June 2023 - Ezhuna | எழுநா

June 2023 தொடர்கள்

நுண்ணுயிர்க் கொல்லிகளின் எதிர்ப்பு நிலை – கால்நடை மருத்துவத்தின் நிலைப்பாடு

11 நிமிட வாசிப்பு | 6825 பார்வைகள்

அறிமுகம் மனிதர்களிலும் விலங்குகளிலும் நோய் சிகிச்சைக்கும் நோய்கள் வராமல் தடுப்பதற்கும் நுண்ணுயிர்க் கொல்லிகள் [Antibiotics] பயன்படுத்தப்படுகின்றன. பல வருடங்களாக ஆபத்தான நுண்ணுயிர்களால் [Bacteria] ஏற்பட்ட மிகக் கொடிய  நோய்களில் இருந்து மனிதர்களையும் விலங்குகளையும் பாதுகாத்த மேற்படி நுண்ணுயிர்க் கொல்லிகள் அண்மை நாட்களில் பயனற்றவையாக மாற்றமடைந்து  வருகின்றன. குறிப்பாக, நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு நிலை [Antibiotic resistant] பெரும்பாலான நுண்ணுயிர்க்  கொல்லி மருந்துகளுக்கு தோன்றியுள்ளது. நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பான நுண்ணுயிர்களின் அதிகரிப்பு […]

மேலும் பார்க்க

போர்த்துக்கேயர்கால நிலப்படங்கள்

12 நிமிட வாசிப்பு | 14872 பார்வைகள்

முன்னர் விளக்கப்பட்ட சான்செசின் இலங்கைப் படம், யாழ்ப்பாண இராச்சியம்  போர்த்துக்கேயரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன் வரையப்பட்டது. யாழ்ப்பாணம் போர்த்துக்கேயரின் நேரடி ஆட்சிக்குள் வந்த பின்னரும் இலங்கைப் படங்களும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளைத் தனியாகக் காட்டும் நிலப்படங்களும் வரையப்பட்டன. அவற்றுட் சிலவற்றைப் பற்றிக் கீழே பார்க்கலாம். கொன்ஸ்டன்டைன் டி சாவின் நிலப்படத் தொகுப்பிலுள்ள இலங்கைப் படம் போர்த்துக்கேயர் காலத்தில் இலங்கையின் ஆளுநராகப் பதவி வகித்த கொன்ஸ்டன்டைன் டி சா, 1628 […]

மேலும் பார்க்க

அசமத்துவ அதிகாரப்பகிர்வு : ஸ்பானிய நாட்டின் அனுபவம் – பகுதி 3

14 நிமிட வாசிப்பு | 7098 பார்வைகள்

அசமத்துவச் சுயாட்சி சமூக முறைமை அரசியல் யாப்பை வரைவதற்கான சபையில் கருத்து வேறுபாடுகள் பல எழுந்தன. உணர்வுகளை தூண்டக்கூடியதான பிராந்திய சுயாட்சி என்ற விடயமே இக்கருத்து வேறுபாடுகள் யாவற்றிலும் முதன்மையானது. பஸ்க், கற்றலன், ஹலீசியா ஆகிய தேசிய இனங்கள் மொழியிலும் பண்பாட்டிலும் நாட்டின் பிறபகுதியினரை விட வேறுபட்டதாய் இருந்தன. அது மட்டுமன்றி அவை கடந்த காலத்தில் சுயாட்சி உடைய சுதந்திரமான சமூகங்களாகச் செயற்பட்டன. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்த பிராங்கோவின் […]

மேலும் பார்க்க

அசமத்துவ அதிகாரப்பகிர்வு : ஸ்பானிய நாட்டின் அனுபவம் பகுதி 2

19 நிமிட வாசிப்பு | 9308 பார்வைகள்

ஆங்கில மூலம் : ரஞ்சித் அமரசிங்க பண்பாட்டு அடையாளம் பற்றிய பிரச்சினையும் அதிகாரப் பகிர்வும் அதிகாரப் பகிர்வு பற்றிய புதுமைகளை வெளிப்படுத்தியதாக ஸ்பெயினின் அரசியல் யாப்பு அமைந்தது. அரசியல் யாப்பினை வரைந்தவர்கள் விட்டுக்கொடுப்போடும் இணக்கபாட்டுடனும் நடந்து கொண்டனர். புதிய ஜனநாயக அரசியலுக்கு வழிசமைத்த இவ்வரசியல் யாப்பு நடைமுறை உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. ஸ்பானிய அரசு ஜனநாயக அரசாக மாற்றம் பெற்றது. அந்நாட்டின் பிராந்தியங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த வரலாற்றுத் திருப்பத்துக்கு காரணமாக […]

மேலும் பார்க்க

உணர்ச்சி நுண்ணறிவும் (EQ) புது வணிகத்தை மேம்படுத்தலும்

10 நிமிட வாசிப்பு | 8255 பார்வைகள்

“குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது” – திருக்குறள் (29) விளக்கம்:குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள்உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது. உலகிலுள்ள அரசியல் தலைவர்களையோ அல்லது வணிகத் தலைவர்களையோ பார்த்தால் அவர்கள் தத்தம் துறைகளில் சிறப்பான கற்றல் அறிவையும்,  வாழ்க்கையின் அனுபவங்களையும் இணைப்பதனூடான தொழில் தேர்ச்சியையும், தலைமைத்துவத்தையும்  அடைந்திருப்பார்கள். அவர்களின்   அறிவுத்திறனின் நுண்ணறிவு (IQ) மிகவும் அதிகமாக இருக்கும். அத்தகைய […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – பகுதி 2

