May 2023 தொடர்கள்

குயர் மக்களும் இணையவெளியும்

8 நிமிட வாசிப்பு | 10907 பார்வைகள்

உலகில் தொலை தூரத்தில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேண, இணையவழி ஊடகங்கள் வழிகோலின. இணைய வழி ஊடகங்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இன்று அவை இன்றியமையாதவையாக மாறி வருகின்றன. முதலாளித்துவ ஆணாதிக்க உலகில் பெண்கள் மற்றும் குயர் மக்களுக்கெதிரான வன்முறைகள் புதிய ஊடகங்கள் மூலம் நவீன வடிவம் பெறுகின்றன. குறிப்பாகச் சமூக ஊடகங்கள் மூலமாக அதிக அளவில் இணைய ரீதியான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் இடம்பெறுகின்றமையை அவதானிக்க […]

மேலும் பார்க்க

இலங்கையில் மாடறுப்புத் தடை – பொருளாதாரத் தாக்கங்கள், சவால்கள், தீர்வுகள்

10 நிமிட வாசிப்பு | 8424 பார்வைகள்

சில வருடங்களுக்கு முன் மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்தபோது  நடைமுறையிலுள்ள ஐந்து சட்டங்களைத் திருத்தம் செய்வதன்  [Amendment] மூலம் சட்ட ரீதியாக மாடறுப்பைத் தடை செய்ய முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஒரு  அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்குரிய அனுமதியையும் அவர்  பெற்றதோடு சட்ட திருத்த நடவடிக்கைகளும் முழு வீச்சில் இடம்பெற்று, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில்  ஆட்சி மாற்றம் இடம்பெற்ற காரணத்தால் அந்தத்திட்டம் சற்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒரு பொதுத் தேர்தலில் ஆளும் பொதுஜன […]

மேலும் பார்க்க

வாழ்க்கையின் வெற்றிக்கு பல வருமான வழிகளை உருவாக்குவதன் முக்கியத்துவம்

8 நிமிட வாசிப்பு | 7956 பார்வைகள்

“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை” திருக்குறள் (512) மு. கருணாநிதி விளக்கம் வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன். உலகில் பெரும் கோடீஸ்வரர்களைப் பார்த்தால் அவர்கள் தங்களது செல்வத்தை ஒரு தொழிலின் மூலமாக மட்டும் சேர்த்தவர்கள் அல்லர். அவர்கள் முதலில் பணத்தை ஏதேனும் ஒரு தொழிற்றுறை மூலம் உழைத்திருந்தாலும், அவ்வாறு உழைத்துச் சேர்த்த பணத்தை வேறுவகையான புதிய […]

மேலும் பார்க்க

சமஷ்டி, சோஷலிசம், இனக்குழுமம் : சோவியத் யூனியனதும் யுகோசிலாவியாவினதும் அனுபவங்கள் – பகுதி 2

10 நிமிட வாசிப்பு | 6084 பார்வைகள்

ஆங்கில மூலம் : ஜயதேவ உயன்கொட  சோவியத் சமஷ்டி அரசு சோவியத் சமஷ்டி அரசு அதன் தோற்றகாலம் முதலாக பல்தேசியங்களின் அரசு (Multinational State) என்ற இயல்பைக் கொண்டதாய் இருந்தது. அந்தச்சமஷ்டி அரசில் பலதேசிய அரசுகள் இணைக்கப்பட்டிருந்தன என்பதையே பல்தேசியங்களின் அரசு என்ற தொடர் குறிப்பிடுகிறது. சோவியத் சமஷ்டியில் 15 யூனியன் குடியரசுகள் சுயவிருப்பப்படி இணைந்திருந்தன. ‘பல்தேசியங்கள்’ என்ற சொல் சோவியத் யூனியனின் 1977 அரசியல் யாப்பிலும் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த […]

மேலும் பார்க்க

முஸ்லிம் குடிகள் – 2

10 நிமிட வாசிப்பு | 9698 பார்வைகள்

இந்தத்தொடரில் முஸ்லிம்களிடம் வழக்கிலுள்ள மார்க்க உபன்யாசகர்கள் வழிவந்த குடிகளைப்பற்றி சுருக்கமாக பார்க்கலாம். கோசப்பாகுடி இந்தக்குடி சம்மாந்துறையில் காணப்படுகின்றது. குடிகள் தாய்வழியாகப் பின்பற்றப்படுவதால் பெண்பெயர்களில் மாத்திரம் காணப்படுவதில்லை. இந்தக்குடியின் பெயர் ஆண் பெயரில் காணப்படுகின்றது. 15 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் சம்மாந்துறைத் துறைமுகத்தை வந்தடைந்த சரக்குக் கப்பலொன்றில் மத்தியகிழக்கு அல்லது பாரசீகத்தைச் சேர்ந்த கோஸப்பா என்பவரும், அவருக்கு உதவியாளராக கோஸ்முகையதீன் கரியப்பா என்பவரும் அவர்களுடன் ஆறுவயது மதிக்கத்தக்க பெண்குழந்தையொன்றும் வருகை தந்தனர். […]

