற்றாக இல்லை என்று கூறிவிட முடியாது. இன்று புகையிரதப் பயணங்களில் திறன்பேசிகளில் இசையை, விரிவுரையைக் கேட்டவாறு செல்வார்கள்; பிடித்தமான ஏதோவொன்றைப் பார்த்தும் கேட்டும் ரசித்தும் பயணங்கள் தொடரும். 40 வருடங்களுக்கு முன்னர் 1975 – 1979 காலப்பகுதியில் கட்டுப்பெத்தை வளாகத்தில் (தற்போதைய மொரட்டுவப் பல்கலைக்கழகம்) கட்டுமானப் பொறியியல் (Civil Engineering) படிக்கச் சென்ற நாகலக்ஷ்மி […]
இலங்கையில் எழுந்த தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் கீழைக்கரையின் வரலாறு, பண்பாடு பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றில் யாழ்ப்பாண வைபவ மாலை, வையாபாடல், கைலாயமாலை, கோணேசர் கல்வெட்டு, கைலாச புராணம், திரிகோணாசல புராணம், மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், நாடுகாட்டுப்பரவணி என்பன முக்கியமானவை[1]. இவற்றோடு எழுந்த பெரியவளமைப்பத்ததி, குளக்கோட்டன் கம்பசாத்திரம், இராசமுறை ஆகிய நூல்கள் இன்று கிடைக்கப்பெறவில்லை. இலங்கையின் தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் மொழிநடை அடிப்படையிலும் பேசுபொருள் அடிப்படையிலும் 16ஆம் நூற்றாண்டுக்கு முற்படாதவை […]
“எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்நுண்பொருள் காண்ப தறிவு” – திருக்குறள் (424) சாலமன் பாப்பையா விளக்கம்: அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படிஎளியனவாகவும், அவர்மனங் கொள்ளும்படியும் சொல்லும்;பிறர் சொல்லும் கருத்து நுண்ணியதுஎன்றாலும் அதைஎளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு. இன்றைய கால வாழ்க்கையில் எம்மை மேலே உயர்த்தவும் நாட்டை அபிவிருத்தி செய்யவும், அத்தோடு உலகளாவிய வகையில் இணைந்து வாழ்வதற்கும் புதுத்தொழில் முறை (Startup companies) மிக்க உதவியாக இருக்கிறது. இந்த புதுத்தொழில் […]
இதுவரை உலகம் கண்டிராத தார்ப் பாதைகள், புகையிரத வண்டிகள், நீராவிக் கப்பல்கள், தொலைத்தொடர்புச் சாதனங்கள் அனைத்துமே இக்காலத்துக்குரியவை. 1760 ஆம் ஆண்டு முதல் 1820 – 1840 வரை – அதற்குப்பின்னரும் – பிரித்தானியாவில் தொடர்ந்த இயந்திரக் கைத்தொழில் புரட்சியே உலகத்தை நவீன யுகத்துக்குக் கொண்டுவந்தது. 1820 இல் தான் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் லவுடன் மக்அடம் (Johon Loudon MacAdam) என்பவரால் முதற்தடவையாக பாதைகள் கற்களால் சமப்படுத்தப்பட்டு கற்தூள்களால் […]
ஆங்கிலத்தில் பேராசிரியர் B. E. S. J. பஸ்தியம்பிள்ளை நொத்தாரிஸ் பதவி நியமனம் – நல்லூர் 1864ஆம் ஆண்டில் நல்லூர் பகுதியில் பொற்கொல்லர் சாதியைச் சேர்ந்த ஒருவரை அரசாங்க அதிபர் டைக் நொத்தாரிஸ் பதவிக்கு நியமித்தார். இந்த நியமனத்திற்கு அப்பகுதியின் உயர்சாதித் தலைமைக்காரர்களும், முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளியிட்டனர். தமது முடிவை நியாயப்படுத்தும் குறிப்புகளை டைக் பதிவுசெய்தார். நல்லூர் பகுதியில் உயர்சாதியினரால் தாழ்த்தப்பட்டவர் எனக் கருதப்படும் நபர் ஒருவருக்கு முன்னர் […]
1930 களை அடுத்து வந்த தசாப்தத்தில் இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களை பொறுத்தவரையில் சில சுவாரஸ்யமான அரசியல் மற்றும் தொழிற்சங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இத்தகைய நிகழ்வுகளில் ஜஹவர்லால் நேருவின் இலங்கைக்கான இரண்டு விஜயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவரது முதலாவது விஜயம் 1931 இலும் இரண்டாவது விஜயம் 1939 இலும் இடம்பெற்றன. இதற்கு முன் மகாத்மா காந்தி 1927ஆம் ஆண்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். மகாத்மா காந்தி அவர்களும் பண்டித நேரு அவர்களும் […]
அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகரின் தெற்கில் 13 கி.மீ. தூரத்தில் இறக்காமம் குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தின் வடக்குப் பக்கத்தில் மாயக்கல் எனும் சந்நியாசி மலை காணப்படுகிறது. இதை அடுத்து மாணிக்கமடு எனும் சிறிய கிராமமும், ஓட்டுத் தொழிற்சாலையும் அமைந்துள்ளன. இவற்றைக் கடந்தவுடன் குடிவில் எனும் கிராமம் காணப்படுகிறது. இக்கிராமத்தின் வடகிழக்கில் குடிவில் குளம் அமைந்துள்ளது. குளத்திற்கு சற்று தூரத்தில் கல்லோயா எனும் பட்டிப்பளை ஆறு ஓடுகிறது. கிராமத்தின் இடது […]
தோட்டத்தமிழ் மக்களின் மறைந்த தலைவர் திரு. சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டதும், அமரத்துவம் அடையும்வரை அவர் மந்திரிசபையில் ஒரு உறுப்பினராக இருந்துவந்ததும், 1988 ஆம் ஆண்டு பெருந்தோட்டச் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோருக்கு குடியுரிமையும் வாக்குரிமையும் வழங்கப்பட்டதும், மாகாணசபைமுறையுடன் நாடாளுமன்றம், மாகாணசபைகள், பிரதேசசபைகள் என்பவற்றிற்கான தேர்தல்களில் விகிதாசாரப்பிரதிநிதித்துவம் அறிமுகம் செய்யப்பட்டதும் தேர்தல் செயல்முறையில் இச்சமூகத்தைச் சேர்ந்தோர் கூடுதலான ஈடுபாடு காட்டுவதற்கு வழிவகுத்தன. மேற்படி காரணிகள் அரசியல் […]
வவுனியா வடக்கு பெரியமடுப் பகுதியைச் சேர்ந்த திருவாளர்களான த. சசிகரன், ப. செந்தூரன், வி. ஜெகதீஸ்வரன், இ. நகுலேஸ்வரன் மற்றும் வ. கிந்துஜன் ஆகியோர் அண்மையில் தமது நெற்காணிகளுக்கு காட்டு வழியூடாகச் சென்று வரும் போது அக்காட்டில் அழிவடைந்த சிறிய கேணிக்கு அருகிலுள்ள கற்தூண் ஒன்றை அடையாளம் கண்டனர். அக்கற்தூணில் புராதன எழுத்துக்கள் சில இருப்பதை அவதானித்த அவர்கள் அதுபற்றிய புகைப்படத்தை எமது தொல்லியல் பட்டதாரிகளான சுதர்சன் தம்பதியினருக்கு அனுப்பி […]