January 2024 - Page 2 of 2 - Ezhuna | எழுநா

January 2024 தொடர்கள்

தலைநிமிர்ந்த சமூகம்

6 நிமிட வாசிப்பு | 6916 பார்வைகள்

மலையக தமிழ் மக்களின் இந்த வரலாற்றுத் தொடர் இந்த அத்தியாயத்துடன் ஒரு முடிவுக்கு வருகிறது. எனினும் அவர்களது வரலாறு அதன் பின்னரும் இந்த அத்தியாயத்திலிருந்து இன்று வரை தொடரத்தான் செய்கிறது. அது புதுமைப்பித்தன் எழுதிய ‘துன்பக்கேணி’ என்ற கதையைப் போல ஒரு துன்பியல் வரலாறு. நான் இந்த வரலாற்று தொடரை எழுத முற்பட்டபோது இதற்கு என்ன தலைப்பை இடலாம் என்று பெரிதும் சிந்தித்தேன். சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து 74 […]

மேலும் பார்க்க

இந்தியாவின் சமஷ்டி மாதிரி – பகுதி 1

15 நிமிட வாசிப்பு | 15314 பார்வைகள்

ஆங்கில மூலம் : றேக்கா சாக்சன சமஷ்டி, பாராளுமன்ற முறை என்ற இரண்டும் இந்திய அரசியல் முறைமையின் அடிப்படையான கூறுகளாகும். ஒன்றுக்கொன்று முரண்பாடான இத் தத்துவங்களில் பாராளுமன்ற முறை (PARLIAMENTARISM ), பாராளுமன்றத்தின் அதியுயர் அதிகாரத்தை வலியுறுத்துவது. சமஷ்டி (FEDERALISM), அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படுவதை முதன்மைப்படுத்துவது. இவ்வாறாக மத்தியப்படுத்திய பாராளுமன்ற அதிகாரமும் அதிகாரப் பரவலாக்கமும் என்ற இரண்டு கூறுகளும் ஒன்றிணைந்து இருத்தல் இந்தியாவிற்கு அவசியத் தேவையாக இருந்தது. இந்தியாவின் பிரமாண்டமான […]

மேலும் பார்க்க

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அன்னாசிப் பழம்

12 நிமிட வாசிப்பு | 8996 பார்வைகள்

கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது இரண்டாவது பயணத்தின் போது, 1493 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி, தாம் புதிதாகக் கண்டறிந்த கரீபியன் தீவு ஒன்றுக்கு சாண்டா மரியா டி குவாடெலூப் என்று பெயரிட்டார். கப்பல்கள் கரையை நெருங்கியபோது, அத்தீவில் வாழ்ந்த பூர்வீகக் குடிகள் படகுகளில் நன்னீர் மற்றும் உணவை விற்பதற்காகக் கொண்டு வந்தனர். அவ்வாறு கொண்டுவரப்பட்டவற்றுள் கொலம்பஸை மிகவும் கவர்ந்த ஒன்று அன்னாசிப்பழமாகும். கொலம்பஸ் அமெரிக்காவுக்கு வருவதற்குப் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணக் கட்டளையகத்தைக் காட்டும் நிலப்படங்கள் – பகுதி 2

14 நிமிட வாசிப்பு | 9646 பார்வைகள்

சென்ற கட்டுரையில் 1598 ஆம் ஆண்டு யான் கிறிஸ்டியான்ஸ் தூர்சி வரைந்த நிலப்படத்தில் உள்ள சில தகவல்கள் குறித்தும், அவை வரலாற்று நிகழ்வுகளோடு கொண்டுள்ள தொடர்புகள் பற்றியும் விளக்கினோம். குறிப்பாக, மேற்படி நிலப்படம் காட்டும் நிர்வாகப் பிரிவு எல்லைகள், வீதிகள், கோட்டைகள் என்பவற்றைப்பற்றிய ஒரு விளக்கமாக அக்கட்டுரை அமைந்தது. அதே நிலப்படத்திலுள்ள ஆறுகள், ஊர்கள், மடங்கள் முதலிய பல்வேறு அம்சங்கள் தொடர்பிலான தகவல்களை இந்தக் கட்டுரையில் ஆராயலாம்.  ஊர்கள் இந்நிலப்படத்தில் […]

மேலும் பார்க்க

‘அப்ரிமெஸ் ரெக்’ மென்பொருள் நிறுவனம் : ஒரு படுக்கையறையிலிருந்து ஏழாயிரம் சதுர அடிகள் வரை

14 நிமிட வாசிப்பு | 8086 பார்வைகள்

தமிழில் : த. சிவதாசன் யாழ் ஜீக் சலெஞ் (Yarl Geek Challenge) வடக்கின் பெரும்பாலான தொழில்நுட்ப முயற்சிகளுக்கான நாற்றுமேடை என்பதில் சந்தேகமில்லை. 2022 இல் அது தனது 11 ஆவது போட்டியை நடத்தி முடித்திருக்கிறது. YGC நாற்றுக்கள் இதுவரை 60 நிறுவனங்களின் உருவாக்கத்துக்கும் பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும் காரணமாக இருந்திருக்கின்றன. அதே வேளை இப்படி உருவான நிறுவனங்களிலிருந்து பிரிந்துபோய் தமது சொந்த நிறுவனங்களை உருவாக்கியோரை நாம் இங்கு […]