மேலும் பார்க்க

சிப்பிரியானோ சான்செசின் இலங்கை நிலப்படம்

13 நிமிட வாசிப்பு | 8801 பார்வைகள்

இத்தொடரின் முந்திய பகுதியில்  இலங்கையைக் காட்டும் மிகப் பழைய நிலப்படத்தில் இலங்கையின் வட பகுதி தொடர்பாகக் காணப்படும் தகவல்களைக் குறித்துப் பார்த்தோம். இந்தப் பகுதியிலே சில குடியேற்றவாதக்கால இலங்கைப் படங்களில் பொதுவாக இலங்கையின் வடபகுதி பற்றியும் குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசம் தொடர்பாகவும் காணப்படும் தகவல்களைப் பற்றிப் பார்க்கலாம். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கால இலங்கை நிலப்படங்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொலமி திரட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட இலங்கையின் நிலப்படத்துக்குப் […]

மேலும் பார்க்க

பயனின்றி முடிந்த சாத்வீகப் போராட்டம்

6 நிமிட வாசிப்பு | 6318 பார்வைகள்

இந்திய வம்சாவழி தமிழ் மக்களுக்கு எதிரான பிரஜாவுரிமைப் பறிப்புச் சட்டத்தை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படாமல்  சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பிக்க இலங்கை இந்திய காங்கிரஸ் தீர்மானித்தது  தொடர்பில் அரசாங்கம் உள்ளூர மகிழ்ச்சி அடைந்து இருந்தாலும், இலங்கையின் தலை நகரமான கொழும்பு மாநகரத்தின் சுமுகமான நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதை அரசாங்கத்தால் கொஞ்சம்கூட சகித்துக்கொள்ள முடியவில்லை.  பொலிசாரையும் காடையர்களையும்  குதிரைப் படையையும் ஏவிவிட்டு,  என்னதான் தடியடிப் பிரயோகம் நடத்தினாலும் அந்தப் பெரும் கூட்டத்தினரை […]

மேலும் பார்க்க

பெருந்தோட்ட வீட்டுத்துறையினரின் உணவுக்கான பாதுகாப்பு

13 நிமிட வாசிப்பு | 4901 பார்வைகள்

கடந்த சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதிலும் அந்நியச் செலாவணியை உழைத்துக் கொடுப்பதிலும், 1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களின் மீதான தீர்வைகள் அகற்றப்படும்வரை அரசாங்க வரிவருவாயின் பெரும்பங்கினை உழைத்துக் கொடுப்பதிலும் பெருந்தோட்டங்கள் குறிப்பிடத்தக்களவு பங்களித்து வந்தன. இத்துறையினது பொருளாதாரப்பங்களிப்பில் அண்மைக்காலங்களில் சற்றுத்தளர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளபோதும் அது இன்னும் பொருளாதாரத்திற்குக் கணிசமான பங்கினை அளித்து வருகின்றது என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.   இத்துறையில் தொழில்புரியும் தொழிலாளர்கள் நாட்டினது சனத்தொகையில் மிகமோசமான […]

மேலும் பார்க்க

வன்னியில் வெளிச்சத்திற்கு வராத மிகப்பிரமாண்டமான சுற்றுலாத்தலம்

13 நிமிட வாசிப்பு | 14027 பார்வைகள்

அறிமுகம் கடந்தமாதம் வன்னியில் பறையனாளங்குளம் தேக்கம்  அணைக்கட்டுப் பகுதிக்குச் சென்ற கலைக்கேசரி ஊடகவியளாளர் திரு. ப. ஜோன்சன் அவர்கள் அவ்விடத்தில் நடைபெற்று வந்த பண்டையகால யானை வர்த்தகம் தொடர்பான வரலாற்று ஆதாரங்கள் பலவற்றைச் சேகரித்துள்ளார். அவற்றுள் வரலாற்றுப் பழமைவாய்ந்த இரண்டு கருங்கற்தூண்களில்  காணப்பட்ட தெளிவில்லாத சித்திரங்களின் புகைப்படங்களை எமக்கு அனுப்பிவைத்தார்.  அவற்றில் வரலாற்றுத் தொன்மைமிக்க சில குறியீடுகளும், இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமி எழுத்துக்களும் காணப்பட்டன. இவை வன்னியின் […]

மேலும் பார்க்க

சமஷ்டி, சோஷலிசம், இனக்குழுமம்: சோவியத் யூனியனதும் யுகோசிலாவியாவினதும் அனுபவங்கள் – பகுதி 1

16 நிமிட வாசிப்பு | 6604 பார்வைகள்

ஆங்கில மூலம் : ஜயதேவ உயன்கொட  அரசு உருவாக்கச் செயல்முறையின் குறித்தவகைப் போக்கு ஒன்றாகவும், தனித்துவமான வரலாற்று அனுபவமாகவும் முன்னாள் சோவியத் யூனியனும் முன்னாள் யுகோசிலாவியாவும் விளங்குகின்றன. அங்கு முன்பு இருந்து வந்த அரசு முறை வீழ்ச்சியுற்றுப் புதிய அரசு உருவாக்கங்கள் மேற்கிளர்ந்தன. இவ்விரு நாடுகளும் புரட்சிக்குப் பிந்திய சமூகங்களாகவும் விசேடமான அரசு வடிவத்தைக் கொண்டனவாகவும் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் உருவாக்கம் பெற்றன. இவ்வகையில் இந்நாடுகளின் அரசு உருவாக்க […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)