பெருந்தோட்டத்துறையில் வேதனப் பொறிமுறைகள் உலகில் செயற்பட்டுவரும் ஏறக்குறைய அனைத்து விவசாயக்கம்பனிகளுமே தமது ஊழியருக்கு நாளாந்த வேதனங்களைச் செலுத்தும் ஒரு முறையையே பின்பற்றிவருகின்றன. பெருந்தோட்ட விவசாயத்தில் ஈடுபட்டுவரும் பெருந்தோட்டக் கம்பனிகளும் இதற்கு விதிவிலக்கன்று. இந்தக்கம்பனிகள் எங்கெங்கு உருவாக்கப்பட்டனவோ அங்கெல்லாம் ஊழியருக்கு அவை நாளாந்த வேதனங்களையே செலுத்திவருவதோடு மலிவான ஊழியம் அவற்றின் ஒரு விசேட பண்பாக இருந்து வருகின்றது. அதாவது, தொழிலாளருக்குச் செலுத்தப்படும் வேதனங்கள் குறைந்தமட்டத்திலேயே பராமரிக்கப்பட்டதோடு, நெடுங்காலத்திற்கு அவை தேக்கநிலையிலும் வைக்கப்பட்டன. […]
கோட்டைப் பிரதேசத்தின் பூர்வீக மக்கள் யாழ்ப்பாண நகரின் தொன்மையும் சிறப்பும் பற்றிய வரலாற்று ஆய்வில் அந்நியரான போர்த்துக்கேயர் கட்டிய கோட்டையுடன் முதன்மைப்படுத்திப் பார்க்கும் மரபு நீண்ட காலமாக இருந்து வருகின்றது. ஆனால் 2010 இல் இருந்து இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்து வரும் ஆதாரங்கள் கோட்டை அமைந்த இடத்திற்குத் தொன்மையான தொடர்ச்சியான நீண்ட பாரம்பரிய வரலாறு உண்டு என்பதும், அவ்வரலாற்றுப் பின்புலம் தான் இவ்விடத்தைக் கோட்டை கட்டுவதற்குப் பொருத்தமான […]
ஆங்கில மூலம் : ரஞ்சித் அமரசிங்க இலங்கையில் மாகாணசபை முறை 13 ஆவது அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் பயனாக ஏற்படுத்தப்பட்டபோது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரு அலகாகவும் ஏனைய 7 மாகாணங்கள் தனித்தனி அலகுகளாகவும் கொள்ளப்பட்டன. இந்த எட்டு அலகுகளிற்கு இடையிலும் அதிகாரப்பகிர்வு சமத்துவமான முறையில் பகிரப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் மாகாணசபையிடம் சமமான முறையில் பகிர்தல் சமத்துவமான அதிகாரப்பகிர்வு எனப்படும். இதற்கு மாறான […]
தமிழ்மக்களின் உணவுப்பதார்த்தங்கள் தொடர்பான பழைய நூல்களுள் ஒன்றில்கூட மரவள்ளிக்கிழங்கு இடம்பெற்றிருக்க முடியாது. வள்ளி அல்லது வல்லி என்பது படரும் கொடியைக் குறிக்கும். வள்ளி என்றால் நிச்சயமாக அது நிலத்தின் மேலே கொடியும் கீழே கிழங்கும் உள்ள தாவரம் ஒன்றையே குறிக்கும். சங்ககாலத்தில் குறிஞ்சிநில மக்களின் பிரதான உணவுகளுள் ஒன்று வள்ளிக்கிழங்கு. பிற்காலத்தில் நிலத்தின் கீழே கிழங்கும் மேலே மரமும் கொண்டதாக ஒரு பயிர் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதற்கு ‘மரவள்ளி’ என்று பொருத்தமான […]
உலக நாடுகள் பலவற்றின் வரலாறு பற்றிய ஆரம்பகால ஆய்வுகள் பெரும்பாலும் அந்நாடுகளில் நிலவிய வரலாற்று வாய்மொழிக் கதைகள், வட்டார வழக்கில் உள்ள மரபுவழிச் செய்திகள், ஐதீகங்கள், பாரம்பரியச் சடங்குகள், நம்பிக்கைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன. இவற்றின் அடியாகக் தோன்றி வளர்ந்த வரலாற்று நம்பிக்கைகளை மீளாய்வு செய்வதில் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து தோன்றி வளர்ந்த தொல்லியல், மானிடவியல், வரலாற்று மொழியியல் முதலான ஆய்வுகளுக்கு முக்கியமான இடமுண்டு. இது இலங்கைக்கும் பொருந்தும் என்பதை […]
