மூலிகைகள் தொடர்பில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை | உள்ளூர் உற்பத்திகள் | வைத்தியர். யோ. மதீஸன், பொது முகாமையாளர், சித்த மருந்துகள் உற்பத்தி நிலையம்
6396 பார்வைகள்
சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம் 1992இல் ஆரம்பிக்கப்பட்டது. மூலிகைத் தாவரங்கள் தொடர்பில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் வளங்களை சரிவர பயன்படுத்த முடியாதுள்ளது. காரைநகரிலுள்ள கடுக்காய் பற்றி அந்தப் பிரதேச மக்கள் பலருக்கு தெரிந்திருக்கவில்லை. தற்போது நாங்கள் அது தொடர்பில் விழிப்பூட்டி அங்கிருந்து மருந்துக்கு தேவையான கடுக்காயைப் பெற்றுவருகின்றோம். நிதிப் பிரச்சினையால் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிரமமாகவுள்ளது. மூலிகை மருந்து உற்பத்திகளை அதிகரிப்பதன் ஊடாக பலருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் […]
மேலும் பார்க்க
கருத்தியல் ரீதியான பிளவுகள் சிவில் சமூக செயற்பாடுகளுக்கு தடையாக உள்ளன | சிவில் சமூக அமைப்புகள்: சவால்கள் | அருட்பணி ராஜன் றோகான், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியம்
7358 பார்வைகள்
மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் அல்லது அரச ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்புக்கு எதிரான செயற்பாடுகளில் உத்வேகத்தோடு மக்களை இணைத்துக்கொண்டு போராடுவதில் பல சவால்கள் உள்ளன. ஆண்களின் மேலாதிக்க அரசியல், பொருளாதார சிந்தனை சரியான, முழுமையான சிவில் சமூக செயற்பாட்டிற்கு பொருத்தமானதாக இல்லை. மட்டக்களப்பில் இருக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடம் இரு கருத்தியல்கள் உள்ளன.
மேலும் பார்க்க
முடிவுப்பொருளாக மாற்றுவதற்குரிய பொறித்தொகுதி இல்லை | உள்ளூர் உற்பத்தி முயற்சிகள் | செல்லத்துரை றெஜி, முகாமையாளர், பண்டத்தரிப்பு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம்
3211 பார்வைகள்
எங்களுடைய உற்பத்திகள் எல்லாம் பருவகால உற்பத்திகள். பனங்காயை அன்றைய தினமே பயன்படுத்த வேண்டும். ஆனால் எம்மிடமுள்ள வளங்களைக் கொண்டு குறித்தளவு பனங்களியே எடுக்க முடியும். எமது உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பு தாராளமாக உள்ளது. சந்தைக்கு பொருள்களை வழங்குவது தான் சிக்கல். மூலப்பொருள்களை முடிவுப்பொருளாக மாற்றுவதற்குரிய பொறித்தொகுதி இல்லை. பொருத்தமான பொறித்தொகுதியை அடையாளம் காண்பது சவாலாக உள்ளது.
மேலும் பார்க்க
அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகளை ஒருபொருட்டாக கருதுவதில்லை | சிவில் அமைப்புகள் | நா. இன்பநாயகம்
3354 பார்வைகள்
சிவில் சமூக செயற்பாடுகள் பலவீனமடைந்து செல்லும் நிலையையே காணமுடிகின்றது. அரசியல் கட்சிகள் சிவில் சமூக அமைப்புகளை ஒருபொருட்டாக கருதுவதில்லை. கட்சிகளுக்குள்ளும் கூட்டு முடிவு இல்லை. இந்த ஆண்டு இரு கதவடைப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த போராட்டங்களால் அன்றாடம் உழைக்கும் தொழிலாளர்களின் நலன்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளன. மாறாக அரசியல் விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. குறிப்பிட்ட சில சிவில் சமூக அமைப்புகள் மட்டும் தான் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்கின்றன, உரையாடுகின்றன, […]
மேலும் பார்க்க