இலங்கையின் அரசியல் உயரடுக்குகள் நலன் சார் அரசு, சகல இலங்கையரின் சமூக, பொருளாதார, கலாசார உரிமைகைளையும் உள்ளடக்கும் செயன்முறையில் ஆர்வம் கொள்வதில்லை; மாறாக, பொருளாதார வாய்ப்புகளை மட்டும் உறிஞ்சி தங்கள் நலன் சார் விடயங்களில் மட்டும் உச்ச ஆர்வம் கொள்பவையாக உள்ளன. இந்தப் போக்கின் நேரடி விளைவு சமூக, பொருளாதாரப் பின்னடைவாகவும் வங்குரோத்து நிலையாகவும் அமையும். புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார வாய்ப்புகளின் ஊற்றுகளாக மட்டுமே கருதப்படுகின்றனர். அவர்களின் அரசியல் உரிமைகள் பற்றிய […]
சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டம் சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டமானது 1941 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்கச் சட்டமாக ஆக்கப்பட்டு பின்னர் இச் சட்டம் பல தடவைகள் திருத்தப்பட்டது. இச் சட்டத்தின் கீழ் வெவ்வேறு தொழில்துறைகளுக்கென சம்பளச் சபைகள் தாபிக்கப்பட்டுள்ளன. சம்பளச் சபையானது தொழில் தருநரின் பிரதிநிதிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழில் அமைச்சரால் நியமிக்கப்பட்ட நியமன அங்கத்தவர்கள் ஆகிய முத்தரப்பினரைக் கொண்ட ஒரு சபையாகும். சம்பளச் சபையானது […]
(அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக்குழு நடத்திய ‘அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த இருபத்தைந்தாவது நினைவுப் பேருரை நிகழ்வில் பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரன் அவர்களால் இக் கட்டுரை வாசிக்கப்பட்டது) அறிமுகம் இலங்கையில் தொழிற் சட்டத்தின் வளர்ச்சியானது பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன் ஆரம்பமானது. ஆரம்ப காலங்களில் பெருந்தோட்டங்களில் தொழில் செய்த தொழிலாளர்கள் மிக மோசமான முறையில் பொருளாதார ரீதியில் சுரண்டப்பட்டார்கள் என்பதுடன் அவர்களுடைய அடிப்படை மனித உரிமைகளும் மிக மோசமான முறையில் மீறப்பட்டன. […]
இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமாக 1974 இல் தோன்றி, 1979 இல் ஒரு தனிப் பல்கலைக்கழகமாக உயர்வுபெற்று வளரும் இந்த உயர்கல்வி நிறுவனத்துக்கு ஐம்பது வயது. அவ்வளவு நீண்ட காலமாகத் தோன்றாவிட்டாலும், யாழ்ப்பணத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முதலாவது முயற்சி 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதுமட்டுமல்லாது, 19 ஆம் நூற்றாண்டில் இருந்து யாழ்ப்பாணத்துக் […]