எனது அம்மாவின் தந்தையார், வைத்தியான் சந்தியாகு இறக்கும்வரை பறிக்கூடு (Fishing Trap) வைத்து மீன்பிடித்தார். பறிக்கூடுகளை கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் அளவான தூரத்தில் கொண்டு சென்று அங்குள்ள முருகை, சல்லி, பார் என்று எம்மவரால் அழைக்கப்படும் பவளப்பாறைகளுக்கு இடையில் வைத்து விடுவார். அடுத்த நாள் வெயில் நன்றாக ஏறிய பின் பறிக்கூடுகளை மரக்கோலின் கொக்கியால் தோணிக்குள் எடுப்பார். மீன்களை பறிகளிலிருந்து எடுத்துவிட்டு, மறுபடியும் பறிக்கூடுகளை அதே இடத்தில் வைத்துவிட்டு […]