இந்தப் பகுதி உணவளிக்கும் விவசாயம், உற்பத்தி பற்றியும் சுற்றாடலின் பல்வகைமை பற்றியும் ஆராய்கிறது. உலகின் சகல பகுதியிலிருந்தும் உணவு உற்பத்தியாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருள்கள் இயற்கை எமக்குத் தந்த அருங்கொடையாகும். அறுசுவை கொண்ட இவ் உணவுகளே உலகத்தை நிலைபெறச் செய்கிறது. தாவரங்களானாலும் சரி, விலங்குகளானாலும் சரி, உணவின்றி இயங்கமுடியாது. இவ் உலகில் உணவுற்பத்தி இன்றியமையாத ஒன்றாகும். உணவு உற்பத்தியில் பிரதான காரணகர்த்தா சூரியனே. சூரிய ஒளி […]
இலங்கையும் தெற்காசியாவும் ஒருங்கிணைத்த பண்பாட்டு மண்டலமாகப் பெருங் கற்காலத்திற்கு முன்பிருந்தே விளங்கிவரும் நிலப்பரப்பாகும். இந்நிலப்பரப்பு மொழியாலும் நாகரிகத்தாலும் சமயங்களாலும் மெய்யியற் சிந்தனைகளாலும் ஒன்றனுக்கொன்று தொடர்பும் இணைப்பும் ஒத்தத்தன்மையும் கொண்டனவாக அமைகின்றன. மொழிநிலையில் தொல்காப்பியத்திற்கு முற்பட்டும் பிற்பட்டும் அதன் விதிகளுக்கு உட்பட்டனவாகவே ஈழமும் தமிழகமும் அமைகின்றன. சிங்கள மொழியின் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் தமிழின் பங்களிப்பு என்பது மிகப்பெரியது. அதனையொத்த தன்மையினையே சமயப்பண்பாட்டு நிலையிலும் காணவியலும். மெய்யியல் கோட்பாடுகளின் தோற்றமும் பரவலும் […]
தமிழில் : த. சிவதாசன் சீலன் என்ற பெயரால் அறியப்பட்ட திரு.எஸ். தவசீலன் வட மாகாணத்தின் வடக்கிலுள்ள வேலணைக்கு அடுத்துள்ள ஊர்காவற்றுறையில் பிறந்தவர். இலங்கைத் தபாற் திணைகளத்தில் தபால் விநியோகம் செய்யும் உத்தியோகத்தராகக் கடமையாற்றிய இவரது தந்தையார் இவருக்கு நான்கு வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டார். தந்தையாரின் மரணத்திற்குப் பின்னர் இந்த இளம் குடும்பம் புதுக்குடியிருப்பிலிருந்த தாயாரின் பெற்றோருடன் சென்று வாழ நேரிட்டது. தந்தையாரின் ஓய்வூதியத்திலும், தாயாரின் சிற்றூழியங்கள் மூலம் பெறப்பட்ட […]
கொக்காவிலுக்கும் மாங்குளத்திற்கும் இடைப்பட்ட பிரதான வீதிக்கு தெற்கே ஏறத்தாழ பத்துக் கிலோ மீற்றர் தொலைவில் காடுகள் சூழ்ந்துள்ள பனிக்கன்குளம் ஆற்றின் கரையோரங்களில் இருந்து கற்கால மக்கள் வேட்டையாடப் பயன்படுத்திய கற் கருவிகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பனிக்கன்குளத்தில் வாழ்ந்து வரும் திரு. கஜன், திரு. ஜெயகாந்தன் ஆகியோர் காட்டுபிரதேசத்தில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் காணப்பட்ட தானியங்கள் அரைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதெனக் கருதக்கூடிய கருங்கல்லின் புகைப்படம் ஒன்றை எமக்கு அனுப்பியிருந்தனர். இக்கருங்கலின் வடிவமைப்பும் அதன் […]
ஆங்கில மூலம் : ஜோர்ஜ் மத்தியு அண்மைக்கால அரசியல் இயங்கியலும் போக்குகளும் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்மையும் பேணுதல் முதன்மையான பணியாக இருந்தது. இந்திய அரசியல் யாப்பு இந்திய ஐக்கியத்திற்கான ஒரு கருவியாக உபயோகிக்கப்பட்டது. இந்தியா முழுமைக்குமான ஒரே சீரான நிர்வாகத்தை செயற்படுத்த வேண்டிய தேவை இருந்தது. நிர்வாகம், தேர்தல் மூலம் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நிறுவனங்கள் ஊடாக நடத்தப்படுதல் வேண்டும். இந்நிறுவனங்கள் […]
‘தமிழ்ப் பண்பாடு : ஊற்றுக்களும் ஓட்டங்களும்’ என்ற தேடலின் இரண்டாம் பகுதியான ‘சாதிய வாழ்வியல்’ தோற்றம் பெற்று வளர்ந்தவாறினைக் கடந்த எட்டு இயல்களில் கண்டு வந்துள்ளோம். ஏனைய சமூகங்களில் ஏற்றத்தாழ்வுச் சமூக முறைமை ஏற்பட்ட பின்னர் சாத்தியப்பட்டு இருந்த பண்பாட்டு விருத்தியைத் தமிழகம் அதனது வேறுபட்ட புவிச் சூழல்கள் (திணைகள்) வழங்கிய வாய்ப்பில் சமத்துவத்தை உள்ளும் புறமும் பேணியபடியே எட்ட இருந்த பிரத்தியேகக் குணாம்சங்களை முதல் பகுதியில் பேசியிருந்தோம். விவசாயப் […]