பொலநறுவை பண்டைய நகரில் உள்ள ரங்கொத் விகாரையின் அருகில் 1905 ஆம் ஆண்டு இந்தக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. அப்போது இதன் அடியில் உள்ள பீடப்பகுதி உடைந்த நிலையில் இரண்டு தூண்டுகளாகக் காணப்பட்டது. பின்பு இக்கல்வெட்டு பொருத்தப்பட்டு, அனுராதபுரம் தொல்பொருள் காட்சிச்சாலையில் வைக்கப் பட்டுள்ளது. இக்கல்வெட்டு பொ.ஆ. 914-923 வரையான காலப்பகுதியில் ஆட்சி செய்த 5 ஆம் காசியப்பன் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு பிதர்வட்டு குழிய எனும் கிராமத்திற்கு கொடுப்பனவுகள் வழங்கப்படுவது மற்றும் […]
பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த இருபாலைச் செட்டியார் என்பவரால் இயற்றப்பெற்றதாகக் கருதப்படும் பதார்த்த சூடாமணியில் மிளகாயும் இடம்பெற்றுள்ளது. கவிதை வடிவிலான இந்நூலில் கூறப்பட்டுள்ள உணவுகளின் குணங்கள் பற்றி இத்தொடரில் ஆராயப்படுகின்றது. அவசியமான இடங்களில் சி. கண்ணுசாமிப்பிள்ளை அவர்களின் பதார்த்தகுணவிளக்கம் உள்ளிட்ட பிற தமிழ் மருத்துவ நூல்களில் இருந்தும் ஒருசில பாடல்கள் தரப்படுகின்றன. மிளகாய் தீதிலா மிளகாய்க்குள்ள செய்கையைச் சொல்லக் கேண்மோவாதமே சேடம் வாயு மந்தம் என் றினைய வெல்லாம்காதம்போம் […]
அறிமுகம் இலங்கை தனக்கென்று தனித்துவமான இயற்கையோடு இணைந்த விவசாயத்தை மேற்கொள்கின்ற ஒரு விவசாய நாடு. பல்லாயிரம் ஆண்டுகளாகவே எமது மூதாதையர்கள் எந்தக் காலநிலையில் என்னென்ன பயிர்கள் செழித்து வளரும், எந்த எந்தப் பயிர்களுக்கு என்ன சூழல் நிபந்தனைகள் தேவை போன்ற விடயங்களைக் கற்றதோடு, இந்த நாட்டிலே இயற்கையாகக் காணப்பட்ட தமது உணவுக்குத் தேவையான தானிய மற்றும் பழப் பயிர்களை இயற்கைநேயப் பண்ணை முறைகளை பயன்படுத்தி உற்பத்தி செய்து உண்டு மகிழ்ந்தனர். […]
இலங்கையில் வரலாற்றுப் பழமை வாய்ந்த பிராந்தியங்களில் வன்னிப்பிராந்தியமும் ஒன்றாகும். பிரித்தானியர் ஆட்சியில் இந்தப்பிராந்தியத்தில் அரச அதிகாரிகளாகக் கடமையாற்றிய லுயிஸ், பாக்கர் போன்ற அறிஞர்கள் தமது நிர்வாக நடவடிக்கைகளின் போது கண்டறிந்த, அழிவடைந்து காணப்பட்ட அரச மாளிகைகள், ஆலயங்கள், வழிபாட்டுச் சின்னங்கள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் கல்வெட்டுக்கள், நாணயங்கள் முதலான வரலாற்றுச் சின்னங்கள் உள்ள இடங்களைக் கட்டுரைகள், நூல்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர். அவற்றுள் செட்டிகுளம், கட்டுக்கரைக்குளம், பனங்காமம், அரசபுரம், கனகராயன்குளம், […]
நமது உணவுப் பாரம்பரியத்தில் சைவ உணவு, அசைவ உணவு என்ற வகைப்பாட்டுக்குள் சைவ உணவுப் பழக்கவழக்கங்களுள் பாலும் பால்சார்ந்த உணவுகளும் அடங்குகின்றன. மேலைத்தேய உணவு வகைப்பாடுகளுள் பாலினை தாவர உணவுகளுடன் சேர்த்து உண்ணுபவர்களை லக்ரோ வெஜிரேறியன் (Lacto vegetarians) என்பார்கள். மேலைத்தேயத்தவர்கள் தனியே தாவர உணவுகளை உண்பவர்களுக்கு (Pure vegetarians) சில ஊட்டச்சத்து குறைபாடுகள் வரும் என குறிப்பிட்டுள்ளார்கள். உதாரணமாக உடலுக்குத் தேவையான ஆனால் மனித உடலினால் தொகுக்க முடியாத, […]
