November 2023 - Page 2 of 2 - Ezhuna | எழுநா
slide-1
previous arrow
next arrow

November 2023 தொடர்கள்

பறங்கிப்பூசணியும் நீற்றுப்பூசணியும்

15 நிமிட வாசிப்பு | 13611 பார்வைகள்

அனலழலை நீக்கும் அதிபித்தம் போக்கும்கனலனலே வென்பசியைக் காட்டும்-புனலாகுமிக்கவைய முண்டாக்கு மென்கொடியே யெப்போதும்சர்க்கரைப் பறங்கிக்காய் தான்– பதார்த்தகுண சிந்தாமணி- பொருள் : சர்க்கரைப் பறங்கிக்காய் எனப்படும் பூசணிக்காய் உடல் சூட்டைக் குறைக்கும். கூடிய பித்தத்தைப் போக்கும். பசியைக் கூட்டும். பெருமளவில் நீரைக் கொண்டிருக்கும். கபத்தைத் தோற்றுவிக்கும். ‘பறங்கிப்பூசணி’ என்னும் பெயரைக் கேட்டதுமே இந்தப்பூசணி பறங்கியர் என அழைக்கப்பட்ட போர்த்துக்கேயர் அல்லது ஒல்லாந்தரால் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு காய்கறியாக இருத்தல் வேண்டும் என்பதை […]

மேலும் பார்க்க

சிங்கள அரசின் காணிக் கொள்கை

8 நிமிட வாசிப்பு | 4017 பார்வைகள்

1974 களை தொடர்ந்து வந்த காலப்பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்கவை தலைமையாகக் கொண்ட கூட்டு அரசாங்கம் கடைப்பிடித்த காணிக் கொள்கை காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகள் எங்கிலும் சிங்களப் பேரினவாதம் மூர்க்கமாக தலைவிரித்தாடத் தொடங்கியது. மலையக பெருந்தோட்டங்களில் இருந்து தமிழ் தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு அந்த தோட்டக் காணிகளை சிங்கள மக்களுக்கு பிரித்துக் கொடுக்கும் கைங்கரியம் ஆரம்பமானது. இதன் பொருட்டு 1975 ஆம் ஆண்டு சட்ட விதிமுறைகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்தச் சட்ட […]

மேலும் பார்க்க

என்ன செய்ய வேண்டும்?

15 நிமிட வாசிப்பு | 11219 பார்வைகள்

வடமாகாண கடற்பிரதேசம் வடமேற்கு மாகாண கடல் எல்லையிலிருந்து கிழக்கு மாகாண எல்லை வரை பரந்துள்ளது. இலங்கையின் எந்த மாகாணத்துக்கும் இல்லாத வகையில் பலதரப்பட்ட  தொழில்களைச் செய்வதற்கான வளங்களை கொண்டது வடமாகாணத்தின் கடற்பிரதேசம். பின்வருவன இன்றுள்ள வடமாகாணக் கடலில் வருவாய் தரக்கூடிய தொழிலாக இருப்பவை: ஆழ்கடல் மீன்பிடி  கரையோர மீன்பிடி  ஆழ்கடல் மீன்பிடி  போர் முடிவுற்ற காலத்தின் பின்பு ஆழ்கடல் மீன்பிடியை அபிவிருத்தி செய்ய அரசினால் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. தனியார்களின் மூலதனத்தை பயன்படுத்தி செய்யப்பட்டது வெறும் திருத்தல் வேலைகள் மட்டுமே. நவீன […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 6

28 நிமிட வாசிப்பு | 9711 பார்வைகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முகாமையாளர் சபையில் எழுது வினைஞராயிருந்த வே. இளையதம்பி அவர்களின் மகன் வே.இ. பாக்கியநாதன் இளைஞராயிருந்த போதே இந்துக் கல்லூரியில் சிலமாதங்கள் ஆசிரியராகவும் இருந்தவர். இவர் தனது மேற்படிப்புக்காக கல்கத்தா சென்று பொருளியல், வர்த்தகம் முதலிய பாடங்கள் படித்துப் பட்டம் பெற்று மீண்டதும் கொழும்பில் வெஸ்லி கல்லூரியில் ஆசிரியரானார். வெஸ்லி கல்லூரியிருந்த காலத்தில் புல்பிறைற் புலமைப்பரிசில் பெற்று அமெரிக்காவுக்குச் சென்று அங்கே அற்லான்ரா பல்கலைக்கழகத்தில் நூலகத்துறையில் (M.Sc. […]

மேலும் பார்க்க

சிவபூமி அருங்காட்சியகம் : ஈழத் தமிழர் வரலாற்றின் புதிய முகவரி

10 நிமிட வாசிப்பு | 12766 பார்வைகள்

யாழ்ப்பாண நுழைவாயிலான நாவற்குழியில் 25.01.2020 அன்று திறந்து வைக்கப்படும் சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகத்தின் ஆரம்ப நிகழ்வை ஈழத் தமிழர் வரலாற்றில் நிரந்தரமாக இடம்பெறப்போகும் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகப் பார்க்கிறேன். இவ் அருங்காட்சியகத்தின் மூலம் எம் முன்னோர்களால் வளர்க்கப்பட்டு எம்மோடு வாழ்ந்துவரும் பாரம்பரிய மரபுரிமைச் சொத்துக்களைச் சிறிதும் பிசகாமல் அடுத்து வரும் சந்ததியினருக்கு கையளிப்பதற்கு வழியேற்படுத்தப்பட்டிருக்கின்றது. மூன்று தளங்களில் அமைக்கப்பட்ட இவ் அரும்பொருள் காட்சியகத்தில் வடஇலங்கை மக்களின் பூர்வீக வரலாற்று அடையாளங்கள், […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்