May 2023 - Page 2 of 2 - Ezhuna | எழுநா

May 2023 தொடர்கள்

அரசை நிலைகுலைய வைத்த சத்தியாக்கிரகப் போராட்டம்

10 நிமிட வாசிப்பு | 7488 பார்வைகள்

இத்தொடரின் கடந்த வார அத்தியாயத்தில் ஒரு தொழிற்சங்கம் தன் தலையாய கடமை ஒன்றை  நிறைவேற்றத் தவறியதால் இந்த நாட்டில் 150 ஆண்டுகாலமாக வசித்த ஒட்டுமொத்தமான இந்திய வம்சாவழிச் சமூகத்தினரே எவ்வாறு அரசியல் அனாதைகள் ஆகிப்போனார்கள் என்பதையும் அன்றைய சூழ்நிலையில் அப்படி ஒரு வேலை நிறுத்தம் செய்து இருந்தால் நமக்கு இருந்த சாதகமான காரணிகளைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். மலையகத் தொழிற்சங்கங்கள் இன்று வரை இதே தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகின்றன. […]

மேலும் பார்க்க

நவீன விவசாயத்தில் வெற்றி பெற்ற உலக நாடுகள்

20 நிமிட வாசிப்பு | 30498 பார்வைகள்

அறிமுகம் விவசாயம் என்பது வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான வருமானம் ஈட்டும் தொழிலாகும் . இது வேலை, வருமானம் மற்றும் உணவு ஆகியவற்றின் முதன்மை ஆதாரமாகவும்  மனிதனின்  அடிப்படைத் தேவைகளை உலகம் முழுவதும் பூர்த்தி செய்கின்ற இயற்கையின் கொடையாகவும் திகழ்கின்றது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) படி, விவசாய மக்கள்தொகையின் பங்கு மொத்த மக்கள்தொகையில் 67% ஆகும். இது மொத்த உணவு  உற்பத்தியில் 39.4% மற்றும் அனைத்து […]

மேலும் பார்க்க

ஆணாதிக்கச் சமூக மேலெழுகை

18 நிமிட வாசிப்பு | 8658 பார்வைகள்

“கடவுளின் வடிவம் (திருப்பாச்சிலாராமத்தில் உறையும் சிவபெருமான்) இங்கு தாயாக, இறுதியாகக் கைவிடும் தாயாக, நோக்கப்படுகிறது. இது பக்தி உணர்வுக்கு மையமானது. அதுவும் , சுந்தரர் இந்தக் கடவுளைக் கைவிட்டு விடுவேன் என்று பயமுறுத்தவேறு செய்கிறார். தெய்வீக அன்புக்கு எதிர் வினை புரியும் சமயத்திலேயே தெய்வீகக் கருணையின்மையை சொல்லுகிறார். (வெண்டி டோனிகர், ‘இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு)” தமிழாக்கம் : க.பூரணச் சந்திரன், எதிர் வெளியீடு.2016).  வெண்டி டோனிகரின் மேற்படி கருத்துக்கு […]

மேலும் பார்க்க

பதார்த்த சூடாமணி – தூதுவளை

10 நிமிட வாசிப்பு | 12883 பார்வைகள்

தூதுபத் திரியன் னத்தைத் தொலைக்கும்பூத் தாதுண்டாக்கும் மேதகு காய்ச்சே டத்தை மீட்கும்வேர் மூன்று தோஷம் சேதமாய்ப் போகச் செய்யும்                                              பதார்த்த சூடாமணி தூதுபத்தி ரியுண்டு தொலைக்கும் பூதாது மெத்த மிகுத்திடு தழைத்திடுங் காய்கூறுகின்ற இருமலை மாத்திடும் வேர்வாதபித்த சிலேத்தும மாற்றுமே அகத்தியர் 2000 தூதுவளை உணவைச் சமிபாடு அடையவைக்கும். இதன் பூ ஆண்மையை அதிகரிக்கும். காய் நெஞ்சில் கட்டிய சளியை வெளியேற்றும். தூதுவளையின் வேர் வாதம், பித்தம், கபம் என்னும் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள்

10 நிமிட வாசிப்பு | 8983 பார்வைகள்

உலகில் கல்வி வளர்ச்சியும் நூலகங்களின் தோற்றமும் ஒன்றோடொன்று தொடர்புபட்டே வந்துள்ளன. யாழ்ப்பாணத்தின் நூலக வளர்ச்சியை நாம் ஆராய்வதற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டினது கல்வி வளர்ச்சியைப் பற்றி ஆராய்வதும் அவசியமாகின்றது. அந்நியராட்சிக்கு முன்பே யாழ்ப்பாணத்தில் கல்வி வளம் பெற்றிருந்தது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. இதனைக் கடந்த இயலில் கண்டிருந்தோம். குறிப்பாக 13ஆம், 14ஆம் நூற்றாண்டுகளில் ஆரியச் சக்கரவர்த்திகளது காலங்களில் இக்கல்வி வளர்ச்சி உச்சநிலை அடைந்திருந்ததெனக் கூறலாம். இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகளும் […]

