அறிமுகம் காலநிலை மாற்றம் உலகளாவிய பொருளாதாரத்திற்கும் (Mihailovic & Jovanovic, 2022) மற்றும் உலகளவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதன் தாக்கங்கள் வளர்ச்சிப் பொருளாதாரத்தின் அனைத்து முதன்மை மற்றும் உப உணவுப் பயிர்ச்செய்கைத் துறைகளிலும் பரவலாக உணரப்படுகின்றன. பூகோள காலநிலை மாற்றம் காரணமாக வரட்சி, சூறாவளி, வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைகள், கடுமையான மழைப்பொழிவு, குளிர் உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் நிகழ்வெண்ணிக்கை மற்றும் தீவிரத்தன்மை ஆகியன […]
உலகச் சமநிலை மாற்றத்தைத் தீவிர நிகழ்வுகள் முனைப்புடன் வேகப்படுத்தியவாறுள்ள சூழலில் இந்தத் தொடரில் இணைந்து பயணிக்கிறோம். அதிலும் இந்த அத்தியாயம் மத்திய கிழக்கில் இயங்கி வருகின்ற உலக மேலாதிக்கச் சக்தியின் ஒரு குவிமையமான இஸ்ரேல் தனது மேலாதிக்க ஆற்றலின் பலவீனத்தை முதல் தடவையாக வெளிப்படுத்தியவாறு இருக்கும் 2023 நொவெம்பர் மாதத்துக்கு உரியதாக உள்ளது. ஏற்கனவே ஐந்தாறு வருடங்களாக ஐக்கிய அமெரிக்க மேலாதிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியத் திணையானது அதனது பொருளாதார வலுவில் […]
இலங்கை மக்களில் பெரும்பாலானவர்களின் காலைத் தேநீரில் பால் சேர்க்கப்படுகிறது. எனினும் அதிகளவில் பொதி செய்யப்பட்ட பால் மா வடிவிலேயே சேர்க்கப்படுகிறது. திரவப் பால் வடிவில் அது சேர்க்கப்படுவது மிக மிகக் குறைவு. அதற்கு பல காரணங்கள் உள்ளன. இலங்கையில் நுகரப்படும் பால் மா நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டே உள்ளூர் சந்தைக்கு விநியோகிக்கப்படுகிறது. பால் மா இறக்குமதிக்கே பல பில்லியன் டொலரை வெளிநாடுகளுக்கு வழங்க வேண்டியிருக்கிறது. இது […]
எழுதப்பட்ட ஆவணங்களே வரலாற்றுக்கு ஆதாரம். எழுத்துக் கிடையாத காலத்தில் வேறு தொல்லியல், மானுடவியல் எச்சங்களைக் கொண்டு கட்டமைக்கப்படும் போது அது ‘முன்னை-வரலாறு’ (Pre-History) என்று அழைக்கப்படும். முன்னை-வரலாற்றின் குறைந்தபட்ச எல்லை என்பது அங்கு எழுத்துச் சான்று கிடைத்த காலமே. நாம் வரலாறை எப்போதும் மனிதனை மையமாகக் கொண்டே வரைவதால், ஒரு நாட்டின் முன்னை-வரலாறானது அங்கு முதல் மாந்தன் தடம் பதித்த காலத்திலிருந்து, அங்கு கிடைத்த முதல் எழுத்துச் சான்று வரையான […]
1971 முதல் 1977 வரையிலான காலப்பகுதியில் மலையகத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட காடைத்தனம், வாழ்விடங்களில் இருந்து அவர்களை விரட்டியடித்தது. பசி, பட்டினி, பஞ்சம், உணவுப் பொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு போன்றன காரணமாக திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரின் அரசாங்கத்தின்மீது அவர்களுக்கு பெரும் வெறுப்பு உண்டாகியது. மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமன்றி முழு இலங்கை மக்களுமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பவிட வேண்டும் என்று […]
