August 2023 - Page 2 of 3 - Ezhuna | எழுநா

August 2023 தொடர்கள்

சிங்கள மக்களின் சோற்றுமரம் : ஈரப்பலா

9 நிமிட வாசிப்பு | 9464 பார்வைகள்

நியூகினியாவை பூர்வீகமாகக் கொண்ட ஈரப்பலா பழங்காலத்திலிருந்தே மலாய் தீவுக்கூட்டத்திலும், பசுபிக் தீவுகள் முழுவதும் பயிரிடப்பட்டு வந்துள்ளது. பண்டைய காலங்களில் சேப்பங்கிழங்கு மற்றும் தேங்காயுடன் ஈரப்பலா சேர்ந்த உணவு பூர்வீகக்குடிகளின் ஆரோக்கியத்தைப் பேணிவந்துள்ளது. சில தசாப்தங்களுக்கு முன்பு, இந்த மக்கள் தங்கள் பாரம்பரிய உணவுகளைக் கைவிடும் வரை ஊட்டச்சத்துக்குறைபாடு, உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோயைத் தவிர்க்க உதவிய உணவின் ஒரு பகுதியாக ஈரப்பலா இருந்துள்ளது. 1778 ஆம் ஆண்டில் ஹவாய் தீவுகளைக் […]

மேலும் பார்க்க

இடதுசாரிகள் இழைத்த துரோகம்

9 நிமிட வாசிப்பு | 8554 பார்வைகள்

இந்த நாட்டை பிரதமர் ஆசனத்தில் அமர்ந்து அதிக காலம் ஆட்சி செய்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரே இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பயமுறுத்திய மிகப்பெரிய பூச்சாண்டியாக இருந்திருக்கிறார் என்பதை அவரது அரசியல் காய் நகர்த்தல்களை கவனிக்கும்போது தெரிந்து கொள்ளலாம். சாரைப்பாம்பு ஒன்றினை நன்கு புடைத்து அதன் உயிரைப் போக்கி உச்சிவெயிலில் போட்டதுபோல் பிரஜாவுரிமை பறிப்பால் நொந்து நைந்து போயிருந்த இம்மக்களை அவர்களது அபிப்பிராயத்தைக் கேட்காமலேயே இந்தியாவுக்கு அனுப்பி […]

மேலும் பார்க்க

ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு : ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளின் சுயாட்சி முறைகள் – பகுதி 2

19 நிமிட வாசிப்பு | 6721 பார்வைகள்

ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ன கல்மன் ஆணைக்குழு ஸ்கொட்லாந்தின் அதிகாரப் பகிர்வு பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஆணைக்குழு ஒன்றை ஐக்கிய  இராச்சிய அரசு நியமித்தது. இந்த ஆணைக்குழு, கல்மன் ஆணைக்குழு (CALMAN COMMISSION) என அழைக்கப்படுகிறது. 1995 ஆம் ஆண்டின் ஸ்கொட்லாந்து சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னரான அனுபவங்கள் பற்றி ஆராய்ந்து அரசியல் யாப்பு தொடர்பாக செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் எவையென சிபாரிசு செய்தலும், ஸ்கொட்லாந்தின் பாராளுமன்றம் ஸ்கொட்லாந்து […]

மேலும் பார்க்க

இலங்கை தமிழர்களின் சமூகக் கட்டமைப்பும் இன வரைவியலும் : யாழ்பாணத்தின் வேளாளர் சமூக குழுவின் வரலாறும் பிற சமூக குழுக்களுடன் அதன் உறவு நிலையும்

22 நிமிட வாசிப்பு | 15145 பார்வைகள்

ஆங்கில மூலம் : பேராசிரியர். ஏ ஜே. வில்சன் ஏ.ஜே வில்சன் பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையின் பேராசிரியராக விளங்கியவர். இலங்கையின் அரசியல் பற்றி ஆய்வு நூல்களையும் ஆய்வு கட்டுரைகளையும் இவர் 1950 களின் முற்பகுதி முதல் தொடர்ச்சியாக எழுதி வந்தார். 2000 ஆம் ஆண்டில் இவர் எழுதி வெளியிட்ட SRI LANKAN TAMIL NATIONALISM எனும் நூல் இவரது வாழ்வு காலத்தின் இறுதியில் எழுதிய நூலாகும். 1980 களில் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் வசித்த அமெரிக்க சனாதிபதியின் சகோதரி : அனா நீல் கிளீவ்லாண்ட் ஹாஸ்ரிங்ஸ்

9 நிமிட வாசிப்பு | 13936 பார்வைகள்

யாழ்ப்பாணக் கல்லூரியும் புகழ்பெற்ற மாணவர்களும் அண்மையில் தனது 200 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய யாழ்ப்பாணக் கல்லூரியானது 1823 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைக் கல்விக்கழகம் (Batticotta Seminary) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. வட்டுக்கோட்டை கல்விக்கழகமானது அன்று ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களுக்கு இணையானதாக விளங்கியது. கிறித்துவ சமயத்துக்கு அதிகமான மாணவர்களை உள்ளீர்க்க முடியாத காரணத்தால் 1855 இல் இதன் கற்றல் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தன. வட்டுக்கோட்டை கல்விக்கழகம் இருந்த இடத்திலிருந்தே அதாவது “பற்றிக்கோட்டா […]

மேலும் பார்க்க

தாயகம் திரும்பியோரின் அவலங்கள்

9 நிமிட வாசிப்பு | 8996 பார்வைகள்

1964 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தை அடுத்து இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் வரலாறு இரண்டு பாதைகளாகப் பிரிகின்றது. ஒன்று இலங்கைப் பிரஜைகளாக அந்தஸ்து பெற்று இங்கேயே தங்கி விட்டவர்கள்; நாடற்றவர்கள் என்ற பெயர் பெற்ற மக்கள் கூட்டத்தினரின் வரலாறு. மற்றையது இந்தியப் பிரஜாவுரிமை பெற்று  ‘தாயகம் திரும்பியோர்’ (Repatriate) என்ற திருநாமத்தை பெற்றுக்கொண்ட மற்றுமொரு மக்கள் கூட்டத்தினரின் வரலாறு. எல்லா உரிமைகளும் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – பகுதி 3

16 நிமிட வாசிப்பு | 9269 பார்வைகள்

9.5.1895 ‘உதயதாரகை’ பத்திரிகையில் பாடசாலை நூலக விருத்தி பற்றிய சுவாரஸ்யமான செய்தியொன்று காணப்படுகின்றது.  “கோப்பாய் வித்தியாசாலையார் புத்தகசாலை ஒன்றுக்கு அடியிடக் காண்பது சந்தோட கருமம். பிள்ளைகள் துண்டு கொண்டு பணம் தண்டலிற் திரிகின்றனர். வீட்டுக்கு வீடு ஒவ்வொரு புத்தகசாலை இருந்தாலோ என்றும் ஆசை என் மனதில் நெடுங்காலம் குடி கொண்டது. வாய்ச்சியளி இல்லாத தபதியும், கலப்பை நுகமில்லாத வேளாளனும் புத்தகமில்லாத ஆசிரியனும் ஒருவருக்கொருவர் சமம். பாடசாலையோட்டம் முடிந்தால் புத்தகங்கள் ஓட்டம் […]

மேலும் பார்க்க

விவசாய எழுச்சித் திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் ?

18 நிமிட வாசிப்பு | 13624 பார்வைகள்

அறிமுகம் இலங்கையின் இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களில் துறைசார் நிபுணர்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துக்களைக் கேளாமலும் நன்கு திட்டமிடப்படாமலும் 2019 ஆம் ஆண்டு எதேச்சதிகாரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நாடு தழுவிய கட்டாய சேதன விவசாயமும் அசேதன விவசாய உள்ளீடுகளுக்கான தடையுமே மிகப் பிரதானமாகப் பார்க்கப்படுகின்றன. இலங்கை கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சூழல்நேய விவசாயத் திட்டங்களினூடு தற்சார்பு உணவு உற்பத்தி செய்த நாடாக இருந்தும் பின்னர்  திறந்த […]

மேலும் பார்க்க

ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு : ஸ்கொட்லாந்து, வடஅயர்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளின் சுயாட்சி முறைகள் – பகுதி 1

20 நிமிட வாசிப்பு | 15626 பார்வைகள்

ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ன POWER SHARING : THE INTERNATIONAL EXPERIENCE என்ற நூலை அரசியல் யாப்புக்கான கற்கை நிறுவனம், இலங்கை – ராஜகிரிய என்ற அமைப்பு 2011 ஆம் ஆண்டில் வெளியிட்டது. இந்நூலின் பதிப்பாசிரியர்கள் ரஞ்சித் அமரசிங்க மற்றும் ஜயம்பதி விக்கிரமரட்ன ஆவர். இந்நூலில் ரஞ்சித் அமரசிங்க ஸ்பெயின் நாட்டின் அசமத்துவ அதிகாரப் பகிர்வு குறித்த ஒரு கட்டுரையை எழுதிச் சேர்த்திருந்தார். அதனை தமிழாக்கம் செய்து […]

மேலும் பார்க்க

கடலும் காலநிலைமாற்ற அரசியலும்

20 நிமிட வாசிப்பு | 10998 பார்வைகள்

கடலட்டை வளர்ப்பை நியாயப்படுத்த அதிகார வர்க்கத்தினரும், அதன் கடல் விஞ்ஞானிகளும் முன் வைக்கும் சில கூற்றுக்களை ஆராய்வோம். “இன்னும் சில தசாப்தங்களுக்குள் இலங்கையைச் சுற்றியுள்ள கரைகள் சார்ந்த கடற்பிரதேசம் எந்த ஜீவராசியும் வாழ முடியாத பிரதேசம் ஆகிவிடும். ஏற்கனவே வறட்சியும் நன்னீர்த் தட்டுப்பாடும் காணப்படும் கரையோர மீன்பிடிக் கிராமங்கள் மனிதர் வாழ்வதற்குத் தகுதியற்ற இடங்களாகப் போய்விடும். வெப்ப அதிகரிப்புக் காரணமாக புல், பூண்டு கூட முளைக்காத பூமியாகி விடும், கடல் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்