பலஸ்தீனமும் முள்ளிவாய்க்காலும் தமிழினப் படுகொலையின் 15 ஆவது ஆண்டில், நாங்கள் யாவரும் சாட்சிகளாய் பார்த்திருக்க பலஸ்தீனப் படுகொலை அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இஸ்ராயேல் – பலஸ்தீனப் போரை வெறும் இஸ்ராயேல் – பலஸ்தீனப் போராக மட்டுமே அவதானிக்க முடியாதென்பதை எல்லோருமே அறிந்திருக்கின்றோம். எனது ஆய்வு நோக்கம் கருதி இப் போரை, மத்திய கிழக்கில் பேரரசுக் கட்டமைப்புக்காக, புவிசார் அரசியல் தளத்தில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற பலப் பரீட்சைக்கான போராகவே நான் பார்க்க விரும்புகின்றேன். […]
காஞ்சிரமோடை என்னும் இப்பகுதியை நான் அறியக் காரணமாகவிருந்தது எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று நடத்திய காந்தியத்தின் ‘நாவலர் பண்ணைத் தன்னார்வத் திட்டம்’ ஆகும். நாவலர் பண்ணையில் மலையகத்திலிருந்து 77 இனக்கலவரத்தில் அகதிகளாக வந்திருந்த மக்களைக் காந்தியம் அமைப்பு குடியேற்றியிருந்தது. நாவலர் பண்ணைக்கும், மருதோடைக்குமிடையில் அமைந்திருக்கும் காஞ்சிரமோடை என்னும் பகுதி அப்போது காடாகவிருந்தது. மருதோடை வரை மட்டுமே பஸ் செல்லும். அங்கிருந்து பண்ணைக்கு மூன்று மைல்கள் வரையில் நடக்க […]