December 2023 - Ezhuna | எழுநா

December 2023 தொடர்கள்

இயக்கர் அல்லது பத்தர் : இலங்கை வரலாற்றுக் காலத்தின் துவக்கம்

11 நிமிட வாசிப்பு | 18668 பார்வைகள்

கீழைக்கரையில் மாப்பாறைக்காலம் அல்லது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பல கட்டமைப்புகள், வாகரை, உகந்தை உள்ளிட்ட இடங்களில் அவதானிக்கப்பட்டிருந்ததை கடந்த அத்தியாயத்தில் கண்டிருந்தோம். மட்டக்களப்பு கோரளைப்பற்று வடக்கு வாகரையில் வெருகலாற்றின் கழிமுகத்தை அண்டிய குரங்கு படையெடுத்த வேம்பில் பாறைக் கற்களாலான கற்கிடை [1] அடக்கங்களும் போரதீவுப்பற்று வெல்லாவெளி மண்டூரை அண்டி பெருங்கற்கால அடக்கங்களும் முன்பு இனங்காணப்பட்டிருந்ததுடன், திருக்கோணமலை – கொட்டியாரப்பற்று கிழக்கு – வெருகல் இலந்தைத்துறையில் கரும்-செம் கலவோடுகள் பெறப்பட்டிருக்கின்றன (பத்மநாதன், 2013:16). […]

மேலும் பார்க்க

கால்நடைப் பண்ணைகள் தோல்வியடையும் வழிகள்

12 நிமிட வாசிப்பு | 13182 பார்வைகள்

அண்மையில் இணையவழி ஊடகமொன்றில் சாவகச்சேரி பகுதியில்  உள்ள கறவை மாட்டுப் பண்ணை தொடர்பான காணொளியை காணமுடிந்தது. 34 கலப்பின மாடுகளைக் கொண்ட அந்தப் பண்ணையில் பணியாற்றும் ஊழியர்களை ஊடகவியலாளர்கள் கலந்துரையாடல் செய்திருந்தார்கள். அங்குள்ள மாடுகள் உணவின்றி மெலிந்து போயிருந்தன. சிலது இறந்துமிருப்பதாக அந்தப் பண்ணையின் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர். இந்தக் கட்டுரை இது தொடர்பானதே. ஒரு நாணயத்தின் இரு பக்கமாக உரிமையாளரின் ஊதாசீனத்தையும் ஊழியர்களின் நிலையையும் ஆராயப் போகிறேன். எங்களது தொடருக்கு […]

மேலும் பார்க்க

சாதி மறுப்பு இயக்கங்கள் : வீர சைவம், சீக்கியம்

36 நிமிட வாசிப்பு | 9581 பார்வைகள்

‘பண்பாட்டு ஏகாதிபத்தியமாகப் பிராமணியம்’ கட்டமைத்துள்ள சமூக முறைமைக்குள் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இயங்கிக்கொண்டு வருகிறோம் எனச் சில சமூகவியலாளர்கள் வலியுறுத்துவர். ஏகாதிபத்தியம் எனும் வரலாற்றுக் கட்டம் இருபதாம் நூற்றாண்டில் இருந்து இயங்கி வருகிற ஒன்று. முன்னதாக இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியாவும் ஐந்து நூற்றாண்டுகளாக இலங்கையும் ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்பட்டதுண்டு. பிராமணிய மேலாதிக்கத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படுகிற ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஏகாதிபத்திய அமைப்பு மேற்கொள்வதைப்போல ‘ஏகபோக மூலதனத்தை’ பிற திணைகள் […]

மேலும் பார்க்க

கிளிநொச்சி விவசாயத்தில் சுவிஸ் தொழில்நுட்ப மேலாண்மை

18 நிமிட வாசிப்பு | 10751 பார்வைகள்

தமிழில் : த. சிவதாசன் கமில்டன் ஆறுமுகம், லீக்க ஷ்றோடருடனான எனது சந்திப்பு தவறுதலாகவே நிகழ்ந்தது. ஒரு குறிக்கப்பட்ட வேலைத்திட்டமொன்றில் எங்கள் இருவருக்கும் ஆர்வம் இருக்கலாமெனக் கருதிய பொதுவான நண்பரொருவர் ஏற்பாடு செய்ததன்படி எனது அலுவலகத்தில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. உண்மையில் நண்பர் கருதிய அவ்வேலைத்திட்ட விடயத்தில் எங்களுக்குள் எதுவித பொதுமையும் இருக்கவில்லை. ஆனாலும் அது ஒரு அதிர்ஷ்டவசமான தவறாக அமைந்துவிட்டது. இதன் மூலம் நான் இரண்டு அரிதான மனிதர்களைச் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணக் கட்டளையகத்தைக் காட்டும் நிலப்படங்கள் – பகுதி 1

16 நிமிட வாசிப்பு | 9984 பார்வைகள்

17 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணக் கட்டளையகத்தைத் தனியாகக் காட்டும் நிலப்படங்கள் கிடைக்கின்றன. 1698 ஆம் ஆண்டில் யான் கிறிஸ்டியாஸ் தூர்சி (Jan Christiaensz Toorsee) என்பவர் வரைந்த ‘யாழ்ப்பாணப் பட்டினத்தினதும் வன்னியினதும் நிலப்படம்’ என்று தலைப்பிட்ட நிலப்படம் ஒன்று நெதர்லாந்திலுள்ள மொழியியல், புவியியல், இனவியல் என்பவற்றுக்கான அரச நிறுவனத்தில் (Koninklijk Instituut voor taal-, Land- en Volkenkunde) உள்ளது.1 இந்நிலப்படத்தில் உள்ள தகவலின்படி ஏற்கெனவே 1679 […]

