ஆங்கிலத்தில் : பேராசிரியர் B. E. S. J. பஸ்தியம்பிள்ளை இலங்கையின் வட மாகாணத்தில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியாவின் அயலிடப் பிரதிநிதி (PROCONSUL) என்ற பதவியில் (பின்னர் அரசாங்க அதிபர் பதவி) பேர்சிவல் ஆக்லண்ட் டைக் பணியாற்றினார். இவரே வடக்கின் ராஜா என்ற புகழ் பெற்ற மனிதர் (RAJA OF THE NORTH) யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், வடபகுதியிலும் தமிழர்களிடையே டைக் மரபுக் கதை நாயகன் போன்று வாய்மொழி […]
பண்டைய நூல்களும் கட்டடக்கலையும் வேதகாலத்திலேயே இந்துக்களின் கட்டடக்கலைத்துறை வளர்ச்சியுற்றிருந்தது. கட்டடக்கலை பற்றிய அறிவியற்துறை வாஸ்து வித்யா (Vastu-Vidaya) என அழைக்கப்பட்டது. இதனை விளக்கும் நூல்கள் வாஸ்து சாஸ்திர நூல்கள் (Vastu Shastras) என அழைக்கப்பட்டன. மச்யபுராண (Matsya Purana), விஷ்ணு தர்மோத்தர புராண (Vishnudharmottara Purana) போன்ற புராண நூல்களும், ஹயாசேர்சா பஞ்சார்த்திர ஆகம (Hayasirsha pancharatra Agama), வைகாநாச ஆகம் (Vaikhanasa Agama) போன்ற ஆகம நூல்களும் ஆலய […]
பண்டைத் தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள் பண்டைய தமிழர்கள் தரைவழியாகவும் கடல்வழியாகவும் பாரதத்தின் ஏனைய நகரங்களுடன் மட்டுமல்ல கடல்கடந்தும் ஏனைய நாடுகளுடனெல்லாம் வணிகம் செய்து சிறப்புற்று விளங்கியதை வரலாறு கூறும். யவனர்கள், அரேபியர்களெல்லாம் கடல்கடந்து தமிழகம் வந்து வர்த்தகம் செய்ததை வரலாற்றறிஞர்களின் பிரயாணக் குறிப்புகள், பண்டையத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தகவல்கள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களெல்லாம் புலப்படுத்தும். கிழக்கிந்தியத் தீவுகள் கூட்டத்தை உள்ளடக்கிய சாவகம் (இன்றைய இந்தோனேஷியா), […]
அறிமுகம் இன்று தமிழகத்தில் உள்ள இலக்கியங்களில் மிகப் பழமையான இலக்கியங்கள் சங்ககால இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியங்களின் காலத்தை நிர்ணயிப்பதில் அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துகள் காணப்பட்ட போதிலும் மொழியியல் ஆய்வுகள், ஆரம்பகாலக் கல்வெட்டுகள், நாணயங்கள், கிரேக்க-ரோமானியர்களின் பதிவுகள், அகழாய்வுச் சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவ்விலக்கியங்களின் காலத்தை கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பாக எடுத்துச்செல்லலாம். இச் சங்ககால இலக்கியங்களில் முச்சங்கங்கள் பற்றிய குறிப்பு எதிலுமே காணப்படவில்லை. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட […]