October 2023 - Ezhuna | எழுநா

October 2023 தொடர்கள்

‘லயன்’ விடுதியிலிருந்து வீதிக்கு

9 நிமிட வாசிப்பு | 8463 பார்வைகள்

பஞ்சம் தலைவிரித்தாடிய போது அதற்கான காரணத்தை அறிந்து, தீர்த்து வைக்க முயற்சிக்காமல் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டு பிச்சைக்காரர்களாக வீதிகளில் அலைந்த மக்களை, நகர வீதிகளை அசிங்கப்படுத்துகிறார்கள் என்று கூறி, லொரிகளில் ஏற்றிச்சென்று கிழக்குப் பிரதேசத்தின் காட்டுப்பகுதிகளில் நிராதரவாக விட்டு வந்த கொடூரமான வரலாறு கூட மலையக மக்களின் வரலாற்று ஏடுகளில் உண்டு. இத்தகைய வரலாற்றைக் கிளறும்போது அது உண்டாக்கும் வேதனையை இதனைப் படிப்பவரும் உணரலாம்.  1974 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய […]

மேலும் பார்க்க

கோழி வளர்ப்புத் தொழிற்துறை : வளங்களும் வாய்ப்புக்களும்

14 நிமிட வாசிப்பு | 8528 பார்வைகள்

வாழ்வாதாரத் தொழில் முயற்சித் துறைகளில் உயிரின வளர்ப்புத் துறையானது முக்கியத்துவம் வாய்ந்தது. இவ் வளர்ப்புத் துறை விலங்குகளையும் பறவைகளையும் உள்ளடக்குகின்றது. பறவை வளர்ப்பில் முதன்மையாக அமைந்திருப்பது கோழி வளர்ப்பாகும். இவை இறைச்சி, முட்டை ஆகிய இரு பெரும் நோக்கங்களுக்காக வளர்க்கப்படுகின்றன. சமூகத்தில் பலரும் இந்த வாழ்வாதார முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறைந்த முதலீட்டுடன் இத்தொழிலை ஆரம்பிக்க முடிவதுடன் இயலுமையின் விருத்திக்கேற்ப படிப்படியாக அதிகரித்துச் செல்லவும் முடியும் என்பது பலரும் இத்தொழிலில் இணைவதற்கு […]

மேலும் பார்க்க

சுத்தமான பாலுற்பத்தி

19 நிமிட வாசிப்பு | 8723 பார்வைகள்

இந்தக் கட்டுரை சுத்தமான பாலுற்பத்திச் செயற்பாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆராய்கிறது. பால் அதிகளவான ஊட்டச் சத்துக்களைக் கொண்ட உயிர்த் திரவமாகும். கறந்த பால் மிக விரைவாக பழுதடையக் கூடியது. பல நுண்ணங்கிகளின் செயற்பாட்டுக்கு மிகச் சிறந்த ஊடகமாக தொழிற்படக் கூடியது. இந்த நுண்ணங்கிகள் பல்கிப் பெருகி பாலின் கட்டமைப்பை பாதிக்க, பால் அதன் உறுதித் தன்மையில் இருந்து சிதையத் தொடங்குகிறது. இதன் காரணமாக பாலை சாதாரண சூழ்நிலையில் அறை வெப்பநிலையில் […]

மேலும் பார்க்க

சமூக மாற்றக் கருவியாக பக்திப் பேரியக்கம்

30 நிமிட வாசிப்பு | 7917 பார்வைகள்

“சனாதன ஒழிப்பு” விவகாரம் ஆப்பிழுத்து மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்ட பின்னரும் விடாத தூவானமாக சனாதனக் கோட்பாட்டு அடிப்படைகளைத் தாக்கும் வீரப் பிரதாபங்கள் ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்டவாறுள்ளன. இவ்வகை விட்டுக்கொடுக்காத வீரதீர முழக்கங்களை எழுப்புகிறவர்களாக மார்க்சியம் பேசுகிற சில பேர் இருப்பது காலதேச நிலவரங்களை விடவும் தமது ‘புரட்சி வேடம்’ கலையக் கூடாது என்ற அவர்களுக்கான அக்கறையையே வெளிப்படுத்துகிறது. முன்னத்தி ஏராக ‘சனாதன ஒழிப்பு’ விவகாரத்தைத் தொடக்கி வைத்திருந்த […]

மேலும் பார்க்க

17 ஆம் நூற்றாண்டின் நிலப்படங்களில் யாழ்ப்பாணக் குடாநாடும் அதை அண்டிய தலைநிலப் பகுதிகளும்

20 நிமிட வாசிப்பு | 12454 பார்வைகள்

17 ஆம் நூற்றாண்டின் இலங்கைப்படங்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டை அண்டிய தீவுகள் குறித்த தகவல்களை ஏற்கெனவே பார்த்தோம். அப்படங்களில் யாழ்ப்பாணக் குடாநாடு தொடர்பிலும் அதை அண்டித் தலைநிலத்தில் உள்ள பகுதிகள் தொடர்பிலும் காணப்படும் தகவல்களைத் தொடர்ந்து பார்க்கலாம். அந்நூற்றாண்டில் 1558 வரையான காலப் பகுதியைச் சேர்ந்த இலங்கை நிலப்படங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தெளிவாகக் காட்டவில்லை என்றும், அப்பகுதி தொடர்பில் குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் அப்படங்களில் இல்லை என்றும் ஏற்கெனவே அறிந்துகொண்டோம். ஒல்லாந்தர் […]

மேலும் பார்க்க

பிள்ளைகளை ஆளுமைமிக்கவர்களாக வளர்ப்பது எப்படி?

