October 2024 - Ezhuna | எழுநா

October 2024 தொடர்கள்

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் மனிதவள அபிவிருத்தியில் கல்வி முதலீடு

8 நிமிட வாசிப்பு | 6799 பார்வைகள்

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் மனிதவள அபிவிருத்தியில் கல்வியின் மீதான முதலீடும் அது சார்ந்து செய்யப்படும் அதீத வளப் பயன்பாடும் பற்றிய ஆய்வானது இவ்விரு மாகாணங்களின் அபிவிருத்தியில் அதீத அக்கறைக்குரியதாகும். வரலாற்றின் ஆரம்பம் முதல் கற்றல் செயன்முறை என்பது இவ்விரு மாகாணங்களின் பிரதான முதலீட்டு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. எல்லையோரத்திலிருந்த பல குடும்பங்களின் மெய்யான அபிவிருத்தியை வெளிக்கொண்டு வந்ததற்கு, கல்வியினால் அக் குடும்பங்களிலிருந்து மேற்கிளம்பிய ஒரு சில பிள்ளைகள் காரணமாகினர். அக் […]

மேலும் பார்க்க

கூட்டுறவுக்குள் கூட்டுறவு : பிலிப்பைன்ஸ் அனுபவம்

16 நிமிட வாசிப்பு | 6500 பார்வைகள்

கூட்டுறவின் குறிக்கோள் என்ன என்பது தொடர்பாக கூட்டுறவாளர்களிடையே பல கருத்துகள் உள்ளன. உண்மையில், கூட்டுறவின் நோக்கம் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சமூகத்தின் பொருளாதார, கலாசார மற்றும் சமூகத் தேவைகளை உணர்ந்து கொள்வதாகும். கூட்டுறவுகள் தங்கள் சமூகத்தின் மீது வலுவான அர்ப்பணிப்போடு சமூகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாகும். கூட்டுறவுகள், மக்கள் தங்கள் பொருளாதார எதிர்காலத்தைக் கட்டுப்படுத்த அனுமதிக்கின்றன. அவை பங்குதாரர்களுக்குச் சொந்தமானவை அல்ல என்பதால், கூட்டுறவுச் […]

மேலும் பார்க்க

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் புதிய உயரடுக்கும் பழைய உயரடுக்கும்

8 நிமிட வாசிப்பு | 7800 பார்வைகள்
October 29, 2024 | பி. ஏ. காதர்

இலங்கையில் உயரடுக்கின் உருவாக்கமானது பிரித்தானியக் காலனிய ஆட்சி காலத்தில் ஆங்கிலம் கற்ற உயர் வகுப்பினரின் தோற்றத்தோடு உருவானது என்ற தவறான கருத்து சிலரிடையே நிலவுகிறது. உண்மையில் முன்பே குறிப்பிட்டதைப் போல இந்தியாவைப் போலல்லாமல், இலங்கையில் காலனித்துவத்திற்கு முந்தைய ஆளும் வர்க்கத்தின் மேல்தட்டு அழிக்கப்பட்டு, இரண்டாம் நிலைப் பிரிவு தகவமைக்கப்பட்டு காலனித்துவக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது. காலனித்துவ ஆட்சியின் உருவாக்கத்தின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மற்றொரு குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால், இந்தியா […]

மேலும் பார்க்க

நாகர் பற்றிக் குறிப்பிடும் ரஜகல எனும் ராசமலைக் கல்வெட்டுகள்

10 நிமிட வாசிப்பு | 6344 பார்வைகள்

  அம்பாறை மாவட்டத்தில், அம்பாறை நகரில் இருந்து மகாஓயாவுக்குச் செல்லும் வீதியில் 26 கி.மீ தூரத்தில் பக்கியல்ல என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு பிரதான வீதியின் மேற்குப் பக்கத்தில் ரஜகல மலை அமைந்துள்ளது. மலையின் தெற்குப் பக்கத்தில் நவக்கிரி குளம் காணப்படுகிறது. இம்மலை ராஸ்ஸ ஹெல, ராஸ்ஸகல, ரஜகலதென்ன, ராசமலை ஆகிய பெயர்களிலும் அழைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1038 அடி உயரத்தில், அடர்ந்த காடுகளையும், மலைகளையும் கொண்ட இம்மலையில் 983 […]

மேலும் பார்க்க

ஈழத்தில் கற்ற அடிப்படையில் சிலிக்கன் வலியில் வணிகம்

9 நிமிட வாசிப்பு | 11635 பார்வைகள்

“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை” திருக்குறள் (512) மு. வரதராசனார் விளக்கம்: பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும். நான் எதிர்பாராத விதமாக எனது முகநூல் உள்பெட்டியில் நண்பர் ஒருவர், 63 வருடங்களுக்கு முந்தைய சில ஆவணங்களை தனது தாத்தாவின் பழைய ஆவணக் கோப்புகளிலிருந்து எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார். அந்த ஆவணமானது எனது […]

