தமிழில் : த. சிவதாசன் இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் ‘சுற்றுலாத் தளங்கள்’ என்ற வரைபடத்தின் படி, வடமாகாணத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு சுற்றுலாக் கவர்ச்சியாக யாழ். விமான நிலையம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இவ்வரைபடம் யாழ். விமான நிலையத்தையாவது காட்டுகிறதே என நாம் பூரிப்படைய வேண்டும். விமான நிலையத்தைத் தவிர வடமாகாணத்தின் அனைத்துப் பகுதிகளுமே வறண்ட பிரயோசனமற்ற பிரதேசங்களெனவே இப்படம் காட்டுகிறது. வடக்கில் […]
ஆங்கில மூலம் : றொனால்ட்.எல். வாட்ஸ் றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்கள் எழுதிய ‘Comparing Federal Systems’ என்னும் நூல் 12 நாடுகளின் சமஷ்டி முறைகளை ஒப்பிட்டு ஆராயும் நூலாகும். இந்நூலை கனடாவின் ‘Queen’s University’ வெளியிட்டுள்ளது. இந்நூலின் 2 ஆவது அத்தியாயம் ஒப்பீட்டு ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சமஷ்டி முறைகளின் சிறப்புக் கூறுகளை ஒப்பீட்டு முறையில் தொகுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இவ்வத்தியாயத்தில் றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்கள் கூறியிருக்கும் கருத்துகளைத் […]
சென்ற கட்டுரையில் நல்லூர்க் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படம் தரும் தகவல்களைப் பார்த்தோம். இனி வலிகாமப் பிரிவின் இன்னொரு கோவிற்பற்றான கோப்பாயைப் பற்றி ஆராயலாம். இக் கோவிற்பற்றில் கோப்பாய், இருபாலை, உரும்பிராய், ஊரெழு, நீர்வேலி ஆகிய ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளதாக நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பில் தகவல் இருந்தாலும், நிலப்படம் இருபாலையைத் தனியான பிரிவாக எல்லை குறித்துக் காட்டவில்லை (படம்-1). கோப்பாய், இருபாலை ஆகிய இரண்டு துணைப் பிரிவுகளையும் கோப்பாய்த் துணைப் […]
அறிமுகம் உலகின் 70% இயற்கைப் பேரழிவுகள் அரசியல், பொருளாதார, சமூக காரணிகளுடன் வானிலை மற்றும் காலநிலையுடனும் ஓரளவு அல்லது முற்றிலும் தொடர்புடையவை என்று உலக வானிலை அமைப்பு குறிப்பிடுகின்றது. இலங்கையின் பொருளாதாரம் இயற்கை அனர்த்தங்கள், குறிப்பாக காலநிலை மாற்றம் காரணமாக பல சவால்களை எதிர்கொள்கிறது. இலங்கையின் விவசாயம் வெப்பநிலை, மழைவீழ்ச்சி, மண்ணின் ஈரப்பதன் வேறுபாடுகள், வானிலை நிகழ்வுகளின் தீவிரம் மற்றும் அதிர்வெண் அதிகரிப்பு ஆகியவற்றின் மாறுபாடுகளால் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகிறது. […]