இலங்கைத் தேயிலையை உலக அரங்கில் பிரபல்யமடையச் செய்த முதலாவது நிகழ்வு 1888இல் ஸ்கொட்லாந்தில் நடைப்பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 4 சர்வதேச கண்காட்சிகளில் முதலாவது அறிவியல், கலை மற்றும் தொழில்துறை சர்வதேச கண்காட்சி 1888 மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கெல்விங்ரோவ் பூங்காவில் (Kelvingrove Park) நடந்தது. அங்கு இலங்கை தேயிலையும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இன்னும் வானொலியோ தொலைக்காட்சியோ […]
ஆங்கில மூலம் – கெல்லி பிறியன் – அறிமுகம் பெல்ஜியம் நாட்டின் சமஷ்டி ஆட்சி முறையை நெகிழ்ச்சியுடைய, வளைந்து கொடுக்கக்கூடிய சிறந்த முறையாக இன்று பலர் கருதுகின்றனர். அதன் ஆதரவாளர்கள் அதனை தனித்துவம் மிக்க ஒரு முறையாகக் கருதுகின்றனர். இலங்கையிலும் இதுபற்றிய ஆர்வம் வெளிப்பட்டுள்ளது. எல்லா இனக்குழுமங்களிற்கும் பிரதிநிதித்துவத்தை நன்முறையில் வழங்குவதோடு, உள்நாட்டில் தேசிய இனங்களின் முரண்பாடுகளைத் தணிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் பெல்ஜியம் வெற்றிகண்டுள்ளது. அது சமஷ்டியாக மாறுவதற்கான தீர்மானத்தை (1988இல்) […]
இந்த நாட்டில் இந்திய வம்சாவழி தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத சிந்தனை 1918 களிலேயே தோன்ற ஆரம்பித்து விட்டது. ஆரம்பத்தில் அது ஒரு பொருளாதார ரீதியான பொறாமையாக இருந்தது. ஏற்றுமதி – இறக்குமதி தொழிலை மையமாகக் கொண்ட ஒரு பொருளாதாரத்தின் எழுச்சி காரணமாக கொழும்பு மாநகரம் சனத்தொகைப் பெருக்கம் அடைந்து பெரும் பொருளாதார மையமாக வளர்ச்சி அடைந்தது. கொழும்பு துறைமுகம், ரயில்வே திணைக்களம், அச்சுக் கூடங்கள், தபால் தந்தி திணைக்களம் […]
வீரயுக முடிவில் மூன்று பேரரசுகளையும் தகர்த்துப் பலநூறு ஆள்புலங்களாகத் தமிழகத்தை ஆக்கியவாறு களப்பிரர்களது ஆட்சி ஏற்பட்ட சூழலில் தோற்றம்பெற்ற நூல் “திருக்குறள்”. இது மிகப் பெரும் சமூக மாற்றக் காலகட்டம்; பல தசாப்தங்களாக மேலாதிக்கத்துடன் திகழ்ந்த விவசாயச் சமூக சக்தியான கிழார்களின் திணையானது தனக்குரியதான அரச அதிகாரத்தை இழந்து வரும் அதேவேளை வணிகச் சமூக சக்தியின் மேலாதிக்கத்துக்கு அனுசரணை வழங்கும் ஆட்சி முறையைச் சாத்தியப்படுத்துகிற மாற்றம் நடந்தேறி வரத் தொடங்கி […]