January 2025 - Ezhuna | எழுநா

January 2025 தொடர்கள்

மாடு வளர்ப்பும் சூழல் மாசடைதலும்

10 நிமிட வாசிப்பு | 221 பார்வைகள்

கறவை மாடு வளர்ப்பு சூழல் மாசடைதலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியமான தொழிலாக இருக்கிறது என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? உலக வெப்பமுறுதலை ஏற்படுத்தும் மிக முக்கியமான மெதேன் பச்சை வீட்டு வாயுவை வெளியேற்றும் முக்கிய காரணியாக கறவை மாடு வளர்ப்பு அமைகிறது. உலகின் பச்சை வீட்டு வாயு விளைவில் 14.5% கால்நடை வளர்ப்பின் பக்க விளைவுகளாலேயே நிகழ்கிறதாம் (FAO அறிக்கை). மேலும், பல்வேறுபட்ட சூழல் பாதிப்புகளையும் இந்தத் துறை […]

மேலும் பார்க்க

இடப்பெயர்களும் – கிழக்கிலங்கை முஸ்லிம் பண்பாடும்

12 நிமிட வாசிப்பு | 2587 பார்வைகள்

பெயராய்வின் (Onomastics) பிரதானமானதொரு கிளையாக இடப்பெயராய்வு (Toponymy) காணப்படுகின்றது. இது சமூகங்களுக்கிடையேயான வரலாறு, பண்பாடு மற்றும் மொழியியல் தொடர்புகளைப் புரிந்துகொள்ளப் பயன்படும் நுணுக்கமான ஒரு கருவியாகக் காணப்படுகின்றது. இலங்கையில், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் பரஸ்பரமான சகவாழ்வு, வர்த்தகம் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றனர். இக்கட்டுரை கிழக்கிலங்கையின் பண்பாட்டுப் பாரம்பரிய அசைவுகளின் இன்னுமொரு பக்கமாகும். வரலாற்றுப் பின்னணி இலங்கை முஸ்லிம்கள், பல்வேறு மூலங்களுடன் இலங்கை வரலாற்றில் இணைகின்றனர். […]

மேலும் பார்க்க

அதிகாரப் பகிர்வுக்கான அரசுக் கட்டமைப்புகள் – பகுதி 2

18 நிமிட வாசிப்பு | 1417 பார்வைகள்

ஆங்கில மூலம் : லக்ஸ்மன் மாறசிங்க அதிகாரப் பகிர்வுக்கான கொள்கையைத் தீர்மானித்தல், அதிகாரத்தைப் பெறும் அலகுகளைத் தீர்மானித்தல் என்ற முதலிரு படிநிலைகள் பற்றி இதுவரை எடுத்துக் கூறினோம். பெல்ஜியம், கனடா, அவுஸ்திரேலியா, நைஜீரியா, சூடான் ஆகிய நாடுகளின் அனுபவங்களை உதாரணம் காட்டி இவ்விரு படிநிலைகளிலும் அதிகாரத்தைப் பகிர்வு செய்யும் அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பேராசிரியர் லக்ஸ்மன் மாறசிங்க எடுத்துக் கூறினார். இதற்கு அடுத்ததாக நாம் அதிகாரத்தை ஏற்பவர்களின் தேவைகளின் […]

மேலும் பார்க்க

படுவானை நோக்கி

12 நிமிட வாசிப்பு | 1872 பார்வைகள்

பொ.ஆ. 1937 இனை உலக நிலையைப் பெரும் அளவில் குலுக்கும் நிகழ்வு எதுவும் நடைபெற்ற ஆண்டாகக் கணிப்பதற்கு இல்லை. உலகம் காணாத மிகப்பரந்த வல்லரசாகிய பிரித்தானியப் பேரரசும், அதனுடன் இரு நூற்றாண்டுகளுக்கு மேலாகப் போட்டியிட்ட ஐரோப்பிய வல்லரசுகளாகிய பிரெஞ்சுப் பேரரசும், ஒல்லாந்துப் பேரரசும் ஒற்றுமையாக ஐரோப்பிய ஏகாதிபத்திய வலைக்குள் தாம் கைப்பற்றிய ஆசிய, ஆபிரிக்க, ஓசியானிய நிலங்களை அடக்கி வைத்திருந்தன. உலகில் ‘பிரித்தானியாவின் அமைதிநிலை’ (Pax Britannica) மலர்ந்திருப்பதாகத் தோன்றியது. […]

மேலும் பார்க்க

ஏகாதிபத்திய – பேரினவாதத் தகர்ப்பும் விடுதலைத் தேசிய மார்க்சியமும்

23 நிமிட வாசிப்பு | 2197 பார்வைகள்

புலப்பெயர்வடைந்த ஈழத் தமிழர்களின் இதயப்பகுதி எனக் கருதப்படும் கனடாவில் எம்மவர்க்குப் பேரதிர்ச்சி தரும் நிகழ்வொன்று நடந்தேறி வருகிறது. தமது புதிய தாயகமான கனடாவில் மிகக் கடின உழைப்பைச் செலுத்தி உளச் சோர்வுக்கு ஆட்பட நேர்ந்தாலும், அதற்கு ஈடாக வள வாழ்வு கிட்டுவதில் உழைக்கும் ஈழத்தமிழ் மக்களுக்குத் திருப்தி உள்ளது. அதைவிடவும் தமது சுயநிர்ணய உரிமையைக் கனடா அனுமதிப்பதில் அவர்கள் திருப்தி கொள்கின்றனர். ஜனநாயகப் பண்பை விரும்பும் அத்தகைய உழைக்கும் ஈழத் […]