ஆங்கில மூலம் : றொபேர்ட் எஸ் பேரின்பநாயகம் கட்டுரைக்குள் நுழைய முன்னர்… ’Caste, Religion and Ritual in Ceylon’ என்ற தலைப்பில் 1965 ஆம் ஆண்டு Anthropology Quarterly என்னும் பருவ இதழில் (1965.38(4): 218 -227) ஆய்வுக்கட்டுரையொன்றினை றொபேர்ட் எஸ். பேரின்பநாயகம் ஆங்கிலத்தில் வெளியிட்டார். இவ்வாய்வில் கூறப்படும் கருத்துக்களைத் தழுவியும், சுருக்கியும் இந்தக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஆங்கில மூலத்தில் ‘இலங்கை’ (Ceylon) எனக் குறிப்பிட்டுள்ளபோதும், கட்டுரையாசிரியர் யாழ்ப்பாணத்தைப் […]
யாழ்ப்பாணத்தில் வசித்த மருத்துவர் கிறீனுக்கு 1865 ஆம் ஆண்டு 2 ஆவது பெண் குழந்தை கிடைத்தது. பத்து வயதிலே தாயை இழந்த கிறீன் சிறுவயது முதல் தன்னை அரவணைத்து வளர்த்த லூசி என்னும் மூத்த சகோதரியின் பெயரைத் தனது 2 ஆவது குழந்தைக்குச் சூட்டினார். இந்த ஆண்டு 88 வயதான தனது தந்தை மசாசுசெட்சில் மறைந்த செய்தியை அமெரிக்காவிலிருந்து ஏறத்தாழ 3 மாதங்களுக்குப் பின்னர் கிடைத்த கடிதம் மூலம் கிறீன் […]
இலங்கையின் வரலாற்றுக் காலத்திலிருந்தே தமிழர்களும் சிங்களவர்களும் சமய நம்பிக்கை, மொழி, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் போன்ற பல்வேறு விடயங்களிலும் வேறுபட்ட இனங்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் அதிகளவு வாழ்ந்த வேளையில் தென்னிலங்கையிலும், மேற்குப் பிரதேசங்களிலும் சிங்களவர் வரலாற்றுக் காலம் முதலாக வாழ்ந்து வருகின்றனர். தென்னிந்திய மன்னர்களின் ஆக்கிரமிப்புகளின் காரணமாக இலங்கையின் சிங்கள இனத்தவர்களின் பார்வையில் தமது ஆக்கிரமிப்பாளர்களின் எச்சங்களே இங்குள்ள தமிழர்கள் என்ற காழ்ப்புணர்வு தொன்றுதொட்டு […]
அநுராதபுரம் பண்டைய நகரில் உள்ள தூபராம தூபியின் கிழக்கில் உள்ள கல் தோணி (Stone-Canoe) என்றழைக்கப்படும் இடத்தில் இந்தக்கல்வெட்டு காணப்படுகிறது. அழகாகச் செதுக்கப்பட்ட கற்பலகை ஒன்றில் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக்கல்வெட்டு பொ. ஆ. 956 முதல் 972 வரை இலங்கையை ஆட்சி செய்த 4 ஆம் மகிந்தன் காலத்தில் எழுதப்பட்டுள்ளது. கற்பலகையில் 6 அடி 5 அங்குல நீளமும், 2 அடி 8 அங்குல அகலமும் கொண்ட மேற்பரப்பில் […]
1948 ஆம் ஆண்டின் பிரஜாவுரிமைச் சட்டமானது ஒட்டுமொத்த இந்திய வம்சாவளித் தமிழர்களினதும் பிரஜாவுரிமையைப் பறித்ததுடன், இந்திய – பாகிஸ்தானிய முஸ்லிம்கள், போரா, மேமன், பார்சி போன்ற ஏனைய இனத்தவர்களின் பிரஜாவுரிமையைக்கூட விட்டு வைக்கவில்லை. இது இலங்கையின் ஜனநாயக அரசியலில் ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கியது. அத்துடன் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அவசர அவசரமாக 1949 ஆம் ஆண்டின் இந்திய – பாகிஸ்தானியர் வதிவிடப் பிரஜாவுரிமைச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு […]