மருத்துவர் கிறீன் 1847 இல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். கிறீன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆங்கில மருத்துவ நூல்களை சுதேச மருத்துவர்கள் (சித்த மருத்துவர்கள்) வாங்கி, படித்துப் பயனடைந்தனர். சுதேச மருத்துவர்களிற் சிலர் தங்கள் பிள்ளைகளை மருத்துவர் கிறீனிடம் ஆங்கில மருத்துவம் பயில அனுப்பினர். இவை தனது பணிகுறித்த மனநிறைவை மருத்துவர் கிறீனுக்கு ஏற்படுத்தியது. கிறீன் முதற் 10 ஆண்டுகளில் 4 மருத்துவ அணி மாணவர்களைப் பயிற்றுவித்தார். ரி. கொப்கின்ஸ், […]
தமிழர் வரலாற்றுத் தொடக்கத்தை ‘சங்க கால இலக்கியத் தொகுப்புகளின்’ அடிப்படையில் வைத்து ஆய்வுக்குட்படுத்தும் மரபு இருந்து வந்தது; கல்வெட்டுப் படிகள், பண்டைக்கால நாணயங்கள், அதுவரை கண்டறியப்பட்ட தொல்பொருட் சின்னங்கள் ஆகியன அதற்கு உதவியாக அமைந்திருந்தன. இலக்கியங்கள் வெளிப்படுத்திய பண்டைக்கால நகரங்கள் எனப் பேசப்படுவன புலவர்களது கற்பனைகள் என கருதப்படும் நிலை இருந்தது. விஞ்ஞானபூர்வமற்ற அதீதப் புனைவுகளைத் தமிழ் ஆர்வலர்கள் ‘வரலாற்று’ முன்வைப்புகளாக வெளிப்படுத்திய நிலையில் அன்றைய நகரங்களும் அத்தகையன என […]
இலங்கையில் பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5 ஆம் நூற்றாண்டு வரை பிராமிக் கல்வெட்டுக்கள் எழுதப்பட்டன. அதன் பின்பு அதாவது 6 ஆம், 7 ஆம் நூற்றாண்டுகளில் கல்வெட்டுக்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதன் பின்பு 8 ஆம், 9 ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளிலே சில கல்வெட்டுக்கள் மட்டுமே பொறிக்கப்பட்டன. இவை தமிழ், சிங்களம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டன. […]
ஈழத் தமிழர்களின் மரபுரிமையைப் (Heritage) பாதுகாப்பதற்கான ஒரு வழிவரைபடத்தை இந்தக் கட்டுரை உருவாக்க முயல்கிறது. இன்று, ‘ஈழத் தமிழர்கள்’ என்ற பதப் பிரயோகம் புவியியல் ரீதியாக இலங்கைத் தீவுக்குள் வாழுகின்ற சிறுபான்மைத் தமிழர்களை மட்டுமின்றி, உலகில் வேறு எந்தப் பாகத்திலும் வாழும் இலங்கைத் தீவைச் சேர்ந்த தமிழர்களையும் இணைத்துக் கொண்ட கூட்டு அடையாளத்தைக் குறிக்கிறது. இன்று அது தன் புவியியல் எல்லை கடந்த உணர்வுத் திரட்சி; ஒடுக்குமுறையும், மனக்காயங்களும் கட்டமைத்த […]
பலாப்பழம் தித்திக்கும் வாதபித்த சேட்டுமங்கள் உண்டாக்கும்மெத்தக்கரப்பன் விளைவிக்கும்-சத்தியமேசேராப் பிணியெல்லாம் சேரும்மானிடர்க்குப்பாராய் பலாவின் பழம் இதன் பொருள்: பலாப்பழம் இனிப்பான சுவையை உடையது. வாதம் பித்தம் சிலேத்துமம் என்பவற்றின் சமநிலை கெடுவதால் ஏற்படக்கூடிய வியாதிகளைத் தோற்றுவிக்கும். பலாப்பழத்தால் எல்லாவிதமான வியாதிகளும் வந்துசேரும். மேலதிகவிபரம்: முக்கனிகளுள் ஒன்றாகக் கூறப்படினும் தமிழ் மருத்துவர்களைப் பொறுத்தவரையில் இதன்மேல் நல்ல அபிப்பிராயம் கிடையாது. காரணம் தெரியவில்லை. பதினேழாம் நூற்றாண்டில் தனது பதினான்காவது வயதில் கண்டி மன்னன் இரண்டாம் […]
