பல்லவர் தொடர்பு ஏழாம் நூற்றாண்டின் தொடக்கக் கட்டத்தில் ஸிலாமேக வண்ண மன்னன் (619 – 628) அநுராதபுரத்தில் ஆட்சி நடத்தியபோது ஸிரிநாக என்பான் தமிழர் படை ஒன்றின் உதவியுடன் அநுராதபுரத்து மன்னனைத் தாக்கி அரசைக் கைப்பற்ற முயன்றான். அவனுடைய படை உத்தரதேஸத்திலிருந்தே தெற்கு நோக்கி அநுராதபுரத்துக்கு முன்னேறியது. ஆட்சியைக் கைப்பற்ற எண்ணிய தலைவன் ஒருவன் வட பகுதியிலிருந்து படை கொண்டு சென்றமை கவனிக்கத்தக்க ஒரு நிகழ்ச்சியாகும். இதன்பின் அடிக்கடி இப்படியான […]
சமய அபிவிருத்திகள் தேரவாத பௌத்தம் தமிழ்நாட்டில் தேரவாத பௌத்தம் எழுச்சி பெற்றதன் விளைவாக அங்கு பாளி இலக்கியம் சிறப்புற்று வளர்ந்தது. இந்த வரலாறு இன்று மறக்கப்பட்ட ஒரு வரலாறாகி விட்டது. நான்காம் நூற்றாண்டு தொடக்கம் ஆறாம் நூற்றாண்டின் இறுதிவரை, தமிழ்நாட்டில் இருந்த தேரவாத பௌத்த மையங்களில், சிறப்பாகக் காஞ்சி, மதுரை, காவிரிப்பட்டினம் மற்றும் உறையூர் ஆகிய நகரங்களில் அமைந்திருந்த பௌத்தப் பெரும் பள்ளிகளில் தலைசிறந்த பௌத்த அறிஞர்கள் பாளி மொழியில் […]
ஆதி வரலாற்றுக் காலத்துக்குப் பின் அடுத்து வந்த நூற்றாண்டுகளில் தொடர்ந்து இரு பிரதான இனக் குழுக்களின் ஆக்கம் நடைபெற்றது. பொ.ஆ. 300க்கும், 900க்கும் இடையில் மிகவும் தெளிவாகத் தனித்துவப் பண்புகளுடன் இவை பரிணாம வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தன எனலாம். முதல் தடவையாக இக் காலத்துக் கல்வெட்டுகளில் சிங்கள மொழியின் பழைய வடிவமாகிய ஹௌ (எளு) மொழியில் சிங்கள இனக் குழுவுக்கு ஹௌ என்ற பெயரும் தமிழ் இனக் குழுவுக்கு […]