மேலும் பார்க்க

‘இலங்கை இந்தியத் தொழிலாளர் நிலைமை’ : தோட்டத் தொழிலாளர் வேதன நிர்ணய அறிக்கைகளுக்கான எதிர்வினை

28 நிமிட வாசிப்பு | 2288 பார்வைகள்

“ஏழைத்தொழிலாளி தோட்டக்காட்டில் திக்கற்றவனாய்த் தவிக்கிறான். அவனுக்கு இப்போது கிடைக்கும் தினச்சம்பளம் சுமார் 40 அல்லது 45 சதம் தான். அதிலும் மாதம் 30 நாளும் அவனுக்கு வேலை கிடைப்பதரிது. சில தோட்டங்களில், அதிலும் ரப்பர் தோட்டங்களில் சில மாதங்களில் 17 நாட்கள்கூட வேலையிருப்பதரிதாகிறது. சராசரி 20 நாள் ஒரு தொழிலாளி உழைக்கிறானென்று வைத்துக்கொண்டால், அவனுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 9 கிடைக்கிறது. இப்போது நாம் கவனிக்க வேண்டியது, இச்சம்பளம் ஒரு […]

மேலும் பார்க்க

ஜனநாயக ஆளுகையும் இலங்கையின் உயர்நீதிமன்றமும் – பகுதி 1

23 நிமிட வாசிப்பு | 2379 பார்வைகள்

ஆங்கில மூலம் : கலன சேனரத்ன இலங்கையின் சட்ட அறிஞர்களில் ஒருவரான கலன சேனரத்தின (LL.B, LL.M, PH.D) அவர்கள் ‘Democratic Governance and the Supreme Court in Sri Lanka’ என்னும் தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். இக்கட்டுரை Democracy and Democratisation in Sri Lanka : Paths, Trends and Imaginations என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் பகுதி 1 இல் (பக். […]

மேலும் பார்க்க

ஒச்சாப்பு கல்லு எனும் பண்டைய நாகர் குடியிருப்பு

12 நிமிட வாசிப்பு | 3341 பார்வைகள்

அனுராதபுரம் மாவட்டத்தில் ஒச்சாப்பு கல்லு எனும் இடம் அமைந்துள்ளது. வில்பத்து எனும் அடர்ந்த காட்டின் மத்தியில் ஒச்சாப்பு கல்லு அமைந்துள்ளது. வில்பத்து காட்டின் மத்தியில் ஓடும் மோதரகம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிலாமடு தேக்கம் எனும் சிறிய அணைக் கட்டின் தெற்குப்பக்கத்தில் சுமார் 3 கி.மீ தூரத்தில் இவ்விடம் காணப்படுகிறது. வில்பத்து இலங்கையின் முதலாவது மிகப்பெரிய வனவிலங்குகள் சரணாலயமாகும். இது 1317 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட அடர்ந்த வனமாகும். […]

மேலும் பார்க்க

இலங்கை : இனத்துவ ஆட்சிக்குத் திரும்புதல் – பகுதி 2

18 நிமிட வாசிப்பு | 2795 பார்வைகள்

ஆங்கில மூலம் : நீல் டி வோட்டா (Neil DeVotta) Source – Sri Lanka : The Return to Ethnocracy, Journal of Democracy, Vol. 32, No. 1, January 2021, pp. 96–110. இனத்துவ ஆட்சியை ஒன்றுதிரட்டுதல் இனத்துவ ஆட்சி என்பது தாரளமற்றதுதான். உள்ளாழத்தில் அது பன்முகத்தன்மை என்பதை நீக்கிவிடுகிறது. ஆனால் இனத்துவ ஆட்சி கொடுங்கோன்மையாக இருக்கவேண்டும் என்பதில்லை (An ethnocracy is illiberal because at […]

மேலும் பார்க்க

குறிப்பன் எனும் தெய்வம்

19 நிமிட வாசிப்பு | 3497 பார்வைகள்

அறிமுகம் மக்களின் வாழ்வியல் புலத்தைத் தீர்மானிக்கும் ஆற்றல் நிலத்துக்கே உண்டு. நிலமே பண்பாட்டை, பொருளாதாரத்தை, அரசியலை, கலையை, தத்துவத்தை, சமயத்தை என எல்லாவற்றையும் ஆதியிலிருந்து தீர்மானித்து வந்திருக்கிறது. திணைமரபு எனும் தமிழ் அடையாளம் நிலத்தின் அடையாளமே. நிலத்தோடு ஒட்டிய வாழ்வு பேரியற்கையோடு இயைந்து வாழ்தலாக அமைந்துள்ளது. நிலத்தின் வழியமைந்த தொழில், தொழிலின் தாற்பரியம், இயற்கையை எதிர்கொள்ளல் என்பன இயற்கை அதீதத்தை உணரச் செய்தன. தமக்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூரச் செய்தன. […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்