1 இலங்கைப் போரின் பின்னணியில், தமிழ்க் கிராமங்கள் காணாமல் போயின. சிங்களக் குடியேற்றங்கள் தமிழ்ப் பெயர்களை மாற்றின. தமிழருக்குச் சொந்தமான நிலங்கள் அபிவிருத்தி என்னும் பெயரில் பறிபோயின. நிலத்தை விட்டு விரட்டுவது என்பது ஒரு இனக்குழுவின் கலாசாரத் தளங்களை அழித்தல் ஆகும். இழைக்கப்பட்ட அட்டூழியங்களை சரியான முறையில் அடையாளப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களிடமும் தப்பிப் பிழைத்தவர்களிடமும் மன்னிப்புக் கேட்காமல், கடந்த காலத் தவறுகளின் கள நிலையை உணராமல் அபிவிருத்தி, முன்னேற்றம் ஆகிய முன்னெடுப்புகளைச் […]
தமிழ்நாட்டினதும் இலங்கையினதும் எழுத்தறிவின் தொடக்கம் குறித்து ஆய்வாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இரு பிராந்தியங்களிலும் புழக்கத்தில் இருந்துள்ள காலத்தால் பழைய எழுத்தாகப் பிராமி கொள்ளப்படுகின்றது. இந்திய உபகண்டச் சூழலில் பெரும்பாலான மொழிகளின் வரிவடிவங்களுக்கான தாய் வடிவமாகப் பிராமி விளங்கியுள்ளது. தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளின் வரிவடிவங்கள் பிராமி எழுத்திலிருந்தே வளர்ச்சியடைந்துள்ளன. பிராமி எழுத்துகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே முதன்முதல் வாசித்தறியப்பட்டன. ஜேம்ஸ் பிரின்ஸப் 1837 ஆம் ஆண்டு அசோகரின் பாறைக் […]
அறிமுகம் இலங்கையில் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாக இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இவ்வினங்களின் தனித்துவத்தைப் பேணிக்கொள்வதற்கும் கலாசாரப் பாதுகாப்பிற்கும், தாய்மொழியான தமிழ்மொழியின் பாதுகாப்பு முக்கியமானதாகும். இருந்த போதிலும் உலகமயமாக்கல் மற்றும் மேற்கத்திய ஆதிக்கம் என்பவற்றினாலும், இலங்கையில் வரலாற்றுரீதியாக சிறுபான்மையினர் மொழிரீதியான பாகுபாடுகளிற்கு உட்பட்டு வருவதனாலும், தமிழ்மொழி நலிவடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. மேலும் இனமுரண்பாடு மற்றும் உள்நாட்டு யுத்தம் காரணமாக கணிசமானளவு தமிழ்மக்கள் புலம்பெயர்ந்து […]