மேலும் பார்க்க

அசைவ உணவுகள்

14 நிமிட வாசிப்பு | 13377 பார்வைகள்

அசைவ உணவுகள் எனும்போது மிருகங்கள், பறவைகள் அவற்றின் முட்டைகள், கடல் உயிரினங்கள் போன்றன உள்ளடங்குகின்றன. சைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது பல நன்மை, தீமைகள் இருப்பினும் உணவில் உள்ள சத்துக்களின் செறிவு அசைவ உணவில் அதிகம்  கிடைப்பது மறுக்கமுடியாத ஒன்றாகும். சைவ உணவுப்பழக்கம், அசைவ உணவுப்பழக்கம் என்பது அவரவர் நம்பிக்கைகளுக்குள்ளும் விருப்புக்களுக்குள்ளும் அடங்கிவிடுகின்றன.  மனித சமூகத்திடம் அசைவ உணவுகளை உண்பது காலம் காலமாக இருந்துவருகின்ற ஓர் உணவுப் பழக்கமாகும். இறைச்சி வகைகள் […]

மேலும் பார்க்க

காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்

10 நிமிட வாசிப்பு | 10517 பார்வைகள்

அறிமுகம் பல சர்வதேச நிறுவனங்களும் அவற்றின் உள்ளூர்த் தரகு முதலாளிகளும் இலங்கையின் அரச அதிகாரத்துடன் கைகோர்த்துக் கொண்டு நமது கடலை அபகரிப்பதை, அதன் வளங்களை கொள்ளையிடுவதை துணிந்து எதிர்த்து நிற்கிறார்கள் கடல் தாயின் மக்கள். அவர்கள் தமது அந்த வாழ்வாதாரம் அழிக்கப்படும் அநியாயத்தை முன்னிறுத்திப் போராடுகிறார்கள். இந்தக் கட்டுரையின் நோக்கம், அப்போராடும் மக்கள் சக்திக்கு உரமூட்டும் விதமாக போராட்டங்களுக்கான நியாயங்களை சமூகவியல், பொருளாதாரம், அரசியல், வரலாறு மற்றும் உயிரியல் – […]

மேலும் பார்க்க

தமிழில் மருத்துவம் கற்பிக்கும் கிறீனது தளராத முயற்சியும் கொழும்பு மருத்துவக்கல்லூரியின் ஆரம்பமும்

6 நிமிட வாசிப்பு | 7605 பார்வைகள்

ஏறத்தாழ 5 ஆண்டுகள் ஆபத்துக்கு உதவி வைத்தியசாலையின் (FINS Hospital) தலைமை அதிகாரியாகக் கடமையாற்றிய மருத்துவர் கிறீன் செப்ரெம்பர் 1868 இல் தலைமை நிருவாகி என்ற பதவியிலிருந்து விலகும் கடிதத்தை ஆபத்துக்குதவி வைத்தியசாலை நிருவாகத்துக்கு அனுப்பினார்.   கிறீன் கடிதத்திலே பின்வரும் விண்ணப்பங்களையும் முன்வைத்திருந்தார். தனது மாணவர்கள் மருத்துவப் பயிற்சியை ஆபத்துக்குதவி வைத்தியசாலையில்  பெற்றுக்கொள்வதற்கு அனுமதித்தல். மானிப்பாய் மருத்துவமனையும் ஆபத்துக்குதவி மருத்துவமனையும் மருந்துகளையும் ஏனைய பொருட்களையும் பரிமாறிக் கொள்வது. மருந்துகள் மற்றும் […]

மேலும் பார்க்க

பெண்களின் வன்முறைத் தேர்வும் அரசியல் வகிபாகமும்

13 நிமிட வாசிப்பு | 22607 பார்வைகள்

நூல் அறிமுகம் பெண்களின் வன்முறைத் தெரிவு, அதற்கான அக-புற நிர்ப்பந்தங்கள், கள அனுபவங்கள், போருக்குப் பின் பெண்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சமூக நெருக்கடிகளை இந்நூல் அனுபவரீதியாகவும் உரையாடல்கள் கதையாடல்கள் வழியாகவும் முன்வைக்கின்றது. இதில் பேசப்படும் அனுபவங்களும் கதையாடல்களும் தகவல்களும் பெரும்பான்மையாக நிலவும் கட்டமைக்கப்பட்ட பார்வைகளைக் கட்டுடைக்கவும் புரிதலை வளர்த்துக்கொள்ளவும் உந்தக்கூடியது. உலகளாவிய பெண் போராளிகளின் அரசியல் வகிபாகத்தினை பெண்ணிய மற்றும் சமூக, பண்பாட்டு, அரசியல் நோக்கு நிலைகளில் விளங்கிக்கொள்ளவும் உதவக்கூடியது. […]

மேலும் பார்க்க

தொடர்ச்சியான மாற்றுப்பயிர்களின் தேடல்

19 நிமிட வாசிப்பு | 9295 பார்வைகள்

1867 இல் பத்து ஏக்கரில் தொடங்கப்பட்ட தேயிலை உற்பத்தி 1887 ஆம் ஆண்டில் – இருபது வருடங்களுக்குள் – சுமார் 350,000 ஏக்கராக விரிவடைந்தது. இவ்வளவு விரைவாக தேயிலை வளர்ச்சியடைவதற்கு அழிந்த கோப்பிப் பெருந்தோட்டம்  உருவாக்கிவிட்டுச்சென்ற பெருந்தோட்ட நிலங்களையும் கட்டமைப்பையும் அது எளிதாக நிரப்பக்கூடியதாக இருந்தமை தான் காரணம். தேயிலை விளைந்த நிலப்பரப்பு கோப்பி பெருந்தோட்டங்கள் இருந்த நிலப்பரப்பை விடவும் விரிவடைந்து சென்றது. 1890 களில் பெரும்பாலான தேயிலைத்தோட்டங்கள் திம்புள்ள, டிக்கோயா, […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்