சென்ற கட்டுரையில் லெயுசிக்காம் தொகுப்பிலுள்ள, வலிகாமத்தைத் தனியாகக் காட்டும் நிலப்படத்தில் முழு வலிகாமத்துக்கும் தொடர்பான விடயங்களைப் பற்றிப் பார்த்தோம். தொடர்ந்து இனி வரும் கட்டுரைகளில் வலிகாமப் பிரிவுக்குள் அடங்கிய யாழ்ப்பாண நகரத்தையும் ஏனைய கோவிற்பற்றுப் பிரிவுகளையும் பற்றி ஆராயலாம். இந்தக் கட்டுரை யாழ்ப்பாண நகரப் பகுதியை எடுத்துக்கொண்டு, அப்பகுதி தொடர்பாக நிலப்படம் காட்டும் விடயங்களைக் குறித்தும், அவற்றோடு தொடர்புடைய சில வரலாற்றுத் தகவல்களைப் பற்றியும் விளக்குகிறது. யாழ்ப்பாண நகரப்பகுதி எல்லைகள் […]
அறிமுகம் ஒரு பிரதேசத்தின் எதிர்கால காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வுகள் இன்று உலகளாவிய ரீதியில் முதன்மை பெற்ற விடயங்களாக மாறி வருகின்றன. எதிர்கால காலநிலை மாற்றம் பற்றிய விடயங்களை அறிந்து கொள்வதன் ஊடாக காலநிலை மாற்றத்தை குறைப்பதற்கான அல்லது இயைபாக்குவதற்கான செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுக்க முடியும் என்ற அடிப்படையில், எதிர்காலக் காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வுகளை பல்வேறு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன (Hamadamin & Khwarahm, 2023). காலநிலை மாற்றத்திற்கு […]
ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பின்வீதியில், அமைதியான சூழலில் கம்பீரமாகக் காட்சிதந்த ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனம், கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களால் 1964 இல் மறைந்துவிட்ட அவரது அன்பு மனைவி அமரர். ஈவ்லின் விஜயரட்ன இரத்தினம் அம்மையார் அவர்களின் ஞாபகார்த்தமாக 1981 இல் கட்டப்பட்டது. கட்டடக் கலைஞர் வி.எஸ். துரைராஜா அவர்களின் ‘துரைராஜா அசோஷியேட்ஸ்’ நிறுவனத்தின் (கொழும்பு) வடிவமைப்பில் இரண்டு மாடிக் […]