இலங்கை, வேறுபட்ட மதங்களையும் தந்தையாதிக்கக் கருத்தியல்களையும் தன்னகத்தே கொண்டு கட்டமைக்கப்பட்ட பாரம்பரியமான பண்பாடுகளைப் பின்பற்றக்கூடிய பெரும்பாலான மக்களைக் கொண்ட ஒரு நாடு. இது பௌத்தர்கள் மற்றும் சைவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடாக இருக்கிறது. வடபுலத்தில் இருக்கக்கூடிய மக்கள் அதிகமாக சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். இங்கு தென்னிந்திய இந்துப் பண்பாட்டின் செல்வாக்குகளை அதிகம் காணலாம். “தன்பாலீர்ப்பு இயற்கைக்கு மாறானது. அது எங்களுடைய சமயத்துக்கும் கலாசாரத்திற்கும் எதிரானது. […]
இலங்கை முஸ்லிம் உப மரபினங்களில் மற்றொரு பிரிவினர் மேமன்களாவர். இவர்கள் மேமன் சமூகம் எனவும் அழைக்கப்படுகின்றனர். மேமன்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து வணிக நடவடிக்கைகளுக்காக 1800 களின் தொடக்கத்தில் இலங்கை வந்தனர். காலனித்துவ காலத்தில் வர்த்தக நோக்கங்களுக்காகவே இவர்கள் இலங்கையில் குடியேறியதாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பெரும்பாலான மேமன்கள் போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலப்பகுதியிலேயே இலங்கை வந்ததாக விக்கிபீடியாத் தகவல் ஒன்று கூறுகிறது. 1947 இல் இந்தியப் பிரிவினையை அடுத்து அவர்கள் இலங்கையின் நிரந்தரக் […]
1796 காலப்பகுதியில் திருகோணமலையின் ஆளுநராக இருந்த பன்-சென்டன் அவர்கள் திருகோணமலைக்கான தனது சுற்றுப்பயணத்தின் போது தம்பலகாமம் வயல் வெளியில் நாட்டப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றைப் பார்வையிட்டதாகவும், அக்கல்வெட்டின் காலத்தையும், அதில் எழுதப்பட்ட வரலாற்று விடயங்களையும் அறிந்துகொள்வதற்கும், அங்கு வாழ்ந்த மக்கள் உதவ முன்வரவில்லை எனவும், தனது பயணக் குறிப்பில் பதிவுசெய்துள்ளார். இந்தக்கல்வெட்டை 1930 களில் பார்வையிட்ட பேராசிரியர் பரணவிதான அந்தக்கல்வெட்டின் முன்பக்கத்திலுள்ள 11 வரிகளைப் படியெடுத்து அது பற்றிய செய்தியை முதன் […]
யாழ்ப்பாணப் பிரதேசத்தின் விவரங்களைக் காட்டுவதற்கெனச் சிறப்பாக வரைந்த நிலப்படங்களைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், இலங்கையைக் காட்டும் சில பழைய நிலப்படங்களில், பொதுவாக வடபகுதியைக் குறித்தும், சிறப்பாக யாழ்ப்பாணப் பகுதியைக் குறித்தும் எவ்வாறான தகவல்கள் உள்ளன எனப் பார்க்கலாம். இலங்கைத் தீவைக் காட்டும் நிலப்படங்களில் காலத்தால் முந்தியது, குளோடியஸ் தொலமியின் நிலப்படமாகும். இந்தக் கட்டுரைத் தொடர் குடியேற்றவாதக் காலத்துக்குரிய நிலப்படங்களையே குறிப்பாகக் கையாளுகின்றது. எனினும், குடியேற்றவாதக் காலத்துக்கு முந்திய இலங்கையைக் காட்டும் […]
