February 2025 - Ezhuna | எழுநா

February 2025 தொடர்கள்

அதிகாரப் பகிர்வும் தன்னாட்சியும்: சர்வதேச உதாரணங்கள் சில

13 நிமிட வாசிப்பு | 4082 பார்வைகள்

ஆங்கில மூலம்: ஜயம்பதி விக்கிரமரட்ண உலகின் பெரும்பாலான நாடுகள் பன்மைப் பண்பாடுகளை உடைய சமூகங்களாக (Multi-cultural Societies) விளங்குகின்றன. ஒரு தேசிய இனம், ஒரு மொழி, ஒற்றைப் பண்பாடு என அழைக்கக் கூடிய நாடுகள் உலகில் வெகு அரிதாகவே காணப்படுகின்றன. பன்மைப் பண்பாடுகளைக் கொண்ட சமூகங்களில் பெரும்பான்மையானவை ஆழமான பிளவுகளையுடைய சமூகங்கள் (Deeply Divided Societies) என அரசியல் விஞ்ஞானிகள் சிலர் குறிப்பிடுவர். ஆழமான பிளவுகளையுடைய சமூகங்களின் சிறுபான்மைத் தேசிய […]

மேலும் பார்க்க

ஆடைகளை நனைக்கும் கண்ணீர்: ஆடைத்தொழிலாளரின் கதைகள்

24 நிமிட வாசிப்பு | 4654 பார்வைகள்

தொடக்கக் குறிப்புகள் இலங்கையின் பொருளாதாரத்தில் ஆடைத்தொழிற்றுறையின் பங்களிப்பு முக்கியமானது. குறிப்பாக அந்நியச் செலாவணி நெருக்கடியை இலங்கை எதிர்நோக்கியிருக்கும் இக்காலப்பகுதியில் இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பிரதான தொழிற்றுறையாக ஆடைத்தொழிற்றுறை இருக்கின்றது. அதேவேளை கணிசமான இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கிய துறையாகவும் இது திகழ்கிறது. இத்துறையின் பொருளாதாரப் பரிமாணம் குறித்த அக்கறையும் கவனமும் மிகப் பெரியது. ஏற்றுமதிகள் குறைந்தாலோ, உற்பத்திகள் குறைந்தாலோ அக்கறை கொள்கிற அரசும், ஊடகங்களும் அங்கு பணிபுரிகின்ற ஊழியர்களின் நலன்கள் […]

மேலும் பார்க்க

பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்

24 நிமிட வாசிப்பு | 8177 பார்வைகள்

அறிமுகம் இலங்கையில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் யாழ்ப்பாண அரசு தோன்றுவதற்கு முற்பட்டகால யாழ்ப்பாண வரலாற்றிற்கான சரித்திரச் சான்றுகள் மிக அருகியே காணப்படுகின்றன. புராணக் கதைகள், ஐதீகங்கள், ஆதாரமற்ற பழங்கதைகள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் ‘யாழ்ப்பாண வைபவமாலை’யின் ஆரம்பப் பகுதிகள் வரலாற்று ஆய்வாளர்களுக்கு பண்டையகால யாழ்ப்பாணம் தொடர்பான மிகவும் குறைவான செய்திகளையே தருகின்றன. வையா பாடல், கைலாய மாலை ஆகிய ஏடுகளும் யாழ்ப்பாணத்தின் தொடக்க காலத்தைப் பற்றிப் போதுமான […]

மேலும் பார்க்க

ரிதி விகாரை மலையில் நாக மகாராஜன் பற்றிய கல்வெட்டு 

9 நிமிட வாசிப்பு | 4134 பார்வைகள்

குருநாகலில் இருந்து கிழக்கு நோக்கி ரம்பொடகல என்னுமிடத்திற்குச் செல்லும் வீதியில் சுமார் 15 கி.மீ. தூரம் சென்றதும் காணப்படும் சிறிய வீதியினூடாக மேலும் 2 கி.மீ தூரம் பயணம் செய்தால் ரிதிகம என்னுமிடத்தை அடையலாம். இங்கு செல்வதற்கு இன்னுமோர் வழியும் உண்டு. குருநாகல் – கண்டி வீதியில் 19 கி.மீ தூரத்தில் உள்ள மாவத்தகம சந்தியின் வடக்கில் 14 கி.மீ தூரம் சென்றும் ரிதிகமவை அடையலாம். இங்குள்ள சிறிய மலைப்பாறையின் […]

மேலும் பார்க்க

இலங்கையில் பாராளுமன்றத்தின் தோற்றமும் அதன் சுருக்கமான வரலாறும் – பகுதி 2

20 நிமிட வாசிப்பு | 6318 பார்வைகள்

ஆங்கில மூலம் : பசன் ஜயசிங்க, பீற்றர் றீட், அசங்க வெலிக்கல 1978 ஆம் ஆண்டு யாப்பு இலங்கையில் பாதி – ஜனாதிபதிமுறையை ஏற்படுத்தியது. பாதி ஜனாதிபதி முறையென்பதை ஆங்கிலத்தில் ‘Semi – Presidential System’ என அழைப்பர். இப்பாதி ஜனாதிபதிமுறை இரு உப பிரிவுகளைக் கொண்டது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுவர். அவையாவன: முதலாவது உப வகையான ஜனாதிபதி – பாராளுமன்றமுறையில் பிரதமரும் மந்திரிசபையும் கூட்டாக ஜனாதிபதிக்கும், பாராளுமன்றத்திற்கும் பொறுப்புக்கூற […]