மேலும் பார்க்க

இந்துக்களின் பஞ்சாங்கமும், தமிழர்களின் வானிலையும் காலநிலையும்

18 நிமிட வாசிப்பு | 18720 பார்வைகள்

அறிமுகம் வானிலையும் காலநிலையும் மனித வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கின்றன. மழைவீழ்ச்சி, வெப்பநிலை, காற்று, ஆவியாதல் மற்றும் சூரியக் கதிர்வீச்சு போன்ற பல்வேறு வானிலை நிகழ்வுகளைப் பொறுத்து மனித உயிர்வாழ்வின் ஒவ்வொரு செயற்பாடும் தங்கியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல வானிலை கண்காணிப்பு மையங்களில் வானிலை தரவுகளை சேகரிக்க பல கருவிகள் உதவுகின்றன. மேலும் வானிலை ஆய்வாளர்கள் ஒரு இருப்பிடத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால வானிலை நிலைமைகளை பகுப்பாய்வு செய்து கணிக்க பல […]

மேலும் பார்க்க

மீளுருவாக்கப்பட்ட ஆரியகுளமும் ஆரியச்சக்கரவர்த்திகளும்

13 நிமிட வாசிப்பு | 10231 பார்வைகள்

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து வெளிவந்த தமிழ் ஊடகங்கள் தூரநோக்குடன் தமிழ் மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்தும் மரபுரிமைச் சின்னங்களைக் கண்டறிந்து அவற்றைப் பாதுகாக்க மக்கள் அனைவரும் முன்வரவேண்டும் என்ற வேண்டுதலை முன்னெடுத்து வந்திருந்திருப்பதைக் காணமுடிகின்றது. அவ்வேண்டுதலில் ஒன்றை நிறைவு செய்திருக்கும் அரிய வரலாற்றுப் பணியாகவே இன்று யாழ்ப்பாண மாநகர சபையால் முன்னெடுத்துள்ள ஆரியகுளம் மீள்புனரமைப்புப் பணியைப் பார்க்கின்றோம். இது யாழ்ப்பாண நகரை அழகுபடுத்தும் இயற்கை சார்ந்த மரபுரிமைச் சின்னம் என்பதற்கு […]

மேலும் பார்க்க

அனுராதபுரத்தின் எல்லாளன் சமாதி

16 நிமிட வாசிப்பு | 16315 பார்வைகள்

ஆங்கில மூலம் : ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளன் என்ற தமிழ் அரசனைப் பற்றி ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ‘தீபவம்சம்’ என்னும் பாளி நூல் “ஆசை, குரோதம், அச்சம், தற்பெருமை ஆகிய மாயைகள் சூழ்ந்த வழிகளில் தன் மனதைச் செலுத்தாமல் அறவழி நின்று செங்கோல் ஓச்சினான்” என்று புகழ்ந்துரைக்கிறது. அம் மன்னனைப் போரில் வென்ற துட்டகைமுனு, மன்னன் எல்லாளன் வீழ்த்தப்பட்ட இடத்தில் […]

மேலும் பார்க்க

திம்பு பேச்சுவார்த்தையின் விளைவுகள்

11 நிமிட வாசிப்பு | 12792 பார்வைகள்

மலையக தமிழ் மக்கள் ‘நாடற்றவர்கள்’ என்ற நிலையை மாற்ற எத்தனையோ போராட்டங்கள்,  தொழிற்சங்க நடவடிக்கைகள், சாத்வீக சத்தியா கிரகங்கள் என்பவற்றையெல்லாம் மேற்கொண்டு அரசாங்கத்துக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்தனர். அடுத்தடுத்து பதவி வகித்த இனவாத அரசாங்கங்கள் தங்களது நிலைப்பாட்டில் இருந்து ஒரு அங்குலம் கூட இறங்கிவர தயாராக இருக்கவில்லை. நாட்டின் வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் தங்களது தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வாக வடக்கு கிழக்கு பிரதேசத்தை ஒரு சுயாட்சியுடன் கூடிய […]

மேலும் பார்க்க

நிலப்பயன்பாடும் நன்னீர் நிலைகளின் பல்வகைமையும் – பகுதி 2

10 நிமிட வாசிப்பு | 9282 பார்வைகள்

நன்னீர் நிலைகளின் பல்வகைமையும்  அபிவிருத்தியும் வளமுள்ள நிலங்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு ஆகிய பிரதேசங்கள் வெவ்வேறு வகையான அச்சுறுத்தல்களுக்கு உட்படுகின்றன. அவ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே அபிவிருத்தியும் நடந்தேறுகிறது. வடக்கு மற்றும் கிழக்கானது இலங்கையின் அபிவிருத்தியில் முக்கிய பங்குவகிக்கும் பிரதேசங்களாகும். மேடுபள்ளம் அதிகமுள்ள தரைத்தோற்றமாகையால் இப் பகுதியில் நடாத்தக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகள் ஒப்பீட்டளவில் இலகுவில் முன்னெடுக்கப்படக்கூடியவை. பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டமையால், இப் பாதைகளிலிருந்து எய்தக்கூடிய போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மேலும் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்