மகாத்மா காந்தி பிரித்தானிய அரசுக்கு எதிரான தனது அகிம்சைப் போராட்டத்தை தனியே தனது இனத்தினை மட்டும் வைத்துக் கொண்டு நடாத்தியவரல்ல. பிரித்தானிய அரசுக்கு எதிரான அத்தனை சக்திகளையும் இனம், மதம், பிரதேசம் பார்க்காமல் ஒன்றுசேர்த்து ஒரு மக்கள் போராட்டமாகவே முன்னெடுத்தார். தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக 29 பேர் வாக்களித்திருந்தனர். அவர்களில் 10 பேர் மாத்திரமே தமிழர்களாவர். ஏனையவர்களில் 3 பேர் முஸ்லிம்களும் 16 பேர் சிங்களவர்களுமாவர். இங்கு தமிழ், […]
அறிமுகம் கைத்தொழில் புரட்சியின்போதே பசுமைப்புரட்சிக்கான அத்திபாரமும் இடப்பட்டது. எனினும் 17 ஆம் நூற்றாண்டில் அதாவது தொழிற்புரட்சி தோன்றுவதற்கு முன்பே விவசாயத்தில் புரட்சி ஏற்பட்டுவிட்டது. டச்சுக்காரர்களின் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மரக் கலப்பைகள், பொறிமுறை ரீதியில் இயக்கப்படும் விதை விதைக்கும் பொறிகள் மற்றும் சூடு அடிப்பதற்காக மனித, மிருக வலுக்களுமே பயன்படுத்தப்பட்டது. எனினும் ஐரோப்பாவில் நிலங்களைப் பண்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட புதிய விவசாயக் கருவிகளான, உருக்கு /இரும்புக் கலப்பைகள், கடப்பாரைகள், மிக வினைத்திறனாகவும் சம […]
எமது பாரம்பரிய உணவுப்பழக்கங்களில் எண்ணெய் வகைகளின் பாவனையானது மட்டுப்படுத்தியதொன்றாகவே இருந்து வந்துள்ளது. நாம் உட்கொள்ளும் உணவுகளில் தனியே கொழுப்பு உணவுகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. சமையலின்போது எண்ணெய் வகைகளானது பொரித்தல், தாளித்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றது. மாப்போசணைக் கூறுகளில் ஒன்றான கொழுப்புச்சத்துக்கு, மாமிச உணவு உண்பவர்களாயினும் சரி, சைவ உணவு உண்பவர்களாயினும் சரி பெரிதும் தங்கியிருப்பது தேங்காய்ப்பால், பால், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் என்பனவற்றில் ஆகும். தேங்காய்ப்பூவை கையினால் பிழிந்து தேங்காய்ப்பால் […]
‘I can’t breathe -என்னால் சுவாசிக்க முடியவில்லை’ – என்பது இந்தக் கொரோனாப் பேரிடரின் மத்தியில் உலகை உலுக்கிய வார்த்தை. அமெரிக்க கறுப்பினத்தவரான George Floyd அமெரிக்க வெள்ளையினக் காவல்துறையினால் குரல்வளை நெரித்துப் படுகொலை செய்யப்பட்ட போது George Floyd இருபது தடவைகள் சொன்ன ‘ஒரே வார்த்தை’. அமெரிக்காவில் மட்டுமல்ல உலகளாவிய அதிர்வலைகளையும் எதிர்ப்பலைகளையும் தோற்றுவித்திருந்தது. பல்வேறு நாடுகளில் இன-நிறவெறிக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களில் மக்கள் திரண்டனர். ‘Vi puster fortsatt […]
புகைபடர்ந்திருக்கும் இலங்கைத் தமிழரின் ஆதிகால, இடைக்கால வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டி வருவதில் தொல்லியற் கண்டுபிடிப்புக்களுக்கு முக்கிய இடமுண்டு. அக்கண்டுபிடிப்புக்களில் கல்வெட்டுக்கள் நம்பகரமான முக்கிய சான்றுகளாகப் பார்க்கப்படுகின்றன. அவை இலக்கியங்களைப் போல் விரிவான வரலாற்றுச் செய்திகளைத் தராவிட்டாலும் அவை வரலாற்றுச் சம்பவங்கள் நடந்த சமகாலத்திலேயே பெரும்பாலும் எழுதப்பட்டிருப்பதினால் அவற்றில் இருந்து அறியப்படும் வரலாற்றுச் செய்திகள் நம்பகரமானவையாகவே பார்க்கப்படுகின்றன. இவை ஒரு நாட்டில் வாழும் பல இன மக்கள் பற்றிய பாரம்பரிய வரலாற்று […]