அறிமுகம் கொவிட் – 19 பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, மற்றும் அரசியல் நெருக்கடிகளால் கல்விச் செயற்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி, கல்விச் செயற்பாடுகளை நேரடியாகப் பாதித்துள்ளது. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பாடசாலைக் கல்வியைப் பொறுத்தவரை, 2023 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட புதிய கல்விச்சீர்திருத்த அமுலாக்கம் தாமதமடைந்து செல்கிறது. பொதுப்பரீட்சைகள் பிந்திக்கொண்டு செல்கின்றன. பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுகின்றது. பாடசாலைக் […]
இலங்கையின் சிங்களக் கிராமிய வாழ்வியலுடனும், அரச ஆட்சி முறைமையுடனும், அரச உயர் பதவிகளுடனும் வர்க்க, சாதிய, கல்வித் தராதர, இனக் கட்டமைப்பு முறைமைகள் பின்னிப் பிணைந்துள்ளன. பண்பாடு ரீதியான தொழில்சார் குடியேற்றங்கள் காரணமாக சாதியக் கட்டமைப்பானது ஏற்பட்டது என சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருக்கின்றார்கள். தந்தையின் சாதி பிள்ளைக்குக் கடத்தப்பட்டதுடன் தந்தை செய்த குலத் தொழிலை மகனும் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதனைக் காணலாம். இதற்கமைய, மக்களின் குடியேற்றக் கிராமங்களும் தொழில்சார் குடியேற்றங்களாகவே […]
தென்னாசியாவில் பல்லினப் பண்பாடு கொண்ட மக்கள் வாழ்ந்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இலங்கையின் வரலாறும் பண்பாடு இலங்கைக்கே உரிய தனிப் போக்குடன் வளரவும் உதவியுள்ளது. இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக இடங்களாகவே கருதப்பட்டு வருகின்றன. இவ்விடங்களில் தமிழ் மக்களே அதிகமாக அன்று தொட்டு இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் கூட்டமானது தமக்கென ஒரு பாரம்பரியப் பிரதேசம், மதம், கலை, மொழி, சமூகக் கட்டமைப்பு, கலாசாரம், […]