மேலும் பார்க்க

சுவிற்சர்லாந்தின் சமஷ்டி முறை – பகுதி 3

16 நிமிட வாசிப்பு | 8346 பார்வைகள்

ஆங்கில மூலம் : யொஹான் பொய்றியர் (JOHANNE POIRIER) அசமத்துவம் சுவிற்சர்லாந்து அரசியல் யாப்பு அசமத்துவ கட்டமைப்பை (சில கன்டன்களுக்கு கூடிய சுயாட்சியும் வேறு சிலவற்றுக்கு குறைந்த சுயாட்சியும்) உள்ளார்ந்த இயல்பாகக் கொண்டதன்று. ஆயினும் அச் சமஷ்டிச் செயற்பாட்டின் ஊடாக அசமத்துவ அம்சங்கள் வெளிப்பட்டுத் தெரிகின்றன. இது எவ்வாறு நிகழ்கிறது? கன்டன்கள் மிகுந்த சுயாட்சி உரிமையுடையவையாதலால் தமது நிறுவனங்களை தாமே சுதந்திரமான முறையில் அமைத்துக்கொள்கின்றன. இவ்வாறான சுதந்திரம் கன்டன்களுக்கிடையே அசமத்துவத்தை […]

மேலும் பார்க்க

போரினால் புலம்பெயர்ந்த சமூகங்களின் தாயகத்துடனான உறவு : பணம் அனுப்புதலும் பண்பாட்டு நடைமுறைகளும் – பகுதி 2

35 நிமிட வாசிப்பு | 12766 பார்வைகள்

சர்வேந்திராவின் கலாநிதி ஆய்வுக் கட்டுரைகளின் உள்ளடக்கம் இந்த ஆய்வுத் தொகுப்பின் கோட்பாட்டு ரீதியான அடிப்படை என்பது டயஸ்போறா, நாடுகடந்த வாழ்வியல் என்பவையாகும். சிறுபான்மையினர், டயஸ்போறா, நாடுகடந்த வாழ்வியல் என்பன தொடர்பான பெரும்பாலான கல்வியியல் ஆய்வுகள் பெரும்பான்மை நோக்குநிலையில் வெளிவந்துள்ளன. இக்கட்டுரைகளில் சிறுபான்மை நோக்குநிலை ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே இவ்வாய்வின் முதன்மையான தனித்துவம். நாடு கடந்த வாழ்வியலின் பல்பரிமாணங்களைக் கொண்ட யதார்த்தங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.  சர்வேந்திராவின் கலாநிதி ஆய்வு ஆறு ஆய்வுக் […]

மேலும் பார்க்க

உணவுத் தேவையில் தன்நிறைவு நோக்கிய பயணம்

12 நிமிட வாசிப்பு | 8463 பார்வைகள்

தமிழில் : த. சிவதாசன் 2003 இல் தனது முதலாவது தொழிலை ஆரம்பிக்கும்போது கே. சுகந்தனுக்கு 21 வயது மட்டுமே. தோல்விகண்ட சமாதான ஒப்பந்தத்தின் மத்தியில் (2002-2006) இலங்கையின் இனப்போர் புழுங்கிக்கொண்டிருந்த காலப்பகுதியில் கொழும்பு புறக்கோட்டை சந்தையில் அவர் தனது சிறு கடையை ஆரம்பித்தார். நெருக்கமான கடைகளுக்கும் தெருவோர சாவடிகளுக்கும் பெயர்போன புறக்கோட்டைத் தெருவொன்றில் சமையலுக்குப் பாவிக்கும் பலவகை எண்ணைகளை விற்பதே அவரது தொழில். இன்று வரை அது சிறப்பாக […]

மேலும் பார்க்க

மானிடவியலாளர் ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையாவின் தேரவாத பௌத்தம் குறித்த ஆய்வுகள்

20 நிமிட வாசிப்பு | 9815 பார்வைகள்

ஆங்கில மூலம் : எச்.எல். செனிவிரத்தின ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையா ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் பேராசிரியராக விளங்கியவர். இலங்கையில் பிறந்தவரான தம்பையா இலங்கைப் பல்கலைக்கழகம், கொர்ணல், ஹார்வாட் ஆகிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல்துறை விரிவுரையாளராக 1960 களில் கடமையாற்றினர். 1980 – 83 காலப்பகுதியில் ‘யுனெஸ்கோ’விலும் அதன் பின்னர் கேம்பிரிட்ஜ், சிக்காக்கோ, ஹார்வாட் ஆகிய பல்கலைக்கழகங்களிலும் கடமையாற்றினார். உலக அளவில் செல்வாக்குள்ள கோட்பாட்டாளரும் தேரவாத பௌத்தம் […]

மேலும் பார்க்க

இரு தலைமுறை இரு உலகம் : எதிர்நோக்கும் சவால்கள்

13 நிமிட வாசிப்பு | 15587 பார்வைகள்

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது”-திருக்குறள்- சாலமன் பாப்பையா விளக்கம்: தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது. எமது அடுத்த தலைமுறையின் வாழ்க்கை, நாம் வாழ்ந்த வாழ்க்கையிலும் மிக வித்தியாசமானது. ஈழத்தில் வாழும் தமிழ்ச் சொந்தங்களானாலும் புலம்பெயர்ந்து வாழும் எம்மைப் போன்றவர்களானாலும், அவர்களது அடுத்த தலைமுறையுடன் அவர்கள் எதிர் நோக்கும் சவால்கள் ஏராளம். இதற்கு சுற்றுச் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்