இலங்கையில் வெளிக்காரணிகளின் தாக்கங்கள் அந்நியர் ஆட்சியும் வெளிநாடுகளின் செல்வாக்கும் இலங்கைக்கு புதிய விடயங்கள் அல்ல. இலங்கை சிலசமயங்களில் தென்னிந்திய மன்னர்களின் படையெடுப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இத்தகைய நிலப்பிரபுத்துவத்தால் யுத்தங்கள் இனவாத ரீதியில் திரித்து விளக்கப்படுகின்றன. அது மாத்திரமல்ல 1411 இல் ஒருதடவை சீனக் கடற்படையின் தாக்குதலுக்கும் இலங்கை உள்ளானது. அப்போது நீராவிக் கப்பல் இன்னும் புழக்கத்துக்குக்கு வராத சமயத்தில் ஒப்பரும் மிக்காரும் இல்லாதபடி பெரிய கடற்படையை மிங் வம்ச (Ming) […]
ஆங்கிலத்தில் : எச். எல். செனிவிரத்தின 1943 ஆம் ஆண்டில் பௌத்த பிக்கு ஒருவர் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டார். பௌத்த பிக்கு ஒருவர் தேர்தல் அரசியலில் இறங்கிய முதலாவது உதாரணமாக இது அமைந்தது. ஆயினும் அவர் அந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். 1977ம் ஆண்டில் தான் முதன்முதலாக பிக்கு ஒருவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அவரும் அந்தத்தேர்தலில் தோல்வியுற்றார். அதன் பின்னர் பத்தேகம சமித்த என்ற பௌத்த […]
இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் பாரம்பரியக் கலாசாரம் என்பது தென் இந்தியத் தமிழ்க் கலாசாரமேயாகும். இது ஒரு வகையில் இலங்கையில் வாழ்கின்ற இந்தியத் தமிழர்களின் தனித்துவமிக்க தமிழ் இனமாக அடையாளப்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கின்றது. இவர்கள் பேசுகின்ற மொழி, உறவுமுறைகள், தெய்வ வழிபாடுகள், திருமணம் போன்ற சடங்கு முறைகள் வடக்கு – கிழக்கில் வாழ்கின்ற பூர்வீகக்குடிகளான இலங்கை தமிழர்களில் இருந்து வேறுபட்டே இருக்கின்றன. அவ்வாறு இலங்கைத் தமிழர்களில் இருந்து வேறுபட்டு காணப்பட்டாலும் இந்தியத் […]