12 நிமிட வாசிப்பு | 15171 பார்வைகள்

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது-திருக்குறள்- விளக்கம் : பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும். கடல் கடந்து கண்டங்கள் கடந்து ஈழத் தமிழர்களான நாங்கள் இன்று உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றோம். எமது தாய் நாடான ஈழத்தில் குடும்பங்களாகவும் சிறு சமூகங்களாகவும் ஓர் அடையாளத்துடன் வாழ்ந்துவந்த நாம், எமது நாட்டின் இனப்போர் […]

மேலும் பார்க்க

சடுதி மரணங்களின் காலம்

9 நிமிட வாசிப்பு | 6097 பார்வைகள்

1970 களை அடுத்து வந்த அரை தசாப்த காலம் தோட்டத் தொழிலாளர் சமூகத்தை பேய் பிடித்து ஆட்டிய காலமாகவே இருந்தது. நூற்றுக்கணக்கானோர் பசி, பட்டினி காரணமாக ஆங்காங்கே செத்து மடிந்த போதும் அரசாங்கம் எதையுமே கண்டுகொள்ளாமல் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காதது போல் பாவனை செய்துவந்தது. அரசாங்கத்தின் பங்குதாரர்களாக ஒட்டிக்கொண்டு பதவியை கட்டிக்காத்துக் கொண்டிருந்தவர்களான இடதுசாரிக் கூட்டணியினரும் அரசாங்கத்தின் நிலையையே பிரதிபலித்தனர். 1975 ஆம் ஆண்டில் தோட்டப் பகுதி மக்களின் சுகாதார […]

மேலும் பார்க்க

கீழைக்கரைக்கான வேறு தொன்மச் சான்றுகள் II

15 நிமிட வாசிப்பு | 6539 பார்வைகள்

சோனகர் தொன்மங்கள் கீழைக்கரையின் சிறப்புமிக்க சமூகங்களுள் ஒன்றான ஈழத்துச் சோனகரின் தோற்றத்தில், தமிழகத்திலிருந்தும் கேரளத்திலிருந்தும் குடிவந்த மரைக்காயர்கள், மாப்பிள்ளைகள், லெப்பைகள், ஆப்கானின் ப`ச்தூன் பிராந்தியத்துப் பட்டாணியர், துருக்கி நாட்டின் துலுக்கர்கள், மத்திய கிழக்கு நாடுகளினின்று வந்த வணிகர்கள், மார்க்க அறிஞர்கள் என்றவாறு பலருக்கும் பங்குண்டு (McGilvray, 1998: 433 – 481).  கீழைக்கரையில் மீளமீளப் பதிவாகியுள்ள திமிலர் – முக்குவர் முரண்பாட்டில் பட்டாணியர் கொண்டிருந்த வகிபாகத்தின் மூலம் இவர்களுக்கு முக்குவரோடு […]

மேலும் பார்க்க

பட்டினிப் போராட்டம்

10 நிமிட வாசிப்பு | 7644 பார்வைகள்

நாட்டில் எங்கு பார்த்தாலும் பசியும் பட்டினியும் தலைவிரித்து தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது. அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு எந்தவிதமான திட்டமும் இருக்கவில்லை. அவர்களின் உள்நாட்டு தேசிய பொருளாதாரத் திட்டமெல்லாம் பொய்யாகிக் கொண்டிருந்தது. அக்காலத்தில், மலையக மக்களுக்கான ஒரு பாராளுமன்ற பிரதிநிதியாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரசை சேர்ந்த ஏ.அசீஸ் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரால் நியமன பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். தோட்டத் தொழிலாளர்கள் பசியாலும் பட்டினியாலும் செத்து மடிவதை பொறுக்கமுடியாமல், அவர்களுக்கு போதுமான உணவு […]

மேலும் பார்க்க

கோடைகாலத்தில் குளிர்ச்சிதரும் வத்தகப்பழம்

9 நிமிட வாசிப்பு | 11609 பார்வைகள்

*இலங்கையில் வத்தகப்பழம் என்றும் இந்தியாவில் தர்ப்பூசணி என்றும் பரவலாக அறியப்படும் இப்பழம் கோடைகாலத்தில் அருந்துவதற்கு மிகவும் சிறந்த ஒரு பழம் என்பதைப் பலரும் அனுபவபூர்வமாக அறிந்துவைத்துள்ளார்கள். இக்கட்டுரையில் வெளிநாட்டில் வாழும் தமிழர் பலரும் அறிந்துவைத்திருக்கும் தர்ப்பூசணி என்னும் பெயரையே பெரிதும் பயன்படுத்தியுள்ளேன். “வத்தகப் பழம் குளிர்ச்சி மன்னிடும் பைத்தியம்போம்சத்திபோம் பித்தம் தீரும் தவறிலாக் கொடி ஈதல்லால்ஒத்த கக்கரியும் வெம்மை ஒழித்துச் சீதளம் உண்டாக்கும்”-பதார்த்தசூடாமணி- “ஒரு தர்ப்பூசணியைச் சாப்பிட்டுப்பார்த்தால் தேவதைகள் என்ன […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)