மேலும் பார்க்க

இடதுசாரி நோக்கில் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறை பற்றிய விமர்சனம் – பகுதி 3

14 நிமிட வாசிப்பு | 8528 பார்வைகள்

ஆங்கில மூலம்   : ஜயம்பதி விக்கிரமரட்ண ஐக்கிய அமெரிக்காவும் பிரான்சும் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதிமுறை 200 ஆண்டுகால வரலாற்றை உடையது. சட்ட ஆக்கத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்பனவற்றிற்கிடையிலான அதிகாரப்பிரிப்பு (Seperation of Power), பலமான இரு கட்சிமுறையின் வளர்ச்சி, கட்டுப்படுத்தல்களும் சமப்படுத்தல்களும் (Checks and Balances) என்னும் தத்துவத்தின் செயற்பாடு என்பன அந்நாட்டின் அரசியல் முறையின் ஸ்திரத்தன்மைக்கு காரணமாக அமைந்தன. ஆயினும் அந்நாட்டின் ஜனாதிபதி முறையினை மாதிரியாகக் கொண்ட […]

மேலும் பார்க்க

சுன்னாகம் நிலத்தடி நீர்: குடிக்கலாமா, கூடாதா?

21 நிமிட வாசிப்பு | 8606 பார்வைகள்

தொடக்கக் குறிப்புகள் போருக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் வடபுலத்தில் முன்னெடுக்கப்பட்ட முக்கியமான சூழலியல் போராட்டமானது சுன்னாகத்தின் நிலத்தடி நீர் பற்றியதாகும். இலங்கையின் வடபுலத்தில் நிகழ்ந்த ஏனைய போராட்டங்கள் போலன்றி எதுவித வேறுபாடுகளுமின்றி அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த போராட்டம் என்ற வகையில் இது முக்கியமானது. அதேவேளை வடமாகாண சபை தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் இயங்கிக் கொண்டிருந்தபோது நடைபெற்ற போராட்டம் என்பதும் இங்கு கவனிப்புக்குரியது. இந்தப் போராட்டம் மூன்று விடயங்களைப் […]

மேலும் பார்க்க

கறவை மாடுகளின் நலன் (welfare) தொடர்பான அவதானிப்புகள்: இலங்கை நிலைப்பாடு

10 நிமிட வாசிப்பு | 5460 பார்வைகள்

ஒரு கால்நடை வைத்தியராக இலங்கையின் கறவை மாடுகளின் நலன் தொடர்பாக அவதானித்தவை மற்றும் நடைமுறைகளை இந்தக் கட்டுரையில் ஆராயப் போகிறேன். உலகளாவிய ரீதியில் கறவை மாடுகள் மற்றும் ஏனைய விலங்குகளின்  நலன் தொடர்பாக நவீன எண்ணக்கருக்களுடன் கூடிய சட்டங்கள் உள்ளதுடன் அந்தச் சட்டங்கள் மிக மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. இலங்கையில் 1907 இல் பிரித்தானியர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சட்டமான ‘Prevention of cruelty to animals ordinance’ (1907) நடைமுறையில் […]

மேலும் பார்க்க

இலங்கையில் சூஃபித்துவம்: ஓர் அறிமுகம்

11 நிமிட வாசிப்பு | 7280 பார்வைகள்

இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்து வருபவர்கள். தங்களது மத அடையாளமான இஸ்லாமும், மொழி அடையாளமான தமிழும் இணைந்த ஒரு தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தை நிறுவி தங்களை ஒரு தனி இனமாக நிறுவிக் கொண்டவர்கள். இதனால் இலங்கை வரலாற்றில், அவர்கள் பின்பற்றி வரும் இஸ்லாம் பாரம்பரியத் தன்மைகளோடு இலங்கை – இந்திய மண்ணோடும், பிற பண்பாடுகளோடும் ஊடாட்டம் கொண்ட மதமாகவும் இருந்து வருகிறது. தனது மொழி அடையாளமான […]

மேலும் பார்க்க

கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை: அறிமுகம்

26 நிமிட வாசிப்பு | 8099 பார்வைகள்

I தென்னாபிரிக்காவில் காந்தியும் பீஜி, மொறிசியஸ் முதலான நாடுகளில் மணிலாலும் புலம்பெயர்ந்த இந்தியரின் விடுதலைக்கான போராட்டங்களைத் தலைமைதாங்கி முன்னெடுத்ததுபோல இலங்கையில் இந்தியத் தொழிலாளரின் மீட்சிக்கான போராட்டங்களை கோ. நடேசய்யர் முன்னெடுத்துள்ளார். தஞ்சாவூரின் தென் ஆற்காட்டில் வளவனூர் கிராமத்தில் ஜனவரி 14, 1887 அன்று பிறந்த அவர் 1920 ஆம் ஆண்டு முதல் மரணிக்கும் வரை (நவம்பர் 07, 1947) இலங்கையில் வாழ்ந்துள்ளார். பத்திரிகை ஆசிரியர், சட்ட நிரூபண சபை – […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்