மனித இனத்தின் தோற்றத்தில் இருந்தே மொழியின் தோற்றத்தினையும் கருத்திற்கொள்ள முடியும். மனிதத் திரள்களின் தொடர்பாடல் ஊடகமாக மொழியானது ஆரம்பத்தில் இருந்து பயன்பட்டு வருகிறது. இது தொடக்கத்தில் சைகை, ஊமத்தில் இருந்து பின்னர் ஒலிவடிவம், எழுத்து வடிவம், பேச்சு வழக்கு, இலக்கண வழக்கு என்னும் படி நிலைகளை மனித வரலாற்றுப் போக்கின் அடிப்படையில் கண்டு கொண்டது. இவ்வாறான மொழியினை “ஒரு வகுப்பார் அல்லது நாட்டார் தம் கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்துதற்கு ஒரு […]
1950 களைத் தொடர்ந்து அடுத்துவந்த ஒரு தசாப்த காலம் இந்த நாட்டில் வசித்த இந்திய வம்சாவழித் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கை பூர்வீக தமிழர்களுக்கும் கூட சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்தது போல் சிம்மசொப்பனமாகவே அமைந்தது. மேற்படி இரண்டாவது பிரஜா உரிமை சட்டத்தின்கீழ் இலங்கை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்தவர்களின் தொகை 237,034 பேர். இவர்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே பிரஜா உரிமை கிடைத்தது. இந்தக்காலத்தில் தம்மை வாக்காளர்களாகப் பதிவு […]
அறிமுகம் இலங்கை போன்ற இயற்கை வளங்களையும், பொருத்தப்பாடான காலநிலையையும் செழிப்பாகக் கொண்ட ஒரு வளர்ந்துவரும் சிறிய தீவு நாட்டுக்கு விவசாயம் சமூக-பொருளாதாரத்தின் நிலைத்திருப்புக்கும், வேலைவாய்ப்பு, உணவு மற்றும் போசாக்கை வழங்குகிற ஒரு “முழுமையான” வகிபாகத்தையும் கொண்ட துறையாகும். மேலும் விவசாயத்துறை தேசத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முதுகெலும்பாகவும் மற்றும் நாட்டின் இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்து பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி வருவாய் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்ற […]
ஒரு பக்கம் இந்தியக் கடற்கொள்ளை மக்களைப் பட்டினியில் வாட்ட, சீனத் திருடர்கள் இலங்கையின் வடமேற்குக் கரையின் வளங்களைக் கொள்ளையடிக்க உள்ளூர் அரசியல் சதிகாரர்களின் வழிகாட்டலுடன் வடக்கு மாகாணத்தை நோக்கி வந்தார்கள். இதைப் பற்றி பேசுவதற்கு முன்பு இலங்கைக்கும் – சீனாவுக்கும் இடையிலான அரசியல் – பொருளாதார வரலாற்றையும் அதன் உள்ளடக்கத்தையும் மேலோட்டமாகப் பார்ப்பது நல்லது. சீன – இலங்கை உறவு ஆழமான, வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. உதாரணமாக கி. பி. […]
பன்றி “ஊர்ப்பன்றி நிணநெய் யுண்ணி லுறுந்திரி தோசம் புண்ணேதீர்க்கருங் கரப்பன் வெட்டை தினவொடு மற்று முண்டாம்ஈர்த்ததிடும் வரட்சி மூல மிளைப்பும்போ மதுர மாகும்கார்க்காட்டுப் பன்றி தன்னின் கடுநிணங் கரப்பன் வாயு” – பக்.86, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி ஊர்ப்பன்றி இறைச்சி மற்றும் அதன் கொழுப்பு என்பனவறைத் தொடர்ந்து உண்டுவந்தால், திரிதோசங்களும் தோசமடையும். இதனால் பலவிதமான தொற்றா நோய்களும் ஏற்படும். எளிதில் தீர்க்கமுடியாத புண்ணுடன் கூடிய கரப்பன் என்னும் தோல் நோயானது, […]