நாடுகாட்டுப் பரவணியில் கிடைக்கும் இரண்டு சுவையான தகவல்கள் குறிப்பிடத்தக்கவை. ஒன்று, குலக்கலப்பு மற்றையது குலமுரண்பாடுகள் பற்றிய தகவல்கள். இராசபக்ச முதலியாரின் குடும்பம் முதலில் தளவில்லில் குடியேறியபோது, வழியில் கண்டெடுத்த வேடக்குழந்தையை பறைநாச்சி என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார்கள். சலவைத்தொழிலாளியினது மனைவி இறந்தபோது அந்தக் குழந்தையின் பரம்பரையே சலவைத்தொழிலாளர் வம்சம் தழைக்க உதவுகிறது. ஏனெனில், கொள்ளை நோய்களின் தாக்கம், குடித்தொகை எண்ணிக்கை குறைவு முதலிய காரணங்களால் மக்கட்செல்வம் மிக அருமையானதாகக் கருதப்பட்ட […]
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு” – திருக்குறள் (620) மு.வரததாசனார் விளக்கம்: எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும். ஐக்கிய அமெரிக்காவில் என் வாழிடம் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி. அதை சிலிக்கன் வலியென்றும் சொல்வர். அது முன்தொழில் நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவோருமுண்டு. இந்த இடம் இப்படி தொழில்நிறுவனங்களுக்கெல்லாம் தலைமையாக இருப்பதற்கு பல காரணங்கள் […]
2020-21 களில் நாடு முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய லம்பி தோல் நோய் [Lumpy skin disease] எனும் ஒரு வகை பெரியம்மை நோய் மீளவும் இந்த வருடம் (2023 இல்) வளர்ப்பு மாடுகளைப் பாதித்திருக்கிறது. மாடுகளின் உடல் முழுதும் சிறியது முதல் பெரியது வரையான வீக்கங்களை உருவாக்கும் இந்த நோய் கடந்த முறையை விட மாறுபட்ட விதத்தில் சற்று வீரியத்துடன் மாடுகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. மாடு வளர்ப்பாளர்களின் பொருளாதாரத்தைக் […]
இலங்கையின் வர்த்தகக்கொள்கைகளும் உறுகுவேசுற்று உடன்படிக்கைகளும் இறுப்புகள் GATT இல் கைச்சாத்திட்டுள்ள நாடுகளுள் இலங்கையும் ஒன்றாகும். எனவே, அது வர்த்தக இறுப்புகள் தொடர்பான உலகவர்த்தக தாபனத்தின் விதிகளைப் பின்பற்றவேண்டியது அவசியமாகும். உறுகுவேசுற்று விவசாய உடன்படிக்கையின் கீழ் விவசாயப்பண்டங்களின் மீதான இறுப்புகளின் உச்சவரம்பை இலங்கை 50.0 வீதமாக நிர்ணயித்துள்ளது. ஆனால், இன்று நடைமுறையிலிருக்கும் இறுப்புகள் இதிலும் பார்க்க குறைவானவையேயாகும். எனவே, மேற்படி உச்சவரம்பு எதிர்காலத்தில் இறுப்புகளை உயர்த்துவதற்கான ஒரு உச்சவரம்பேயாகும். உலக வர்த்தகத்தாபனத்தின் […]
ஆங்கில மூலம் – கெல்லி பிறியன் – பெல்ஜியம் சமஷ்டியின் சாதகமான அம்சங்கள் 1. பல்வேறு மக்கள் குழுக்களுக்கும் அவர்களின் குரலை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் பெல்ஜியம் சமஷ்டியை இலங்கைக்குப் பொருத்தமானதெனச் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் இனக்குழுமங்களின் பரம்பலில் பெல்ஜியம் போன்றதொரு நிலை காணப்படுகிறது. தமிழர் செறிந்து வாழும் பகுதியான வடக்குக் கிழக்கு, சிங்களவர் செறிந்து வாழும் ஏனைய மாகாணங்கள் என்ற மொழி அடிப்படையான பிரிவுகள் உள்ளன. இதனைவிட இலங்கையின் மத்திய […]