19 நிமிட வாசிப்பு | 10595 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் நூலக வளர்ச்சியில் நாவலரது காலப்பகுதியை கணிசமான கவன ஈரப்புக்கு உட்பட்டதாகக் கொள்ளலாம். நாவலர் வாழ்ந்த காலப் பின்னணியும் சமய இயக்கங்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பெருக்குவதற்கு உதவின. இக்காலத்தில் மக்களின் கல்வியை ஓங்கச் செய்வதற்கு சமய நிறுவனங்கள் சிறந்த சாதனங்களாக விளங்கின. பப்டிஸ்ட் மிஷன் (Baptist Mission), வெஸ்லியன் மிஷன், அமெரிக்கன் மிஷன் ஆகிய சமய நிறுவனங்களின் தொண்டர்கள் இக்காலத்தில் இலங்கைக்கு வந்து சமயப் பணியினை ஆற்றினார்கள். இக்காலத்தில் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணக் கோட்டையின் அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகள் – ஒரு புதிய பார்வை – பகுதி 3

15 நிமிட வாசிப்பு | 14261 பார்வைகள்

கோட்டைக்குள் மறைந்து காணப்பட்ட ஆலயங்களின் அழிபாடுகள் கோட்டை மீள் புனரமைப்பு பணிகளின் போது கிடைத்து வரும் வரலாற்றுப் பெறுமதி மிக்க ஆதாரங்களுள் 16 ஆம் நூற்றாண்டில் தற்போதைய கோட்டை கட்டப்படுவதற்கு முன்னர் வழிபாட்டிலிருந்த இந்து ஆலயங்களின் அழிபாடுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. இந்தக் கோட்டையைக் கட்டுவதற்கு கோட்டைக்கு அயலில் உள்ள தீவுகளிலும், கடலிலிருந்து கொண்டுவரப்பட்ட கோறல் கற்கள் பயன்படுத்தியதை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கால ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் கோறல் கற்களுடன் எந்தவித […]

மேலும் பார்க்க

மொழிகளுக்கிடையே கண்ணுக்குப் புலனாகாத மோதல்

10 நிமிட வாசிப்பு | 6591 பார்வைகள்

இந்த நாட்டை இரண்டு கூறுகளாக்கி ஒரு தரப்பில் தமிழர்கள் மறுதரப்பில் சிங்களவர்கள் என்று கபடி களமாக்கி ஒருவர் காலை மற்றவர் வாரிவிட்டு குப்புற தள்ளி மிதிக்கும் நிலைமையை தோற்றுவித்த பெருமை முற்றிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையே சாரும். அதற்கான ஆடுகளத்தைத் தயாரித்து அமைத்தவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா என்ற மக்கள் ஐக்கிய  கட்சியின் (M.E.P) தலைவர் ஆவார். இவர் இனவாதம் என்ற தீப்பந்தத்தை ஆயுதமாகக் கையில் ஏந்தி 1956 […]

மேலும் பார்க்க

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் I

17 நிமிட வாசிப்பு | 11609 பார்வைகள்

அது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி. ஈழத்துத் தமிழறிஞர்கள் நாடு, தேசியம், இனம் போன்ற விடயங்களில் உன்னிப்பாக கவனம் செலுத்திக்கொண்டிருந்த காலகட்டம். வட இலங்கையில் இருநூறாண்டுகளுக்கு முன்பிருந்தே அறிஞர் மத்தியில் வழக்கிலிருந்த யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாயமாலை, வையாபாடல் முதலிய பிராந்திய இலக்கியங்களை வைத்து, அப்போது வட இலங்கை வரலாற்றை எழுதும் முயற்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துகொண்டிருந்தது. திருகோணமலை சார்ந்து கோணேசர் கல்வெட்டு, கைலாசபுராணம், கோணை அந்தாதி முதலிய நூல்கள் பதிப்பிக்கப்பட்டிருந்தன. […]

மேலும் பார்க்க

சமணப் பள்ளிப் படிதாண்டி பக்தி இயக்கத்துக்கு

10 நிமிட வாசிப்பு | 8294 பார்வைகள்

ஏகாதிபத்தியப் பிணைப்பைப் பூரணமாகத் தகர்த்து விடுதலைத் தேசிய அரசியல் முன்னெடுப்பு வாயிலாகப் புத்துலகப் பொதுவுடைமையை வென்றெடுப்பதாக இன்றைய வரலாற்று மாற்றம்; அத்தகைய மார்க்கத்தைக் கண்டறிவதற்குத் தமிழ்ப் பண்பாட்டு உருவாக்கமும் தொடர் விருத்தியிலான மாற்றச் செல்நெறிகளும் வழிகாட்ட இயலும் வகையில் முழுச் சமூக சக்திக்கான இயங்கு முறையை தமிழர் வரலாறு மட்டுமே எடுத்துக்காட்டி வந்துள்ளது என்ற உண்மையை வெளிப்படுத்தும் தேடலுக்கு உரியது இந்தத் தொடர். ஏற்றத்தாழ்வுச் சமூக உருவாக்கத்தில் கிரேக்க, ரோம […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்