மேலும் பார்க்க

தமிழர்களும் தேசமும் : இந்திய – இலங்கைத் தமிழர்களின் தேசிய அடையாள அரசியல் மீதான ஒப்பீட்டு ஆய்வு – பகுதி 1

29 நிமிட வாசிப்பு | 9022 பார்வைகள்

இந்த நூல் இந்தியா மற்றும் இலங்கையில் தமிழ் தேசியவாதத்தின் பரிணாம வளர்ச்சியை பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் இறுதிப் பகுதியில் இருந்து சமகாலம் வரை விரிவாக ஒப்பிடுகிறது. தமிழ்த் தேசிய இனத்திற்கும் இலங்கை – இந்திய மைய அரசுகளுக்கும் இடையே நிலவிய முரண்பாட்டுச் சூழலில் இரண்டு நாடுகளிலும் தமிழர்கள் தன்னாட்சி உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைத்த வரலாறு உள்ளது. ஆனால், இந்தியா மற்றும் இலங்கையில் மேலாதிக்க அரசுகளின் தேசிய இனங்களுடனான உறவு சார்ந்து […]

மேலும் பார்க்க

இலங்கையின் கால்நடைப் பண்ணையாளர்கள் சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளும் சாத்தியமான தீர்வுகளும்

12 நிமிட வாசிப்பு | 6591 பார்வைகள்

கறவை மாடு வளர்ப்பு இலங்கையின் விவசாயப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான கூறாகும். இந்தத்துறை நாட்டு மக்களின் ஊட்டச்சத்துத் தேவையின் கணிசமான பகுதியை பாலின் மூலம் நிறைவு செய்வதோடு, ஆயிரக்கணக்கான பாற்பசுப் பண்ணையாளர்களுக்கு வேலைவாய்ப்பினையும் வழங்குகிறது. இதனால் கணிசமான வருமானத்தை உருவாக்கும் துறையாக இது விளங்குகிறது. எனினும் அண்மைக்காலத்தில் கறவை மாடு வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் இலங்கையின் ஏனைய துறைகளைப் போல் கடுமையான நிதி சார்ந்த நெருக்கடிகளைச் சந்திப்பதை அவதானிக்க முடிகிறது. […]

மேலும் பார்க்க

‘தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம்’ : ‘Tea Time With Terrorists’ நூலை முன்வைத்து

11 நிமிட வாசிப்பு | 6136 பார்வைகள்
February 18, 2025 | இளங்கோ

‘Tea Time With Terrorists’ என்கின்ற சுவாரசியமான தலைப்புடன் இருந்த ஈழம் பற்றிய நூலை அண்மையில் வாசித்தேன். 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ஒரு அமெரிக்கருக்கு ‘தீவிரவாதிகள்’ பற்றி அறியும் ஆவல் வருகின்றது. தீவிரவாதிகளை நேரடியாக அறிவதன் மூலம் ஏதேனும் ஒருவகையில் தீவிரவாதத்தை அறியவும், கட்டுப்படுத்தவும் முடியும் என அவர் நினைக்கின்றார். இத்தனைக்கும் அவர் இயந்திரவியலில் பணியாற்றிவர். ஒருவகையில் இன்றைய AI (Artificial Intelligence) பற்றி 25 […]

மேலும் பார்க்க

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண நடைமுறைகள் – பகுதி 1

16 நிமிட வாசிப்பு | 6019 பார்வைகள்

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் பண்பாடு பற்றிக் குறிப்பிடுகையில், “பண்பாடு என்பது உண்மையில் மானிடவியல், சமூகவியல் நிலைப்பட்ட ஒரு வாழ்வியற் களம். அன்றாட வாழ்க்கை உறவுமுறைகள், விவாகம், பிள்ளை வளர்ப்பு, மரணம், உணவுவகை, ஆடை – ஆபரணங்கள், வைபோகம், சடங்கு இவற்றினூடாகத் தோன்றுகின்ற ஒரு மனநிலை” என்பார். கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டு அடிப்படைகளை இரண்டாகப் பகுக்கலாம். எடுத்துக்காட்டாக: உண்ணும்போது, நகம் வெட்டும்போது, உறங்கும்போது பின்பற்றும் நடைமுறைகள் போன்று அனைத்து வாழ்வியலம்சங்களுக்குமான […]

மேலும் பார்க்க

வன்னித்தம்பிரான் வழிபாடு

20 நிமிட வாசிப்பு | 7306 பார்வைகள்

அறிமுகம் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த ஆதிகாலத்தில் இருந்து விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மனிதர்களின் முக்கிய தொழில்களாக இருந்து வருகின்றன. குறிப்பாகத் தமிழகச் சூழலில் உருவான திணைக்குடிகள் இதற்குச் சான்றாகின்றன. வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம்; அதுவே விவசாயத்தின் பூர்வீகம் என்று கூறப்பட்டாலும் முல்லை நிலமும் குறிஞ்சியும் கூட குறித்த காலகட்டத்தின் பின் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டன. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் தவிர்க்க முடியாத தொழில்சார் இணங்கு முறையை உடையன […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்