17 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தரால் வரையப்பட்ட இலங்கையின் நிலப்படங்களில் யாழ்ப்பாணத்தையும் அதை அண்டிய பகுதிகளையும் பற்றிய தகவல்கள் குறித்து ஏற்கெனவே பார்த்தோம். 18 ஆம் நூற்றாண்டில் இறுதி நான்கு ஆண்டுகள் நீங்கலாக, இலங்கை ஒல்லாந்தரின் ஆட்சியின் கீழேயே இருந்தது. அக்காலத்தில் வரையப்பட்ட இலங்கைப் படங்களில், தீவின் வடிவம் படிப்படியாகத் திருத்தமடைந்து வந்தது. அத்துடன், பல்வேறு தேவைகளுக்காக இலங்கையின் வடபகுதியின் பல்வேறு பகுதிகளைக் காட்டும் விவரமான நிலப்படங்களையும் வரைந்தனர். அதேவேளை, இக்காலப்பகுதியில் […]
வடக்கு கிழக்கு காடுகளின் பொதுவான தன்மைகள் காடுகளிலுள்ள மண்ணானது மிகவும் வளமுள்ளது. ஆண்டாண்டு காலமாக சிதைவடையாமல் பேணப்படும் இம் மண், மண்ணின் சகல கூறுகளையும் கொண்டுள்ளது. அதிகமாக காணப்படும் பிரிகையாக்கும் பக்டீரியாக்கள் இப் பகுதியின் சமநிலையைப் பேணுவதில் பெரும்பங்காற்றுகிறது. வேருடன் இணைந்து ஒன்றிணைந்து வாழும் அநேக பக்டீரியாக்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. பிரிகையாக்கிகளான பங்கசுகளும் இங்கு உண்டு. வேருடன் இணைந்துவாழும் பக்டீரியாக்கள் மண்ணிலுள்ள பொஸ்பரஸை கரைத்து தாவரங்களுக்கு தேவையான போசணைகளை வழங்குவதில் […]
1930 களை தொடர்ந்துவந்த உலகப் பொருளாதார பெருமந்த காலத்திலிருந்தே இந்திய வம்சாவழித் தமிழர்கள் மீதும் மலையாளிகள் மீதும் இந்த நாட்டு பெரும்பான்மை இன மக்கள் பெரும் துவேசத்தை கக்கி வந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அதன் தலைவர் டி.எஸ். சேனாநாயக்க, அப்போது நிதியமைச்சராக இருந்த ஜே.ஆர். ஜெயவர்தன, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆகியோரதும் மற்றும் பலரதும் இனவாதப் போக்குகள், 1948 இல் பாராளுமன்றத்தில் இவர்களின் பிரஜாவுரிமை பறிப்புச் சட்டம் தொடர்பில் கொண்டுவரப்பட்ட […]
கற்றது கைமண் அளவு கல்லாதது கடலளவு என்பதற்கு ஏற்ப கடல் பற்றிய எம் அறிவுக்கெட்டிய விபரங்கள் முதலாவது அத்தியாயத்தில் ஆராயப்பட்டுள்ளன. இவ் இரண்டாம் அத்தியாயம் காடும் காடுசார் உயிரியல் பல்வகைமை பற்றியும், அதனுடனான அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களையும் தாங்கிவருகின்றது. காடுசம்பந்தமான ஒரு பொதுஅறிமுகத்துடன் இவ் அத்தியாயத்தில் நுழைந்தால் மட்டுமே வடக்கு கிழக்கு காடுகள் பற்றிய ஓர் அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும். காடு அல்லது வனம் எனும் பதம் உலகில் பல்வேறு […]
18 வீதமான தமிழர்களுடன் ஒப்பிடும் போது, இலங்கை சனத்தொகையில் கிட்டத்தட்ட 8 வீதமானவர்கள் முஸ்லிம்கள். ஆனால் இந்த எளிய சிறுபான்மை அடையாளங்கள் தீவின் இனச் சிக்கலை வெளிப்படுத்துவதை விடவும் உண்மையில் மறைக்கவே செய்கின்றன. கடந்த 100 ஆண்டுகளாக முஸ்லீம் சமூகத்தின் நகர்ப்புற தலைவர்களும் அரசியல் பேச்சாளர்களும், முஸ்லிம்கள் வீட்டில் தமிழ் பேசினாலும் பல தமிழ் உறவுகளையும் உள்நாட்டு நடைமுறைகளையும் பகிர்ந்து கொண்டாலும், அவர்களை தமிழ் முஸ்லிம்கள் அல்லது முஸ்லிம் தமிழர்கள் […]